Showing posts with label டைம் பாஸ். Show all posts
Showing posts with label டைம் பாஸ். Show all posts

Thursday, August 06, 2009

பீ கேர்புல் - பெரியவங்களுக்கு மட்டும்

சனிக்கிழமை மஸ்ஜிட் ஜாமெக் காரைக்குடி உணவகத்தில் இனிதே மதிய உணவை முடித்துக் கொண்டு நண்பரோடு கிளம்பினேன். வழக்கம் போல அல்லாமல் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. இசா தடுப்புக் காவல் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொருட்டு தகவல்கள் பரப்பப்பட்டிருந்தது அதற்கு காரணம் என புரிந்துக் கொள்ள முடிந்தது.

பிறகு கணினி கண்காட்சிக்கு சென்றோம். கே.எல்.சி.சியில் மிகப் பெரிய அளவில் நடந்த அக்கண்காட்சியில் நான் மிகச் சிறிய ஐபாட் ஒன்றை வாங்கிக் கொண்டேன். கண்காட்சி கதைக்கு அப்புறம் வருவோம். இப்போது இசா தடுப்புக் காவல் சட்டம் சம்பந்தப்பட போராட்டத்தைப் பற்றிய செய்தியைப் பார்ப்போம்.

கண்காட்சி முடிந்து வரும் போது மஸ்ஜிட் ஜாமெக் எல்.ஆர்.டி இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒலி பெருக்கியின் வழி தகவல் தெரிவித்தார்கள். எல்.ஆர்.டியில் ஏறிய போது “நாங்கள் இசா சட்டத்தை ஆதரிக்கிறோம்என மலாய் மொழியில் வார்த்தைகள் பொரிக்கப்பட்ட சட்டையினை அணிந்துக் கொண்டு சில வருங்கால தலைவலிகள்... மன்னிக்க... தலைவர்கள் கையில் சில பொட்டலங்களை வைத்துக் கொண்டு வழியை மறித்துக் கொண்டு ஆள் நிற்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

காக்கா கக்காபோனது போல அவர்களது தலை முடி பழுப்பேரி இருந்தது. கையில் தலைக்கவசம் வேறு. கொஞ்ச நேரம் கலந்திருந்துவிட்டு ஓடி வந்தவர்களா அல்லது காசு கொடுக்கப்பட்டதும் சிட்டாக பறந்து வந்துவிட்ட ஆசாமிகளா என தெரியவில்லை.

மிக எளிமையான சமுதாய மரியாதை கூட தெரியாத ஆட்களையெல்லாம் கூட்டம் கூட்டிக் கொண்டு இன்னும் எத்தனைக் காலம் கூத்தடிக்கும் திட்டம் இவர்களுக்கு இருக்கிறதென புரியவில்லை. இரவு வேளைகளில் அம்மணிகளை பின்னால் அமர வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிலில் பறக்கும் ஆட்களுக்கு இப்படி பணம் கொடுத்து வளர்த்துவிடுபவர்களை என்ன சொல்வது. சரி அரசுக்கு சாதகமாக ஆதரவளித்த இவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இசா சட்டத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என சொல்லிக் கொண்டு எதிர்கட்சி தரப்பில் வந்தவர்கள் செய்தது என்ன? மக்களுக்கு எவ்வளவு தொந்தரவுகள்? இதெல்லாம் செல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை. காலம் காலமாக போராட்டம் எனும் பெயரில் எல்லோருமாக கிளம்பி பேரணி நடத்துவதை விடுத்து வேறு விதமாக யோசிக்கலாம்.

அரசு தரப்பில் இசா சட்டம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அப்படி இருக்க இந்த பேரணி அவசியமான ஒன்று தானா? எதிர்கட்சியினரின் மலிவான விளம்பரத் தேடலையே இது குறிக்கிறது.

எதிர்கட்சியினரிடம் முன்பு மக்களிடையே நல்ல மதிப்பு இருந்தது மறுக்க இயலாது. மலிவு விளம்பரத்துக்காக தமது செயல்திட்ட பட்டியல்களை நிரப்பிக் கொண்டு நானும் எதையாவது செய்தேன் என இப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தால் மக்களின் நம்பிக்கை கெடுவதற்கு இவர்களே காரணமாக அமைந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
*********

கணினி கண்காட்சியில் நுழைந்ததும் எனக்கு தலைசுற்றிப் போனது. மிகப் பெரிய அளவில் நடக்கும் இதில் கலந்து கொண்டோர் ஒவ்வொருவரும் தான் வழி தவறி சீன தேசத்துக்கு வந்துவிட்டோமோ என நினைக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

ஏன் இங்கு வேலை செய்பவர்களில் தமிழர்களும் மலாய்காரர்களும் மிக மிகக் குறைவாக இருக்கிறார்கள்? இணைய தளத்தில் கணினி கண்காட்சிக்கான செய்திகளும், விளம்பரங்களும் கூட சீன மொழியில் தான் இருக்கிறது. நோ கமெண்ட்ஸ் :-)

*****

பதிவுலகில் ஆடி 18-ஆம் பெருக்கின் சமயங்களில் பொன்னியின் செல்வன் நாவலையும் எங்காவது ஒரு மூலையில் பேசி இருப்பதைக் காண முடிகிறது. பொன்னியின் செல்வனை படித்து சில ஆண்டுகளாகிவிட்டது. இது வரை நான்கைந்து பேரையும் படிக்க வைத்துவிட்டேன். நாவல் தொடங்குவது ஒரு ஆடி பெருக்கின் சமயம். ஒவ்வொரு ஆடி 18-ன் போதும் பொன்னியின் செல்வன் நாவலும் நம் நினைவை தட்டிச் செல்கிறது.

இப்பொழுதும் அந்நாவலை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. பூங்குழலி- இந்நாவலில் என்னைக் கவர்ந்த கதாபாத்திரங்களுள் ஒன்று. என் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்த சமயம் இந்த பெயரை பரிந்துரை செய்தேன். “என்ன பேரு இது குழாய் உடைஞ்சி போன மாதிரிஎன்றார்கள். நோ கமெண்ட்ஸ்

******

21-12-2012 இந்த தேதியை பார்த்தும் சிலருக்கு புரிந்திருக்கக் கூடும். இந்த தேதியில் உலகம் அழிஞ்சி போய்டும்னு சிலர் பேசிக்கிறாங்க. நானும் இதைக் கேட்டு ஷாக் ஆகி போய் கிடக்குறேன்.

2012 எனும் ஹாலிவுட் திரைப்படம் திரைகாண இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கவும்:





படத்த பார்த்து திகில் ஆகிடாதிங்க.

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி!!
இதையும் ஒரு எட்டு பார்க்கவும்.

இது சம்பந்தமாக தோழர் யுவகிருஷ்ணாவின் பதிவு:
அழியப் போகிறதா உலகம்