Monday, November 09, 2009

எழுத்தும் வாழ்க்கையும்

எழுதுவது ஒரு வகையான சுகம். எழுத்தின் போதை பலதரபட்டது. ஒவ்வொரு படைப்பிலும் அது வேறுபடுகிறது. மாற்றங்களை கொண்டது வாழ்க்கை. மாற்றங்களை விரும்பாதவன் புதியன முயற்சிக்காதவன் எனும் பொன்மொழி உண்டு. இப்பொன்மொழி எல்லாவகையான செயல்பாடுகளுக்கும் சாத்தியமாகுமா என நான் பல முறை சிந்தித்தது உண்டு. நிச்சயமாக இல்லை. இருப்பினும் மாறுபாடுகளற்ற வாழ்க்கை நமத்துப் போய்விடும் என்பதும் மறுக்க இயலாது. (சரி என்ன தான் சொல்லவரனு கேட்குறிங்களா... ஹி ஹி ஹி... எனக்கும் தெரியலிங்க...)

எழுத்தின் மீதான ஈர்ப்பு கதைகளில் தோன்றிய ஒன்று. இன்னமும் என் நினைவுகளில் வற்றாத கதைகள் உண்டு. சிறு வயதில் படித்த கதைகளை சேமித்து வைக்காமல் போனதன் இழப்புகளை இன்று உணர முடிகிறது. சில பத்திரிக்கை தொடர்களுக்காக பைத்தியமாய் காத்திருந்திருக்கிறேன். அவை இப்பொழுது புத்தகமாய் வந்திருக்குமா என அறியவில்லை.

1996 & 1997களில் வார பத்திரிக்கை ஒன்றில் மலரே குறிஞ்சி மலரே எனும் தொடர்கதை வெளி வந்துக் கொண்டிருந்தது. அச்சமயம் எனக்கு 12 வயது. தோட்டபுரத்தில் வாழும் இளைஞனின் வாழ்க்கையின் சுயசரிதத்தை பிரதிபலிக்கும் கதை. கதை நடக்கும் காலகட்டம் 1960 மற்றும் 1970 இருக்கலாம். இக்கதையின் நாயகி சுவீ லீன் எனும் சீன பெண். இக்கதாபாத்திரமே அக்கதை மீதான அலாதி காதலை ஏற்படுத்தியது என்பேன்.

எனது கதை வாசிப்பின் அதீத ஆவலை தூண்டியது இக்காலகட்டம் தான். அதன் பின் ஏனோ சில காலம் எனது வாசிப்புக்கு பலமான இடவெளி உண்டானது. மீண்டும் நான் தமிழ் வாசிப்பில் ஆழ்ந்தது எனது பல்கலைக்கழக படிப்பின் இறுதி ஆண்டில் தான். இதற்கு முழு முதற் காரணமும் என் நண்பர் முரளி. (கோவியாருக்கு நெருக்கம் ;-) )

அச்சமயம் தேன்கூடு திரட்டியை தினமும் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். தமிழ்மணத்தில் நடந்துக் கொண்டிருந்த தொடர் சண்டைகளும் பதிவுலக அரசியலும் அயற்சியை கொடுத்தது. நாளடைவில் ஜோதியில் கலக்கும் கதையாக தமிழ்மண சண்டைகளையும் அமைதியாக இரசித்துக் கொண்டிருந்தேன். (சிற்றிதழ் காலாச்சாரமாம்). இதைத் தான் தீவிர இலக்கியம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.

திரட்டிகளில் பதிவுகளை தேர்ந்தெடுத்து வாசிக்கும் சமயம் சில பதிவுகள் 'அட' போட வைத்திருக்கின்றன. முக்கியமாக வகுப்பறை வாத்தியார் ஐயா, சேவியர், மோகந்தாஸ், லக்கிலுக்(இன்றய யுவகிருஷ்ணா) போன்றோரின் எழுத்துகளை நினைவுகூற முடிகிறது. நாமும் முயற்சிப்போம் எனும் எண்ணத்திற்கு இவர்களின் எழுத்துகளும் காரணம் என நிச்சயமாக சொல்லமுடியும்.

முதன் முதலில் எழுதும் போது திக்கித் திணறிய என் தமிழ் எழுத்துகளுக்கு. வாசிப்பின் அவசியம் புரிந்தது. எழுதுவது போதையெனில் வாசிப்பது ஒரு கலை. புத்தகமற்ற அரண்மனையில் அரசனாக இருப்பதைவிட புத்தகம் நிறைந்த குடிசையில் ஏழையாய் இருப்பது மேல் என்றார் ஓர் அறிஞர். வாசிப்பு திகட்டாத ஒன்று. அதன் லயிப்பில் இருக்கும் சுகம் தவம் போன்றது.

கிருபாணந்த வாரியார் திருசெற்கோவை எனும் நூலில் குறிப்பிட்டிருக்கும் ஓர் செய்தி உண்டு. வாசிப்பு என்பது அறிவை வளர்க்காது. வாசிப்பு அறியாமையை நீக்கும் என்பதே சரி என சொல்லி இருப்பார்.

வாழ்க்கையை வாசித்துக் கொண்டிருக்கும் சக மனிதர்களுள் ஒருவன். நான் ஒவ்வொரு கண மாற்றங்களையும் இரசித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன் தமிழ்மண வாசகனாக பதிவுகளை தேடி படித்து சிலாகித்துக் கொண்டிருந்தவன், இன்று உங்களோடு ஒருவனாக, நட்சத்திர பதிவனாக எழுத வந்திருக்கிறேன். இந்த மாற்றத்திற்குத் தமிழ்மணமும் காரணம். தமிழ்மண வாசகராகிய நீங்களும் ஒரு காரணம் தான்.

நெடுந்தூர பயணங்கள் முதல் அடியில் தான் தொடங்குகிறது என ஓர் சீனப் பழமொழி உண்டு. வாழ்க்கையின் பயணங்கள் இரசனை மிகுந்தது. எனது வாழ்க்கைப் பயணத்தில் இன்னும் ஒரு வார காலம் கொஞ்சம் நெருக்கத்தோடு உங்களை சந்திக்கிறேன். சியர்ஸ்...

46 comments:

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிக்க நல்வாழ்த்துகள்

வாசிப்பு என்பது எல்லோருக்கும் அமையாத ஒன்று - வாசிப்பில் ஈடுபாடு உடையவர்கள் பலர் எழுதுபவர்களை ஊக்கப்படுத்தி, தானும் எழுதி, மகிழ்பவர்கள்.

வாரியார் சுவாமிகள் கூறியது முற்றிலும் சரி.

நன்று நன்று விக்கி

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் விக்கி கலக்குங்க :)

A N A N T H E N said...

நட்சத்திர பதிவரே!!! வாழ்த்துகள்!

மலரே குறிஞ்சி மலரே - இதழ் பெயர் சொல்லாததுக்கு என்ன காரணம்? (நாங்களும் அரசியல் செய்வோமுல்ல)

//(சரி என்ன தான் சொல்லவரனு கேட்குறிங்களா... ஹி ஹி ஹி... எனக்கும் தெரியலிங்க...)//
- தெரிஞ்சா சரி


//சியர்ஸ்...// சொன்னா மட்டும் பத்தாது... ஊத்தியும் கொடுக்கோனும் போஸ்!

//சிறு வயதில் படித்த கதைகளை சேமித்து வைக்காமல் போனதன் இழப்புகளை இன்று உணர முடிகிறது. // உணமைதான்


//திரட்டிகளில் பதிவுகளை தேர்ந்தெடுத்து வாசிக்கும் சமயம் சில பதிவுகள் 'அட' போட வைத்திருக்கின்றன. // ஓ போட வைத்தவை உண்டா? ;)

Unknown said...

/-- புத்தகமற்ற அரண்மனையில் அரசனாக இருப்பதைவிட புத்தகம் நிறைந்த குடிசையில் ஏழையாய் இருப்பது மேல் என்றார் ஓர் அறிஞர். --/

ரொம்ப நல்ல வரி... உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் விக்கி.

pudugaithendral said...

நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நட்சத்திர வாழ்த்துகள் அன்பரே :)

குடுகுடுப்பை said...

தஞ்சாவூர் தம்பி நட்சத்திர வாழ்த்துகள்.

A N A N T H E N said...

விக்கி நீங்க தஞ்சாவூரா.... சொல்லவே இல்லே?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜெகதீசன்

நன்றி...

@ சீனா

நன்றி சீனா ஐயா... முடிந்த வரை நல்ல படைப்புகளை கொடுக்க முயல்கிறேன்.

@ ஆயில்யன்

கலக்கிடுவோம் பாஸ்...

@ அனந்தன்

ஏன் இந்த கொலை வெறி... அந்த இதழ் பெயர் நயனம். என் முன்னோர்களின் பூர்வீகம் தஞ்சாவூர். குடுகுடுப்பை அண்ணன் அதை தான் சொல்லி இருக்கிறார்.

@ கிருஷ்ண பிரபு

நன்றி நண்பரே...

@ செந்தில்வேலன்

நன்றி...

@ குடுகுடுப்பை

நன்றி அண்ணா...

கோவி.கண்ணன் said...

மலேசியா ஈபோவில் வாழும் அன்பு தம்பி விக்கி, தமிழ் எழுத்துலகில் மென்மேலும் சாதனை செய்ய
வாழ்த்துகள் !

நாகா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் விக்கி..!

கே.பாலமுருகன் said...

//நெடுந்தூர பயணங்கள் முதல் அடியில் தான் தொடங்குகிறது//

தமிழ்மண வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துகள் விக்கி. வாரத்தின் முதல் அடியாக. . இந்த ஒரு வார பயணம் மேலும் தொடரட்டும்.

முகவை மைந்தன் said...

வாழ்த்துகள். அப்புறம் நாம ஈபோல பேசிக்கிட்டதை எல்லாம் பதிவுல போட்டுடாதீங்க ;-))

சந்தனமுல்லை said...

நட்சத்திர வாழ்த்துகள் விக்கி! கலக்குங்க..
தங்களின் மயன் கலாச்சாரம் இன்னும் நினைவிலிருந்து அகலாத ஒன்று! :-)

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்!

V.N.Thangamani said...

வாழ்த்துக்கள் விக்னேஷ்வர்...

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்

Tamilvanan said...

வாழ்த்துகள் விக்கி. உங்களுடைய எழுத்து பணி மென்மேலும் தொடரட்டும்.

☀நான் ஆதவன்☀ said...

நட்சத்திர வாழ்த்துக்கள் விக்கி! :)

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்துக்கள் தம்பி.

// புத்தகமற்ற அரண்மனையில் அரசனாக இருப்பதைவிட புத்தகம் நிறைந்த குடிசையில் ஏழையாய் இருப்பது மேல் //

மிகச் சரி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ புதுகைத் தென்றல்

நன்றி... ;-)

@ கோவி.கண்ணன்

நன்றி அண்ணா... முரளி உங்கள கேட்டதா சொன்னாரு...

@ நாகா

நன்றி நண்பரே.

@ பாலமுருகன்

நன்றி...

@ முகவை மைந்தன்

ஹ ஹ ஹ... இல்லை போட மாட்டேன். மீண்டும் எப்போது இந்தப் பக்கம் வருவீர்கள். வாழ்த்துக்கு நன்றி...

@ சந்தனமுல்லை

நன்றி...

@ கலகலபிரியா

நன்றி..

@ தங்கமணி

நன்றி ஐயா...

@ முரளிகண்ணன்

நன்றி பாஸ்...

@ தமிழ்வாணன்

நன்றி...

@ நான் ஆதவன்

நன்றி

@ ஜோசப் பால்ராஜ்

நன்றி அண்ணா...

கலையரசன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் விக்னேஷ்..!
சும்மா மின்னுதுல்ல....

மனோவியம் said...

நட்சத்திரம் வானில் மட்டுமா ஜொலிக்கும்? மன்னில் கூட விக்கியாய் ஜொலிக்கிறது.....
நினைவுகள் மண்ம் பரப்பும் உங்கள் வாழ்க்கை பயணதில்.
இது ஒரு மைல்கள்
இளைப்பாரவும் கள்ப்பாரவும் நடந்து வந்த எழுத்துலக பாதையை மீள்ப் பார்வையுடவும்.உங்களின் எழுத்துக்களை மெருகேட்ற்வும்.தமிழ்மண நட்சத்திரம் உங்களுக்கு உதவும்.மனமார்ந்த வாழ்த்துக்கள் விக்கி.வாழ்க வளமுடன்.

அ. நம்பி said...

வாழ்த்துகள் விக்னேஷ்.

மாதேவி said...

வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

யுவகிருஷ்ணா said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்!

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பி.

iniyavan said...

வாழ்த்துக்கள் நண்பனே!

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!

Sanjai Gandhi said...

வாழ்த்துகள் விக்கி.. :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கலையரசன்

நன்றி பாஸ்...

@ மனோகரன்

நன்றி... தொடர்ந்து இணைந்திருக்கவும் ;-)

@ நம்பி

நெடுநாட்களாக கானவில்லையே... வாழ்த்துக்கு நன்றி...

@ மாதேவி

நன்றி...

@ யுவகிருஷ்ணா

நன்றி... மலேசியாவில் புதிய தலைமுறை கிடைக்கின்றது. படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன...

@ திகழ்

நன்றி...

@ வடகரை வேலன்

நன்றி அண்ணா

@ என்.உலகநாதன்

நன்றி...

@ ராமலஷ்மி

நன்றி...

Unknown said...

இந்த வார நட்சத்திர பதிவர் .திரு.விக்னேஸ்வரனுக்கு
என்னுடைய மனமார்ந்த்த நல் வாழ்த்துக்கள்.
உங்களின் எழுத்து பணி தொடரட்டும்.

அன்புடன்
அபுல்
www.abulbazar.blogspot.com.

ரோஸ்விக் said...

நட்ச்சத்திர பதிவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க. :-)

லதானந்த் said...

வாழ்த்துக்கள்!
முன்பு அடிக்கடி தொடர்பிலிருந்த விக்னேஷ்வரனா நீங்கள்?

வால்பையன் said...

நட்சத்திரவாழ்த்துக்கள் நண்பரே!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அபுல் பசர்

நன்றி...

@ ரோஸ்விக்

நன்றி...

@ லதானந்த்

நன்றி லதானந்த் அங்கில்.... அதே விக்னேஷ்வரன் தான். ;-)

@ வால்பையன்

நன்றி நண்பா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்வாழ்த்துகள்

Kavinaya said...

நட்சத்திர வாழ்த்துகள் :)

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் விக்கி!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா...

தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிக்க நல்வாழ்த்துகள்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் தம்பி விக்கி!

தொடந்து எட்டுத் திக்கும் திகட்டாத, தமிழ் மணக்கட்டும்!

சிறப்(பு)பாக செய்யுங்கள்!

விண்மீன் மிளிரட்டும்!

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

தருமி said...

வாழ்த்துக்கள்

Prabu M said...

HI Friend,
This is the first time am reading you.... Made me love ur Tamil...
As you have mentioned, your writing's an excellent example for how "Reading" could polish the "Writings" of the Reader..... So nice to read you friend... I'll follow your blog from now... Keep writing... Go ahead Star!! All the Best...
(Due to time constrain typing this in English.. pardon me)
Prabu M

manjoorraja said...

அன்பு நண்பா பாராட்டுகள்.
இனிய நட்சத்திர வாழ்த்துகள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ராதாகிருஷ்ணன்

நன்றி ஐயா.

@ கவிநயா

நன்றி...

@ வெயிலான்

நன்றி...

@ ஆ.ஞானசேகரன்

நன்றி...

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா

@ அன்புடன் அருணா

நன்றி...

@ தருமி

நன்றி ஐயா

@ பிரபு நன்றி...

@ மஞ்சூர் ராசா

நன்றி...