Thursday, December 11, 2008

கொசுறு 11/12/2008

ஆண்டு முடிய போகிறது என சொல்வது 'நெகடிவ் அப்ரோச்' புத்தாண்டு தொடங்க போகிறது என சொல்வது 'பாசிடிவ் அப்ரோச்' என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
*******

வலைபதிவை 2006-ஆம் ஆண்டு படிக்க ஆரம்பித்தேன். முறையாக எழுதத் தொடங்கியது இந்த ஆண்டின் நடுவின் இருந்து தான். இன்னமும் 100 பதிவுகளை எட்டி பிடிக்க முடியவில்லையே என்பது வருத்தமாக இருக்கிறது.
******

பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் படித்த போது ஏற்பட்ட இன்ப தாக்கத்தை 'ஆசிட்' போட்டு கழுவியதை போல் செய்துவிட்டது அவருடைய இரும்பு குதிரைகள் நாவல். பலரும் அதை சிறந்த புத்தகம் எனக் கூறியதால் தேடி படித்தேன். அதை நாவல் என சொல்ல முடியாது. தொகுப்பு புத்தகம் தான். அவருடைய வாழ்க்கை வரலாறு கலந்துள்ளதாக அறிகிறேன். அவருடைய 'மெண்டாலிட்டி' எனக்கு ஒப்பவில்லை.
******

அதிஷாவின் இன்பினிட்டி இன்பக் கதைகளை படித்த பலரும் இரவு தூக்கமற்று உலாவித் திரிவதாக சென்னை வலைபதிவாளர்கள் தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
*****

எழுத்தாளர் பரிசல்காரன் எழுதிய சிறுகதை அவள் விகடனில் வெளிகண்டுள்ளது. அவரது மனைவி திருமதி.உமா கௌரி எனும் பெயரில் பிற்பாதியும் கிருஷ்ணகுமார் எனும் பெயரின் முதல் பாதியும் சேர்த்து கௌரி கிருஷ்ணா எனும் பெயரில் வந்துள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
*****

மலேசிய வலைபதிவர் திரு.சுப.நற்குணன் எழுதிய 'சிலையாக நான்' எனும் சிறுகதை கடந்த 07-12-2008 மலேசிய நண்பன் நாளிகையில் வெளியீடு கண்டுள்ளது. ஒரு ஆசிரியை தான் படித்துக் கொடுத்த பிள்ளைகளின் பொது தேர்வின் முடிவை எதிர் நோக்கும் மனநிலையை அழகாக செதுக்கியுள்ளார்.
*****

வேலைக்குச் செல்ல பயன்படுத்தப்படும் முதன்மைச் சாலையோரங்களில் வாரா வாரம் ஏதாகினும் கால் நடை அடிபட்டு இறந்துக் கிடக்கிறது. மாநகராட்சிக்கு இவற்றை அப்புறப்படுத்த நேரம் இருப்பதில்லை. அப்படி என்ன தான் **** (வேண்டாம் விடுங்கள்). மழைகாலங்களில் நீர்பட்டும், கனரக வாகனங்களில் நசுங்கிப் போயும் அருவருப்பாக இருக்கிறது. கவனிப்பார் இல்லை.
*****

சிங்கை பதிவர்கள் மின்மடல் குழுமத்தில் அன்மைய காலமாக பயங்கர சலசலப்பு. பச்சை இலையை கண்டுபிடிக்க முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார் பின்னூட்ட புலி விஜய் ஆனந்த் 001. பலரது கவனமும் தமிழனின் குக்குரலிடும் பதிவர் மீது தீவிரமாக இருக்கிறது.
****

நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்த தமிழ்ப் படம் வாரணம் ஆயிரம். அமைதியான கதை. பாடல்களும் சிறப்பாகவே இருந்தன. தவமாய் தவமிருந்து படத்தினை துளியும் ஞாபகத்திற்கு கொண்டு வரவில்லை. நல்ல படம் என்றே சொல்ல தோன்றுகிறது. பதிவுகளில் பல இடங்களிலும் படம் மொக்கை என கிழிகிழியென கிழித்து தொங்கப் போட்டு வைத்திருக்கிறார்கள். அவற்றை படிக்கும் போது நான் தான் இரசனை கெட்டவனோ என எண்ண தோன்றுகிறது.
****

எல்லா பதிவுகளிலும் எங்களுக்கு உங்கள் பதிவில் இணைப்பு கொடுங்கள் என சுட்டி அருண் எனும் பதிவர் சுட்டித் தனம் செய்து கொண்டிருக்கிறார். இதை பலரது பதிவுகளிலும் காண்கிறேன். வேணா விட்டுடுங்க பின்னூட்டத்தை அழித்து அழித்து கை வலிக்கிறது.
*****

மெழுகுவத்தி


தனக்காக அல்ல...
தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே
அந்தத் தாய் அழுகிறாள் - வைரமுத்து.

*****

எல்லோரும் பரிசலாரின் அவியலை போல எழுதுவதால் அவர் சினம் கொள்வாரா என தெரியவில்லை. ஆதலால் அளவில்லா பயத்தோடு விக்கி.

22 comments:

சென்ஷி said...

விக்கி அசத்திட்டீங்க... கொசுறு செய்திகளை கொறிக்க குடுத்தது ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட கணக்கா இருக்குது :))

பரிசல், அதிஷா, பாலகுமாரன், சாணியடி சித்தர், சுப. நற்குணன் மற்றும் அருணுக்கு எனது வாழ்த்துக்கள்..

நூறாவது பதிவுக்காக வெயிட்டிங்க் :))

Athisha said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்...

என் கதைகளை படிக்கும் பெண்கள் தூக்கமிழந்தாலாவது பிரயோசனம் இருக்கும்.

சாணியடி சித்தர் விக்கி வாழ்க

நாம எத்தன பதிவு போடறோம்கிறது முக்கியமல்ல அதற்காக எவ்வளவு உழைக்கிறோம் என்பதற்கு விக்கி ஒரு உதாரணம்

வாரணம் ஆயிரம் படத்தை புகழ்கிறாயா.. ச்சே..உனக்கு நேரம் சரியில்லை தம்பி

சென்ஷி said...

//பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் படித்த போது ஏற்பட்ட இன்ப தாக்கத்தை 'ஆசிட்' போட்டு கழுவியதை போல் செய்துவிட்டது அவருடைய இரும்பு குதிரைகள் நாவல். //

:-)))

Athisha said...

பி
ன்
னூ
ட்

கு
ஜி
லி
த்


ம்

ஆயில்யன் said...

//சென்ஷி said...
விக்கி அசத்திட்டீங்க... கொசுறு செய்திகளை கொறிக்க குடுத்தது ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட கணக்கா இருக்குது :))

//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

RAHAWAJ said...

தொகுத்த செய்திகளும் அதன் வரிசைகரணமும் நல்லா இருக்கு விக்கி,அந்த 30 பவுன் எனக்குதான் சீக்கிரம் தயார் செய்யவும் வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

என்ன இருந்தாலும் உங்களை மாதிரி வாராவாரம் தொடர்ந்து பத்திரிகைக்கு எழுதற அளவு ஃபேமஸ் இல்லீங்களே நான்.

அளவில்லா வயித்தெரிச்சலோடு
-கிருஷ்ணா

ஜெகதீசன் said...

:))

விஜய் ஆனந்த் said...

:-)))...

Anonymous said...

நல்லா இருக்கு விக்கி.

இ கு பிடிக்கலைன்னும், வா ஆ பிடிச்சிருக்குன்னும் சொல்லும் உன் நேர்மை பாராட்டப்ப்டவேண்டியது.

தொடர்ந்து எழுது.

தோரணம் அல்லது கற்கண்டு போன்ற ஏதாவது பெயர் ம்யற்சிக்கவும்

Anonymous said...

ஒரே பதிவுல எல்லா விசயத்தையும் தொட்டிருக்கீங்க. நல்லாருக்கு விக்கி!

VG said...

hahahaha.. ithena vickiyin sontha katai soga katai kuripo??

100 pativugalai nokki sellum ungal payanathirku ennudaiya vazhtukkal... tamil padam mathri COMING SOON.....

ungalin kavitaigalai atigam etirparkiren....

tc

சுப.நற்குணன்,மலேசியா. said...

எப்படியய்யா இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க..!

கொசுறு செய்திகளில் எனக்கும் இடம் கொடுத்திருப்பது கண்டு வியந்தேன்..!

கொசுறு...
உங்களின் பதிவுகளிலேயே
தனி தினுசு!

Thamiz Priyan said...

கலக்குறேள் விக்கி!..:)

மங்களூர் சிவா said...

சூப்பர்ங்ணா!

A N A N T H E N said...

saaniyadi sithar kavarkirar....

தராசு said...

//ஆண்டு முடிய போகிறது என சொல்வது 'நெகடிவ் அப்ரோச்' புத்தாண்டு தொடங்க போகிறது என சொல்வது 'பாசிடிவ் அப்ரோச்' என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.//

இந்த சித்தர் எங்க மலேஷியாவுல இருக்கறாரா?

து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
வாரணம் ஆயிரம் உண்மையிலேயே அருமை! உங்களுக்குத்தான் ரசனை அதிகம் உள்ளது! நானும் உங்கள் கட்சிதான்... படத்தை இரு முறை பார்த்தும் தாகம் தீரவில்லை. சூர்யாவின் நடிப்பு அருமை. நடிகர் திலகத்தையே மிஞ்சிவிடுவார் போல...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சென்ஷி

மிக்க நன்றி...

@ அதிஷா

யோவ்... உண்மைய சொன்னா ஏத்துக்க மாட்டிங்களே...

@ ஆயில்யன்

வருகைக்கு நன்றி...

@ ஜவஹர்

வருகைக்கு நன்றி...

@ பரிசல்காரன்

வருகைக்கு நன்றி... நாங்களாம் உங்களை மாதிரி பேமஸ் இதழ்களில் எழுதலையே அண்ணே...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜெகதீசன்

வருகைக்கு நன்றி...

@ விஜய் ஆனந்த்

வருகைக்கு நன்றி...

@ வடகரை வேலன்

வருகைக்கு நன்றி... கொசுறு என்பது கேச்சியான வார்த்தையாக இருப்பதாக அறிகிறேன்... அதனால் தான் இப்படி... வேறு பெயர் யோசிக்கிறேன்.

@ வெயிலான்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

@ விஜி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சுப.நற்குணன்

வருகைக்கு நன்றி ஐயா... உங்கள் கதை சிறப்பாக இருந்தது...

@ தமிழ் பிரியன்

நன்றி

@ மங்களூர் சிவா

நன்றி

@ ஆனந்தன்

நன்றி...

@ தராசு

வருகைக்கு நன்றி... ஏன் நீங்கள் அவரை சந்திக்க விரும்புகிறீர்களா?

@ து.பவனேஸ்வரி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

ஜெகதீசன் said...

@ VIKNESHWARAN
நன்றிக்கு நன்றி!
:P