Thursday, August 06, 2009

பீ கேர்புல் - பெரியவங்களுக்கு மட்டும்

சனிக்கிழமை மஸ்ஜிட் ஜாமெக் காரைக்குடி உணவகத்தில் இனிதே மதிய உணவை முடித்துக் கொண்டு நண்பரோடு கிளம்பினேன். வழக்கம் போல அல்லாமல் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. இசா தடுப்புக் காவல் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொருட்டு தகவல்கள் பரப்பப்பட்டிருந்தது அதற்கு காரணம் என புரிந்துக் கொள்ள முடிந்தது.

பிறகு கணினி கண்காட்சிக்கு சென்றோம். கே.எல்.சி.சியில் மிகப் பெரிய அளவில் நடந்த அக்கண்காட்சியில் நான் மிகச் சிறிய ஐபாட் ஒன்றை வாங்கிக் கொண்டேன். கண்காட்சி கதைக்கு அப்புறம் வருவோம். இப்போது இசா தடுப்புக் காவல் சட்டம் சம்பந்தப்பட போராட்டத்தைப் பற்றிய செய்தியைப் பார்ப்போம்.

கண்காட்சி முடிந்து வரும் போது மஸ்ஜிட் ஜாமெக் எல்.ஆர்.டி இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒலி பெருக்கியின் வழி தகவல் தெரிவித்தார்கள். எல்.ஆர்.டியில் ஏறிய போது “நாங்கள் இசா சட்டத்தை ஆதரிக்கிறோம்என மலாய் மொழியில் வார்த்தைகள் பொரிக்கப்பட்ட சட்டையினை அணிந்துக் கொண்டு சில வருங்கால தலைவலிகள்... மன்னிக்க... தலைவர்கள் கையில் சில பொட்டலங்களை வைத்துக் கொண்டு வழியை மறித்துக் கொண்டு ஆள் நிற்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

காக்கா கக்காபோனது போல அவர்களது தலை முடி பழுப்பேரி இருந்தது. கையில் தலைக்கவசம் வேறு. கொஞ்ச நேரம் கலந்திருந்துவிட்டு ஓடி வந்தவர்களா அல்லது காசு கொடுக்கப்பட்டதும் சிட்டாக பறந்து வந்துவிட்ட ஆசாமிகளா என தெரியவில்லை.

மிக எளிமையான சமுதாய மரியாதை கூட தெரியாத ஆட்களையெல்லாம் கூட்டம் கூட்டிக் கொண்டு இன்னும் எத்தனைக் காலம் கூத்தடிக்கும் திட்டம் இவர்களுக்கு இருக்கிறதென புரியவில்லை. இரவு வேளைகளில் அம்மணிகளை பின்னால் அமர வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிலில் பறக்கும் ஆட்களுக்கு இப்படி பணம் கொடுத்து வளர்த்துவிடுபவர்களை என்ன சொல்வது. சரி அரசுக்கு சாதகமாக ஆதரவளித்த இவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இசா சட்டத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என சொல்லிக் கொண்டு எதிர்கட்சி தரப்பில் வந்தவர்கள் செய்தது என்ன? மக்களுக்கு எவ்வளவு தொந்தரவுகள்? இதெல்லாம் செல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை. காலம் காலமாக போராட்டம் எனும் பெயரில் எல்லோருமாக கிளம்பி பேரணி நடத்துவதை விடுத்து வேறு விதமாக யோசிக்கலாம்.

அரசு தரப்பில் இசா சட்டம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அப்படி இருக்க இந்த பேரணி அவசியமான ஒன்று தானா? எதிர்கட்சியினரின் மலிவான விளம்பரத் தேடலையே இது குறிக்கிறது.

எதிர்கட்சியினரிடம் முன்பு மக்களிடையே நல்ல மதிப்பு இருந்தது மறுக்க இயலாது. மலிவு விளம்பரத்துக்காக தமது செயல்திட்ட பட்டியல்களை நிரப்பிக் கொண்டு நானும் எதையாவது செய்தேன் என இப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தால் மக்களின் நம்பிக்கை கெடுவதற்கு இவர்களே காரணமாக அமைந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
*********

கணினி கண்காட்சியில் நுழைந்ததும் எனக்கு தலைசுற்றிப் போனது. மிகப் பெரிய அளவில் நடக்கும் இதில் கலந்து கொண்டோர் ஒவ்வொருவரும் தான் வழி தவறி சீன தேசத்துக்கு வந்துவிட்டோமோ என நினைக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

ஏன் இங்கு வேலை செய்பவர்களில் தமிழர்களும் மலாய்காரர்களும் மிக மிகக் குறைவாக இருக்கிறார்கள்? இணைய தளத்தில் கணினி கண்காட்சிக்கான செய்திகளும், விளம்பரங்களும் கூட சீன மொழியில் தான் இருக்கிறது. நோ கமெண்ட்ஸ் :-)

*****

பதிவுலகில் ஆடி 18-ஆம் பெருக்கின் சமயங்களில் பொன்னியின் செல்வன் நாவலையும் எங்காவது ஒரு மூலையில் பேசி இருப்பதைக் காண முடிகிறது. பொன்னியின் செல்வனை படித்து சில ஆண்டுகளாகிவிட்டது. இது வரை நான்கைந்து பேரையும் படிக்க வைத்துவிட்டேன். நாவல் தொடங்குவது ஒரு ஆடி பெருக்கின் சமயம். ஒவ்வொரு ஆடி 18-ன் போதும் பொன்னியின் செல்வன் நாவலும் நம் நினைவை தட்டிச் செல்கிறது.

இப்பொழுதும் அந்நாவலை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. பூங்குழலி- இந்நாவலில் என்னைக் கவர்ந்த கதாபாத்திரங்களுள் ஒன்று. என் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்த சமயம் இந்த பெயரை பரிந்துரை செய்தேன். “என்ன பேரு இது குழாய் உடைஞ்சி போன மாதிரிஎன்றார்கள். நோ கமெண்ட்ஸ்

******

21-12-2012 இந்த தேதியை பார்த்தும் சிலருக்கு புரிந்திருக்கக் கூடும். இந்த தேதியில் உலகம் அழிஞ்சி போய்டும்னு சிலர் பேசிக்கிறாங்க. நானும் இதைக் கேட்டு ஷாக் ஆகி போய் கிடக்குறேன்.

2012 எனும் ஹாலிவுட் திரைப்படம் திரைகாண இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கவும்:





படத்த பார்த்து திகில் ஆகிடாதிங்க.

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி!!
இதையும் ஒரு எட்டு பார்க்கவும்.

இது சம்பந்தமாக தோழர் யுவகிருஷ்ணாவின் பதிவு:
அழியப் போகிறதா உலகம்

16 comments:

வந்தியத்தேவன் said...

விக்னேஸ் பொன்னியின் செல்வன் பற்றி நான் சென்ற வாரம் ஒரு இடுகை இட்டிருந்தேன் அதனையும் நேரம் இருந்தால் படிக்கவும்.

http://enularalkal.blogspot.com/2009/07/blog-post_30.html

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

கணினிக் காட்சிக்குப் போனது பற்றி எழுதியிருக்கிறீர்கள். தமிழர்கள் மலாய்க்காரர்கள் குறைவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். Imbi Plaza, Low Yat போன்ற கணினி மையங்களில் தமிழர்களைப் பார்க்கலாம். ஆனால், ஆயிரம் பேரில் பத்து பேரைப் பார்க்கலாம். ஒரே ஒரு தமிழர் மட்டும் கணினி பழுது பார்க்கும் கடை வைத்திருக் கிறார். அவரைப் போய் பாருங்கள். அவருக்கு ஆதரவு தருவோம்.
திரு. விக்னேஸ் அருமையாக எழுதிக் கொண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள். எல்லாம் சரி. பிரிக்பீல்ட்ஸ் ஐயர் கடை தேநீர் எப்படி இருக்கிறது. வந்தால் ஒரு ’கப்’ கிடைக்குமா?

இராம்/Raam said...

//என் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்த சமயம் இந்த பெயரை பரிந்துரை செய்தேன். “என்ன பேரு இது குழாய் உடைஞ்சி போன மாதிரி” என்றார்கள்.– நோ கமெண்ட்ஸ்//

:))

நல்ல வேளை பேரு வைக்கலை’லே? இப்போ யாருக்கு சிறப்பு ழ’கரம் உச்சரிக்க வருது..? என்னோட கூட்டாளி பேரு ”பண்பொழில்”.. இங்கிலிசிலே அந்த பேரை அவரு Pozhilan’போட்டுருந்தாலும் கூப்பிடுறது பொஸீலன்... :))

ஹி ஹி

Dr.Sintok said...

உங்களி ISA-வில் கைதி செய்ய எங்க குலதெய்வம் ஐயன் சாமிவேலுவை வேண்டிகிறேன்....

Raju said...

Title super? How did you make it? Some font is there? Photoshop?

தராசு said...

ஆமா, இப்ப எதுக்கு இந்த மாதிரி தலைப்பு, இல்ல எதுக்குன்னு கேக்கறேன்?????

சும்மா இப்படி தலைப்பு வெச்சா எல்லாரும் வருவாங்கன்னு நினைச்சீங்களோ, நோ கமெண்ட்ஸ்.

அப்பாவி முரு said...

//“என்ன பேரு இது குழாய் உடைஞ்சி போன மாதிரி” என்றார்கள்.– நோ கமெண்ட்ஸ்//


கருத்துக் கூற ஏதுமில்லை.

வால்பையன் said...

நீங்கள் மலாயில் இருக்கிறார்கள்!
உங்களுக்கு தெரிந்தா இசாவை பற்றி எழுதினால் நாங்கள் ஈசாவாக இருக்குமோ அல்லது ஈஸாவாக இருக்குமோன்னு குழம்பி கொள்ள வேண்டும்,

இசா சட்டம்னா என்னான்னு சொல்லுங்க!

**************

2012 உலகம் அழிவது உறுதி மாதிரி தான் தெரியுது!

இதுவரை பன்றி காய்ச்சலில் 1500 பேர் இறந்திருக்கிறார்கள், இதுவரை அந்த காய்ச்சல் வந்து யாரும் குணமானதாக தகவல் இல்லை!

கோவிந்தா கோவிந்தா!

Tamilvanan said...

-கேர்புல்//

அம்மணி படத்தை பார்த்துட்டு, பீ- கேல்ஸ்பூல் என்று தலைப்ப தப்பா படிச்சுட்டு அவசர அவசரமா உள்ளே நுழைஞ்சுட்டேன்.

//எதிர்கட்சியினரிடம் முன்பு மக்களிடையே நல்ல மதிப்பு இருந்தது மறுக்க இயலாது. மலிவு விளம்பரத்துக்காக தமது செயல்திட்ட பட்டியல்களை நிரப்பிக் கொண்டு நானும் எதையாவது செய்தேன் //

சோதனைகளும் வேதனைகளும் இழப்புக்களும் இல்லாமல் மனித சரித்திரதில் புரட்சியில் மறுமலர்ச்சியில் வெற்றி அடைந்துள்ளதா என்று சற்று திரும்பி பாருங்கள் தோழரே?

ஓப்பராசி லாலாங், எத்தனை நம்மி்ன எதிர்கட்சி தலைவர்கள் இசாவில் சிறைப்பட்டார்கள்? நமது 5 சகோதரர்கள் இன்னும் இசாவின் கீழ் உள்ளிருந்திருந்தால் இந்த கருத்தை சொல்லிருப்பீர்களா? அந்த எதிர்ப்பு கூட்டத்தில் 95 சதவீதம் நம் இந்தியர்கள் அல்லவா இருந்திருப்பார்கள்.(கூட்டத்தில் வெறும் 5 சதம் மட்டுமே மலாய்காரர் அல்லாதவர்கள்).எதிர்கட்சி தரப்பில் வந்தவர்கள் காசுக்காக வரவில்லை மாறாக நாட்டின் எதிர்கால பொது நன்மை கருதி வந்தவர்கள்.
அந்த கூட்டத்தினை மாசுப்படுத்தியது மக்கள் வரிப் பணத்தில் இருந்து சம்பளம் பெற்றவர்கள். அதிகாரமி்கு அரசு ஊழியர்கள்.

//அரசு தரப்பில் இசா சட்டம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் வாக்குறுதி கொடுத்திருந்தார். //

பரிசீலனை செய்யப்பட்டு, 60களில் கிரிஸ் கத்தியாக இருந்த இசா, நவீனமாக AK 47 வடிவில் வலம் வரும்.பொறுத்திருந்து பாருங்கள்.


உங்கள் ஒன்னும் இல்ல, சும்மா, டைம் பாஸ், மொக்கைக்காக புனித புரட்சி போராட்டத்தை நசுக்கி விடாதீர்கள்.

//“என்ன பேரு இது குழாய் உடைஞ்சி போன மாதிரி” என்றார்கள்.– நோ கமெண்ட்ஸ்//

இதான் சமுதாயம், உங்கள மாதிரி நல்லவங்க சொல்றதெல்லாம், கூட உள்ளவங்களே ஏத்துக்கமாட்டாங்க. (நல்லவங்க சொன்னது பெயர் விசயத்துல மட்டும்)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தம்பி!

அடிக்கடி இந்த சிரேயா பொண்ணு படத்த பொடுறியளே...

என்ன விஷேசம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வந்தியத்தேவன்

படித்து முடித்து மறுமொழியிட்டுவிட்டேன். மேலும் இது போல எழுதுங்கள் அன்பரே... :)

@ மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

தகுந்த விலையில் கிடைக்குமாயின் நிச்சயம் ஆதரவளிக்கலாமே :)
வாங்க டீ அடிக்கலாம் நோ பிரோப்லம் :)

@ ராம்

நீங்க சொல்றது உண்மை தான்... என்ன செய்ய... நோ கமெண்ட்ஸ் :)

@ டாக்டர் சிந்தோக்

இன்னிக்கு கோவி அண்ணை பிளாக் படிக்கலயா... :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ராஜு

என்ன சொல்றிங்க பாஸ்...

@ தராசு

பாஸ் பாஸ் நீங்க ஏன் டென்சன் ஆகுறிங்க... காலையில தங்கமணியிடம் பூரி கட்டையில் அடி வாங்கின எஃபக்ட் தெரிகிறது... நோ டென்சன்...

@ முரு

ஆஹா... டமில்... டமில்...

@ வால்பையன்

இசா என்றால் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்னு சொல்லிக்கிறாங்க...நாட்டுள குழப்பம் பண்ணினா காரணமே கேட்காமல் புடிச்சி போட்டுடுவாங்க... தமிழகத்தில் பொடானு சொல்லுவாங்களே அந்த மாதிரி...

ஐ ஜாலி நாமெல்லாம் சாக போறோம்...

@ தமிழ்வாணன்

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்... :)

என்ன நல்லவனு சொல்லிட்டிங்களே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கே.பாலமுருகன் said...

//“என்ன பேரு இது குழாய் உடைஞ்சி போன மாதிரி” என்றார்கள்.//

நல்லவேளை பம்பு செட்டு கழண்ட மாதிரினு சொல்லல.

கே.பாலமுருகன் said...

//மிக எளிமையான சமுதாய மரியாதை கூட தெரியாத ஆட்களையெல்லாம் கூட்டம் கூட்டிக் கொண்டு இன்னும் எத்தனைக் காலம் கூத்தடிக்கும் திட்டம் இவர்களுக்கு இருக்கிறதென புரியவில்லை.//

இந்த அரசாங்கமும். . ..சத்து மலேசியாவும். ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இதுக்கு மேல சொல்ல முடியல.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜோதிபாரதி

அண்ணை, தம்பிக்கு ஸ்ரேயா மேல காதல் அதான்.... :)

@ கே.பாலமுருகன்

சொல்லுங்க சொல்லுங்க... உங்க கிட்ட இன்னும் பெருசா எதிர்பார்கிறேன்....

Unknown said...

தலைவி ஷகிலா 'வின் படத்தை போடாமல்... சப்ப பிகரு ஸ்ரேயாவின் புகை படத்தை போட்டதற்காக.... விரிவான பின்னூட்டமின்றி..... வெளிநடப்பு செய்கின்றேன்.....!!!