Wednesday, December 17, 2008

கொசுறு 17/12/2008

இந்த ஆண்டு இதையெல்லாம் செய்ய முடியலை என சொல்வது 'நெகடிவ் அப்ரோச்' அடுத்த ஆண்டு இதையெல்லாம் செய்துவிடுவேன் என சொல்வது 'பாசிடிவ் அப்ரோச்' என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
****

ஆட்களை காட்டுபவர் என பெயரிட்ட பதிவர் ஒருவர் தற்சமயம் சிங்கையில் இருக்கிறார். மலேசியா வாந்தால் சொல்லுங்கள் சந்திக்கலாம் என்றேன். சந்திக்கலாம் போட்டோ எடுக்காதீர்கள் என்றார். ஏன் என்றேன். 'என் பொண்டாட்டி மூழுகாம இருக்கா, உன் பொண்டாட்டி என்னவா இருக்கா' என்ற சண்டைகள் விளையாமல் இருக்க போட்டோவை தவிர்ப்பது நன்று என்றார்.
****

பல பதிவர்களையும் இணைத்து கதை எழுதிய இவர், நெருங்கிய தொடர்பிலிருக்கும் என்னை மறந்துவிட்டார். இருக்கட்டும் பார்த்துக் கொள்கிறேன்.
****

பெர்னாட்ஷா உலக அறிஞர்களுள் ஒருவர். பரவலாக புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட இவர் ஆழ்ந்து கற்று தேறியது இரண்டே நூல்கள் தான். ஒன்று பைபில் இன்னொன்று ஷெக்ஸ்பியர் இலக்கியம்.
****

அண்மையில் தமிழ்மணத்தில் நடந்தேறிய தடல்புடல் சண்டைக்கு குரு பெயர்ச்சி காரணமா? தீவிர ஆலோசனைகள் நடந்தேறுகிறது.
****

சோ சொன்னது, நான் தம்பிகளுக்கெல்லாம் அண்ணன், அண்ணன்களுக்கெல்லாம் தம்பி, எப்படி முன்னால் பிறப்பவன் அண்ணன்,பின்னால் பிறப்பவன் தம்பி -எப்படி தத்துவம்?
****

புத்தகங்கள் எக்கச் செக்கமாக சேர்ந்துவிட்டது. படித்து முடித்துவிட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். ஆனால் சில சமயங்களில் புத்தகக் கடை பக்கம் போகும் வேலைகளில் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எதையாவது தேடி பிடித்து வாங்கிவிடுகிறேன்.
*****

ஞாயிற்றுக் கிழமை 14/12/2008 திரு.கோவி அவர்கள் சிகை அலங்காரம் செய்துள்ளார் மற்றும் வீட்டில் முருங்கைக்காய் சாம்பார் அவரே சமைத்துள்ளார். ரம்பா வீட்டில் நாய் குட்டி வாங்கிய செய்திகளையெல்லாம் நாளிகையில் போடுகிறார்கள். கோவியாரை பற்றிய இச்செய்தி மிகையில்லை என்றே கருதுகிறேன்.
*****

இவ்வருடம் வலைப்பதிவில் விடுபடாமல் தொடர்ந்து எழுதுகிறேன். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பும் அமைந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
****

இந்த சுட்டி அருண் (தமிழ் சினிமா டாட் கோம்) திருந்துவதாக தெரியவில்லை. நேற்றுவரை அவருடைய விளம்பர பின்னூட்டம் வந்துக் கொண்டே இருந்தது. சொல்லியும் கேட்காத இவர்களை என்னதான் திட்டுவது என்றே தெரியவில்லை.
****

இவள் என்ன கண்ணகியோ?
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிகிறாள்
மானமுள்ள தீக்குச்சி. -அன்புடன் மடற்குழுமத்தில் சங்கர் எழுதியது.
******

சமீபத்தில் முடிவிலான் எழுத்துக்கள் பக்கத்தில் படித்த அனந்தனின் சிறுகதை கவரும் வண்ணம் இருந்தது. வினாக்களோடு சில கனாக்கள் எனும் அக்கதையில் வரும் ஒரு உரையாடல். நல்ல நகைச்சுவை.

"மறவ், இங்கே பாரேன். இந்த போட்டோல இருப்பது யாருன்னு சொல்லு,"என்றாள்.

வழியில் செல்லும் ஓணானை மடியில் கட்டாமல் விட மாட்டாள் போலிருக்கே. அசடாய் சிரித்துக் கொண்டு,

"உங்கப்பாவோட சிறு வயது போட்டோவா? நல்லா இருக்காரு"

"ஷீட்... கெக்கபுக்க கெக்கபுக்க"சிரித்தாள்
.
*******

சமீபத்தில் , 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை' எனும் கண்ணதாசன் பாடலைக் கேட்டேன். அதில் வரும் சில வரிகள்:

முதல் வரி:
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை; மனிதன் மாறிவிட்டான்!

அடுத்த வரி:
கையளவுதானே இதயம் வைத்தான்
கடல்போல அதில் ஆசை வைத்தான்
மெய்யும் பொய்யும் கலந்துவைத்தான் - அதில்
மானிடர் தர்மத்தை மறைத்து வைத்தான் - ஏனோ
மனிதன் மாறவில்லை - அவன்
மயக்கம் தீரவில்லை

மனிதன் மாறிவிட்டானா? மாறவில்லையா?
மாறியும் இருக்கிறான் மாறாமலும் இருக்கிறானா?

24 comments:

ஆயில்யன் said...

//புத்தகங்கள் எக்கச் செக்கமாக சேர்ந்துவிட்டது//

வருத்தமே படாம கூரியர்ல அனுப்பி வையுங்க நான் கரீக்டா போய் ரீசிவ் பண்ணிக்கிறேன்!

யு பி எஸ் நல்ல சர்வீஸ் அதையே கூட செலக்ட் பண்ணுங்க:)

R. பெஞ்சமின் பொன்னையா said...

எத்தனை கேட்டாலும் அந்த சாணியடி சித்தரைப்பற்றி மாத்திரம் சொல்லமாடேங்கறீங்க, சரி இனி நான் கேட்கவும் மாட்டேன்.

//இவ்வருடம் வலைப்பதிவில் விடுபடாமல் தொடர்ந்து எழுதுகிறேன். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பும் அமைந்தது மகிழ்ச்சியை அழிக்கிறது//

தவறை திருத்துங்கள், "அழிக்கிறது" தவறு, "அளிக்கிறது" சரி.
உங்கள் எழுத்துப் பயணம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.

//மனிதன் மாறிவிட்டானா? மாறவில்லையா?
மாறியும் இருக்கிறான் மாறாமலும் இருக்கிறானா?//

மனிதன் மாறியிருக்கிறான்.

நேயம் தொலைத்த பேயாய் மாறியிருக்கிறான்.

எதிர் கால நிம்மதி எனும் கனவில், நிகழ்கால சுகங்களை இழந்தவனாய் மாறியிருக்கிறான்.

கண்களை விற்று ஓவியம் வாங்கும் முட்டாளாய் மாறியிருக்கிறான்.

கடவுள், கடவுள் என்று கதறுவதுதான் கண்ணில் தெரியும் ஆன்மீகம் எனக் கருதி பாசாங்குப் பிராணியாய் மாறியிருக்கிறான்.

சுயநலம் எனும் கூட்டுக்குள் சுருங்கிய புழுவாய் மாறியிருக்கிறான்.

இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறது, அப்புறம் நீங்கள் "இது பின்னூட்டம் தானய்யா, உன்னை பதிவா எழுதச் சொன்னாங்க" னு திட்டுவீங்க, இப்போதைக்கு இது போதும்.

Thamiz Priyan said...

நல்லா எழுதுறப்பா கொசுறு..:)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//புத்தகங்கள் எக்கச் செக்கமாக சேர்ந்துவிட்டது//
வருத்தமே படாம கூரியர்ல அனுப்பி வையுங்க நான் கரீக்டா போய் ரீசிவ் பண்ணிக்கிறேன்!
யு பி எஸ் நல்ல சர்வீஸ் அதையே கூட செலக்ட் பண்ணுங்க:)///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே..
அப்படியே ஈபோ வெள்ளைக் காப்பி ரெண்டு பாக்கெட் பார்சலோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கோவி.கண்ணன் said...

//ஞாயிற்றுக் கிழமை 14/12/2008 திரு.கோவி அவர்கள் சிகை அலங்காரம் செய்துள்ளார் மற்றும் வீட்டில் முருங்கைக்காய் சாம்பார் அவரே சமைத்துள்ளார். ரம்பா வீட்டில் நாய் குட்டி வாங்கிய செய்திகளையெல்லாம் நாளிகையில் போடுகிறார்கள்.//

ரம்பா வீட்டு நாய்குட்டியும் நானும் ஒன்றா ?

:) நடத்துங்க !

goma said...

vikki
enna aacchhuu....vikki?

Athisha said...

கலகல கலக்கல்

RAHAWAJ said...

நல்லா இருக்கு விக்னேஷ், சும்மா கலக்குறிங்க, வரும் வருடம் இன்னும் எழுதிட வாழ்த்துக்கள்

RAHAWAJ said...

அந்த சாணியடி சித்தரை பற்றி சொன்னால் நல்லா இருக்கும் அவர் உங்களுக்கு மட்டும் தான் சொல்வாரா என்ன

வெங்கட்ராமன் said...

ஆனால் சில சமயங்களில் புத்தகக் கடை பக்கம் போகும் வேலைகளில் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எதையாவது தேடி பிடித்து வாங்கிவிடுகிறேன்.

பர்சையோ அல்லது கையயோ வீட்டில் வைத்து விட்டு செல்லவும்

blakdljds said...

- கொசுறு கலக்கிட்டிங்க விக்கி..
- சரி யாரது சாணியடி சித்தர் எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லுங்க..
'இவ்வருடம் வலைப்பதிவில் விடுபடாமல் தொடர்ந்து எழுதுகிறேன். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பும் அமைந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது'
- முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்..
தொடருவேன்

விஜய்கோபால்சாமி said...

@ பெஞ்சமின் பொன்னையா

சாணியடி சித்தர் யாரென்று எனக்குத் தெரியும். சாணியடிச் சித்தரும் வலைப்பதிவு எழுதுகிறார். விக்கியின் மனம் புண்படும்படி அவர் ஒரு செயலைச் செய்தும், அவரைப் பற்றி உயர்வாகவே எழுதி வருகிறார். பாராட்டுக்கள் விக்கி. உன் அனுமதி இல்லாமல் நான் ரகசியத்தை வெளியிட மாட்டேன். போதுமா. விஷயம் நமக்குள் இருக்கட்டும்.

விஜய்கோபால்சாமி said...

சாணியடிச் சித்தரைப் பற்றிக் கேட்டிருந்த அனைவரும் நான் பெஞ்சமின் அவர்களுக்கு எழுதிய பின்னூட்டத்தைப் பார்க்கவும்.

Anonymous said...

//ஆயில்யன் said...

//புத்தகங்கள் எக்கச் செக்கமாக சேர்ந்துவிட்டது//

வருத்தமே படாம கூரியர்ல அனுப்பி வையுங்க நான் கரீக்டா போய் ரீசிவ் பண்ணிக்கிறேன்!

யு பி எஸ் நல்ல சர்வீஸ் அதையே கூட செலக்ட் பண்ணுங்க:)//

தபால்லயே அனுப்புப்பா. எங்கூரு போஸ்டாபீசுக்குப் போயி நானே வாங்கிகிறேன்.

சாணியடிச்சித்தர் எனக்குத்தெரிஞ்சவரா?

சென்ஷி said...

//ஞாயிற்றுக் கிழமை 14/12/2008 திரு.கோவி அவர்கள் சிகை அலங்காரம் செய்துள்ளார் மற்றும் வீட்டில் முருங்கைக்காய் சாம்பார் அவரே சமைத்துள்ளார். ரம்பா வீட்டில் நாய் குட்டி வாங்கிய செய்திகளையெல்லாம் நாளிகையில் போடுகிறார்கள். கோவியாரை பற்றிய இச்செய்தி மிகையில்லை என்றே கருதுகிறேன்.//

ஆனாலும் இது ரொம்ப யோசிக்க வச்சிடுச்சு :-))))

சி தயாளன் said...

கொசுறு புதன் கிழமைதான் வருமா..? அவிய வெள்ளிக்கிழமை வருதே..?

ஹேமா said...

விக்கி,வருட முடிவில் புதிய வருடத்தின் தொடக்கத்தில் கொசுறாய் எல்லாவற்றையும் மறக்காமல் நினைவு படுத்திப் பார்க்கிறீர்கள்.
இன்னும் இன்னும் எழுதுங்கள்.
வாசிக்கக் காத்திருந்தபடி வாழ்த்துகிறேன்.

மனதைத் திருத்தி மனதை மாற்றும்வரை மனிதன் திருந்த வாய்ப்பே இல்லை.

VG said...

me too wan ipoh white coffee. sollunga vicky eppo polam nu...

அகரம் அமுதா said...

/////கையளவுதானே இதயம் வைத்தான்
கடல்போல அதில் ஆசை வைத்தான்
மெய்யும் பொய்யும் கலந்துவைத்தான் - அதில்
மானிடர் தர்மத்தை மறைத்து வைத்தான் - ஏனோ
மனிதன் மாறவில்லை - அவன்
மயக்கம் தீரவில்லை

மனிதன் மாறிவிட்டானா? மாறவில்லையா?
மாறியும் இருக்கிறான் மாறாமலும் இருக்கிறானா?/////


அதாவது மனிதன் தன் மனிதத்தன்மையிலிருந்து மாறிவிட்டான். அப்படி மாறிய நிலையிலிருந்து மீண்டும் மனித நிலைக்கு மாறவில்லை என்பதாம்.

சாணியடி சித்தர் வாழ்க!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆயில்யன்

வருகைக்கு நன்றி... நான் படிக்கும் புத்தகங்களை படிக்க உங்களுக்கு வயது போதாது :P

@ பெஞ்சமின் பொன்னையா

வருகைக்கு நன்றி.. உங்கள் நீளமாக கருத்துக்கும் நன்றி... பிழையை திருத்திவிட்டேன்... சாணியடி சித்தர் தம்மை வெளியே காட்டிக் கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறார்...

@ தமிழ் பிரியன்

வருகைக்கு நன்றி... உங்களுக்கும் ஆயியனுக்கு சொன்ன பதில்தான் :P

@ கோவி.கண்ணன்

இல்லையே... யார் அப்படி சொன்னது.. சொல்லுங்க டரியல் பண்ணிடுவோம்...

@ கோமா

வருகைக்கு நன்றி.. எனக்கு ஒன்னும் ஆகலையே...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அதிஷா

நன்றி..

@ ஜவஹர்

நன்றி.. நீங்களும் தொடர்ந்து படிங்க... சாணியடி சித்தரை பற்றி வேறொரு நாள் சொல்கிறேன்...

@ வெங்கட்ராமன்

முதலாவது சொன்னது ஓகே... இரண்டாவதாக சொன்னதுக்கு கண்டனங்கள்... வருகைக்கு நன்றி...

@ அஷ்வினி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... உங்களுக்கும் சாணியடி சித்தரை தெரியனுமா...

@ வியஜகோபால்சாமி

சித்தப்பு நல்லா பண்றிங்களே அரசியலு... வருகைக்கு நன்றிங்கோ...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வடகரை வேலன்

அண்ணே உங்களுக்கும் ஆயில்யனுக்கு சொன்ன பதில் தான் :P உங்களுக்கும் சாணியடி சித்தர பத்தி தெரியனுமா.... வருகைக்கு நன்றி...

@ சென்ஷி

வருகைக்கு நன்றி... என்னனு யோசிக்க வச்சிடுச்சி...

@ டொன் லீ

வருகைக்கு நன்றி.. கொசுறு நேரங்கெட்ட நேரத்திலும் வருமே...

@ ஹேமா

வருகைக்கு நன்றி...

@ விஜி

வருகைக்கு நன்றி... வாங்க எப்ப வேணுனாலும் போகலாமே...

@ அகரம் அமுதா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

goma said...

சாணியடிச் சித்தருக்கு என் பதில்,
என் பதிவில்

http://valluvam-rohini.blogspot.com/2008/12/blog-post_22.html#links

A N A N T H E N said...

//சமீபத்தில் முடிவிலான் எழுத்துக்கள் பக்கத்தில் படித்த அனந்தனின் சிறுகதை கவரும் வண்ணம் இருந்தது. //

இதை இன்னிக்குத்தான் படிச்சேன்.. ரொம்ப நன்றி உங்க ஊக்கத்துக்கு