Thursday, October 22, 2026

எடுத்துச் செல்லாத சுமையும் சுமக்கும் பாரமும்


2017-ஆம் ஆண்டின் நடுப்பகுதி.

மங்கோலியத் தரப்பிலிருந்து ஒரு diplomatic note வந்தது. Ulaanbaatar சிறையில் இருந்த நான்கு பேரை மலேசியர்கள் என அடையாளம் உறுதி செய்து, அவர்களுக்குத் தேவையான பயண ஆவணங்களை வழங்க வேண்டியிருந்தது.

மங்கோலியாவில் அப்போது மலேசியாவுக்கென நிரந்தரத் தூதரகம் இல்லை. Beijing-இல் உள்ள Malaysian Embassy-யே Mongolia-விற்கும் concurrently accredited mission ஆக செயல்பட்டது. இன்றும் அதே அமைப்புதான் தொடர்கிறது.

அதனால் நான் அந்த consular பணிக்காக Beijing-இலிருந்து Ulaanbaatar செல்ல வேண்டியிருந்தது.

வரைபடத்தில் பார்த்தால் மிக அருகிலிருக்கும் பயணம். விமானத்தில் சுமார் இரண்டு மணி நேரம். ஆனால் Beijing-க்கும் Ulaanbaatar-க்கும் நடுவே விரிந்து கிடக்கும் Gobi நிலப்பரப்பு அந்தச் சிறிய பயணத்திற்கே ஒரு தனித்த முகத்தைத் தரும். சில நாட்களில் கடுமையான காற்றும் வானிலை மாற்றங்களும் விமானப் பயணத்தைச் சிரமப்படுத்திவிடும்.

Ulaanbaatar-ஐ முதன்முதலில் அடைந்தபோது என்னைத் தாக்கியது அதன் வேகம்.

Beijing போன்ற நகரத்திலிருந்து சென்ற எனக்கு, எல்லாமே அங்கே கொஞ்சம் மெதுவாக நகர்வது போல இருந்தது. பரந்த வானம். குறைந்த மக்கள் அடர்த்தி. நகரத்தை விட்டு வெளியேறியதும் இன்னும் பரந்த வெறுமை. மங்கோலியாவைப் பற்றி நகைச்சுவையாகச் சொல்வார்கள், அங்கே மனிதர்களைவிட கால்நடைகள் அதிகம் என்று. அந்த நிலப்பரப்பில் பயணிக்கும்போது அந்த வாசகம் மிகைப்படுத்தலாகவே தோன்றாது.

நாங்கள் செல்ல வேண்டிய சிறை Ulaanbaatar நகரத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தது. காரில் பல மணி நேரம். சில பகுதிகளில் சாலை என்ற உணர்வே மங்கிப்போகும். வாகனத்தில் அமர்ந்திருந்தாலும் உடலின் ஒவ்வொரு எலும்பும் அந்தப் பயணத்தைத் தனித்தனியாக நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு பாதை.

அந்த நான்கு மலேசியர்களைச் சந்தித்தது, அவர்களின் அடையாளத்தை உறுதி செய்தது, தேவையான consular நடவடிக்கைகளை மேற்கொண்டது, அவை தனியே எழுத முடியாத இன்னொரு கதை.

அதன் பின் மங்கோலியாவுக்கு பல முறை செல்லும் வாய்ப்பும், அங்குள்ள மக்களோடு இன்று வரை நட்பில் இருக்கும் சந்தர்ப்பமும் நீடிக்கிறது.

ஆனால் அந்த மங்கோலியா பயணங்களில் என்னுடன் திரும்பி வந்தது வேறொரு நினைவு.

Altantuya Shaariibuu.

மலேசியன் என்ற அடையாளத்துடன் மங்கோலியாவில் பழகிய சில தருணங்களில், எதிரில் இருப்பவர்களின் முகத்தில் ஒரு சிறிய மாற்றத்தை நான் உணர்ந்திருக்கிறேன். அது இனத்தால் உருவான வெறுப்பு அல்ல. ஒரு மங்கோலியப் பெண் மலேசியாவில் கொல்லப்பட்ட விதமும், அந்த வழக்கைச் சுற்றி ஆண்டுகள் கடந்தும் நீடித்த கேள்விகளும் அவர்களுடைய நினைவிலிருந்து மறையவில்லை என்பதன் வெளிப்பாடுதான்.

Altantuya 18 அக்டோபர் 2006 அன்று கொல்லப்பட்டார். இப்போது அந்தச் சம்பவம் நடந்து இருபது ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. ஆனால் காலம் கடந்துவிட்டதால் வழக்கைச் சுற்றிய கேள்விகளும் மறைந்துவிட்டன என்று சொல்ல முடியவில்லை. குற்றவியல் வழக்கில் Azilah Hadri மற்றும் Sirul Azhar Umar ஆகியோரின் தண்டனைகள் இறுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், ஏன் அந்தக் கொலை நடந்தது, அதன் முழுப் பின்னணி என்ன என்பதைக் குறித்த கேள்விகள் தொடர்ந்து பொதுவெளியில் எழுப்பப்பட்டுள்ளன.

அதற்கு ஒரு சமீபத்திய நினைவூட்டலாக 17 அக்டோபர் 2026 அன்று Al Jazeera-வின் 101 East வெளியிட்ட Murder in Malaysia: Justice for Altantuya Shaariibuu என்ற ஆவணப்படம் அமைந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த வழக்கின் பின்னணியில் பதில் பெறாத கேள்விகள் இருக்கின்றனவா என்பதை அது மீண்டும் விசாரிக்கிறது.

வழக்கின் சட்டப் பயணமும் முற்றிலும் முடிந்துவிடவில்லை. 2026 ஜனவரியில் Court of Appeal, Altantuya குடும்பத்துக்கு வழங்கப்பட்ட civil damages தொகையை RM5 மில்லியனிலிருந்து RM1.4 மில்லியனாகக் குறைத்ததுடன், Malaysian Government-ஐ அந்த civil liability-யிலிருந்து விடுவித்தது. அதைத் தொடர்ந்து குடும்பம் Federal Court-இல் appeal செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

இந்த வழக்குடன் எனக்கு இன்னொரு, முற்றிலும் வேறான தொடர்பும் இருக்கிறது.

பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு criminal law தொடர்பான மேற்படிப்பு ஒன்றை மேற்கொண்டபோது, எனக்குக் கற்பித்தவர்களில் ஒருவர் முன்னாள் forensic அதிகாரியான Hamidon Anan.

அவர் கற்பித்தது வெறும் textbook forensic அல்ல.

Malaysia-வில் பெரிதாகப் பேசப்பட்ட பல முக்கிய குற்றவியல் விசாரணைகளில் நேரடியாகப் பணியாற்றிய அனுபவத்தை வகுப்பறைக்குள் கொண்டு வந்தவர். அவற்றில் Altantuya வழக்கும் ஒன்று.

அந்த வழக்கைப் பற்றிப் பேசும்போது, சம்பவ இடத்தில் பணியாற்றிய அனுபவங்கள், சிதறிக்கிடந்த மனித உடல் எச்சங்களை எவ்வாறு தேடி சேகரிக்க வேண்டியிருந்தது, வெடிப்பு ஏற்பட்ட சம்பவ இடத்தில் forensic examination எவ்வளவு சிக்கலானதாக மாறியது போன்றவற்றை அவர் எங்களோடு பகிர்ந்துகொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

அவர் சொன்ன சில விஷயங்களை ஒரு சாதாரண வழக்கின் விவரங்களாக மட்டும் கேட்க முடியவில்லை. சம்பவ இடத்தில் நேரடியாக நின்ற ஒருவரின் நினைவுகளாக அவை வந்தன. அந்த விசாரணையின்போது எதிர்கொண்ட சிரமங்கள், அழுத்தங்கள், மிக நுணுக்கமாக மேற்கொள்ள வேண்டிய தேடுதல் நடவடிக்கைகள் பற்றியும் அவர் வகுப்புகளில் பகிர்ந்திருந்தார்.

அவர் பகிர்ந்த இன்னொரு நினைவு, அந்தத் தேடுதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட பயிற்சி பெற்ற நாய். வெடிபொருள் மற்றும் சம்பவ இடத் தடயங்களை கண்டறிவதற்காகப் பயிற்சியளிக்கப்பட்ட அந்த நாயின் பங்கையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த forensic தேடுதல் எவ்வளவு பொறுமையும் நுணுக்கமும் தேவைப்படும் பணி என்பதைச் சொல்லும்போது, ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் பின்னால் எத்தனை மனிதர்கள், எத்தனை மணி நேர உழைப்பு, எத்தனை அமைதியான பணிகள் மறைந்திருக்கின்றன என்பதையும் அவர் உணர்த்தினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதே Altantuya பிறந்த நாட்டில் ஒரு Malaysian Government officer ஆக நின்றுகொண்டிருப்பேன் என்று நினைத்ததில்லை.

அதுதான் இந்தக் கதையில் என்னை அதிகமாகத் தொட்ட பகுதி.

ஒரு murder case-ஐ நாம் நாளிதழில் வாசிக்கும்போது அது headline. நீதிமன்றத்தில் case number. அரசியலில் political controversy. forensic laboratory-யில் அது எலும்புத் துண்டுகள், DNA, மண், வெடிபொருள் தடயங்கள்.

ஆனால் ஒரு நாட்டைக் கடந்து இன்னொரு நாட்டின் மண்ணில் நின்றபோதுதான் அதன் இன்னொரு முகம் தெரிகிறது.

அங்கே அது நம் நாட்டின் நினைவு. ஒரு குடும்பத்தின் இழப்பு. அங்குள்ள சமூகத்தின் மனதில் இன்னும் முடிவடையாமல் இருக்கும் கேள்வி.

Ulaanbaatarல் நான் சென்றது மலேசியர்களுக்கான consular பணிக்காகத்தான். ஆனால் அங்கிருந்து திரும்பியபோது புரிந்துகொண்டது வேறு ஒன்று.

ஒரு அரசு அதிகாரி தனது நாட்டின் அடையாளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்வதில்லை. தனது நாட்டின் புகழையும் சாதனைகளையும் எடுத்துச் செல்கிறான்.

சில நேரங்களில், தனது தலைமுறை உருவாக்காத வரலாற்றின் பாரத்தையும் சேர்த்தே சுமந்து செல்கிறான்.

Altantuya Shaariibuu கொல்லப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு மனித உயிருக்கு இருபது ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். ஆனால் பதில் கிடைக்காத ஒரு கேள்விக்கு, இருபது ஆண்டுகள்கூட சில நேரங்களில் மிகக் குறுகிய காலமாகவே இருக்கிறது.

No comments: