Wednesday, January 14, 2009

பொங்கல் சிறப்பு கொசுறு 14/01/2009

பானை மட்டும் பொங்கினால் போதும் என நினைப்பது நெகடிவ் அப்ரோச். மனதில் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என நினைப்பது பாசிடிவ் அப்ரோச் என கருத்து சொல்ல நினைக்கும் அதே வேளையில் எல்லோருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறார் சாணியடி சித்தர்.
********

பொங்கல் சரியாக பொங்கவில்லையென்றால் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் போட வேண்டும் என தூயா சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். உயிர் பயமில்லாதவர்கள் தாரளமாக முயற்சிக்கலாம்.
*******

வீடு வீடாகச் சென்று அவன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அந்த வழியாக அரசன் வந்தான். தனக்கு பெரும் வெகுமதி கிடைக்கப் போவதாகப் பிச்சைக்காரன் நினைத்தான். ஆனால் அரசன் அவனுக்கு பிச்சையாக எதையும் கொடுக்கவில்லை. மாறாக, கைகளை நீட்டி அரசனே பிச்சை கேட்டான்.

பிச்சைக்காரன் திகைத்துப் போனான். அரசன் கேட்கிறான். இல்லையென சொன்னால் பிரச்சனை. தன்னிடம் இருந்த தானியத்தில் சிறிதளவு அவனுக்குப் பிச்சையாகப் போட்டான்.

இரவு தன் இடம் திரும்பியதும் தானியத்தைக் கவனிக்கிறான். அதில் சில தானியங்கள் பொன் தானியங்களாக இருக்கிறது. கொடுப்பவன் பெறுகிறான்.
******

பொங்கல் நிகழ்ச்சியாம். உள்ளூர் கலைஞர்களின் படைப்பு என்றார்கள். நிகழ்ச்சி ஒளி பரப்பானது.

"மெகு மெகு மெகு லயிமெயிமா.... x2 முதல் மழை எனை நனைத்ததே... முதல் முறை சன்னல் திறந்ததே...."

அதே ஹரிஸ் ஜெயராஜ் பாடல் தான் என்ன நடனம்... மன்னிக்கவும், உடல் அசைத்து நடந்தவர்கள் உள்ளூர்க்காரர்கள். என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என
புரியவில்லை. அதே டிரிசாவும் விக்ரமும் நடித்த பீமா பட பாட்டை அப்படியே தூக்கி போட்டிருந்தால் தயாரிப்புச் செலவு மிச்சமாகிப் போயிருக்கும்.
*****

நான் கடவுள் பாடல்கள் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இசை ஞானியின் இசையமைப்பு அருமையாக இருக்கிறது. பாடல் வரிகளில் கிரந்தத்தைக் கரந்து வைத்திருக்கிறார்கள். கோவி கண்ணன் இதை கேட்டு வெகுண்டெழுத்து ஒரு பதிவு போடுவார் என பதிவர் வட்டத்தில் சின்ன கிசு கிசுப்பு ஆங்கங்கு கேட்டுக் கொண்டிருக்கிறது.
****

பாலகுமாரனின் கனவுகள் விற்பவன் படித்தேன். கதறக் கதற 'பிளேடு' போட்டுள்ளார். முயற்சி செய்து படித்துப் பார்த்தேன். முடியலை.
****

அக்குளுக்கு பயன்படுத்தும் வாசனைத் திரவியத்தால் (deodorant) புற்று நோய்
ஏற்படுவதாகப் படித்தேன். அத்திரவியத்தில் அலுமினியம் போன்ற உலோகங்கள்
சேர்க்கப்படுகிறதாம். பீதியை கிளப்பிவிட்டுவிட்டது செய்தி.
*****

நியுமரலாஜி நிபுணர்களின் தகவலின் இந்த ஆண்டு என் இரத்தத்தைப் பார்க்காமல் முடியாதாம். இன்ன இன்ன பூஜை செய்ய வேண்டும் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்கள். நேற்று இரத்த தானம் செய்துவிட்டு வந்தேன். சின்ன காயம் நிறய இரத்தம் பார்த்தாச்சு. பூஜை கேன்சல். 4 ஆண்டுகளுக்கு முன்னமே உடல் உறுப்பு தானத்தையும் செய்தாகிவிட்டபடியால் இனி வாழ்க்கையில் எந்த பரிகாரமும் தேவை இல்லை என சிறப்புச் சலுகை கொடுத்திருக்கிறார் இளச்சி மலை ஆத்தா. ஆத்தா நீதானம்மா நியூம(சு)ராலாஜி நிபுணர்களுக்கு நல்ல புத்திய கொடுக்கனும்.
*****

தமிழர்கள் சினிமாவுக்கு அடுத்தபடியாகத் திருவிழாவுக்கே அதிகமாகச் செலவு செய்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலை சென்னை புத்தகத் திருவிழாவில் ஏற்படுமாயின் நலமான ஒன்றாக அமையும். ஏறக் குறைய பத்து புத்தகங்கள் வாங்க விண்ணப்பித்துள்ளேன்.
*****

உறங்குவதும்
உறங்கி விழிப்பதும் போலவே
இயல்பாகிவிட்டது,
உன்னை நினைத்துக் கொள்வதும்…

நீ கேட்காமலே
பேருந்து நிறுத்தம் வரை
துணைக்கு வந்தது…

பத்திரமாய்
சென்று சேர்ந்தாயா என்று
தொலைபேசியில் சோதித்தது…

நண்பர்களோடு சென்ற
சுற்றுலாவில் நான்
மயங்கி விழுந்தது கண்டு
நீ பதறித் தவித்தது…

இரவுப் பணியில் ஒருநாள்
கால் இடறி
நடக்கமுடியாமல் போனதற்காக
எனக்கிருந்த பசியறிந்து
பழங்களுடன் நீ வந்தது…

தொடர்ந்த என் நினைவுகளை
சட்டென்று அறுத்தது,
பில்ட்டரை நெருங்கிய
சிகரெட்டின் நெருப்பு,
நாம் பிரிந்த
ஜனவரி பதினொன்று
நினைவுக்கு வந்தபோது. - விஜய்கோபால்சாமி

22 comments:

ஆயில்யன் said...

//மெகு மெகு மெகு லயிமெயிமா//

அண்ணாச்சி ரொம்ப உன்னிப்பா கேட்டு புடிச்சிட்டீங்க போல வரிகளை...!

பொங்கல் வாழ்த்துக்கள் :))

VG said...

**நியுமரலாஜி நிபுணர்களின் தகவலின் இந்த ஆண்டு என் இரத்தத்தைப் பார்க்காமல் முடியாதாம். இன்ன இன்ன பூஜை செய்ய வேண்டும் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்கள். நேற்று இரத்த தானம் செய்துவிட்டு வந்தேன். சின்ன காயம் நிறய இரத்தம் பார்த்தாச்சு. **

Hahahaha... the best one.. Ninga ivalo nalavara???

மு.வேலன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

//பாலகுமாரனின் கனவுகள் விற்பவன் படித்தேன். கதறக் கதற 'பிளேடு' போட்டுள்ளார். முயற்சி செய்து படித்துப் பார்த்தேன். முடியலை.//

:))))

நட்புடன் ஜமால் said...

கொலை வெறி கவிதையா ...

ஏன்ப்பா இந்த கொலை வெறி ...

ஹேமா said...

விக்கி கவிதைப் பொங்கல் கலக்கல்.அருமை.இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

RAHAWAJ said...

நல்ல கொசுறு விக்கி,எங்கடா இந்த சாணியடி சித்தர் மற்றும் இலைச்சியம்மனை இந்த வருடம் காணலையேனு பார்த்தேன் வந்துடாங்கய்யா வந்துடாங்க, அந்த இருவரின் அருளால் இவ்வருடம் விக்கி அதிக பதிவுகள் (மொக்கையும்)போட சாட்டையடி சித்தரின் சீடரின் வாழ்த்து ஹா ஹா

Unknown said...

தம்பி, எழுதுன நானே மறந்துட்டேன். நீ ஞாபகம் வச்சு தொடுப்பு கொடுத்ததுக்கு மிக்க நன்றி...

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

பல்வேறு சிந்தனைகளின் விளைவு - பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்புப் பதிவு.

பொங்கல், பானையில் பொங்கினாலே எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி தானாகவே பொங்கும். இது இயல்பான கண்ணோட்டம்.

பேக்கிங் பவுடருக்குப் பதில் பானையில் சிறிது பால் ஊற்றலாம் - சீக்கிரமே பொங்கும்.

கொடுப்பவன் மீண்டும் கொடுப்பதற்காக அதிகம் பெறுகிறான் என்பதில் ஐயமில்லை.

கோவி வெகுண்டாரா - டிபிசிடி வெகுண்டாரா - விபரம் தேவை

விஜய் கோபால்சாமியின் கவிதை அருமை. பிரிவினை நினைக்கிறதால் தான் நிகழ்வுகள் - நடந்த நிகழ்வுகள் எண்ணத்தில் நம்மை அறியாமலேயே ஊஞ்சலாடுகின்றன.

நல்வாழ்த்துகள் விக்கி

வெண்பூ said...

பொங்கல் கொசுறு சுவையாகவே இருக்குது..

Anonymous said...

//பொங்கல் சரியாக பொங்கவில்லையென்றால் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் போட வேண்டும் என தூயா சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். உயிர் பயமில்லாதவர்கள் தாரளமாக முயற்சிக்கலாம்.//


ஆகா....ஏன் இந்த கொலைவெறி???

A N A N T H E N said...

1.//சாணியடி சித்தர்// சித்தர் இப்படியே பேசிட்டு இருந்தா அடி அவருக்கே கூட திரும்பலாம்

2. //உயிர் பயமில்லாதவர்கள்// மத்தவங்க உயிர் மேல நமக்கென்ன அக்கறை? சமைச்சு கொடுப்பொமில்ல

3. பிச்சைக்காரன் கதை சூப்பரப்பு

4. //உள்ளூர் கலைஞர்களின் படைப்பு என்றார்கள்// ராத்திரி போட்ட நிகழ்ச்சி நீங்க பாக்கலையாக்கும்? ஆட்டம் 100 வகை பூச்சிகள் என்னமோ செஞ்சாங்க கடையிசில… சிரிக்கத்தான் முடியல

5. //கடவுள் பாடல்கள்// சாமி பாட்டு மாதிரியே இருக்கு.. திரும்ப திரும்ப செக் பண்ணேன்… தப்பா டவுன்லோடு செஞ்சிட்டேனோன்னு

7. //பீதியை கிளப்பிவிட்டுவிட்டது செய்தி// உங்க அடுத்த கட்டுரை இதைப் பற்றி தானே?

8. //உடல் உறுப்பு தானத்தையும் செய்தாகிவிட்டபடியால்//
திடமான கருத்தை எளிமையா சொல்லிருக்கிங்க, நன்று

10. //சிகரெட்டின் நெருப்பு,
நாம் பிரிந்த
ஜனவரி பதினொன்று
நினைவுக்கு வந்தபோது//
திரட்டு நல்லாருக்கு, கவிதையை ரசித்தேன்

pudugaithendral said...

கொடுப்பவன் பெறுகிறான்.//

எங்க பாட்டி இதையே முன் கை நீண்டா தான் முரண்கை நீளும்னு சொல்வாங்க.

அன்பை, பாசத்தை, நட்பை எதையும் கொடுத்தால்தான் பெற முடியும்.

மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
நல்லா கொசுறுனீங்க...

//தொடர்ந்த என் நினைவுகளை
சட்டென்று அறுத்தது,
பில்ட்டரை நெருங்கிய
சிகரெட்டின் நெருப்பு,
நாம் பிரிந்த
ஜனவரி பதினொன்று
நினைவுக்கு வந்தபோது//

அழகான வரிகள்...

வால்பையன் said...

பொங்கல் சுவையாக இருந்தது!

கலக்குங்க

சி தயாளன் said...

தித்திப்பான பொங்கல்..:-)

எங்கே 100 வது பதிவு..? 99 தான் தெரியுது

நட்புடன் ஜமால் said...

100 சீக்கிரம் போடுங்க

(அட பதிவு சகோ...)

Kumky said...

100க்கு வாழ்த்துக்களுடனும்..
பொங்கள் வாழ்த்துக்களுடனும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆயில்யன்

உங்களுக்கும் வாழ்த்துகள்... அற்புதமான வரிகள்... பிடிபட சிரர்மமா இருந்துச்சு.

@ விஜி

வருகைக்கு நன்றி

@ மு.வேலன்

நன்றி

@ சென்ஷி

:))

@ ஜமால்

வருகைக்கு நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஹேமா

உங்களுக்கும் வாழ்த்துகள்..

@ ஜவஹர்

ஆஹா சாட்டையடியா?

@ விஜய்கோபால்சாமி

அனுமதி கொடுத்ததுக்கு நன்றி...

@ சீனா

நன்றி ஐயா

@ வெண்பூ

நன்றி தலைவரே...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தூயா

வருகைக்கு நன்றி...

@ ஆனந்தன்

வருகைக்கு நன்றி...

@ புதுகைத் தென்றல்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... உங்களுக்கும் எனது வாழ்த்துகள்...

@ து.பவனேஸ்வரி

வருகைக்கு நன்றி..

@ வால்பையன்

நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டொன் லீ

நன்றி

@ கும்க்கி

நன்றி