விளக்கேற்றும் நேரம் தனை
விடியல் பொழுதென சாபம்
பெற்ற இனம்.
இவர்களுக்கு
விளக்கணைக்க
மட்டுமே
பட்டா போட்டுக்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
உணர்ச்சிகளை
மூட்டைக் கட்டி
ஊருக்கு வெளியே எறிந்தவர்கள்.
அடுப்பெறிக்க
உடல்தனை விறகாக்கியவர்கள்.
உறவுகளுக்கு
துறவு பூண்ட கண்ணீர் மலர்கள்.
இந்த மலர்கள்
இரசிக்கப்படுபவையன்று.
துளி நேர இச்சைக்கு
கசக்கப்படுபவை.
எச்சில் உமிழ்ந்து
தூரமாய் தூக்கியெறியபடுபவை.
இரவு
இவர்களின் உற்ற தோழன்.
இந்நிலவுகள்
தினம் தினம்
தேய்வதை கண்டு
அது கண்ணீர் வடிக்கும்.
இவர்களுக்கு
வளர்பிறை வேண்டி
தவம் இருக்கும்.
உடல் ரணங்களை
பூட்டி வைத்து
மனதை ரணமாக்கிக்
கொண்ட மானுட பிறவிகள்.
அவனுக்கு
பகலில் அவள் தேவதாசி
இரவில் அவள் தேவதை.
தவறாய் போன இரவொன்றில்
தப்பி பிறந்த பிள்ளையொன்று
தாகம் தீர்க்க அழுகின்றது.
அவன் காமம் தீர்க்க
உடல் நாடினான்
அவள் காசு சேர்க்க
கட்டில் தேடினாள்.
மீண்டும் மீண்டும்
சேற்றில் விழுந்து
பிள்ளையின் பசியாற்றினாள்.
பூட்டி வைத்து
மனதை ரணமாக்கிக்
கொண்ட மானுட பிறவிகள்.
அவனுக்கு
பகலில் அவள் தேவதாசி
இரவில் அவள் தேவதை.
தவறாய் போன இரவொன்றில்
தப்பி பிறந்த பிள்ளையொன்று
தாகம் தீர்க்க அழுகின்றது.
அவன் காமம் தீர்க்க
உடல் நாடினான்
அவள் காசு சேர்க்க
கட்டில் தேடினாள்.
மீண்டும் மீண்டும்
சேற்றில் விழுந்து
பிள்ளையின் பசியாற்றினாள்.
13 comments:
//அவன் காமம் தீர்க்க
உடல் நாடினான்
அவள் காசு சேர்க்க
கட்டில் தேடினாள்.
மீண்டும் மீண்டும்
சேற்றில் விழுந்து
பிள்ளையின் பசியாற்றினாள்.//
எக்ஸ்லண்ட் விக்கி.
விக்கி கவிதை கலைஞர் கவிதைக்கு இகுவலா இருக்கு
சூப்பரு
Good one!
அற்புதமான விவரிப்பு...
எக்ஸ்லண்ட் விக்கி.
//இந்த மலர்கள்
இரசிக்கப்படுபவையன்று.
துளி நேர இச்சைக்கு
கசக்கப்படுபவை.//
சூப்பர்...
//உடல் ரணங்களை
பூட்டி வைத்து
மனதை ரணமாக்கிக்
கொண்ட மானுட பிறவிகள்.//
வேதனை கலந்த வரி...இரசிக்க வைக்கிறது.
மேலும் தொடர வாழ்த்துகள்.
//அடுப்பெறிக்க
உடல்தனை விறகாக்கியவர்கள்.
உறவுகளுக்கு
துறவு பூண்ட கண்ணீர் மலர்கள்.//
//பகலில் அவள் தேவதாசி
இரவில் அவள் தேவதை//
//தவறாய் போன இரவொன்றில்
தப்பி பிறந்த பிள்ளையொன்று
தாகம் தீர்க்க அழுகின்றது.
//
// மீண்டும் மீண்டும்
சேற்றில் விழுந்து
பிள்ளையின் பசியாற்றினாள்.
//
விக்கி... வியக்க வைத்து விட்டாய் ! ரொம்ப நல்லா இருக்கு !
மனதை உழுது
தொடர்ந்து கவிதைகள் பல எழுது !
கலக்கலான கவிதை வரிகள் விக்கி :)
விக்கி அருமை.மனதிற்குள் கற்கள் சேர்த்து பாரமாய் இறுக்கியது கவிதை.அதுவும் கடைசிப் பந்தி மனதை உலுக்கிவிட்ட்து.
விக்கி என் பதிவிலும்"அவள்"என்னும் தலைப்பிட்டு எழுதியிருக்கிறேன்.
@வடகரை வேலன்
நன்றி...
@அதிஷா
நன்றி அதிஷா
@இனியவள் புனிதா
thank you..
@தமிழ் பிரியன்
அற்புதமான பாராட்டுக்கு நன்றி அண்ணே...
@மலர்விழி
நன்றி
@சேவியர்
மிக்க நன்றி அண்ணா. மிக மகிழ்ந்தேன்.
@சென்ஷி
நன்றி.
@ ஹேமா
நன்றி ஹேமா நிச்சயம் காண்கிறேன்.
இந்த கவிதைக்கு முதல் பின்னூட்டம் என்னுடையதுதான் (சாட்டில் சொன்னது) ஆனால் பதிவில் பின்னூட்டமிடவில்லை.
அங்கே சொன்னதுதான் இங்கேயும் சொல்கிறேன். சாதரணமாக கவிதை எழுதுபவர்கள் காதலைப் பற்றித்தான் அதிகமாய் எழுதுவார்கள், அல்லது இயற்கையை குறித்து எழுதுவார்கள். ஆனால் நீ ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உண்மை நிலையைக் குறித்து எழுதியுள்ளாய். எழுத்து ஒரு கூர்மையான ஆயுதம் , அதிலும் கவிதை மிக வலிமையான ஆயுதம் அதில் சமூக அவலங்களை பதிவது மிகவும் உன்னதமான செயல். நேரில் பார்க்கும் போது இதற்காய் உன்னை கட்டியணைத்து பாராட்டுவேன்.
அந்த நன் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
superb!
@ஜோசப்பால்ராஜ்
//எழுத்து ஒரு கூர்மையான ஆயுதம் , அதிலும் கவிதை மிக வலிமையான ஆயுதம்//
ஐ.. இந்த வரியே கவிதை மாதிரி இருக்கே... நன்றி...
@தூயா
நன்றி...
great.. excellent........ no words to describe..
Post a Comment