Friday, February 20, 2009

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி!!


இன ஒழிப்பு இன்னமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சமாசாரம் என்றே கூற வேண்டும். உண்மையில் ஒரு இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது. மாயாக்கள் விசித்திர குணாதிசயங்கள் கொண்ட மனித இனம். தென் அமேரிக்க பகுதியின் வாழ்ந்த இவ்வினம் இப்போது இல்லை. மாயாக்கள் அழிக்கப்பட்டார்களா, அழிந்து போனார்களா அல்லது மறைந்து போனார்களா?

அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆரம்ப காலம் முதல் பல முறை ஸ்பெயின் நாட்டினர் அங்கு படையெடுத்து இருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது அவர்களுக்கு மாயக்களின் நுட்ப ஆய்வுகளை அறியும் ஆவல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மாயாக்களின் வாழ்வியல் முறை அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

மாயாக்களிடம் கட்டிடக் கலை, கணித, சமய நுட்பங்கள் அபரிமிதமாகவே இருந்திருக்கின்றன. ஸ்பெயின் சிப்பாய்களிடம் போர் கருவிகள் அதிகமாக இருந்தன. மாயாக்களிடம் நவீனப் போர் கருவிகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் செற்பம். மாயாக்கள் வாழ்ந்த காடு, அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் கைப்பற்றுவதற்காக அவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாயாக்களின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள். அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின் நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? "இல்லை, அது விளங்காத ஒன்று" என்றே பலரும் சொல்வார்கள்.

புரியாத ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள், இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள், எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு சுகம் தான்.

மாயாக்களின் நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?

அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது.
கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் 'கொடெக்ஸ்' என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.

மாயா வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள். அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும் வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.

கோடெக்ஸ், கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம். அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில் இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு பேசுவது போலவும் உள்ளன.

இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.

கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண முடிகிறது. Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள் விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.

21 டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும் குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள் இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான் பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை. அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.

பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.

அத்திகதியை பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.

இன்று எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால் இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?

உலக சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில் கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால் அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின் நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும் Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.

1517-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில் முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால் இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.

1973-ஆம் ஆண்டு வெளிவந்த 'The Mayan Factor' எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் "The Great Cycle' எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.

இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.

அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.

(பி.கு: மாயா நாகரிகம் தொடர்பான தகவல்களை அதிகமாகவே சேகரித்துவிட்டேன். எழுதினால் இன்னும் நீண்டுவிடும். இதை தொடராக்கும் எண்ணம் இல்லை. ஒவ்வொரு கட்டுரையும் சார்ந்திராமல் கொண்டுச் செல்ல முயற்சிக்கிறேன். மாயா நாகரீகம் தொடர்பாகச் சென்ற ஆண்டு நான் எழுதிய கட்டுரையின் சுட்டி: மாயாக்கள் இருந்தார்களா? )

28 comments:

RAHAWAJ said...

நல்ல ஒரு ஆராச்சி செய்தி விக்னேஷ்,தொடர்ந்து எழுதுங்கள்,

Thamiz Priyan said...

நல்ல கட்டுரை! நிறைய தகவல்களை சேகரித்து எழுதி இருக்கீங்க... நன்று!

Subha said...

உலகம் அழியுமா? உங்கள் தனிப்பட்ட கருத்து என்னவோ?

கோவி.கண்ணன் said...

இயற்கையோடு வாழ்ந்தவர்களுக்கு இயற்கை இயக்கம் பற்றி அறிவியலால் விளக்க முடியாத அளவுக்கு அறிந்திருக்கக் கூடும். நாட்காட்டிகள் இல்லாத காலகாட்டங்களில் கூட இந்தியர்கள் சூரிய சந்திர கிரஹணங்களை துல்லியமாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள். எனவே மாயக்களின் உலக அழிவு குறித்த தேதிகளில் உண்மை இருக்கலாம்.

:)

குமரன் மாரிமுத்து said...

சிறப்பான தகவல்களை அலசி கட்டுரையாக வடித்திருக்கின்றீர்கள். தொடர்க...

எனக்கு ஒரு உண்ம தெரிந்தாகனுமே....

அன்று அழிக்கப்பட்ட மாயான்களின் மறுபிறப்பாக ஏன் நீங்கள் இருக்கக்கூடாது என்று என் உள்மனதில் பட்சி முணுமுணுக்கிறது.

சி தயாளன் said...

நல்ல ஆய்வுக் கட்டுரை விக்கி....

மாயாக்கள் கணிப்பு உண்மையா பொய்யா எனப் பார்த்து விடுவோம்...:-)

Anonymous said...

Gud Article.

Kiri Kamal

A N A N T H E N said...

2012 ரொம்ப நாள் இல்லை... அதையும் தான் பார்த்துவிடுவோம் (ஒருவேளை உண்மையாகி இருந்தால்... பார்க்க முடியுமான்னு தெரியலை!)

goma said...

19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

ஒரு கின் இல்லைன்னா ஒரு கின் நீங்க பெரியா ஆராய்ச்சியாளரா வருவீங்க விக்கி.நான் சொல்றது உண்மைன்னு ஒரு துன்’னில் எல்லோரும் உணருவாங்க.கது,பிக்துன் கலப்துன் வரைக்கும் காத்திருக்கவே வேண்டாம்
----
வாழ்த்துக்கள் விக்னேஷ்

நாமக்கல் சிபி said...

எங்கிருந்து புடிக்கிறீங்க இந்த மாதிரி விஷயங்களை!

ஒரு பதிவு போட்டாலும் நச்சுன்னு உருப்படியான பதிவா போடுறீங்க!

VG said...

ha ha ha..21/12/2012 kadasi naala??

siripa irukku. Naalaiya valkaiye uruthi ille. poluthu vidiyum nambikaile thaa toonge porome tavira. urutiyil illai.
apdi irukkeiyil, 2012 ulagam aliyaratha pathi nekku kavalai ille. :D:D

iniku nan santoshama irukken. athu thaan enaku vendum .:)

Kalaiyarasan said...

அருமையான விடயங்களை தேடிப் படிப்பதுடன், பிறருக்கும் அறியத் தருகிறீர்கள். பாராட்டுகள் விக்னேஷிற்கு.
மாயா இனத்தை சேர்ந்த இந்தியர்கள் இப்போதும் குவாதமாலா நாட்டில் வாழ்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு தமது முன்னோர் நாகரீகம் பற்றி எதுவும் தெரியாது. அனேகமாக கல்வி அறிவு பெற்றிருந்த மாயாக்களை ஸ்பானியர்கள் அழித்திருக்கலாம். எஞ்சியவர்கள் கிராமங்களில் இருந்த பாமர மக்களாக இருக்கலாம். இந்தக் காலத்திலும் படையெடுத்து வரும் அந்நியர்கள் முதலில் கொல்வது கற்றவர்களைத் தான்.

Anonymous said...

மாயாக்கள் பற்றி நானும் நிறைய படித்திருக்கிறேன். வானியல் வித்தகர்கள் அவர்கள். ம்ம்ம்.. எப்படியும் இன்னும் 3 வருஷம் இருக்கா !!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜவஹர்

கண்டிப்பாக எழுதுகிறேன்.... வருகைக்கு நன்றி...

@ தமிழ் பிரியன்

நன்றி தலைவரே.... நெம்ப நாளைக்கு பிறகு பின்னூட்டம் போட்டிருக்கிங்க தெங்ஸ்ங்க...

@ சுபாஷினி

தொடக்கத்துக்கு முடிவு இருக்கும் என சொல்கிறார்களே அதற்கு உங்கள் கருத்து என்ன? :)) வருகைக்கு நன்றி..

இஸ்லாத்தில் ஒரு கருத்து சொல்வார்கள்... நாளைக்கு உலகம் அழியும் என நீ தெரிந்துக் கொண்டாலும், இன்று உன்னிடம் உள்ள விதைகளை விதைக்க மறவாதே என்று. குழப்பிட்டேனா... :))


@ கோவி.கண்ணன்

இருக்கலாம் என்று தான் சொல்றிங்க பார்த்திங்களா? நீங்க அங்கிட்டா இல்ல இங்கிட்டா :)) வருகைக்கு நன்றி அண்ணா

@ குமரன் மாரிமுத்து

மறுபிறப்பு என்று உள்ளதா? கர்ம வினைகள் என்பது உண்மையா? இரண்டும் உண்மை என்றால் மனிதன் அவனாகவே வாழ்ந்து தனது வினைகளை அகற்றிக் கொள்ளலாமே? எதற்காக மறுபிறப்பு... புதசெவி.... முனுமுனுக்கும் பட்சியை குவாடர் அடிக்கும் போது பிரியாணி போட்டுறலாம்... நான் சொல்லவில்லை.. அனந்தன் தான்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனந்தன்

சாகறதுக்குள்ள பாம்பு வைன் டேஸ்ட் பண்ணி பார்த்திடுங்க...

@ டொன் லீ

எப்படி பார்ப்பிங்க :P

@ அனானி

நன்றி

@ கோமா

வாழ்த்துக்கு நன்றி கோமா அம்மா...

@ நாமக்கல் சிபி

நன்றி அண்ணா... எல்லாம் படிக்கும் விசயம் தான்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜி

அட அட அட என்னா ஒரு தத்துவம்... உலகம் அழிந்திடும்னு கட்டுரையில் குறிப்பிட பட்டுள்ளதா? :)

@ கலையரசன்

நிதர்சனமான உண்மை அது தான்... அஸ்துரோலிய பழங்குடியனரையும் இப்படி தான் பெயருக்கு கொஞ்சம் விட்டு வைத்திருக்கிறார்கள்...

@ சேவியர்

வாங்க அண்ணா... ரொம்ப நாளா காணும் :)) நீங்கள் முன்பு எழுதி இருந்ததை படித்திருக்கேன்...

Subash said...

நல்ல ஒரு ஆராச்சி செய்தி விக்னேஷ்,
மாயன்ஸ் பத்தி உங்க முதல் பதிவில்தான் உங்களை நன்றாக பிடித்தது. தமிழில் வாசிக்கும்போது ஏனோ மிகவும் பிடிக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்,
( ஏன் தொடராக்கும் ஆர்வமில்லை ???? :( )

ஆ.ஞானசேகரன் said...

நல்ல ஆராச்சி கட்டுரை பாராட்டுகள்

கோவி.கண்ணன் said...

//@ கோவி.கண்ணன்

இருக்கலாம் என்று தான் சொல்றிங்க பார்த்திங்களா? நீங்க அங்கிட்டா இல்ல இங்கிட்டா :)) வருகைக்கு நன்றி அண்ணா//

உலகம் அழியும் என்று சொல்லும் பக்கம் தான் நான்.

கலிமுத்திடுத்து தெரியாதா நோக்கு ?
:)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சுபாஷ்

நான் இப்பகுதியை தொடராக எழுதவில்லை. இச்செய்தி தனியாகதான் கொடுத்திருக்கிறேன். ஆனால் என்னத்தை பற்றி எழுதி இருக்கிங்க ஒன்னும் புரியலையே என சில மின்மடல்கள் வந்தன. அதாவது மாயக்களை பற்றி அவர்களுக்கு தெரியாதது தான் பிரச்சனை. எனது முதல் கட்டுரை சுட்டியை கொடுத்து படிக்கச் சொன்ன பிறகு தான் அவர்களுக்கு புரிந்ததாம். அதனால் சுட்டியை மேலே கொடுங்கள் என்றார்கள். அதுவே நான் தொடராக எழுதினால் பாதியில் வருவோருக்கு ஒன்றுமே புரியாமல் போகும் சாத்தியங்கள் அதிகம்.

@ ஆ.ஞானசேகரன்

நன்றி ஐயா... மீண்டும் வருக...

@ கோவி.கண்ணன்

:)) உலக வாழ்க்கையில் இருந்து விடுதலைனு சொல்லுங்க... ஜய்யா ஜாலி...

ஆளவந்தான் said...

//
அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.
//
இப்போ நடக்குற நிகழ்வுகளை எல்லாம் வச்சு பாத்தா .. may be we are in "The earth of Regenration Period", who knows?

Anonymous said...

i was really interested to read your article...ingge vantha, tamilile iruke..parava illai. i am not tamil educated, iruntalaum appa solli kuditirukanga ..enna, onnu onna spell panni padikunum, i will take it as a challenge, rombe nalachi tamil padichi...so this is a good chance to recap. Thanks u.

Anonymous said...

மாயாக்கள் அவங்கட கோயில்கலக் கூட முழுசா கட்டல்ல. அது மாதிரி அவங்கட காலண்டரயும் பாதிலயில விட்டு இருக்கலம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆளவந்தான்

இருக்கலாம்... யார் கண்டது... :)) வருகைக்கு நன்றி..

@ அனானி

கொஞ்சம் கொஞ்சமா படிங்க :)

@ அனானி

முழுமையின்மைக்கு காரணம் என்னவாக இருக்கும்?? :))

raj said...

There are many theories regarding the Mayan calendar, and the most terrifying is the one which says the end of the world is happening on 2012. However I don’t think 2012 end of the world is happening. Maybe the Mayans were just too lazy to write the next calendar or maybe 2012 represents the beginning of a new era. The prophecy says that the 2012 year will end with a fire-related catastrophe. However some experts say that December 21, 2012 represents the end of a cyclic time, and that a new cyclic time will start.

According to a number of people who studied the Mayans, the galactic alignment will happen in the winter solstice of 2012. Although some say that the galactic alignment occurred in 1998, in fact this astronomical event will occur on December 21, 2012 and it represents the transformation and renewal of the human kind.

The galactic alignment represents the alignment of the winter solstice sun as viewed from the Earth with the galactic equator. Every year the winter solstice, the Earth, the sun, and the galactic equator come into alignment, but on December 21, 2012 the sun will precisely align with galactic equator. The Mayans believed that this represents the beginning of a new era and that the humans will experience a profound spiritual transition. This transformation will be a good one, believed the Mayans.

I don’t think 2012 end of the world is happening. Please stop freaking, and don’t be scared. You want to live a life of fear? Of course you don’t. We don’t know too much about our past, and we don’t know too much about astronomical events. I guess it’s all up to you. I just believe that 2012 end of the world is not happening.

Read more Here:- http://en.wikipedia.org/wiki/Galactic_Alignment

பிரவீன் சுந்தர் பி.வி. said...

சகோதரர்கள, ஒன்று தெரிந்து கொள்வோம்,
உலகம் அழிய தற்போது உள்ள காரணங்கள் (சுனாமி, புகம்ப்ம், புயல், வறட்சி, போர், விசித்ர நோய்கள், எரி மலை வெடித்து சிதறுதல் ) அல்ல என்னும் நிறைய பிறக்கும்.

ஒரு மாநிலம் வெள்ளத்தால் அழியும், அண்டை மாநிலம் வரட்சியால் வாடும், இது போல பல கொடுமைகள் காத்து கொண்டு இருக்குது.

கண் இமைக்கும் தருணத்தில் உலகம் அழியாது. உலகம் அழிய இன்னும் 200 முதல் 500 ஆண்டுகள் உள்ளது.

அஹோரி said...

அருமையான பதிவு.

kainehhh said...

Sure this is true. these are caused by the human resources only. By creating new technologies, reducing the forests,polluting the enveroinment this problem will going to come. I know all of them will going to die at any one day. But I ashamed due to our technologies our whole world going to be destroyed. I had seen this title on 5 months before. From that time i m trying to prevent the destroy of natural sources. Pls i kindly request all to improve or protect the natural sources to get alteast three or four years more to live.