Wednesday, August 26, 2009

பி.ரம்லி - மலாய் நடிப்புலகின் சகாப்தம்



"நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழ விருப்பப்படுகிறேன்" என அவரது நண்பரிடம் கூறினார். அவர் விளையாட்டாய் சொன்ன வார்த்தை எதிர்கால உண்மை என அவர் அறிந்திருக்க மாட்டார். வரலாற்றில் பெயர் பதிக்க வேண்டுமென அவர் அக்கறை எடுத்துக் கொண்டிருந்திருப்பாரா என்பது தெரியவில்லை. காலத்தால் சாலச் சிறந்த நிகழ்வுகளை நிழ்த்திய பெருமையே அவரை நிலைத்து நிற்கச் செய்துள்ளது.

சரித்திரம் படைத்த சாதனையாளர்களுக்கு அறிமுகம் என்பது அர்த்தமற்றது என்பார்கள். அறியாதவர்களுக்கு சொல்வது கடமையும் ஆகும்.

மலாய் திரை என்றில்லாமல் மலாய் இலக்கிய உலகிற்கு ஒரு சகாப்தமாய் அமைந்தவர் பி.ரம்லீ எனும் தான்ஸ்ரீ தெக்கு ஸாக்காரியா பின் தெக்கு ங்ஞா பூத்தே.

அவரின் நகைச்சுவைகளை கண்டு சிரித்திராதவர் இல்லை. அவர் பாடலை கேட்டு முனுமுனுக்காதவர் இல்லை. நெஞ்சுருகும் அவர் நடிப்புத் திரனை கண்டு மன உருக்கம் கொள்ளதவரும் இல்லை.

பீ.ரம்லி 1929-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி பினாங்கு மாநிலத்தில் பிறந்தார். இவரது தாயார் சே மா உசேன். தந்தையின் பெயர் தேக்கு ஞா பூத்தே. இவரது ஆரம்பக் கல்வியை 'கம்போங் ஜாவா' மலாய் பள்ளியிலும் உயர் நிலைக் கல்வியை பிரான்சிஸ் லைட் பள்ளியிலும் தொடர்ந்தார்.

அதன் பின் பினாங்கு 'பிரி ஸ்கூலில்' படிப்பை தொடர்ந்து போர் கால கட்டாயத்தின் பேரில் படிப்பை முடிக்காமல் நின்றார். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய 'நேவி' பள்ளியின் தனது படிப்பை தொடரும் வாய்ப்பைப் பெற்றார்.

சிறு வயது முதற் கொண்டு இசை துறையில் நல்ல முனைப்புக் கொண்டிருந்தார். அதன் பேரில் பல மலாய் இசை குழுக்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு தனது திறமைகளை வெளிக்கொனர்ந்தார்.

1947-ஆம் ஆண்டு நடை பெற்ற பினாங்கு வானொலியின் பாடல் திறன் போட்டியில் வெற்றி வாகைச் சூடிய பீ.ரம்லி மலாயாவின் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தந்தை பெயரின் அடையாலமாக 'பூத்தே' எனும் சொல்லைச் சுருக்கி 'பி' எனும் வார்த்தையை தனது பெயருக்கு முன் இட்டுக் கொண்டார். இது பினாங்கு வானொலி போட்டிக்காக செய்துக் கொண்ட பெயர் மாற்றம் எனினும் அவர் இறுதி காலம் வரையும் அது நிலைத்து நின்றது.

தொடர்ந்து 1948-ஆம் ஆண்டு பி.ரம்லி அவரது நண்பரோடு இணைந்து ஒரு இசைக் குழுவை தொடங்கினார். அக்குழுவிற்கு முஸ்திக்கா இசைக் குழுமம் என பெயரிட்டார்கள். அக்காலகட்டத்தில் புக்கிட் மெர்தாஜாமில் ஒரு நிகழ்வில் அவருக்கு பாடும் வாப்புக் கிட்டியது. அதே வேலையில் திறமை மிக்க படைப்பாளியை தேடும் பணியில் இருந்த B.S.Rahjans அந்நிகழ்விற்கு விருந்தினராக வந்திருந்தார். பி.ரம்லியின் திறமைமிக்க படைப்பில் மகிழ்ச்சி கொண்ட அவர் பி.ரம்லியை சிங்கைக்கு வரும்படியாக அழைப்புவிடுத்துச் சென்றார்.

அதே வருடத்தில் பி.ரம்லி சிங்கைக்கு தமது பயணத்தை மேற்கொண்டார். அவரது முதல் படமான CHINTA 'சிந்தா' 1948-ஆம் ஆண்டு வெளியீடு கண்டது. அத்திரைபடத்தில் வில்லனாக நடிப்பேற்றிருந்தது மட்டுமல்லாமல் பிண்ணனி பாடகராகவும் குரல் கொடுத்திருந்தார்.

அவரின் அயராத முயற்சியாலும் திறமையாலும் பல வாய்ப்புகள் அவர் வீட்டின் கதவை தட்டின. 1948 முதல் 1955 வரையினும் மொத்தம் 27 பட வாய்ப்புகள் அவர் கைவசம் இருந்தது.

1953-ஆம் வருடம் ஜுனைடா டாயெங் ஹரிஸ் எனும் பெண்னைக் கரம் பிடித்தார். அவர்களுக்கு முகமது நசீர் மற்றும் அர்ஃபான் என இரு குழந்தைகள் பிறந்தார்கள். ஜுனைடாவுடனான மண வாழ்க்கை 1954 ஆண்டு முறிவு கண்டது.

ஜுனைடாவுடனான மணமுறிவிற்குப் பின் 1955-ஆம் ஆண்டு நொருசான் எனும் பெண்ணுடன் தமது இல்லற வாழ்க்கையைத் தொடர்ந்தார். இருப்பினும் இந்த முறையும் பிசக்கு ஏற்பட்டு 1961-ஆம் ஆண்டு தமது இரண்டாம் தாரத்தை விட்டுப் பிரிந்தார்.

அதே வாருடம் சல்மா இஸ்மையிலை சந்திந்தார், சல்மா இஸ்மையில் 'சலோமா' எனும் புனைப் பெயரால் அறியப்பட்டவர். சலோமாவுடனான வாழ்க்கை அவரது இறுதி காலம் வரையினும் நீடித்தது.

மூன்று திருமணங்கள் புரிந்திருப்பினும் அவருக்கு இரு பிள்ளைகள் மட்டுமே இருந்தார்கள். அவர் பல பிள்ளைகளைத் தத்தெடுத்தும் வளர்த்து வந்தார். அவர்கள் பெத்தி, சாக்கியா, சபாருடின் மற்றும் டயன் போன்றோர் ஆவர்.

மலேசியத் திரைப்பட வரிசையில் பி.ரம்லி மொத்தம் 66 படங்கள் நடித்துள்ளார். மேலும் 359 பாடல்களையும் பாடியுள்ளார். அவரது இறுதிப்படம் 'லக்சமானா டோ ரே மீ' என்பதாகும்.

ஜகர்த்தா, ஹாங் கங், மனிலா, மற்றும் கோலாலபூரில் நடந்த ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த படைப்பாளிக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். அது போக அனைத்துலக திரைப்பட விருது நிகழ்வு பெர்லினின் நடந்த போது கலந்துக் கொண்டுள்ளார்.

29-ஆம் திகதி மே மாதம் 1973-ஆம் வருடம் பி.ரம்லி மரணமடைந்தார். அப்போது அவரின் வயது 44 ஆகும். மலாய் திரைப்பட உலகிற்கு அவராற்றிய சீரிய பணியின் பேரில் 1990-ஆம் வருடம் பேரரசரால் தான் ஸ்ரீ படம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பி.ரம்லியின் திரை காவியங்கள் இன்னமும் 'தியேடர் கிலாசிக்’ எனும் அங்கத்தில் மலேசிய தொலைக்காட்சிகளில் ஒளியேற்றப்படுகிறது. இவரின் படைப்புகளில் பல நகைச்சுவை தன்மையை அதிகமாக கொண்டிருக்கும். மக்களின் வாழ்வியல் முறைகளில் உள்ள சிக்கலான சிந்தனைகளை கூட தமது மெல்லிய நகைச்சுவை உணர்வில் தலையில் தட்டாத விதமாக சொல்லிவிடுவார்.

சிந்திக்க வைக்கும் நகைச்சுவை தன்மை மட்டுமன்றி, மலேசிய வாழ் பல இனங்களையும் தமது திரைப்படங்களில் அவர் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை சித்திரமாக படைத்த இவர் அப்படத்தின் ஒரு காட்சியில் சீன தையல்காரனை அறிமுகம் செய்திருப்பார். அரபிய நாட்டில் சீன தையல்காரன். சிரிக்க தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது. திடர்களின் தலைவர் ‘அனுவல் லீவ்’ கொடுப்பதும், ‘ஓடி’ செய்ய சொல்வது நகைச்சுவை தன்மையின் உச்சமென்றே சொல்லலாம். அதிக பணத்திற்கு வேலை செய்யும் சீனன், அதிகமாக பிலாச்சான்(இறால் மண்டையில் செய்தது) சாப்பிட்டு சிந்திக்க தவறும் மலாய்காரன் என நூலிலை தொடுதலில் அந்நாளைய மலேசிய மக்களின் நிலைபாட்டை விளக்கி இருப்பார்.

பி.ரம்லியின் திரைப்படங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், சீரியஸ் படங்களாக இருந்தாலும் சமுதாயத்தை சார்ந்த அவரது பார்வையும், கதை அமைப்புகளின் நிபுணத்துவமும் என்றுமே மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Tuesday, August 18, 2009

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... :-(

இது எனது 150வது பதிவு. இது வரை எதையும் உறுப்படியாக எழுதி கிழிக்கவில்லை. கீ போர்ட் பனிஷசார இருக்க விருப்பம் இல்லாமல் இல்லை. உண்மையில் எழுதுவதற்கு சட்டியில் (சமஸ்கிருத எழுத்து போட்டு படித்தால் கம்பேனி பொறுப்பாகாது) ஏதும் இல்லை.

சரி சொல்லவந்த மேட்டர் என்னனு சொல்லிடுறேன். 150வது பதிவ டாம் டூம்னு சூப்பரா பண்ணலானு இருந்தேன். ஆனால் இன்னும் ஏதும் எழுதவில்லை. இன்னிக்கு வெட்டியாதான் இருக்கோமேனு நமது கூகிலாண்டவரை நலம் விசாரிக்க போனா நீ மறுபடியும் டெரர் ஆகிட்ட மச்சினு சொல்றாரு.முரண்டு பிடிக்கும் மரணம் - இந்த தலைப்பில் நான் எனது 100வது பதிவை எழுதினேன். கீற்று இணைய தளத்திலும் இந்த கவிதையை காணலாம்.

அங்கு மட்டும் இல்லை, தமிழன் தனது வலைதளத்தில் அதே மாதிரி கவிதை எழுதி இருக்காரு. அத பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஒரு வார்த்தை கூட பிசகாம அவரு என்னை மாதிரியே யோசிச்சி இருக்காரு. வாவ்... இட்ஸ் அ மிராக்கல்...

சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் நான் கடந்த வருடம் எழுதிய கட்டுரைகளில் ஒன்று. ஈகரை தளத்தில் அதே மாதிரி அதே படங்களோடு ஒரு கட்டுரை எழுதி இருக்காங்க. அத பார்த்த அதிர்ச்சியில் என்னால் இரண்டு நாட்களாக சோறு சாப்பிட முடியவில்லை. படங்களும் நான் போட்ட படங்கள் மாதிரியே இருக்கு. அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தையும் கவனிக்கவும்.என் கட்டுரைக்கும் கவிதைக்கும் வெளம்பரம் போடுவதற்கு நன்றி... ஆனால் என் பெயரை குறிப்பிட மறந்துவிட்டீர்கள்...

கடைசியா ஒரு கேள்வி: எப்படி அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெக்கம் இல்லாமல் குளிர்காய்கிறீர்கள்?

Thursday, August 13, 2009

நான் பிசியா இருக்கேன்...

நான் பிசியா ரெஸ்ட் பண்ணிகிட்டு இருக்கேன்...

இருந்தாலும்... கடமை தவறாமல் பதிவு போட்டுட்டேன் பாருங்க...

நீங்களும் ஜய்ன் பண்ணிக்கிறிங்களா...

Thursday, August 06, 2009

பீ கேர்புல் - பெரியவங்களுக்கு மட்டும்

சனிக்கிழமை மஸ்ஜிட் ஜாமெக் காரைக்குடி உணவகத்தில் இனிதே மதிய உணவை முடித்துக் கொண்டு நண்பரோடு கிளம்பினேன். வழக்கம் போல அல்லாமல் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. இசா தடுப்புக் காவல் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொருட்டு தகவல்கள் பரப்பப்பட்டிருந்தது அதற்கு காரணம் என புரிந்துக் கொள்ள முடிந்தது.

பிறகு கணினி கண்காட்சிக்கு சென்றோம். கே.எல்.சி.சியில் மிகப் பெரிய அளவில் நடந்த அக்கண்காட்சியில் நான் மிகச் சிறிய ஐபாட் ஒன்றை வாங்கிக் கொண்டேன். கண்காட்சி கதைக்கு அப்புறம் வருவோம். இப்போது இசா தடுப்புக் காவல் சட்டம் சம்பந்தப்பட போராட்டத்தைப் பற்றிய செய்தியைப் பார்ப்போம்.

கண்காட்சி முடிந்து வரும் போது மஸ்ஜிட் ஜாமெக் எல்.ஆர்.டி இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒலி பெருக்கியின் வழி தகவல் தெரிவித்தார்கள். எல்.ஆர்.டியில் ஏறிய போது “நாங்கள் இசா சட்டத்தை ஆதரிக்கிறோம்என மலாய் மொழியில் வார்த்தைகள் பொரிக்கப்பட்ட சட்டையினை அணிந்துக் கொண்டு சில வருங்கால தலைவலிகள்... மன்னிக்க... தலைவர்கள் கையில் சில பொட்டலங்களை வைத்துக் கொண்டு வழியை மறித்துக் கொண்டு ஆள் நிற்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

காக்கா கக்காபோனது போல அவர்களது தலை முடி பழுப்பேரி இருந்தது. கையில் தலைக்கவசம் வேறு. கொஞ்ச நேரம் கலந்திருந்துவிட்டு ஓடி வந்தவர்களா அல்லது காசு கொடுக்கப்பட்டதும் சிட்டாக பறந்து வந்துவிட்ட ஆசாமிகளா என தெரியவில்லை.

மிக எளிமையான சமுதாய மரியாதை கூட தெரியாத ஆட்களையெல்லாம் கூட்டம் கூட்டிக் கொண்டு இன்னும் எத்தனைக் காலம் கூத்தடிக்கும் திட்டம் இவர்களுக்கு இருக்கிறதென புரியவில்லை. இரவு வேளைகளில் அம்மணிகளை பின்னால் அமர வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிலில் பறக்கும் ஆட்களுக்கு இப்படி பணம் கொடுத்து வளர்த்துவிடுபவர்களை என்ன சொல்வது. சரி அரசுக்கு சாதகமாக ஆதரவளித்த இவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இசா சட்டத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என சொல்லிக் கொண்டு எதிர்கட்சி தரப்பில் வந்தவர்கள் செய்தது என்ன? மக்களுக்கு எவ்வளவு தொந்தரவுகள்? இதெல்லாம் செல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை. காலம் காலமாக போராட்டம் எனும் பெயரில் எல்லோருமாக கிளம்பி பேரணி நடத்துவதை விடுத்து வேறு விதமாக யோசிக்கலாம்.

அரசு தரப்பில் இசா சட்டம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அப்படி இருக்க இந்த பேரணி அவசியமான ஒன்று தானா? எதிர்கட்சியினரின் மலிவான விளம்பரத் தேடலையே இது குறிக்கிறது.

எதிர்கட்சியினரிடம் முன்பு மக்களிடையே நல்ல மதிப்பு இருந்தது மறுக்க இயலாது. மலிவு விளம்பரத்துக்காக தமது செயல்திட்ட பட்டியல்களை நிரப்பிக் கொண்டு நானும் எதையாவது செய்தேன் என இப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தால் மக்களின் நம்பிக்கை கெடுவதற்கு இவர்களே காரணமாக அமைந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
*********

கணினி கண்காட்சியில் நுழைந்ததும் எனக்கு தலைசுற்றிப் போனது. மிகப் பெரிய அளவில் நடக்கும் இதில் கலந்து கொண்டோர் ஒவ்வொருவரும் தான் வழி தவறி சீன தேசத்துக்கு வந்துவிட்டோமோ என நினைக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

ஏன் இங்கு வேலை செய்பவர்களில் தமிழர்களும் மலாய்காரர்களும் மிக மிகக் குறைவாக இருக்கிறார்கள்? இணைய தளத்தில் கணினி கண்காட்சிக்கான செய்திகளும், விளம்பரங்களும் கூட சீன மொழியில் தான் இருக்கிறது. நோ கமெண்ட்ஸ் :-)

*****

பதிவுலகில் ஆடி 18-ஆம் பெருக்கின் சமயங்களில் பொன்னியின் செல்வன் நாவலையும் எங்காவது ஒரு மூலையில் பேசி இருப்பதைக் காண முடிகிறது. பொன்னியின் செல்வனை படித்து சில ஆண்டுகளாகிவிட்டது. இது வரை நான்கைந்து பேரையும் படிக்க வைத்துவிட்டேன். நாவல் தொடங்குவது ஒரு ஆடி பெருக்கின் சமயம். ஒவ்வொரு ஆடி 18-ன் போதும் பொன்னியின் செல்வன் நாவலும் நம் நினைவை தட்டிச் செல்கிறது.

இப்பொழுதும் அந்நாவலை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. பூங்குழலி- இந்நாவலில் என்னைக் கவர்ந்த கதாபாத்திரங்களுள் ஒன்று. என் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்த சமயம் இந்த பெயரை பரிந்துரை செய்தேன். “என்ன பேரு இது குழாய் உடைஞ்சி போன மாதிரிஎன்றார்கள். நோ கமெண்ட்ஸ்

******

21-12-2012 இந்த தேதியை பார்த்தும் சிலருக்கு புரிந்திருக்கக் கூடும். இந்த தேதியில் உலகம் அழிஞ்சி போய்டும்னு சிலர் பேசிக்கிறாங்க. நானும் இதைக் கேட்டு ஷாக் ஆகி போய் கிடக்குறேன்.

2012 எனும் ஹாலிவுட் திரைப்படம் திரைகாண இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கவும்:





படத்த பார்த்து திகில் ஆகிடாதிங்க.

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி!!
இதையும் ஒரு எட்டு பார்க்கவும்.

இது சம்பந்தமாக தோழர் யுவகிருஷ்ணாவின் பதிவு:
அழியப் போகிறதா உலகம்