இது எனது 150வது பதிவு. இது வரை எதையும் உறுப்படியாக எழுதி கிழிக்கவில்லை. கீ போர்ட் பனிஷசார இருக்க விருப்பம் இல்லாமல் இல்லை. உண்மையில் எழுதுவதற்கு சட்டியில் (சமஸ்கிருத எழுத்து போட்டு படித்தால் கம்பேனி பொறுப்பாகாது) ஏதும் இல்லை.சரி சொல்லவந்த மேட்டர் என்னனு சொல்லிடுறேன். 150வது பதிவ டாம் டூம்னு சூப்பரா பண்ணலானு இருந்தேன். ஆனால் இன்னும் ஏதும் எழுதவில்லை. இன்னிக்கு வெட்டியாதான் இருக்கோமேனு நமது கூகிலாண்டவரை நலம் விசாரிக்க போனா நீ மறுபடியும் டெரர் ஆகிட்ட மச்சினு சொல்றாரு.
முரண்டு பிடிக்கும் மரணம் - இந்த தலைப்பில் நான் எனது 100வது பதிவை எழுதினேன். கீற்று இணைய தளத்திலும் இந்த கவிதையை காணலாம்.அங்கு மட்டும் இல்லை, தமிழன் தனது வலைதளத்தில் அதே மாதிரி கவிதை எழுதி இருக்காரு. அத பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஒரு வார்த்தை கூட பிசகாம அவரு என்னை மாதிரியே யோசிச்சி இருக்காரு. வாவ்... இட்ஸ் அ மிராக்கல்...
சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் நான் கடந்த வருடம் எழுதிய கட்டுரைகளில் ஒன்று. ஈகரை தளத்தில் அதே மாதிரி அதே படங்களோடு ஒரு கட்டுரை எழுதி இருக்காங்க. அத பார்த்த அதிர்ச்சியில் என்னால் இரண்டு நாட்களாக சோறு சாப்பிட முடியவில்லை. படங்களும் நான் போட்ட படங்கள் மாதிரியே இருக்கு. அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தையும் கவனிக்கவும்.
என் கட்டுரைக்கும் கவிதைக்கும் வெளம்பரம் போடுவதற்கு நன்றி... ஆனால் என் பெயரை குறிப்பிட மறந்துவிட்டீர்கள்...கடைசியா ஒரு கேள்வி: எப்படி அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெக்கம் இல்லாமல் குளிர்காய்கிறீர்கள்?