Monday, January 19, 2009

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு – 2

பேரன்புடைய,
மலேசியத் தமிழ் வலைப்பதிவர் அனைவருக்கும் வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு – 2, பின்வரும் வகையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 25-1-2009 (ஞாயிறு)
நேரம் : பிற்பகல் மணி 2.00 தொடக்கம்
இடம் : தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா.
(பள்ளிவாசல் எதிர்ப்புறம் – ஏ.ஆர்.ரகுமான் உணவகம் அருகில்)

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2இன் நோக்கம்:-
** மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களிடையே அறிமுகத்தை ஏற்படுத்துதல்.

** மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்தல்.

** மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளின் தரத்தை மேம்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்.

** கணினி – இணையத் துறையில் தமிழ்மொழியின் பயன்பாட்டையும் பயனாளர்களையும் விரிவுபடுத்துதல்.

** புதியப் பதிவர்களை உருவாக்கி; ஊக்கப்படுத்தி; வழிகாட்டுதல்.

** மலேசியத் தமிழ் வலைபதிவுகளை மாற்று ஊடகமாக வளர்த்தெடுத்தல்.


மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசகர்கள், தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ்க் கணினி பயனாளர்கள், வலைப்பதிவு தொடங்க விரும்புபவர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.

மேல்விளக்கத்திற்கும் தொடர்புக்கும்:-

விக்னேஷ்வரன் அடைக்கலம் (012-5578257)
சுப.நற்குணன் (012-4643401),
கோவி.மதிவரன் (013-5034981),
கி.விக்கினேசு (012-4532803)

பி.கு:-
1) தெற்கிலிருந்து வருபவர்கள் PLUS நெடுஞ்சாலையிலிருந்து கமுண்டிங் அல்லது பண்டார் பாருவில் வெளியேறி பாரிட் புந்தார் வரலாம்.

2) வடக்கிலிருந்து வருவோர் நிபோங் திபாலில் வெளியேறி பாரிட் புந்தார் வரலாம்.

3) பாரிட் புந்தார் மணிக்கூண்டுக்கு அருகில்தான் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு எதிர்புறத்தில் ஏ.ஆர்.ரகுமான் உணவகத்திற்கு பக்கத்தில் 'தமிழியல் நடுவம்' உள்ளது.

இவ்வண்,
ஏற்பாட்டுக் குழுவினர்

16 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

நாங்களும் உண்டா ...

ஜெகதீசன் said...

பயணச் செலவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சிறப்பு விருந்தினராக சந்திப்பில் கலந்துகொள்ள எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை...
:P

Sanjai Gandhi said...

//மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2இன் நோக்கம்//

தம்பி என்ன இது சின்னப் புள்ளத் தனமா?
வந்தோமா, மொக்கை போட்டோமா, கொண்டுவந்த போண்டா பஜ்ஜி எல்லாம் சாப்ட்டோமான்னு இல்லாம.. நோக்கம் அது இதுனு அசிங்கமா பேசிகிட்டு.. :))

A N A N T H E N said...

திரண்டு வாங்க


'தமிழியல் நடுவம்' >> விசாரிக்கும்போது என்ன சொல்லி கேட்கனும்? ஏதும் மலாய் பெயர் இருகுமே?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஏ.ஆர். ரகுமான் உணவகத்தில் பதிவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையுடன் கூடிய ஆட்டுக்கறி பிரியாணியுடன் சாப்பாடும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
தங்கள் முனைப்புக்கு வாழ்த்துகள் விக்கி!

து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
தகவலுக்கு நன்றி. இம்முறை அதிகமான பெண் வலைப்பதிவர் வருகையை எதிர்ப்பார்க்கிறேன். நல்ல முயற்சி. விரைவில் சந்திப்போம். வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :))

சி தயாளன் said...

//ஜெகதீசன் said...
பயணச் செலவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சிறப்பு விருந்தினராக சந்திப்பில் கலந்துகொள்ள எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை...
:P
//

செலவுகளை அய்யங்கார் ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லை விக்கி ஏற்றுக் கொண்டாலும் சரி...

சுப.நற்குணன்,மலேசியா. said...

தமிழ் வலைப்பதிவு நண்பர்கள், குறிப்பாக வடமலேசிய நண்பர்கள் தவறாமல் கலந்துகொண்டு சந்திப்பை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வருகைதரும் நண்பர்கள் தங்களின் வருகையை உறுதிப்படுத்தினால் நல்லது. எனவே, குறுஞ்செய்தி வழியாக உங்கள் வருகையைத் தயவுசெய்து உறுதிபடுத்தவும்.

Type:- MTV[இடைவெளி]உங்கள் பெயர்[அனுப்பவேண்டிய எண்]0124643401

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

RAHAWAJ said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்,சும்மா ஜமாச்சிட்டு வந்து நிரைய பதிவு போடுங்க என்ன ஓகே வா விக்கி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜமால்

நீங்களும் உண்டு... வாங்க வாங்க...

@ ஜெகதீசன்

ஓ தாரளமாக... விருந்து செலவுலாம் உங்களுக்கே...

@ சஞ்ஜய்

இந்த மாதிரிலாம் சொன்னாதான் நிறைய பஜ்ஜி சொஜ்ஜிலாம் எடுத்து வருவாங்க....

@ ஆனந்தன்

வரும் போது என்ன கொண்டு வரிங்க... கேசரியா? சுப.நற்குணன் ஐயா கோழி பிரியாணி வாங்கி தரதா சொல்லி இருக்காரு. 4 நாளு சாப்பிடாமல் இருந்தால் நலம்.

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ து. பவனேஸ்வரி

நீங்க வரிங்க தானே? கவிதாவையும் கூட்டியாங்க...

@ ஆயில்யன்

நன்றிங்க...

@ டொன் லீ

புலிப் பால் குடிச்சிட்டு கமெண்டு போடுறிங்களா? ஒன்னும் புரிய மாட்டேங்குதே...

@ சுப.நற்குணன்

நன்றி ஐயா.

@ ஜவஹர்

நீங்களும் வரதா சொன்னிங்களே? உங்க எதிர்கால பதிவர தூக்கிகிட்டு வாங்க. இப்பவே கத்துக்கிட்டும்...

Tamil Usi said...

பாஸு... என்ன விளையாட்டு இது. உங்களுக்கு தெரியும் நான் ஏர்போர்ட் டாக்சி ஓட்டுகிறேன் என்று. இப்படி திடீரென்று சொன்னால் எப்படி..? முடிந்த வரை முயற்சி செய்கிறேன்.

VG said...

hahahah.. comments all very funny. direction sonathu ok, can u kindly send me a car+ petrol money+ toll ? i'll sponsor 5 sojji and 5 bajji.. how?? VIKNES.........H!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ் ஊசி

தகவலுக்கு நன்றி... நேரம் இருப்பின் தவறாது கலந்து கொள்ளுங்கள் அன்பரே...

@ விஜி

இப்பவே நடக்க ஆரம்பிச்சிங்கனா சரியான தேதிக்கு வந்திடலாம்... :P

Anonymous said...

nadakanuma???
nalla irukke ketkarathuku.... unga cycle tayar le kaatellam poga, unga cycle break velai seiyama poge.... :D
NOTE: all this my saabam. :D