நான் இந்தக் கேள்வியைப் பல முறை சந்தித்திருக்கிறேன். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும் என்பார்கள். அதை போல் தான் என் மீசைக் கதையும்.சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போது சங்கடப்பட்டும் போய் இருக்கிறேன்.
“என்ன வயசாகுது தம்பி உனக்கு”
“24”
“ஆமாவா? நம்ப முடியல, சின்னப் பையன் மாறி இருக்க”.
இதற்காக நான் என் பிறப்புப் பத்திரத்தையா எடுத்துக் காண்பிக்க முடியும். அடப் போங்கய்யா என சொல்லி அமைதியாக இருந்துவிடுவேன்.
பல தருணங்களில் என் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள், “டே மீசை வச்சி பாருடா. மெச்சூர்ட் லுக் வரும்”. என் நண்பர் வட்டதிலும் சிலருக்குதான் என் சோகக் கதை தெரியும். தெரியாத ஜந்துக்கள் அடிக்கடி இப்படிச் சொல்லித் தொலையும்.
அப்பொழுது 16 வயது இருக்கும். நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம். மீசை அரும்பாக மலர்ந்துக் கொண்டிருந்த்து. சீராக இருந்தது. ‘ஆட்டோகிராப்’ பட்த்தில் வரும் சேரனை போல் அதை பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்.
அந்தச் சமயம் என் பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் ஒரு சீனர். பெரும்பாழும் சீனர் மற்றும் மலாய்கார்களை பார்த்தோமானல் மீசை வைக்க மாட்டார்கள். மீசையும் வளராது இதில் விதிவிளக்காக இருப்பவரும் உண்டு.
பள்ளியில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு தான் இந்த மீசை பிரச்சனை வரும். ஒரு வாரந்திரப் பரிசோதனையின் சமயம், அந்தக் கட்டொழுங்கு ஆசிரியர் மீசையை வழிக்கச் சொல்லிவிட்டார்.
நானும் அடி வாங்காமல் இருக்க மறுநாள் மீசையை வழித்துவிட்டு வந்தேன். (அந்த வாத்தி நல்லா இருக்கட்டும்). அப்போது ஆரம்பித்த்து பிரச்சனை. மீசை சீராக வளர மறுத்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வளரும். கட்டையும் நெட்டையுமக வளரும். இதனால் பல முறை நெந்து போய் இருக்கிறேன்.
இப்பொழுதெல்லாம் மீசையை வழிப்பதில்லை. அளவாகக் கத்தரித்துவிடுவேன்.