Wednesday, December 03, 2008

யார் இந்தக் கடற்கொள்ளையர்கள்?

கடற்கொள்ளை மற்றும் கப்பல் திருட்டுகள் ஒரு நீண்ட தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில காலமாகக் கடற்கொள்ளை பற்றிய செய்திகள் அதிகரித்து வருகின்றன. சோமாலிய கடற்கொல்லையர்கள் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருபவர்கள். யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்?

சோமாலிய கடற்கொள்ளையர்கள் தங்களுக்கென ஒர் அமைப்பை உருவாக்கிக் கொண்டவர்கள். எப்படி ஒரு வணிக நிறுவனம் செயல்படுகிறதோ, அதைப் போலத் தங்களுக்குள் தலைமைத்துவம், வேலை வகுப்பு, என முறையான செயல்பாடுகளைக் கொண்டு இயங்குபவர்களாவர். இப்போது இவ்வமைப்பானது ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆடென் நீர் நிலையானது 'தூனா' வகை மீன்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதிகளில் மீன் வேட்டைக்காக அதிகமான கப்பல் போக்கு வரத்து உண்டானது. இசைவுயின்றியும், திருட்டுத்தனமாகவும் இப்பகுதிகளில் நுழைந்து மீன் பிடிக்கும் மீனவர்களிடையே 'வரி' வசூலிப்பதற்காக இவ்வமைப்பு தொடங்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

அதிகமாகப் பணம் ஈட்டுதலைக் கண்ட இவர்களுக்கு நாளுக்கு நாள் பேராசை அதிகரித்தது.அவ்வழியே வரும் பல கப்பல்களைக் காரணமின்றி நிறுத்தி வரி வசூக்கத் தொடங்கினார்கள். சுருங்கச் சொன்னால் வழிப் பறி செய்தார்கள் என்றே கூர வேண்டும்.

அவர்களைப் பொருத்தவரையில் கடற்பகுதியானது அவர்களின் சொத்து. அண்மையில் 'நியார்க் டைம்ஸ்' இதழில் வெளியான செய்தியொன்றில் சோமாலிய கடற்கொள்ளைப் படையினர் பல விளக்கங்களை கொடுத்திருந்தார்கள். உலக மக்கள் அவர்கள் மீது கொண்டிருப்பது தவறான கண்ணோட்டம் என்பது அவர்களின் அசைக்க முடியாத கருத்தாகும்.

மேலும் கூறுகையில் ஆடென் கடற்பகுதியின் அமைதிக்காக அவர்கள் செயல்படுவதாகவும், தீவிரவாத அமைப்பு என அவர்களைக் கூறுவது தவறானது என்றும் சாடியுள்ளார்கள். பெரிய கப்பல்களை மட்டும் தடுத்து நிறுத்துவதாகவும், ஏழை மீனவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதும் அவர்களின் வாதம்.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் தங்களைக் கடற்கொள்ளையர்களாகவும் தீவரவாதிகளாகவும் கருதுவதில்லை. மாறாக ஆடென் எனும் அவர்களுடைய நீர் நிலைப்பகுதிகளில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பவர்களும், கடலை மாசு படுத்துபவர்களுமே தீவிரவாதிகளும், கொள்ளையர்களும் எனக் கூறுகிறர்கள்.

சோமாலிய கடற்பகுதியானது உலகினில் மிகவும் ஆபத்தான கடற்பகுதி என அறியப்படுகிறது. உலகத் தீவிரவாதிகளில் சோமாலிய கடற்கொல்லையர்களும் ஒரு பகுதியினர் ஆவார்கள்.பெரும்பாலான தீவிரவாதிகள் அவர்களின் நடவடிக்கையானது சட்டவிரோதமற்றது என்றும், புனிதத் தன்மைக் கொண்டது என்றும், தவறான ஒன்றல்ல என்றும் வாதிடுபவர்களலாகவே இருக்கிறார்கள்.

சிறுபான்மையில் இருக்கும் இவர்கள் பெரும்பான்மையினத்தைக் கடுமையான முறையில் எதிர்க்கிறார்கள். இதற்கான ஒரே ஆய்தம் வன்முறை என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்துவருகிறது.

சரித்திரத்திலும் கடற்கொள்ளையர்களின் தடங்களை நாம் கண்டிருப்போம். 1942-ஆம் ஆண்டு 'கிரணடா' (Granada) அரசு ஸ்பெயின் நாட்டின் கத்தோலிக்க கிருஸ்துவர்களின் கைக்குட்பட்டது. இந்நிகழ்வு கடற்கொள்ளையர்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்தது. ஆண்டலூசியா(Andalusia) மற்றும் கிரணடா (Granada) போன்ற நாடுகளில் வசித்த மூர்(moor) இன இசுலாமியர்கள் விரட்டியடிக்கவும் கொலை செய்யவும்பட்டனர். பாதிப்படைந்த மக்களானவர்கள் பழிவாங்கத் திட்டமிட்டார்கள். அவர்களில் முக்கால் வாசி பேர் கடற்கொள்ளையார்களாக இருந்து பழிவாங்கி வந்தார்கள்.

ரோம் நகர வீழ்ச்சியின் போது கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகரித்திருந்தது பலரும் அறிந்த விடயம்.

அந்நாட்களில் வன்முறையும், கொடுஞ்செயல்களும் நிரம்பி இருந்த பௌஜி(Bougie) கடற்கொள்ளையர்களின் நடுவம் எனக் கூறப்பட்டது. 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்கள் உச்ச நிலையில் இருந்து வந்தது.

கடற்கொள்ளையர்களில் பெரும்பாலானோர் கடற்கரையோரங்களிலும், மீனவக் குடியிருப்பு பகுதிகளிலும் கலந்து வாழ்வார்கள். இதனால் பொதுமக்களின் பார்வையில் அவர்களைக் கண்டறிவது சிரமமே.

சில கொள்ளையர் இனம் மீனவர் வேடமிட்டு செயல்படுவர். கடற்பாதுகாப்புப் படையினரால் கூட இவர்களைக் கண்டறிவதில் பெரும் சிரமம்.

பார்பர்(Barbar) இன கடற்கொள்ளையர்கள் 'ஒடோமேன்' (Otoman) கடற்கொள்ளையர்கள் என்றும் அறியப்படுவார்கள். வணிக கப்பல்களைக் கொள்ளையடிப்பது இவர்களின் முக்கிய இலக்காகும்.

பார்பரின கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்கள் நடந்தது வட ஆப்பிரிக்காவாகும். மெடிட்டேரியன்(Mediterranean), தூமீஸ்( Tumis), டீபாலி(Tripoli), அல்கீரிஸ்(Alqiers), சேலே( Sale) கடற்கரைப் பகுதிகளிலும், மக்ரிபீ(Maghribi) போன்ற துறைமுகப்பகுதிகளிலும் இவர்களுடைய தாக்குதல் இருந்து வந்தது. 'வட ஆப்பிரிக்க' பகுதி ஓடோமேன் (Ottoman) கடற்பகுதி என்றும் அறியப்படும்.

ஐரோப்பாவில் இருந்து ஆசியா நோக்கி வரும் பல கப்பல்கள் அந்நாட்களில் சூறையாடப்படன. வட ஆப்பிரிக்க குடிவாசிகள் அனைவரும் 'பார்பார்' என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்டார்கள்.

ஐரோப்பாவிலிருந்து அழைத்துவரப்படும் கிறித்துவ அடிமைகளை இவர்கள் கடத்திவிடுவார்கள். கடத்தப்பட்ட அடிமைகள் ஆல்கோரியா(Algeria) மற்றும் மெக்ரிபி(Maghribi) போன்ற இடங்களில் உள்ள அடிமைச் சந்தைகளில் வணிகப் பொருட்களாக்கப்படுவார்கள்.

16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் 1 கோடி முதல் 1.25 கோடி ஐரோப்பியர்கள் இவர்களால் கடத்தப்பட்டு அடிமைகளாக்கப்பட்டிருக்கிறார்
கள். இப்படி அடிமைகளாக விற்பனைக்குட்பட்டவர்களில் பெரும்பகுதியினர் இத்தாலி, ஸ்பெயின், போர்த்துகள். பிரான்சு, இங்கிலாந்து, துர்க்கி, அயர்லாந்து, போன்ற நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் இருந்த மீனவர்களென அறியப்படுகிறது.

பல்லாயிரக் கணக்கான கப்பல்கள் 'பார்பர்' கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. பலேனிக்(Balenic) தீவுகளில் இவர்களின் தாக்குதல் அதிகமாக இருந்திருக்கிறது. கடற்கொள்ளையர்கள் சிக்கலால் 'பார்மேண்டோரா' (Formentera) தீவைச் சேர்ந்த பலரும் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்து மாற்று இடங்களுக்கு சென்றுள்ளார்கள்.

1551-ஆம் ஆண்டு 'துர்கேட் ரைசு' (Turget Reis) எனும் கொள்ளையர்கள் 'மெல்டா' (Malta) மற்றும் 'கோசோ' (Gozo) குடியிருப்பு வாசிகளை அடிமைப்படுத்தினர். 5000 முதல் 6000 வரையிலான அக்குடியிருப்புவாசிகள் 'லிப்யாவுக்கு(Libya) அனுப்பப்பட்டனர்.

ஒட்டோமென்(Ottoman) இன கொள்ளையர்களில் அதிகமாக அறியப்பட்டவர்கள் பார்பரோஸா(Barbarosa) சகோதரர்கள் கொள்ளைக் கூட்டமாகும். அல்கீரிஸ்(Algiers) பகுதியினை 16-ஆம் நூற்றாண்டு தொடங்கி 3 நூற்றாண்டுகள் அவர்களின் வசம் வைத்திருந்தார்கள்.

இவர்களைத் தவிர்த்து, துர்கேட் ரைசு(Turgut Reis),கேமல் ரைசு (Kemal Reis), சலிக் ரைசு(Salih Reis), மற்றும் கோகா முனட் ரைசு(Koca Munat Reis) போன்ற கடற்கொள்ளையர்களும் அக்காலத்தில் பேர் பெற்றகளாவர்.

(பி.கு: 30.11.2008 தமிழ் ஓசை களஞ்சிய பகுதியில் வெளிவந்த எனது கட்டுரை.)

16 comments:

ஜெகதீசன் said...

நல்ல கட்டுரை!
//

(பி.கு: 30.11.2008 தமிழ் ஓசை களஞ்சிய பகுதியில் வெளிவந்த எனது கட்டுரை.)
//
வாழ்த்துக்கள்!!

கிஷோர் said...

தலைவரே பின்றீங்க.
வந்தார்கள் வென்றார்கள் ரேஞ்சுக்கு ஒரு வரலாற்று தொடர் எழுதுங்கள்.

R. பெஞ்சமின் பொன்னையா said...

கலக்கிட்டீங்க விக்கி,

கொள்ளையர்கள் யார்னு சொல்லீட்டீங்க, இனி கொள்ளை அடிப்பது எப்படினு சொல்லுங்களேன்.

Anonymous said...

:-) நல்லா இருக்கு கடற்கொள்ளையல்ல..கட்டுரை

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஜெகதீசன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

@ கிஷோர்

நன்றி கிஷோர்... எனக்கு அந்த அளவிற்கு திறமை இருக்கானு தெரியலை... மதன் எழுதிய அந்த சரித்திரம் அருமையாக இருந்துச்சு...

@ பெஞ்சமின் பொன்னையா

நன்றி ஐயா, நான் அனுப்பிய கோப்பு கிடைத்ததா? தற்சமயம் எங்கே இருக்கிறீர்கள்.

@ புனிதா

மிக்க நன்றிங்க...

வெங்கட்ராமன் said...


:-) நல்லா இருக்கு கடற்கொள்ளையல்ல..கட்டுரை


ரிப்பீட்டேய். . . . ..

சென்ஷி said...

நல்ல கட்டுரை!
//

(பி.கு: 30.11.2008 தமிழ் ஓசை களஞ்சிய பகுதியில் வெளிவந்த எனது கட்டுரை.)
//
வாழ்த்துக்கள்!!

அகரம் அமுதா said...

கடற்கொள்ளையைப் பற்றி நல்ல வரலாற்றாய்வு. வாழ்த்துகள் தோழரே

Unknown said...

//பெரிய கப்பல்களை மட்டும் தடுத்து நிறுத்துவதாகவும், ஏழை மீனவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதும் அவர்களின் வாதம்.//

அடிகிறதே அடிக்கிறோம்...ஒரேடியா பெருசாவே அடிச்சிருவோம்னு தான்..

ஹேமா said...

விக்கி,அருமையான கட்டுரை.
சின்னதா த்ரில் படம் ஒன்று பார்க்கும் பிரமை.வசனக் கோர்வை அமைப்பு அருமை விக்கி.இன்னும் எழுதுங்கள்.

Kalaiyarasan said...

நல்ல கட்டுரை, பல தகவல்களை தந்து எம்மை ரசிக்க வைத்துள்ளீர்கள். தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை தர வாழ்த்துகிறேன்.

ஆட்காட்டி said...

நல்லது...

VG said...

shabaaa ... ivalo detail solringa... enaku oru santegam vantuducu.. ungaluku epadi itellam teriyuthu..ninga thaan antha group ooda leader uh??

ahahahahahahhaha toppi toppi.. :P

A N A N T H E N said...

ஆய்வுக்கட்டுரை போலவே இருந்தது. மேற்கோள் புத்தகங்களையும் பட்டியல் இட்டிருக்கலாமே? ஆர்வம் உள்ளவர்கள் விரிவாகத் தெரிந்துக் கொள்ள. பல வரலாற்று செய்திகளைக் கரைத்து குடித்து இருப்பீங்க போல, அருமை

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வெங்கட்ராமன்

நீங்க ரிப்பீட்டு போடுங்களா? அவ்வ்வ் நம்ப முடியவில்லை இல்லை இல்லை...

@ சென்ஷி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சென்ஷி...

@ அகரம் அமுதா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

@ உஷா

கடற்கொள்ளையர்களை மிக சிறப்பாக புரிந்து வைத்திருப்பீர்கள் போல :P வருகைக்கு நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஹேமா

வருகைக்கு நன்றி... உங்களை போன்றோர் அதரவின் பேரில் நிச்சயம் இன்னும் எழுதுகிறேன். தொடர்ந்து வருக...

@ கலையரசன்

உங்கள் கட்டுரைகளுக்கு ரசிகனாகிவிட்டேன். கலக்குறிங்க... வருகைக்கு நன்றி..

@ ஆட்காட்டி

அண்ணாச்சி... உங்களுக்கு என் மேல என்ன கொலைவெறி... நீங்க சொல்லுரது எதுவுமே சரியா புரியமாட்டுது... தனிமடலில் பேச விரும்புகிறேன்... வருகைக்கு நன்றி...

@ விஜி

நக்கலு... நல்லது.... இருக்கட்டும்

@ ஆனந்தன்

வருகைக்கு நன்றி... எனக்கு பிடித்தவற்றை எழுதுகிறேன் அவ்வளவே...