Friday, April 24, 2009

சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!

சில நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன். சரித்திரத்தில் பெண்கள் எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் தான். இப்புத்தகத்தில் பல தகவல் பரிமாற்றங்கள் சிறப்பாக கொடுக்கப்பட்டிருந்தாலும், ஆண்கள் மீதான வெறுப்புணர்ச்சியை ஆசிரியர் ஆங்காங்கே காட்டியிருப்பதை போன்ற எண்ணமும் எழுகிறது.

'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை.' ஒரு பகுதியில் ஆசிரியர் இப்படி எழுதி இருந்தார். பல சரித்திர சாதனை பெண்களை பற்றி எழுதிய அவர் எழுத்துகளுக்கு மறைவில் தென்படும் வெறுப்புணர்ச்சியின் காரணம் என்னவாக இருக்கும்.

சொந்த பிரச்சனையாக இருக்கலாம். சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் கூட அதற்கு ஒரு காரணமாய் அமையலாம். சரித்திர ஏடுகளில் பெண்களுக்கு பல கொடுமைகளும் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவல்கள் சிலவற்றை இங்க கொடுக்க முயற்சிக்கிறேன்.

4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை ‘பாரோ’ என நாம் அழைப்போம். ‘பாரோ’ என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்.

எகிப்திய சரித்திரத்தில் மீண்டும் இக்கொடுரம் ஏற்பட்டது. இம்முறை இரண்டாம் ராம்சேஸ் எகிப்திய ‘பாரோ’வாக இருக்கிறான். அவன் ஒரு கொடுங்கோலன். ராம்சேஸின் மனைவியான ‘ஆசியா’ அவனை எதிர்க்கும் பொருட்டு அவளுக்கு பல கொடுமைகளை விளைவிக்கிறான். ஆசியாவை சிறையெடுத்துக் கொடுமைச் செய்கிறான். கடைசியாக குத்துயிரும் கொலை உயிருமாய் இருந்த அவள் மார்பில் ஈட்டியை எய்தி கொல்கிறார்கள்.

மனிதனுக்கு சிந்தனைத் திறன் இருந்தும் அவன் உணர்ச்சிக்கே அதிகமாக இடம் கொடுக்கிறான். நாம் நாகரீகத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்து இருப்பினும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு என அனைத்தும் குருட்டு நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.

நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன. ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.

கிரேக்க நாகரீகத்தில் ஏறக் குறைய கி.மு 850 முதல் 480க்குள் பரவலாக நடந்த சம்பவம் உள்ளது. அக்காலகட்டத்தில் பெண் குழந்தைகளை கொலை செய்வது சாதாரண ஒன்றாக இருந்தது. எதென்ஸ் மக்கள் பெண் என்பவளை ஒரு மதிப்பற்ற பொருளாகவே கருதினார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாகவும், குழந்தைகளை பெற்றுப் போடவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள்.

கிரேக்கர்களின் பார்வையில், பெண்ணானவள் வீட்டு வேலை செய்பவளாகவும், திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்பவளாகவும் மட்டுமே தெரிந்தாள். கிரேக்க அரசாங்கமும் பெண்களை நாட்டின் சுமை எனக் கருதியது. இதற்கு காரணம் பெண்களால் போரிட முடியாமல் இருந்தது, அரசாங்கத்தை தேர்வு செய்ய ஓட்டு போடும் உரிமையும் பெண்களுக்கு இல்லை. இது போக சொத்துகளை வாரிசு வகிக்கும் தகுதியும் பெண்களுக்கு இல்லை. டெல்பியில் இருந்த 6000 குடும்பங்களில் 1 சதவீகிதத்திற்கு குறைவான பெண்களே இருந்தார்கள்.

நபிகள் நாயகத்தின் தோன்றலுக்கு முன் அரேபிய மக்கள் பண்பினால் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அவர்களை ஜாஹிலியா காலத்து மக்கள் எனக் கூறுவார்கள். ஜாஹிலியா காலத்து ஆண்கள் மிகக் கொடுரமானவர்களாகவும், ஒழுக்கங் கெட்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பெண்களை தங்களது காம இச்சையை தீர்க்கும் போக பொருளாக பயன்படுத்தினார்கள்.

அவர்களின் உடல் பசியை தீர்த்துக் கொண்ட பின் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்துவார்கள். பல இன்னல்களுக்குப் பிறகு அப்பெண்ணிற்கு மிக மலிவான பணத்தைக் கொடுப்பார்கள். அப்பணம் அவளது ஒருவேளை உணவை வாங்குவதற்கே போதுமானதாக இருக்கும். அடுத்த வேளை உணவுக்காக அவள் மீண்டும் ஆணை நோக்கி போவாள். உடலை விற்பனை செய்து, கூடவே வேதனைகளையும் வாங்கிக் கொண்டு பணம் புரட்டுவாள்.

தனது சந்ததியினர் இப்படிபட்ட இழி நிலையினால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதையே பெற்றோர்களும் நினைப்பார்கள். அதனால் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துவிடுவார்கள்.

கி.மு 580களில் சீன தேசம் கம்பூசியஸ் மதத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அக்காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நாட்டின் முக்கிய தலைவர்கள் இறந்து போவாராயின் அவர் மனைவியை புதைக்க மாட்டார்கள் மாறாக அப்பெண்ணின் தொப்புள் முதல் தொடை வரை இரும்பு கலசங்களைக் கொண்டு பூட்டிவிடுவார்கள். தனது வாழ்நாள் முடியும் வரை அப்பெண் மற்ற ஆடவரோடு எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை பொருட்டு இப்படி செய்வார்கள்.

ஜேக் தீ ரீப்பர் பல மர்மக் கொலைகளை செய்த ஆசாமி. 19ஆம் நூற்றாண்டில் பிரிடானிய அரசாங்கத்திற்குத் தலைவலி கொடுத்ததில்லாமல் மக்களையும் பீதியில் ஆழ்த்தியவன். யார் இவன்? ஜேக் விலைமாது பித்தன் என அறியப்பட்டான். இவனே நவீன சரித்திரத்தில் முதன் முதலாக பல மர்மக் கொலைகளை செய்தவனாகவும் கருதப்படுகிறான். பெண்களை அனுபவித்த பின் அவர்களின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக நறுக்கி போட்டுவிடுவான்.

இதனை அடுத்தாற் போல் எட்வட் கெய்ன் என்பவனும் பெண்களுக்கெதிராக பல கொடூர கொலைகளை செய்திருக்கிறான். அவற்றுள் இரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவனது மர்மமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு தீ சைக்கோ மற்றும் சைலன்ஸ் ஆப் தீ லேம்ப் எனும் இரு ஆங்கில படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

கேய்ன் இறந்த பெண்களை தோண்டி எடுத்து அவர்களின் உறுப்புகளை வெட்டி தனது அழகு சாதனமாக வைத்துக் கொள்வானாம். அவன் பிடிபட்ட சமயம் பெண்களின் மர்ம உறுப்புகளை கொண்டு அவன் உருவாக்கிய பல அழகு சாதனப் பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளார்கள். ஜேக் மற்றும் கேய்ன் இருவரும் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் பெண் வர்கத்தினருக்கு பெரும் கேடாகவே கருதப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பெண்களின் நிலையை சற்று அலசி பார்த்தோமேயானால் சோகத்தின் சாயல் அங்கும் ஒட்டி இருப்பதைக் காணலாம். பெண்களின் நிலை கேவலப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைப்படச் செய்கிறது. பல நூறு சீன, கொரிய மற்றும் பிலிபீன்ஸ் தேச பெண்கள் ஜப்பானிய இராணுவத்தின் காம பசிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் அதிகம் பாதிகப்பட்டது சீனர்களே. இதற்குக் காரணம் சீனர்கள் மீது ஜப்பானியர்களுக்கு இருந்த தனிபட்ட வீரோதமேயாகும்.

போரில் ஈடுபடுவது இராணுவமாக(ஆண்கள்) இருந்தாலும் அதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே உரித்ததாய் அமைந்தது. பிள்ளைகளுடன் கைவிடபட்ட தாய் வறுமையில் வாடினாள். அப்படிபட்ட தாய்மார்கள் கொலையுண்ட போது அவர்களின் பிள்ளைகளும் தவிப்புக்குள்ளாகினர்.


1993ஆம் ஆண்டு போஸ்னியாவில் நிகழ்ந்த இன ஒழிப்புப் போர், சேச்னீயயாவில் 1994ஆம் ஆண்டும் மற்றும் 1996ஆம் ஆண்டு கோசோவோவில் நடந்த போர்களிலும் பெண்களே மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் தான் என்ன? பெண்கள் அழிக்கப்பட்டால் சந்ததியனர் உருவாவதை தடுக்க முடியும் என்ற எண்ணமே முக்கிய காரணமாகும்.

இப்போர்களின் சமயம் பெண்கள் மீது வெடி குண்டெறிந்தார்கள், மாதமாய் இருந்தவர்களை உதைத்தார்கள், அவர்கள் வயிற்றைச் சுட்டும் வெட்டியும் கொன்று போட்டார்கள். உதாரணமாக போஸ்னிய போரின் போது பல போஸ்னிய பெண்களை சைபீரியர்கள் கற்பழித்தார்கள். பிறக்கும் குழந்தையின் உடலில் சைபீரியர்களின் இரத்தமும் கலந்திருக்க வேண்டும் என்ற இன வெறியே இதற்குக் காரணம்.

தமிழ் நாட்டில் சில கிராமப் பகுதிகளில் வரதட்சணை பிரச்சனை அதிகமாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொலைசெய்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கு விவசாய உரமோ அல்லது நெல் மணிகளோ கொடுப்பார்கள், முகத்தை ஈர துணியால் மூடிவிடுவார்கள், கழுத்தை நெறித்தும் அல்லது பசியால் வாட வைத்தும் சாக விட்டுவிடுவார்கள்.

சீன தேசத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பெண் சிசு கரு கலைப்பு அதிகம் நடந்தது. கருவிலேயே சாகடிக்கப்பட்ட சிசுவை சீன உணவகங்களுக்கு மருத்துவ உணவு செய்யும் பொருட்டு விற்பனை செய்துவிடுவது கொடுமையினும் கொடுமை.

2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாக்கிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.

இப்படியாக சரித்திரம் தொட்டே பெண்களுக்கெதிரான கொடுமைச் செயல்கள் நடந்து வந்திருக்கிறது. இப்போது நவநாகரிக உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும் பாலியல் கொடுமைகள் ஆங்காங்கெ நடந்த வண்ணமே உள்ளன. மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசாக ஒட்டிய பயத்துடனே பெண்கள் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினால் மிகையாகாது.


பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும்.

நாமும் ஒரு தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறோம் என்பதை நினைவு கொள்வோமாக.


தகவல்கள்:
TAMADUN DUNIA 1998 (உலக நாகரீகம்)

SEJARAH ASIA 2001 (ஆசிய சரித்திரம்)

TAMADUN ISLAM 1998 (இஸ்லாமிய நாகரீகம்)

http://en.wikipedia.org/wiki/Jack_the_Ripper

http://crime.about.com/od/murder/p/gein.htm/

70 comments:

கு.உஷாதேவி said...

விக்ணேஷ், இது பெண்ணினத்திற்கு அன்று நடந்த கொடுமைகள்(நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது)....இன்றைய காலத்தின் கொடுமைகளின் பதிவு எப்போது?

கோவி.கண்ணன் said...

எழுதி இருப்பது உண்மைதான். இந்த உலகமே ஆண்களின் கட்டுப்பாட்டில், அவர்களின் சிந்தனைகளில் தான் இருக்கிறது.

ஆண்கள் பெண்களை போகப் பொருளாகவும், சொத்தாகவும், அடிமையாகவும் நினைப்பதால் மற்ற ஆண் சமுதாயம் முதலில் அதை சேதப்படுத்தத் தான் நினைக்கும் :(

பெண்ணின் தாய்மை குறித்து மட்டுமே மேம்போக்க போற்றுகிறார்கள். :((

பெண்களுக்கெதிரான வன்கொடுமைதான் மிகப் பெரிய கொடுமை, சொந்த இனத்தாராலும், மற்ற இனத்தாராலும் மிகுந்து துன்பத்துக்கு ஆளாகுபவர்கள் பெண்களே !

வெங்கட்ராமன் said...

உங்களுடைய எல்லா சரித்திர பதிவுகளும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்தப் பதிவு என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் விக்னேஷ்வரன்,

ஈழத்தையும் சிறிது குறிப்பிட்டிருக்கலாம். அங்கும் பெண்கள் பலவிதமாகத் துன்புறுத்தப்படுகின்றனர். :(

அதிஷா said...

மிக நல்ல பதிவு விக்கி

உங்கள் ஒவ்வோர் பதிவிலும் உங்கள் நடை மெருகேருகிறது

மலர்விழி said...

கொடுமையிலும் கொடுமை...படித்து முடிப்பதற்குள் ஆண் வர்கத்தையே வேறுக்கும் அளவுக்கு எனக்குள் ஒரு இனம் புரியா வெறி தோன்றிவிட்டது...ஆனால் இப்பதிவைப் பதிந்த நீங்களும் ஒரு ஆண்தானே! பெண்களை மதிக்கும் ஆண்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை எண்ணும் போது என் மனதுக்குள் களவரமே நடக்கிறது.

சுவாமி விவேகானந்தர் கூறிய ஒரு தகவல் நினைவுக்கு வருகிறது. 'every man must look upon all women, except his wife, in the light of his own mother, or daughter or sister.' இந்த கூற்றை ஒவ்வொருவரும் பின்பற்றுவாறேயானால் பெண் கொடுமைக்கு ஒரு விமோட்சணம் கிடைக்கும்(எவ்வளவோ கிடைத்திருப்பினும், ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் ஒரு நடுக்கம், கலக்கம் இன்றும் இருக்கவே செய்கிறது).

பெண்ணைப் பெண்ணாக மதிக்காவிடிலும் ஒரு மனிதப்பிறவியாக மதித்தல் நன்று!

*விக்னேஷ்வரன்,அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்! தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை! வாழ்த்துகள்!*

கையேடு said...

எனது சார்பில் மீண்டும் ஒருமுறை.

//*விக்னேஷ்வரன்,அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்! தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை! வாழ்த்துகள்!*//


பயன்படுத்திய புகைப்படங்கள் பற்றிய குறிப்புகளையும் கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது.

தமிழ் பிரியன் said...

விளக்கமாக விமர்சித்துள்ளீர்கள்...
தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை! வாழ்த்துகள்!

M.Saravana Kumar said...

இன்னும் பலர் HOMOSAPIENS-லிருந்து HUMANBEINGS-ஆக மாறவில்லை என்பதையே காட்டுகிறது..
:(

சுப.நற்குணன் - மலேசியா said...

//பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும்//

முத்தான கருத்து.

வரலாற்றில் பெண்ணினம் பழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, இன்றைய நவின நாகரிகப் பெண்கள் தாங்களாகவே துணிந்து தங்களை அடிமைப் பொருளாகவும், வணிகப் பொருளாகவும், காட்சிப் பொருளாகவும், காமப் பொருளாகவும், கிளர்ச்சிப் பொருளாகவும் ஆக்கிக்கொள்கிறார்களே.. இதற்காக எங்கே போய் முட்டிக்கொள்வது?

PPattian : புபட்டியன் said...

மிக நல்ல ஒரு ஆய்வு விக்கி. அதை மிக அருமையாக எழுதியீருக்கிறீர்கள்.

உங்கள் ஆய்வுகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

அகரம்.அமுதா said...

இக்கட்டுரையைப்படிக்கும் போது என் நண்பர் எழுதிய கவிதை நினைவிற்கு வருகிறது.

மனிதனாகப் பிறந்துவிட்டேன்
மீண்டும் மீண்டும்
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
மனிதனாக மாறிவிட!

கற்பழிப்பு என்பது விலங்குகளில் கிடையாது தெரியுமா? அக்கொடுஞ் செயல் செய்பவன் மனிதன் மட்டுமே!

அடிமையாக்கி த் துன்புறுத்துவதும் மனிதஇனத்தில் மட்டுமே நடக்கிறது.

தாமிரா said...

பாராட்டப்படவேண்டிய முயற்சி! வாழ்த்துகள். (எழுத்துப்பிழைகளை குறைக்க முயலுங்கள்)

ச்சின்னப் பையன் said...

//மிக நல்ல பதிவு விக்கி

உங்கள் ஒவ்வோர் பதிவிலும் உங்கள் நடை மெருகேருகிறது//

நிஜமாக ஒரு ரிப்பீட்டு....

நாமக்கல் சிபி said...

//(எழுத்துப்பிழைகளை குறைக்க முயலுங்கள்)//

வழிமொழிகிறேன்!

கொடுற - கொடூர

கயல்விழி said...

நல்ல பதிவு விக்னேஷ்.

இந்த பிரச்சினையை நான் வெறும் ஆணாதிக்கமாக மட்டும் பார்க்கவில்லை. மற்றொரு கோணமும் உண்டு. வலியவர் எளியவர் மீது தாக்குதல் நடத்துவதும், அடக்குவதும் மனித இனம் தோன்றியதில் இருந்து நடந்து வருகிறது. பெண்கள் இயற்கையிலேயே கொஞ்சம் பலத்தில் குறைந்தவர்கள் என்பதால் அடக்குவது சுலபமாக இருந்தது. மேலும் குடும்ப செண்டிமெண்டுகளும் பெண்களை கட்டிப்போட்டது. சமீப காலமாக தான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவருகிறார்கள். முழுமையாக முன்னேற இன்னும் காலமாகும்.

VIKNESHWARAN said...

@உஷாதேவி
அவசியமெனில் கண்டிப்பாக எழுதுகிறேன் உஷா. ஆனால் இக்காலத்தில் அடுத்தவர் காமத்தை தூண்டும் பெண்களும் சிலர் அலைகிறார்கள். அவர்களை என்ன சொல்ல.

@கோவி.கண்ணன்
கண்ணன் அண்ணே மிக ஆழமாக படித்து கருத்தைச் சொல்லி இருக்கிங்க... மிக்க நன்றி.... முற்காலம் தொட்டே இப்படி ஒரு நிலமையை கொண்டு வந்திருக்கும் நமது முன்னோர்களை சொல்ல வேண்டும். அவர்களின் எண்ணத்தை பின்பற்றும் நம்மவர்களை என்ன செய்வது...

VIKNESHWARAN said...

@வெங்கட்ராமன்
மிக்க நன்றி. ஆம் சில தகவல்கள் என்னையும் வருத்தத்திற்குள்ளாக்கியது.

@ரிஷான்
வருந்துகிறேன் நண்பரே... இந்நிலை மாற இறைமைக் காக்கட்டும்.

@அதிஷா
நன்றி. பதிவெழுதியே நாசமாக போகிறேன் நான்.

@மலர்விழி
//பெண்ணைப் பெண்ணாக மதிக்காவிடிலும் ஒரு மனிதப்பிறவியாக மதித்தல் நன்று!//

என்னங்க சொல்லவறிங்க.. பெண்ணை பெண்ணாக மதிக்கக் கூடாதா? :(((

VIKNESHWARAN said...

@கையேடு
முதல் வருகைக்கு நன்றி கையேடு. மீண்டும் வருக.

@தமிழ் பிரியன்

நன்றி தமிழ் பிரியன்.

@MSK
நானும் அப்படிதான் நினைக்கிறேன். மிருகமாகவே இருக்கிறார்கள் பலர். :(
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@சுப.நற்குணன்
நற்குணன் ஐயா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. இக்கால பெண்கள் சிலர் துணிந்துவிட்டதனால் தான் துணி தேவை இல்லை என நினைத்துவிட்டார்கள் போல.

VIKNESHWARAN said...

@புபட்டியன்

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

@அகரம் அமுதா
முத்தாக கருத்தைச் சொல்லி இருக்கிங்க. ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தோடு கலவி கொள்வதை பார்க்காது. ஆனால் மனித மனது அதை நாடிச் செல்கிறது.

@தாமிரா
சுட்டியமைக்கு நன்றி நண்பரே. திருத்திக் கொள்கிறேன்...

VIKNESHWARAN said...

@சிபி

மொழியுங்கள் ழொழியுங்கள் அப்போது தான் நான் என்னை சரி செய்துக் கொள்ள முடியும்.

@ச்சின்ன பையன்

இப்படி ரிப்பீடு போட்டே காலத்தை ஓட்டினால் எப்படி.

@கயல்விழி

வருகைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றி கயல்விழி.

Aravinthan said...

ஈழத்திலும் தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் துன்பப்படுகிறார்கள்.

VIKNESHWARAN said...

@அரவிந்தன்

நீங்கள் எழுதி இருப்பதை படிக்கவே வேதனையாக இருக்கிறது :(. விடியல் பிறக்கும் கவலை வேண்டாம்...

துளசி கோபால் said...

பெண்களைக் கடவுளாகக் கொண்டாடும் நம்ம இந்தியாவில் மட்டும் கொடுமைகளுக்குப் பஞ்சமா என்ன?

கடவுளே பாதி உடலைப் பெண்ணுக்குக் கொடுத்தார்ன்னு அர்த்தநாரின்னு புகழந்துக்கிட்டே இருக்கும் இதே பக்திமான்கள்கிட்டே 33% வாங்க முடியலை பாருங்க(-:

நல்ல பதிவு விக்கினேஸ்வரன்

அனுஜன்யா said...

விக்கி,

மீண்டும் ஆழமான, ஆண்களைத் தலை குனிய வைக்கும் பதிவு. வளர்ந்த நாடுகளிலும் Honour killing என்ற பெயரில் பெண்களை சகோதரர்களே கொல்லும் கேவல நிலை இன்று உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இப்படி துன்புறுத்தப்பட்டும் பெண்கள் தொடர்ந்து போராடி, இன்று வெற்றியும் பெறும் நிலையில் இருக்கிறாள் என்றால், உடல் வலிமையைக் காட்டிலும், மனவலிமை மேலானது என்பது புரிகிறது. அது தானே மாக்களை மக்கள் ஆக்கியது. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

சேவியர் said...

ஆழமான அலசல். பிரமாதமாய் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

Dr.Sintok said...

//கற்பழிப்பு என்பது விலங்குகளில் கிடையாது தெரியுமா? அக்கொடுஞ் செயல் செய்பவன் மனிதன் மட்டுமே!//

கற்பழிப்பு ?

//ஈழத்தையும் சிறிது குறிப்பிட்டிருக்கலாம். அங்கும் பெண்கள் பலவிதமாகத் துன்புறுத்தப்படுகின்றனர்.//

இந்தியர்களுக்கு ஈழம் தெரியாது......
அப்படினா என்னா?


//இக்காலத்தில் அடுத்தவர் காமத்தை தூண்டும் பெண்களும் சிலர் அலைகிறார்கள். அவர்களை என்ன சொல்ல.//

காமத்துப்பால் கற்ப்போம்..........

VIKNESHWARAN said...

@துளசி கோபால்
மிக்க நன்றி. நிலைமை மாற இறைமை வழி புரியட்டும்.

@அனுஜன்யா
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அனுஜன்யா. ஓரு பெண் ஆணைவிட பத்து மடங்கு அதிகம் வேலை செய்தால் தான் ஒரு ஆணுக்கு கிடைக்கும் பெயர் கிடைக்குமாம். இது மேலை நாட்டு தகவல். :(.

VIKNESHWARAN said...

@சேவியர்
நன்றி சேவியர் அண்ணா. உங்களை விடவா....

@டாக்டர் சிந்தோக்

ஏன் இந்தக் கொலை வெறி. உங்கள் முகத்திரையைக் கிழிக்க ஒரு பதிவு போடவா?

Indian said...

//2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.

//

http://en.wikipedia.org/wiki/Mukhtar_Mai

நீங்கள் குறிப்பிடும் சம்பவம் இதுவென நினைக்கிறேன்.
இது நடந்தது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்.

Dr.Sintok said...

// ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இப்படி துன்புறுத்தப்பட்டும் பெண்கள் தொடர்ந்து போராடி, இன்று வெற்றியும் பெறும் நிலையில் இருக்கிறாள் //

மதங்கள் உள்ள வரை..........பெண்கள் அடிமைகள்தான்.............

Anonymous said...

நிஜங்கள்...படிக்கும் போதே வலிக்கின்றது..
இத்தனை நாட்டை பற்றி எழுதியுள்ளீர்கள். பக்கத்தில் எங்கள் நாட்டில் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்குள்ளாகும் எம் சகோதரிகள் பற்றியும் எழுதியிருக்கலாமே???

VIKNESHWARAN said...

@இந்தியன்

மன்னிக்க வேண்டும் நண்பரே, தவறாக எழுதிவிட்டேன் போல. பாக்கிஸ்தானிலும் பஞ்சாப் மாநிலம் இருக்கிறதா?

@டாக்டர் சிந்தோக்
எப்படி இப்படியெல்லாம்... :))

@தூயா
மன்னிக்க வேண்டும் சகோதரி. ஈழ தேசத்தின் தகவல்களை திரட்ட மறந்துவிட்டேன். மிகவும் வருந்துகிறேன். :((

மங்களூர் சிவா said...

வருத்தமான உண்மைதான் விக்னேஷ்.

Indian said...

//@இந்தியன்

மன்னிக்க வேண்டும் நண்பரே, தவறாக எழுதிவிட்டேன் போல. பாக்கிஸ்தானிலும் பஞ்சாப் மாநிலம் இருக்கிறதா?
//

ஆம். மேலதிகத் தகவல்களுக்கு இன்னும் சில உரல்களைக் கொடுத்துள்ளேன். கட்டுரையில் அந்தத் தகவல்களை சரி செய்து விடுங்கள்.

http://www.time.com/time/asia/2004/heroes/hmukhtar_mai.html

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4620065.stm

ரகசிய சிநேகிதி said...

தங்களின் பதிவுகள் எல்லாம் நல்ல முயற்சிகள் . தொடருங்கள்.. எழுத்துப் பிழைகளைக் குறைக்க முயற்சியுங்கள்.
பெண்ணுரிமை இன்னும் ஆராயப்படவேண்டிய உண்மை. பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இன்னும் குறைந்தபாடில்லை. ஆண்களால் பெண்கள் வதைக்கப்பட்ட உண்மை ஒரு புறமிருக்க. பெண்ணுரிமை பெண்ணால் பறிக்கப்பட்ட உண்மைகளும் உண்டு. புற வளர்ச்சி அடைந்த மனிதன் அக வளர்ச்சி எய்தவில்லை என்பதே மேற்கண்ட நிகழ்வுகளின் சாட்சிகள். மனிதநேயம் இருளுக்குள் மூழ்கிக்கிடக்கும் வரை கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் . இந்தக் கட்டுரையோடு சேர்ந்த படங்களும் நன்று.

வாழ்த்துகள் விக்னேஸ்வரன்.

(பி.கு: சியாம் மரண ரயில் பற்றியும் இங்கே குறிப்பிட்டு இருக்கலாம்)

A N A N T H E N said...

நல்ல அலசல்...

பெரும்பாலான முக்கிய பாரம்பரியங்களில் நிகழ்ந்த பெண் கொடுமைகளைப் பற்றி சொல்லும் போது... வரலாறும் லேசாக ஒப்பிடப்பட்டுள்ளது

அருமை...

ஆனாலும் பாருங்கள்... மலர்விழிக்கு ஆண்கள் மீது வெறுப்பே வந்து விட்டதாம்...

இதைக் கண்டு உங்கள் எழுத்தை மெச்சுவதா?
அல்லது... இப்படி ஓர் ஆப்பு வெச்சுட்டீங்களே என்று பயப்படுவதா? தெரியவில்லை

தொடர்ந்து எழுதுங்கள்!

VIKNESHWARAN said...

@சிவா

வாங்க சிவா. வருகைக்கு நன்றி...

@இந்தியன்

மிக்க நன்றி இந்தியன். மாற்றிவிட்டேன். தகவலுக்கு நன்றி.

VIKNESHWARAN said...

@இரகசிய சிநேகிதி

முதல் வருகைக்கும் கருத்து சொன்னதிற்கும் நன்றி சகோதரி.

@ஆனந்தன்
இது ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம். நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்கள் எல்லாம் வாங்கி வைத்து விவாதிப்போம். கூடவே சதீஷ்யையும் கூட்டிக் கொள்ளலாம்.

இனியவள் புனிதா said...

//Dr.Sintok said...
// ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இப்படி துன்புறுத்தப்பட்டும் பெண்கள் தொடர்ந்து போராடி, இன்று வெற்றியும் பெறும் நிலையில் இருக்கிறாள் //

மதங்கள் உள்ள வரை..........பெண்கள் அடிமைகள்தான்.............//

பெண்ணீய கொடுமைகள் மதத்தின் பேரால்தான் நடக்கின்றது என்பது சொல்வது கோழைத்தனமாய் தெரியவில்லை.மதங்கள் என்பது மனிதனை ஒழுக்க நெறியில் செல்ல மனிதனால் வகுக்கப்பட்டது. இயலாமை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். மதம் என்பது இந்த ஆணாதீக்க வர்க்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமம் மட்டுமே கிடையாது. கடவுள் எப்படி பொதுவோ மதமும் பொதுவானது. மதங்களையும் கடவுளையும் கண்ட மனிதன் மனிதத்தையும் வாழ்வித்திருக்கலாம்.

செந்தழல் ரவி said...

எக்ஸலண்டா எழுதியிருக்கீங்க !!!

Anonymous said...

விக்கி,

நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

இவ்வளவு நல்லா எழுதுற.

கும்மியும் கொட்டுற. உன்னப் புரிஞ்சுக்கவே முடியல.

மங்கை said...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள்... இந்த கொடுமை எல்லாம் இன்னும் நம் கண் முன்னே நடந்துட்டு தானே இருக்கு.. நீங்கள் குறிப்பிட்டுள்ள கொடுமைகளுக்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல

kanchana Radhakrishnan said...

மிக அருமையான பதிவு விக்னேஷ்..உங்களின் இது போன்ற பதிவுகள் தொடரட்டும்

Dr.Sintok said...

//பெண்ணீய கொடுமைகள் மதத்தின் பேரால்தான் நடக்கின்றது என்பது சொல்வது கோழைத்தனமாய் தெரியவில்லை//

இல்லை, கோழைத்தனமாய் தெரியவில்லை...............பெண்ணிய அடிமைக்கு மதமும் ஒரு அதிமுக்கிய காரணம் என்பதில் என்ன கோழைத்தனம் வேண்டும்................

//மதங்கள் என்பது மனிதனை ஒழுக்க நெறியில் செல்ல மனிதனால் வகுக்கப்பட்டது.//

நெறிகள் நிறைந்த மதத்தின் பெயரால்தான் இன்று பல நெறி மீறல்கள் நடக்கின்றன்.............


//இயலாமை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.//

ஆம் இது எங்களது இயலாமை தான்...மதத்தின் பெயரல் பல அடிமை சின்னங்களுடன் தான் வாழ்வோம் என்று அடம் பிடிக்கும் உங்களை போல் பலரை மீட்க்க முடியாதது எங்களின் இயலாமைதான்...

//மதம் என்பது இந்த ஆணாதீக்க வர்க்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமம் மட்டுமே கிடையாது.//

அப்படியா..........?மதம் என்பதே ஒரு ஆதிக்கத்தின் ஒரு வெளிபாடுதான்....

//கடவுள் எப்படி பொதுவோ மதமும் பொதுவானது.//

நீங்கள் காமடி கீமடி பண்ணயையே........

நிஜமா நல்லவன் said...

படிக்கவே கஷ்டமாக இருக்கிறது....நல்ல பதிவு விக்கி....வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

///வடகரை வேலன் said...
விக்கி,

நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

இவ்வளவு நல்லா எழுதுற.

கும்மியும் கொட்டுற. உன்னப் புரிஞ்சுக்கவே முடியல.///


மறுக்காச் சொல்லிக்கிறேன்!

இனியவள் புனிதா said...

//இல்லை, கோழைத்தனமாய் தெரியவில்லை...............பெண்ணிய அடிமைக்கு மதமும் ஒரு அதிமுக்கிய காரணம் என்பதில் என்ன கோழைத்தனம் வேண்டும்................//

உலக வரலாறுகளை கூர்ந்து நோக்குங்கள்...எல்லாமே மனித செயலே அன்றி வேறொன்றும் அறிகிலேன். எந்த நியதிலும் ஒரு விதி விலக்கு உண்டு என்றுதான் கூறுகிறேன்.

//நெறிகள் நிறைந்த மதத்தின் பெயரால்தான் இன்று பல நெறி மீறல்கள் நடக்கின்றன//

மதத்தின் பெயரால் நடத்துவது கடவுளா? பகுத்தறிவு படைத்த மனிதனா?


//ஆம் இது எங்களது இயலாமை தான்...மதத்தின் பெயரல் பல அடிமை சின்னங்களுடன் தான் வாழ்வோம் என்று அடம் பிடிக்கும் உங்களை போல் பலரை மீட்க்க முடியாதது எங்களின் இயலாமைதான்...//

கருத்து பறிமாற்றம் மட்டுமே இங்கு நடக்கிறது. அதற்குள் என்னைப் போன்று என்று அவசரமாய் சுட்டிக் காட்டும் தங்களது செயல்? அப்படி மீட்கும் நிலையிலும் நானில்லை. ஒருவரால் உருவாகப்பட்ட மதங்களுக்கு ஒரு நாள் முடிவு வரலாம் ஆனால் நம்மையும் மீறிய பரம்பொருள் இல்லையென்று கூற முடியுமா? இறைநிலை, பிரபஞ்சம் இவ்விரண்டை மறுக்க இயலுமா?


//அப்படியா..........?மதம் என்பதே ஒரு ஆதிக்கத்தின் ஒரு வெளிபாடுதான்....//

நாத்திகத்திற்குப் போலித்தனமான மரியாதை கொடுக்க மனம் இசையவில்லை. இறையை ஆராதிக்க தோன்றுகிறதே தவிர ஆராய தோன்றவில்லை.கம்யூனிசம் ரஷ்யர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்...


//நீங்கள் காமடி கீமடி பண்ணயையே........//

வாதிக்க விரும்பவில்லை...

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே" - திருமூலர் திருமந்திரம்

VIKNESHWARAN said...

@ புனிதா

நன்றி.

@ரவி

நன்றி அண்ணே... அடிக்கடி வாங்க..

@ வேலன்

ரொம்ப நன்றி வேலன் ஐயா... கும்மி அதுவா வந்திடுது... நான் நக்கல் செய்ய நினைக்கும் இடத்தில் மட்டும் தான் கும்முவேன்... சில நேரம் பயம்தான்....

VIKNESHWARAN said...

@மங்கை, காஞ்சனா, நிஜமா நல்லவன்

மிக்க நன்றி. மீண்டும் வருக....

ஹேமா said...

வணக்கம் விக்கி.முதன் முதலா உலா வருகிறேன் உங்கள் தளம்.நிறையத் தேடப்... படிக்க இருக்குப் போல இருக்கே.அலசிப் பார்க்கோணும்.

முதலா இருக்கிற கவிதையை விட உலகம் முழுதிலுமே பெண்களின் அடக்குமுறை கொடுமை மனதை உருக்கிவிட்டது. அருமை.

//நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன. ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.//

இதுதான் உலகம் முழுதும் உண்மை நிலை.ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.
அதற்கும் பெரிய மனசு வேணும்.

Dr.Sintok said //இந்தியர்களுக்கு ஈழம் தெரியாது..அப்படினா என்னா?//

கண் தெரியும் காதுக்குக் கேட்கும் தூரத்தில் ஈழத்துப் பெண்கள் சிறுவர்கள் எவ்வளவு துன்புறுத்தப் படுகிறார்கள்.தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழமும் அங்கு நடக்கும் கொடுமைகளும் துன்பச் சூழலும் தெரியாமல் இருக்கிறார்கள் என்றால்...!!!!?

VIKNESHWARAN said...

@ஹேமா

நன்றி ஹேமா. டாக்டர் சிந்தோக் சொல்ல வருவது அதுவல்ல... நான் எழுதவில்லை என்பதை குத்திக் காண்பிக்கும் நோக்கம் தான் அது. நீங்கள் வேறு விதமாக புரிந்துக் கொண்டீர்கள்.

ஹேமா said...

ஓ...அப்பிடியா.மன்னிக்கோணும் டாக்டர் சிந்தோக்.அப்போ பின்னூட்டத்தின் புகழ் முழுக்க விக்கிக்கு மட்டுமே.

மணிநரேன் said...

நல்ல தொகுப்பு.
மனதிற்கு வேதனை அளிக்கும் விடயங்கள். தவறுகள் பழைய சரித்திரமாக மட்டுமே இருந்துவிடாமல் இன்றும் இவ்வாறான ஆணாதிக்கமும், பெண்களுக்கெதிரான கொடுமைகளும் நடப்பது தலைகுனிவையும், மனதில் வரக்தியையும் ஏற்படுத்துகிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான பதிவு..இன்றளவும் இந்த நிலை பெரிதும் மாறிவிடவில்லை எனபது வருத்தப்பட வேண்டிய உண்மை..

VIKNESHWARAN said...

@ மணிநரேன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ கார்த்திகை பாண்டியன்

கருத்துக்கு நன்றி நண்பரே....

thevanmayam said...

4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை ‘பாரோ’ என நாம் அழைப்போம். ‘பாரோ’ என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். ///

கேட்க சகிக்கவில்லையே இது!! இன்னும் இத்தகைய கொடுமைகள் நடக்கிறதா என்ன?

வலசு - வேலணை said...

அருமையான பதிவு நண்பா!
கண்முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈழப் பெண்கள் மீதான வன்முறைகளை (பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறும் பெண்களை ஆடைகளைக் களைந்து அம்மணமாய் அழைத்துச் செல்வதாய்ஈ கடந்த 48 மணி நேரமாக பேருந்துகளுக்குள் அடைக்கப்பட்டு இயற்கைக் கடன்களைக் கூட கழிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கொடுமையை) மறந்து விட்டீர்கள் என்பதை நினைக்க வேதனையாக உள்ளது.

VIKNESHWARAN said...

@ தேவன்மையம்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்போதெல்லாம் அதை விடக் கொடுமைகள் அதிகமாகவே நடக்கிறது.

@ வலசு.

திரு.வலசு பொருத்தருள வேண்டும். இந்தக் கட்டுரை ஒரு மீள்பதிவாகும். நண்பர்கள் பலரும் இலங்கையில் நடக்கும் கொடுமையைச் சுட்டி எழுதாதை எடுத்துரைத்தார்கள். இதை எழுதும் சமயம் அந்தக் குறிப்பை தொடுக்க மறந்தேன். சேர்த்துவிடுகிறேன் அன்பரே.

தராசு said...

அருமை, அருமை, அருமை விக்கி.

பெண்களை பெண்களாகவே ஏன் பார்க்க வேண்டும் எனத்தெரியவில்லை. ஒரு சக மனித உயிராக ஏன் மதிப்பதில்லை எனத் தெரியவில்லை.

ஆனாலும், இப்பொழுதெல்லாம் பெண்ணுரிமை என்பது, ஆண் சொல்வது அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மீறுவது எனற புதிய பாதையில் பயணிக்கிறது.

tamilvanan said...

நல்ல பதிவு விக்னேஷ்.

பாலியல் கொடுமைகள் - அன்றும் இன்றும் மட்டுமல்ல இனியும் பெண்களின் மீதான பாலியல் வன்மம் தொடரும். ஆனால் தற்போது பெண்களுக்கு கிடைத்துருக்கும் சுதந்திரம் மற்றும் விழிப்புணர்வு பாலியல் கொடுமைகளை குறைத்திட வாய்ப்புண்டு. போர்க்காலங்களில்
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தைகளும் பாலியல் வன்மங்களுக்கு ஆளவது உண்மை.

டாக்டர் சிந்தோக் கருத்தில் உண்மை உள்ளது.
//மதங்கள் உள்ள வரை..........பெண்கள் அடிமைகள்தான்.............//

பெண்களை மட்டுமல்ல பெரும் பகுதி மக்களையும் அடிமையாக சுய சிந்தனை அற்றவர்களாக வறியவர்களாக ஆக்கியிருப்பது மதமே.

இறைநிலை, பிரபஞ்சம் இவ்விரண்டையும் மறுக்கவில்லை. ஆனால் மதங்கள் இவ்விரண்டாலும் உருவாக்கப்படவில்லை.

ஆயுதங்கள் போல மதமும் மனிதனின் கண்டுப்பிடிப்பு. ஆரம்ப காலத்தில்
வாழ்வியலை தொடர தங்களை தற்காத்துக்கொள்ள ஆயுதங்கள் உதவின. ஆனால் இன்றைய நிலை என்ன? மதங்களும் அவ்வாறே, ஆரம்ப காலத்தில் வாழ்க்கையை நெறிப்படுத்த உதவின. இன்றைய நிலையில் ஒரு மனிதன் மற்றுமொரு மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தவே மதங்கள் உதவியாய் உள்ளது. தமி்ழ்வாணன்.

VIKNESHWARAN said...

@ தராசு

//இப்பொழுதெல்லாம் பெண்ணுரிமை என்பது, ஆண் சொல்வது அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மீறுவது எனற புதிய பாதையில் பயணிக்கிறது.//

உண்மை. இதனால் தான் குடும்பங்களில் கிங் கண்ட்ரோல், குவின் கண்ட்ரோல் எனும் பிரச்சனைகள் யாவும். ஆமாம் அண்ணாச்சி, அன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ தட்டு முட்டு சாமான்கள் எகிரும் சத்தம் கேட்டதே என்னக் கதை. அடி பலமோ? :))

@ மணிவண்ணன்

நிதர்சனமான உண்மை. ஒரு மனிதனின் சுயமரியாதையான வாழ்க்கையில் பாதிப்பு விளைவிக்கும் விதமாக தான் மதங்கள் அமையப் பெற்றுள்ளன. அதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. சம்பிரதாயம், சடங்குகளென தனக்கு தானே இட்டுக் கொண்ட பூட்டு தான் மதம். அக்காலகட்டத்தில் தலைவிரித்தாடிய ஆணாதிக்கச் சிந்தனைகளே மதங்களில் காணக்கிடக்கின்றன. அதை இன்னமும் கண்மூடித் தனமாக இடித்துத் தொங்கிக் கொண்டு கிடக்கிறார்கள்.

தராசு said...

//@ VIKNESHWARAN said...
@ தராசு

//இப்பொழுதெல்லாம் பெண்ணுரிமை என்பது, ஆண் சொல்வது அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மீறுவது எனற புதிய பாதையில் பயணிக்கிறது.//

உண்மை. இதனால் தான் குடும்பங்களில் கிங் கண்ட்ரோல், குவின் கண்ட்ரோல் எனும் பிரச்சனைகள் யாவும். ஆமாம் அண்ணாச்சி, அன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ தட்டு முட்டு சாமான்கள் எகிரும் சத்தம் கேட்டதே என்னக் கதை. அடி பலமோ? :))//

ஹலோ, அது என் பொண்ணு பாத்திரத்தை கீழே போட்ட சத்தமய்யா,
இப்படியா கோக்கு மாக்கா கோத்து வுடுவாங்க!!!!!!

Anonymous said...

சீன சமூகத்தில் பெண்ணை ஆண்களுக்கான ஒரு நுகர்வு பொருளாகவே பாவிக்கப்பட்டு அவர்களின் கால்கள் கட்டப்பட்டும் சம்பவமும் வரலாற்றில் அவர்களின் இருப்பு சிதைக்கப்படும் செயல்தான். சின்ன கால்களே ஆண்களின் கிளர்ச்சியும் வலுப்படுத்தும் என்பதற்காக ஆணைத் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு ஜடமாகவே சீன சமூகத்தின் பெண்கள் மிகக் கொடுமையாக வழிநடத்தப்படுகிறார்கள்.,

கே.பாலமுருகன்

Krishna Prabhu said...

பெண்ணியம் சார்ந்த கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

நான் கூட சமீபத்தில் "தமிழககத்தில் அடிமை முறை" என்ற புத்தகத்தை வாங்கியுள்ளேன். காலச்சுவடு பதிப்பக வெளியீடு. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.

VIKNESHWARAN said...

@ தராசு

நன்றி

@ பாலமுருகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

VIKNESHWARAN said...

@ கிருஷ்ண பிரபு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... புத்தக விமர்சனங்கள் கொடுக்கும் உங்கள் பதிவைக் கண்டேன். மிக்க பயனாக இருக்குக்கிறது. மேலும் தொடந்து எழுதுங்கள்.

Anonymous said...

1. உலக வரலாற்றில் பெண்கள் படியுங்கள்.
2.இவை எல்லாமே பெண்கள் தாங்களாகவே தேடிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது ஆரம்ப கால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். தற்போது எழுத்தில் உள்ள வரலாறு அல்ல.

VIKNESHWARAN said...

@ புகழினி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமா நீங்க ஏதோ புத்தகம் கொடுக்கிறதா சொன்னிங்களே எங்க :P

anbha said...

arumaiyaana pathivu...anbare..