Monday, December 22, 2008

சாண்டில்யனின் - விலை ராணி

நூல்: விலை ராணி
ஆசிரியர்: சாண்டில்யன்

நயம்: சரித்திர நாவல்
வெளியீடு: வானதி பதிப்பகம்

சந்திரகுப்த மௌரியரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நாவல் விலை ராணி. நாவலின் பெரும்பகுதி மௌரிய பேரரசின் விரிவாக்கத்திற்காக சந்திரகுப்தன் மெற்கொண்ட போர் காலகட்டத்தில் கதை நகர்த்தப்படுகிறது. சாண்டில்யனின் மற்ற நாவல்களை காட்டினும் இந்நாவலில் அவரின் எழுத்து நடை முற்றிலும் பல வேறுபாடுகளைக் கொண்டு அமைந்துள்ளது. தேக்கம் இல்லாத விறுவிறுப்பான நடை. அடுத்தடுத்த கட்டங்களுக்கு சட்டென பாய்ந்து செல்லும் முறையும் படிப்பவரின் ஆவலை ஆட்கொள்கிறது.

மன்னன் மகள் நாவலில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திர முறையிலான போர் தந்திரங்கள் பரவலாக விவரிக்கப்பட்டிருக்கும். விலை ராணியில் அர்த்த சாஸ்திரியான சாணக்கியரைப் பற்றிய வரலாறும் இணைக்கப்பட்டிருப்பது கதைக்கு பெரும் பலம்.

கிரேக்க சாம்ராஜ்யாதிபதி அலேக்செண்டரால் விட்டுச்செல்லப்பட்ட பாரத நாட்டினை கண்முன் கொண்டு வரும் யுக்தியும் மிகச் சிறப்பு. வீரகுப்தன், விலைராணி பிரபாவதி தேவி, ஆண்டரி போன்ற கற்பனை கதாபாத்திரங்கள் நாவலுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

விலை ராணி எதனால் உருவாகிறாள்? தட்சஷீலத்தில் பெண்களை விற்பனை செய்யும் சந்தை ஒன்று அக்காலகட்டத்தில் இருந்ததிற்கான சரித்திர கூறுகள் ஊண்டு. அதை மக்களிடம் தெரிவிப்பதையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் செயல்பட்டிருக்கிறார். அப்படி விற்பனை செய்யப்படும் பெண்களை பல நாட்டவரும் வாங்கிச் செல்கிறார்கள். வாங்கிச் செல்லப்படும் பெண்கள் அடிமைகளாகவும், மனைவியாகவும் உரிமையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசியல் நோக்கத்திற்காக திருமணச் சந்தையில் தன்னை விற்பனை பொருளாக்கிக் கொள்கிறாள் விலை ராணி. இக்கதையில் வீரகுப்தனும், சந்திரகுப்தனும் நாயகர்களாக காட்டப்படுகிறார்கள். ஆனால் அதன் பின்னனியில் பெரும் தூண்டுகோளாக செயல்படுகிறார் சாணக்கியர்.

பாடலீபுத்ர நாட்டின் மீது கொள்ளும் படையெடுப்பே இந்நாவலின் உச்சகட்டமாக அமைகிறது. அது போக சாணக்கியரின் சபதம் சுய இலாபத்தின் பேரில் அமைந்துவிடுவதாகவும் எண்ணச் செய்கிறது. ஆபத்து சூழ்ந்த வேளையிலும் விலை ராணியோடு காம இச்சை கொள்வதை போல் சித்தரிக்கப்படும் வீரகுப்தனின் போக்கு அதிகபடியானதே.

காதல், நட்பு, சகோதர பாசம், அரச விசுவாசம், சாணக்கிய தந்திரம் என பலவற்றையும் கொண்டு இந்நாவல் அலசப்பட்டிருக்கிறது. மௌரிய பேரரசின் வெற்றிக்கு சாணக்கிய தந்திரமே வித்தாக அமைந்துள்ளது என்பதை ஆசிரியர் முன்மொழிகிறார். இந்நாவல் சந்திரகுப்த மௌரியரின் இளமை கால வாழ்க்கையை அறியாதவர்களுக்கு அதை முழுமையாக உணர வைக்கும்.

12 comments:

A N A N T H E N said...

விமர்சனம் நல்லாயிருக்கு...

இராம்/Raam said...

விக்கி,

சாண்டில்யனின் இராஜதிலகம் படிக்க பரிந்துரைக்கிறேன். மைவிழிசெல்வி உங்களை ஆள்கொள்வளாக... :))

பாபு said...

நெட்-இல் படிக்க கிடைக்குமா??

நட்புடன் ஜமால் said...

சரித்திர கதைகளை படிப்பதே ஒரு கலை தான்.

அதை அழகாகவும் விமர்சித்துள்ளீர்கள்

RAHAWAJ said...

நல்ல விமர்சனம், ஆனால் தன வம்சத்து அரசன் மாக மந்திரி ராட்சசன் பற்றி குறிப்பிடாதது சரி இல்லை என தொன்றுகிறது.அவனுடைய பாத்திரம் மிக அற்ப்புதமான பாத்திரமாக ஆசிரியர் கான்ப்பித்திருப்பார் சரியா விக்கி

RAMASUBRAMANIA SHARMA said...

ONE OF THE GREAT WRITERS OF TAMIL HISTORICAL STORIES...CHANDILYAN...JEYABERIGAI, YAVANA RANI, RAJA THILAKAM, JALA DHEEBAM, KADAL PURA, VIJAYA MAHADEVI, KADAL RANI...ETC BEUTIFUL ORATER OF HIS HEROINS... TO WREAD AND TO PRESERVE IN OUR LIBARARY..."WILL GET ALL HIS BOOKS IN "VANATHI PATHIPPAGAM"...

VG said...

Butagathin talaipe oru maatri irukkirathu... :))

nalla vimarsanam...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனந்தன்

நன்றி நண்பரே...

@ ராம்

கண்டிப்பாக படிக்கிறேன் தோழர்...

@ பாபு

நெட்டில் கி்டைக்குமா என தெரியவில்லை.. புத்தகமாக வாங்கி சேமிக்கலாமே... வருகைக்கு நன்றி...

@ அதிரை ஜமால்

வருகைக்கு நன்றி அன்பரே... நீங்களும் சரித்திர நாவல் படிப்பீர்களா?

@ ஜவஹர்

என்னைக் கவர்ந்த கதாபாத்திரங்களுள் அவரும் ஒருவர்... இந்த விமர்சனம் சுருக்கமாக இருப்பதால் குறிப்பிட தவறினேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ராம சுப்ரமணிய சர்மா

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ விஜி

நன்றி...

santhanam said...

நல்ல இருக்குங்க

Anonymous said...

kadal purakalai vida vilai rani so nice

VIKNESHWARAN ADAKKALAM said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே...