Friday, January 16, 2009

முரண்டு பிடிக்கும் மரணம்!!!


எச்சமாய் இருக்கும்
வாழ்க்கையின்
மிச்சத்தை
தள்ளாடித் தீர்க்கிறான்
தடி ஊன்றும் கிழவன்!

உடல் தேய
உழைத்தவனின்
உள்ளங்கை ரேகைகள்
ஊமையாகிவிட்டன!

இந்த முதுமை
சோகங்கள்
அழியா கரையாய்
நெஞ்சுக் கூட்டில்
நெளிந்துக் கிடக்கிறது!

வேட்டி முடிய
கனக்கும் கைகள்!
அடுத்த அடிக்கு
முகம் சுழிக்கும் கால்கள்!
“டேய் கிழவா”
கேட்டு மந்தமான செவிகள்.
பகல் கூட இருட்ட
தொடங்கிவிட்டது கண்களுக்கு!

உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!

மரியாதையை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!

48 comments:

Anonymous said...

//உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!//

நன்று :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நூறுக்கு வாழ்த்துக்கள் விக்கி!

தங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும்.

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்! :))))

வால்பையன் said...

//உடல் தேய
உழைத்தவனின்
உள்ளங்கை ரேகைகள்
ஊமையாகிவிட்டன!//


உடல் தேய
உழைத்தவனின்
உள்ளங்கை ரேகைகள்
வற்றிய ஆறாகிவிட்டன.

இது சரியாக இருக்குமா?
சும்மா போட்டு பார்த்தேன் தலைவா

ஆயில்யன் said...

//உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!

மரியாதையை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது//

:((

வால்பையன் said...

இந்த கவிதையில் ஒரு கிழவனாகவே வாழ்ந்து விட்டீர்கள்.

இவையெல்லாம் இனி வருங்காலத்தில் புனைவாகவே மாறட்டும்.
வரும் காலம் அனைவருக்குமாக இருக்கட்டும்

Athisha said...

மாம்ஸ் 100க்கு வாழ்த்து

கவிதை ரொம்ப டச்சிங் மாம்ஸ்

cheena (சீனா) said...

அன்பின் விக்கி,

பிளாக்கர் சதி - முந்தைய மறுமொழி வந்ததா தெரியவில்லை

நூறாவது பதிவினிற்கு நல்வாழ்த்துகள் விக்கி

முதுமை கொடுமைதான். நட்பினையும் உறவினையும் நம்பாது தன் காலில் நிற்கும் முதுமை - கொடுமையிலும் சற்று ஆறுதல் அளிக்கும் - மகிழ்வைக் கொடுக்கும்.

கவிதை அருமை - சிந்தனை நன்று - எளிய சொற்கள்

கை கால் கண் செவி அத்தனையும் வேலை நிறுத்தம் செய்யும் பொழுது என்ன செய்ய முடியும் .......

நல்வாழ்த்துகள் விக்கி

நட்புடன் ஜமால் said...

100 வாழ்த்துக்கள் ...

வெண்பூ said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்..

அருமையான கவிதை விக்கி. ஒரு விசயம் 100வது பதிவை கொஞ்சம் கலகலப்பா கொடுத்திருக்கலாமே? சோகமா முடிச்சிட்டிங்க..

கிஷோர் said...

100க்கு வாழ்த்துக்கள் விக்கி

கவிதை பிரமாதம்.

வால்பையன் said...

சதமடித்த இணைய சச்சினுக்கு வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!\\

அருமை ...

A N A N T H E N said...

//அடுத்த அடிக்கு
முகம் சுழிக்கும் கால்கள்!//
கால் முட்டியா?

நூறு இடுகை போட்ட எங்க தல வாழ்க...

நூறாவது இடுகை சொல்லிக்கிற அளவுக்கு அர்த்தமான வரிகளைச் சுமந்து வந்திருக்கு!

சுப.நற்குணன்,மலேசியா. said...

இளமை வயதிலேயே
கிழவனின் வாழ்வை
வாழ்ந்துவிட்டீர் ஐயா..!

100ஆவது பதிவைத் தொட்ட 'இளமை தாத்தா' இன்னும் 100 ஆண்டுக்குப் பதிவிட வாழ்த்துகள்..!

எண்ணத்திற்கு எட்டாத உயரங்கள் உங்கள் விரல் நுனியைத்
தொட்டுப்பார்க்க காத்திருக்கின்றன.

உயர்க ஐயா..!

வியா (Viyaa) said...

'உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!'

அழகான வரிகள்..
உங்களது நுறவதுக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

இராம்/Raam said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்..

Anonymous said...

100 இற்கு வாழ்த்துகள் :)

மாதவராஜ் said...

முதுமையின் துயரம் அலைக்கழிக்கிறது வரிகளில்...
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

VG said...

100th post, but yen maranathai patriyathu?? alagana visyangal evalavu irukku...

However, the poem is great as usual.. :))

gayathri said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்

சி தயாளன் said...

பதிவில் 100 போட்டது போல் சாதனைகளும் 100 படைல்ல வாழ்த்துகள்//

சென்ஷி said...

வாழ்த்துக்கள் விக்னேஷ்.... :))

goma said...

உண்மைதான். சிலருக்கு மரணம் அருகில் வர அடம் பிடிக்கிறது.ஆயுள் வேண்டும் என்றிருப்பவரை அள்ளிச் செல்கிறது.
மரணம் முரண்டு பிடிக்கவில்லை முரண்பாடாக செயல் படுகிறது.

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் பல 100 காண ஆசிகள்

Poornima Saravana kumar said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்:))

Poornima Saravana kumar said...

//மரியாதையை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!
//

ரொம்ப தெளிவா, அழகா வயதானவரின் வேதனைகளை சொல்லி இருக்கும் விதம் அருமையோ அருமை!!

Anonymous said...

என்னையா நீர் ....மரண கவிதையா கிடைத்தது..100வது பதிப்பு,சஷ்தோசமா வேற எதுவும் கிடைக்கலா...

ராஜ நடராஜன் said...

சதமடிச்சு விட்டு என்னங்க முரண்டு பிடிக்கும் தலைப்பு.

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள் மாப்ளேய்ய்
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஜோசப் பால்ராஜ் said...

என் அன்புத் தம்பி,
நூறாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கவிதை மிக அருமை.
மரணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வராமல், எதிர்பாரதவர்களுக்கு வருவது தான் மரணத்தின் இயல்பு.

எல்லா வரிகளும் மிக அருமை.

Unknown said...

முதல் பின்னூட்டம் யார் எழுதியிருந்தாலும், முதல் வாசகன் என்ற மகிழ்ச்சியை பல முறை எனக்கே தந்து வருகிறாய். மிக்க மகிழ்ச்சி.


அளவிலா அன்புடன்

விஜய்கோபால்சாமி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//என் அன்புத் தம்பி,
நூறாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். //


யூசுப் பாலு, முதல்முறையா தம்பி என்று விளிப்பதைக் கேட்கும் போது எனது நா தழு தழுக்கிறது, கண்கள் பனிக்கின்றன. இதயம் இனிக்கிறது.
திடீரென்று அண்ணே ஆனதற்கு வாழ்த்துகள்!

Unknown said...

//மரியாதையை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!///

.kadaisi kaalathil manithanin nilamai ithuthaan enbathai marukavum mudiyala maatravum mudiyala...vithipadi....

கோவி.மதிவரன் said...

வணக்கம் வாழ்க

உயிர் எப்பொழுது போகும் எப்படி போகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் போகும் போது கண்டிப்பாக போகும்.

ஹேமா said...

விக்கி,இன்னும் நிறைய எழுத மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வயதின் அனுபவமோ!கவிதை கனக்கிறது

Kalaiyarasan said...

உங்களது நூறாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.
கவிதையின் கடைசி வரிகள் அருமை. ஒரு குறுந்தத்துவ விசாரம்.

கோவி.கண்ணன் said...

தம்பி, பின்னூட்டத்திற்கெல்லாம் மறுமொழி போட மாட்டியா ? இப்படியெல்லாம் செய்யாதைய்யா....அப்பறம் கூட்டம் குறைஞ்சிடும். ஒழுங்க எல்லோருக்கும் மறுமொழி போடு

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சுபாஷினி

வருகைக்கு நன்றி...

@ ஜோதிபாரதி

வாழ்த்துக்கு நன்றி அண்ணா...

@ ஆயில்யன்

வாங்க வாங்க... தப்பா கணக்கு போடுறிங்க...

@ வால்பையன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

@ அதிஷா

வாழ்த்துக்கு நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சீனா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா...

@ ஜமால்

நன்றி நண்பரே...

@ வெண்பூ

நன்றி... சோகம் சந்தோசம்லாம் நம்ம பார்வையில் தானே இருக்கு...

@ கிஷோர்

நன்றி...

@ ஆனந்தன்

தலையா? எங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சுப.நற்குணன்

வாழ்த்துக்கு நன்றி ஐயா...

@ வியா

நன்றி...

@ ராம்

நன்றி

@ தூயா

நன்றி...

@ மாதவராஜ்

நன்றி நண்பரே...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

@ காயத்திரி

நன்றி...

@ டொன் லீ

நன்றி...

@ சென்ஷி

நன்றி நண்பரே...

@ கோமா

நன்றி அம்மா...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ பூர்ணிமா சரண்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

@ அனானி

என்னய்யா நீர் அனானியாதான் வந்து பின்னூட்டம் போடனுமா... அதுவும் 100வது பதிவுல...

@ ராஜராஜன்

வருகைக்கு நன்றி...

@ பரிசல்காரன்

நன்றிங்க எழுத்தாளரே...

@ ஜோசப் பால்ராஜ்

நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜய்கோபால்சாமி

நன்றி

@ உஷா

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிங்க... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ கோவி.மதிவாரன்

ஹா ஹா ஹா... நீங்க ரஜினி ரசிகரா? வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

@ ஹேமா

நன்றிங்க...

@ கலையரசன்

நன்றி...

@ கோவி கண்ணன்

அண்ணே எல்லாருக்கும் கமெண்டு போட்டாச்சு....

மேவி... said...

super....
congrats for the 100th post

து. பவனேஸ்வரி said...

முதியவரின் மனநிலையையும் உடல்நிலையையும் நன்றாகப் படம் பிடித்துக்காட்டியுள்ளீர். அழகான வார்த்தை அடுக்குகள். நன்று. 100 பதிவினை எட்டியதற்கு வாழ்த்துக்கள்.
வாழ்க, வளர்க!

நான் said...

100வது பதிவிற்கு வாழ்த்துகள்
முதுமையின் வலிகள் அருமை

VIKNESHWARAN ADAKKALAM said...

@ mayvee

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்பரே...

@ பவனேஸ்

நன்றிங்க...

@ நான்

நன்றி.. மீண்டும் வருக...

தமிழ் said...

இன்று தான் இந்தக் கவிதையைப் படிக்கின்றேன்.
வலிக்கிறது ஒவ்வொரு வார்த்தைகளும்