Tuesday, September 23, 2008

மோனாலிசா ஒரு விபச்சாரி

‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் பெரிதும் துணை புரிகிறது என்றும் சொல்லலாம்.

சிறு வயதில் பல இடங்களில் மோனாலிசா ஓவியத்தைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை தாத்தாவிடம் கேட்டேன். ஏன் பலர் இந்த படத்தை விரும்புகிறார்கள் என்று. அது புகழ் பெற்ற ஓவியம் என்றார். ஏன் புகழ் பெற்றது என்றேன். புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் சிரிப்பிற்கு இன்று வரை அர்த்தம் சொல்ல முடியவில்லை. அவள் சிரிப்பு துக்கச் சிரிப்பா அல்லது மகிழ்ச்சியின் சாயலா என நிச்சய படுத்திச் சொல்வது சிரமம் என்றார்.

அதன் பின் மோனாலிசா ஓவியத்தை எங்கு கண்டாலும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அது பற்றிய விடயங்களை புத்தகத்தில் வந்தாலும் ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தேன். சேகரித்து வைத்தேன். சேகரித்தும் வருகிறேன்.

1506ஆம் ஆண்டு இவ்வோவியம் வரையப்பட்ட நாளில் இருந்து இன்று வரை மேற்கத்திய அறிஞர்கள் இதன் பொருமை பேசுவதை நிறுத்தியதில்லை. ‘டா வின்சி’யின் படைப்புகளை ஆராய்வது மட்டுமின்றி மோனாலிசாவின் சிரிப்பின் அர்த்தத்தையும் ஆராய்ந்தார்கள்.

அந்த சிரிப்பு டா வின்சியின் யூகமா, அல்லது மோனாலிசாவின் உணர்ச்சியா? அதுமட்டுமின்றி மோனாலிசா ஓவியத்தில் அவளது கண், முடி, கழுத்து என ஆராய்ச்சி தொடர்ந்தது.
ஆராய்ச்சியை கலைஞனின் படைப்போடுவிட்டு வைக்காமல் மேலும் மேலும் சுரண்டினார்கள். இதன் முடிவு ‘டா வின்சி’யின் தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.

யார் இந்த மோனாலிசா? டா வின்சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் சிரித்தபடி வரையப்பட்டிருக்கிறார்? அப்படி சிரித்தபடி வரையபட்டுள்ள ஓவியத்தில் மோனாலிசா யாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? ஓவியரையா இல்லை வேரொருவரையா? இவையாவும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணத்தில் உதித்த கேள்விகள்.

இவற்றுக்கு விடைகாண உடைக்கப்பட்டதே ‘டா வின்சியின்’ தனிப்பட்ட வாழ்க்கை. ஒரு கலைஞனின் தனிபட்ட வாழ்க்கைக்கும் அவனது படைப்புகளுக்கும் தொடர்பிருக்குமா? இப்படியும் ஒரு கேள்வி எழுந்தது.
இக்கேள்விகளுக்கு ஆராய்சியாளர்களின் பதில் என்ன?

வாசாரி என்பவர் ஒரு வாழ்க்கை வரலாற்று எழுத்தாளர். இவரின் கூற்றின்படி மோனாலிசாவை ஒரு விபச்சாரி எனக் கூறுகிறார். மோனாலிசா மற்றவரின் பார்வைக்கு காட்டபட்டதை போல் ஒழுக்கமானவள் அல்ல என்றும் கூறுகிறார்.

மோனாலிசா தான் புகழ் பெற வேண்டும் என்பதற்காக தன் மானத்தையும் இழக்கத் துணிந்த பெண். அவளது நல்லூழின் காரணமாக அவளின் ஓவியம் புகழ் பெற்றதாகவும் அவளைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதாகவும் கூறுகிறார்.

மோனாலிசா அல்லது மடோனா லிசா ‘ஃப்ரான்சிஸ்கோ டேல் கியோகொண்டோ’ என்பவரின் மனைவியாவாள். அவளது கணவனான ‘கியோகொண்டோ’ இத்தாலி நாட்டின் புகழ் பெற்ற வர்த்தகராவார். மோனாலிசாவின் அழகில் மயங்காதவர்கள் இல்லை. கியோகொண்டேவும் அப்படி மயங்கியவர்களில் ஒருவனாவான்.

கணவனின் செல்வச் செருக்கு மோனாலிசாவை திருப்திபடுத்தவில்லை. அவளது குழந்தையின் இறப்பு அவள் மன நிலையை பெரிதும் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு பிறகு மோனாலிசாவின் வாழ்க்கையில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டது. மோனாலிசாவிற்கு திருமண வாழ்க்கையில் வெறுப்பு உண்டானது. அச்சமயத்தில் அவள் ‘டா வின்சி’யை சந்திக்கிறாள்.

‘டா வின்சி’யின் கலைப் படைப்புகளில் மனம் கவரப்பட்ட மோனாலிச அவரை அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். சந்திப்பு நாளடைவில் காதலாக மலர்கிறது.

24 வயதே நிரம்பிய மோனாலிசாவின் அழகு ‘டா வின்சி’யை அவரது ஓவியத்திற்கு மாடலாக பயன்படுத்திக் கொள்ள தூண்டியது. மோனாலிசாவோ அவளது ஓவியத்தை உலகப் புகழ் பெறும் அளவிற்கு படைப்பதாய் இருந்தால் மட்டும் ஓவிய மாடலாக இருக்க ஒப்புக் கொண்டாள்.

டா வின்சிக்கு இது பழம் நழுவி பாலில் விழுந்ததை போல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. உலகப் புகழ் பெறும் அளவிற்கு வடிக்க வேண்டிய ஓவியத்திற்கு நாட்கள் எடுக்கும். இதன் வழி மோனாலிசாவை நீண்ட நாட்களுக்கு, அவ்வோவியத்தை வரையும் பொருட்டு தன் அருகில் வைத்துக் கொண்டார்.

இக்காலகட்டங்களில் இவர்கள் உடல் அளவிலும் உறவு கொண்டாடினார்கள் என்பது அறிஞர்களின் கருத்து. இத்தகாத உறவை அடுத்தவர் அறிந்துக் கொள்வதில் இருந்து திசைதிருப்ப எண்ணினார்கள். ஓவியத்தின் மாடலாக மட்டுமே மோனாலிசா இருப்பதாக உணர வைத்தார்கள். மோனாலிசாவின் சம்மதத்தின் பொருட்டு ‘டா வின்சி’யும் வேண்டுமென்றே மோனாலிசாவின் ஓவியம் தீட்டும் பணியை தாமதப்படுத்தினார்.

இவர்களின் உறவு ஆறு வருடங்கள் நீடித்ததாகவும். அவ்வாறு வருடமும் மோனாலிசா ‘டா வின்சி’யின் கள்ளக் காதலியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தாலிய நாட்டு புகழ் பெற்ற நிருபர் ரினா டா ஃபிரேண்ஷி. இவர் எழுதிய ‘தி மிஸ்டரி அஃப் மோனாலிசா’ எனும் புத்தகம் இத்தாலிய மக்களிடையே பெரும் பரபரப்பை எற்படுத்து வெற்றி கண்டது.

இப்புத்தகத்தை எழுதும் முன்பிருந்து டா வின்சியின் தாயாரான கர்த்தரினா அவர் கனவில் தோன்றி மறைவாளாம். அவ்வகையில் டா வின்சியை வளர்த்தவிதம், அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் அடிக்கடி பேசுவாளாம்.

சிறு வயது முதல் டா வின்சி ஓவியம் வரைதலில் அதிக ஆர்வம் காட்டினார். இதனால் டா வின்சியின் திறமையை நன்கு வளர்த்து அவருக்கு போதுமான வசதியை செய்ய வெண்டுமென கர்தரினா சபதம் கொண்டாள். தாயாரின் விருப்பப்படியே டா வின்சியும் நல்ல திறமைசாளியாக வளர்ந்தார்.

கனவை மட்டும் அடிப்படையாக கொள்ளாமல், டா வின்சியின் வாழ்க்கை வரலாற்றையும் ரினா ஆராய்ச்சி செய்தார். கார்த்தரினா அவள் வாழ்வில் பெரும் துயரை கடந்து வந்திருக்கிறாள் என குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு காரணம் என்ன? டா வின்சி முறை தவறி பிறந்த குழந்தை என சொல்லப்படுகிறது. டா வின்சி, கார்த்தரினா மற்றும் ஃபியெரோ டா வின்சி எனும் ஆடவருக்கும் ஏற்பட்ட கள்ளக் காதலின் வித்து என்பது ரினாவின் கருத்து.

குழந்தை பிறந்த பிறகு ஃபியெரோ டா வின்சி குடும்ப பொருப்பை ஏற்க மறுத்து கர்த்தரினாவை விட்டு சென்றார். டா வின்சியை வளர்க்கும் முழு பொருப்பும் கர்த்தரினாவின் தலையில் விழுந்தது.

டா வின்சியின் அயராத முயர்சியின் பெயரில் ஃப்லோரென்கா விரோச்சியோ அரங்கில் நுழைந்தார். பல தரமான படைப்புகளை உருவாக்கி நல்ல புகழ் பெற்றார்.

டா வின்சி தன் நிலை அறிந்தவர். குடும்ப வரலாறும் அவள் தாய் பட்ட சுமைகளையும் தெரிந்து நல்ல மகனாக இருந்தவர். அவரது உலக தரமான படைப்புகளுக்கு அவரது தாயாரே முன்னோடியாக விளங்கினார்.

டா வின்சி தன் தாயின் மீது வைத்திருந்த மதிப்பின் அடையாளமாக தலை சிறந்த ஓவியத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அதற்காக பல வருடங்கள் செலவழித்தார். திருப்திகரமாக அதைச் செய்து முடித்த பின் மோனாலிசா என பெயரிட்டார் என்பது ரினாவின் குறிப்பு.

டா வின்சி அவ்வோவியத்தை தனது தாயாருக்கு பரிசளித்தார். அவ்வோவியம் என்றொன்றும் அவள் புகழ் பேசும் என்றும் கூறினார். ‘மோனாலிசாவின் மெல்லிய புன்னகை தாய்மையின் அறிகுறியாகவும், கலைஞர்கள் கலை நுட்பம் எனவும் டா வின்சி கூறுகிறார் என ரினா கருத்துரைக்கிறார்.

தாயாருக்கான ஓவியத்தை தன் தாயின் சொந்த பெயரில் குறிப்பிடாமல் போனதன் நோக்கம் என்ன என்பது என் கேள்வி?

1987லாம் ஆண்டு டாக்டர் லில்லியன் எனும் கணினி நிபுணர் மோனாலிசா ஒரு கற்பனை வடிவம் என தனதாராய்ச்சியில் கூறினார். மோனாலிசா என ‘டா வின்சி’ தன்னைத் தானே குறிப்பிடுகிறார் என்பது இவரது கூற்று. டா வின்சி தன்னை ஒரு பெண்ணாக கற்பனை செய்து வரைந்து படைத்திருப்பதாகவும் விளக்கம் கூறுகிறார்.

கணினி நுட்பத்தினூடே அதை உறுதிபடுத்தினார். மோனாலிசா ஓவியத்தை பாதியாகவும் டா வின்சியின் ஓவியத்தை பாதியாகவும் வைத்து அதன் ஒற்றுமமகளை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

இருவரின் முக ஒற்றுமையும் ஒன்றோடொன்று பொருந்துகிறது. மூக்கின் வடிவமும் உதட்டின் வடிவமும் ஒன்றுகிறது. டாக்டர் லில்லியன் ஒற்றுமைபடுத்த முயன்றது ஒரு இளம் பெண்ணின் முகவடிவையும் சுருகங்களும் ரோமங்களும் நிறைந்த ஓர் ஆடவனின் முகத்தையும்.

இருப்பினும் அவர்களின் பார்வை உட்பட மற்ற அம்சங்களும் ஒற்றுமையோடு அமைவது ஆச்சரிய மிக்க விடயம் அல்லவா? மேலும் அவர் குறிப்பிடுகையில் டா வின்சி மீசையும் தாடியும் இல்லாமல் மோனாவிசசவின் உருவ அமைப்பைப் பெறுவார் என்றும் சிறு உதடும், அகன்ற நெற்றியின் அளவும் வைத்துப் பார்க்கையில் மோனாலிசா ஒரு ஆண் உருவத்தை ஒத்து இருக்கிறது எனவும் கருத்திடுகிறார். அந்த ஆண் உருவம் நிச்சயமாய் டா வின்சி தான் என்றும் அடித்துக் கூறுகிறார். இதனையடுத்து மோனாலிசாவின் தலை முடி ஒரு பெண்ணிற்கான அழகை குறிப்பிடும் வகையில் இல்லையெனவும் கூறுகிறார்.

லேரி பேரி என்பவருக்குள் ஒரு கேள்வி எழுந்தது? அது மோனாலிசாவின் கண்களை பற்றிய கேள்வி. அதற்கான விடையை தேடுவதில் லேரி முனைப்புக் கொண்டார். பல மோனாவிசாவின் ஓவியங்களையும் வைத்துப் பார்த்ததில் எதிலும் ஒரு ஒற்றுமை இன்மையைக் கண்டார். அதன் ஆர்வம் மோலோங்க ஃபிரான்ஸ் நாட்டிற்குக் கிளம்பினார். பாரிஸ் நகரில் இருக்கும் பொருட்காட்டியகத்தின் பொறுப்பாளரின் ஒப்புதலோடு லேரி, மோனாலிசாவின் ஓவியத்தை நெருங்க அனுமதிக்கப்பட்டார். அதில் மோனாலிசா ஓவியத்தின் கண்களின் கரு விழிகள் இரண்டும் பழுப்பு நிறத்தில் இருக்கக் கண்டார்.

அடுத்ததாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஃப்பிபோ கூறுகையில் மோனனலிசா இயல்பாக பல் இளித்தபடி இருப்பவள் எனவும் ஓவியத்தில் மௌனமான சிரிப்பில் இருப்பது அவள் வாழ்க்கைத் துயரத்தை தெரியப்படுத்துகிரது எனவும் குறிப்பிடுகிறார். இவரது கூற்றுகள் சரியான விளக்க முறை இன்றியும் சற்று குழப்பும் வகையிலும் காணப்படுகிறது. ஆனால் இவது இறுதியான கருத்து ஓவியத்தில் காண்பது மோனாலிசாவின் துயரச் சிரிப்பே என்பதாகும்.

இன்று வரை மோனாலிசா என்பவள் நிஜமா அல்லது நிழலா என்பது நமக்குள் கேள்விக்குறியே. ஒரு கலைஞனின் வெற்றி இரசிகனை சிந்திக்கத் தூண்டச் செய்தல். அவ்வகையில் லியோநார்டோ வின்சியின் புகழ் இன்றளவில் ஓங்கியே விளங்குகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வனும் இந்த கூற்றுக்கு பொருந்தும். நந்தினி எனும் கதா பாத்திரத்தின் மர்மத்தை இன்றும் கண்டு கொள்ள முயல்கிறோம்.

34 comments:

ஜெகதீசன் said...

நல்ல ஆராய்ச்சி....
:)

ஜியா said...

ச்சே.... ச்சே.. ச்சே.. ச்சே... இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருக்கேன்றான்... அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருக்கேன்றான்.. என்ன ஊர்டா இது???

ஆயில்யன் said...

//கணவனின் செல்வச் செருக்கு மோனாலிசாவை திருப்திபடுத்தவில்லை. அவளது குழந்தையின் இறப்பு அவள் மன நிலையை பெரிதும் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு பிறகு மோனாலிசாவின் வாழ்க்கையில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டது. மோனாலிசாவிற்கு திருமண வாழ்க்கையில் வெறுப்பு உண்டானது.///


இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையிலும் அந்த மெல்லிய புன்னகை ததும்பும் மோனலிசா !

அற்புதம்! :)

ஜியா said...

ரொம்ப அருமையா செய்திகளை சேகரிச்சு நல்லதொரு கட்டுரைய கொடுத்திருக்கீங்க விக்கி...

டாவின்ஸி கோட் பத்துன கருத்துக்களையும் இன்னொரு ஆராய்ச்சி செஞ்சு ஒரு கட்டுரையா போடுங்க :))

ஜோசப் பால்ராஜ் said...

அருமையான பதிவு தம்பி, இப் பதிவை எழுதிய விதம் நல்லா இருக்கு. மேலும் இது உங்களது வாசிக்கும் ஆர்வத்தை வெளிக் கொணர்கிறது. ஆழமான வாசிப்புக்குப் பின்னர் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

wow :D

ஜோசப் பால்ராஜ் said...

தம்பி, பொன்னியின் செல்வன்ல வர்ற நந்தினி கதையின் சுவாரசியத்திற்காக சேர்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம் தான். அதை ஆரய்வது வெட்டி வேலை.

தமிழில் உள்ள வரலாற்று நாவல்கள் எல்லாவற்றையும் எடுத்துப்பார்த்தோமானால் இப்படி சுவாரசியத்திற்காக சேர்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்களே கதையில் பெரும் பங்கு வகிக்கும், உண்மை கதாப்பாத்திரங்கள் எல்லாம் முக்கியத்துவம் இல்லாது இருக்கும். இதற்கு உதாரணம் பொன்னியின் செல்வன் நந்தினி, யவன ராணி படைத்தலைவர் இளஞ்செழியன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


எனக்கு தெரிந்து தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவலில் கற்பனை பாத்திரங்களின் கலப்பு இல்லாமல் எழுதப்பட்ட நாவல் பாலகுமரன் எழுதிய உடையார் தான்.

குசும்பன் said...

அருமையான கட்டுரை விக்கி! இதுபோல் பல விசயங்களை எழுதவும்.

குசும்பன் said...

”தனம்” போல் ஏதும் கொள்கையோடு வாழ்ந்தவங்களா மோனாலிசா என்று ஆராய்சியும் செய்யவும்!!!

நன்றி செந்தழல் ரவி
(தனத்தின் கொள்கையை அனைவருக்கும் சொன்னவர்)

Anonymous said...

நல்லதொரு ஆக்கம். பாராட்டுகள்!

Cable சங்கர் said...

நல்ல கட்டுரை.. மோனோலிசா அயிட்டமா???

ரவி said...

இது ஏன் இன்னும் சூடான இடுகைல வரல ??

விஜய் ஆனந்த் said...

நல்ல ஆராய்ச்சி & தகவல்கள்!!!

:-))..

வெண்பூ said...

கலக்கலான கட்டுரை, உலகப்புகழ் பெற்ற விசயத்தைப் பற்றி, அனைத்து நுண்ணிய தகவல்களுடன். பாராட்டுக்கள்.

Anonymous said...

அருமையான கட்டுரை தம்பி. அழகாக, ஆழமாய் எழுதியிருக்கிறாய். !

ARV Loshan said...

அருமையான ஆய்வு.. என்னைப் பொறுத்தவரை சிறு வயதிலிருந்தே இந்த அழகற்ற ஓவியத்தை என் இவ்வளவு தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுகிறார்கள் என்ற கேள்வி எழுவதுண்டு.

//ஒரு கலைஞனின் வெற்றி இரசிகனை சிந்திக்கத் தூண்டச் செய்தல்//

ஆமோதிக்கிறேன்..

http://loshan-loshan.blogspot.com/

Thamiz Priyan said...

நல்ல ஆராய்ச்சி விக்கி! வாழ்த்துக்கள்!

தாய்மொழி said...

உங்கள் மோனலிசா கட்டுரை சிறப்பு மற்றும் அற்புதம். உங்களின் கருத்துக்களுக்கும் நன்றி வணக்கம்.

சென்ஷி said...

அசத்தலான ஆராய்ச்சிக் கட்டுரை நண்பா..! பொறுமையாக அனைத்தையும் தொகுத்த உன் பணி எனக்கு மகிழ்ச்சியுடன் கூடிய வியப்பளிக்கிறது. இது போன்ற செய்திகளை மீண்டும் உன்னிடமிருந்து பெறுவதற்காக காத்திருக்கிறோம்...

சென்ஷி

Anonymous said...

அருமையான பதிவு.

Athisha said...

விக்கி என்னமா ஆராச்சி பண்ணிருக்கீங்க

அடேங்கப்பா

உங்களோட ஆராய்ச்சி கட்டுரைகள் வியக்கவைக்குது

நீங்க ஒரு பெரிய ஆராய்ச்சியாளாரா வர வாழ்த்துக்கள்

___________________________________

விக்கி நீங்க சொன்ன மாதிரியே பின்னூட்டம் போட்டாச்சு

Subash said...

நல்லதொரு சுவாரசியமான அராய்ச்சி.
உங்களுக்கு என்னமாதிரியான phd குடுக்கலாம்???

Anonymous said...

நன்று விக்னேஸ்..
அருமையான ஆய்வு..
ஆராய்ந்து எழுதுவதில் மன்னர் நீர்!

வாழ்த்துகள்...
தொடர்க..வளர்க :))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஜெகதீசன்

மிக்க நன்றி

@ஜி

இது பாரதி கண்ணமா டயலாக்னு ஒரு குறிப்பு போட்டிருங்க நண்பா... மக்கல் கடுப்பாகிட போறாங்க..
மிக்க நன்றி... தகவல் கிடைப்பின் பதிப்பிக்கிறேன்...

@ஆயில்யன்

நன்றி

@ஜோசப்பால்ராஜ்

நன்றி... இருந்தாலும் நந்தினி கதாபாத்திரத்தை பற்றி பேச நல்லா இருக்குங்க...

@துர்கா..

வாங்க... இந்த தளத்தில் முதல் பின்னூட்டம் போல... நன்றியக்கா..

@குசும்பன்

சீரியசா பின்னூட்டம் போடுறாங்களாம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@இனியவள் புனிதா

நன்றி

@கேபில் சங்கர்

அப்படிதான் சொல்லிக்கிறாங்க பாருங்களேன்...

@செந்தழல் ரவி

வந்துட்டு போயிடுச்சு... நீங்கதான் முதல் முறை வரிங்க...

@விஜய் ஆனந்த்

நன்றி தலைவா

@வெண்பூ

நன்றி..

@சேவியர்

நன்றி அண்ணா

@லோசன்

நன்றி நண்பரே

VIKNESHWARAN ADAKKALAM said...

@தமிழ் பிரியன்

வாழ்த்துக்கு நன்றி அண்ணே..

@தாய்மொழி

நன்றி

@சென்ஷி

நன்றி தலைவரே

@தூயா

நன்றி... உங்கள் சமையலை போல..

@அதிஷா

போயாங்ங்ங்...

@சுபாஷ்

நன்றி நண்பா... பட் ஏன் இந்த கொல வெறி...

@மலர்விழி

நன்றி...

கோபிநாத் said...

ரொம்ப லேட்டுங்க நான்..

\\ சென்ஷி said...
அசத்தலான ஆராய்ச்சிக் கட்டுரை நண்பா..! பொறுமையாக அனைத்தையும் தொகுத்த உன் பணி எனக்கு மகிழ்ச்சியுடன் கூடிய வியப்பளிக்கிறது. இது போன்ற செய்திகளை மீண்டும் உன்னிடமிருந்து பெறுவதற்காக காத்திருக்கிறோம்...

சென்ஷி
\\\

ரீப்பிட்டே....;))

tamilraja said...

. ஒரு கலைஞனின் தனிபட்ட வாழ்க்கைக்கும் அவனது படைப்புகளுக்கும் தொடர்பிருக்குமா?
/
/
/இருந்தே தீரும் !

மோனோலிசா said...

இந்த மோனோலிசா ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றும் சொல்லப் படுகிறது என்பதை வாசித்தபின்தான் உயிர் வந்தது.யார் யாரை வச்சிருந்தா நமக்கென்ன?புன்னகை அரசி யாருக்கும் புரியாதவள்தான்

param said...

எப்பவுமே எனக்குள் தோன்றும் எண்ணம்தான்.அழகில்லாத இந்த ஓவியத்துக்கு ஏன் உலகளவில் இத்தனை விளம்பரம் என்று.புதிது புதிதாக நிறைய கதைகளும் உருவாகி பரவியும் வருகின்றன.இது புதிது.

nali said...

ennoda karuthu enna na doctor lilian karuthu padi pathingana liyano oru arputhamana karpanai thiran mikkavar matrum avar oru murai thavari kethrina enbavarku pirantha magan endru kuripida patu ullathu ' nam en ihtai ipadi sinthinka kudathu' oru velai liyano than oru pennaga piranthu irunthal oru velai ipadi oru uruvathudan than iruka mudium endru intha uruvathai karpanai seithu varaithu ulaga padaipugalil ondraga padaithu irukalam allava atahi than thaiku arpanithu irukalam ! avar oru aanaga irunthu irunthalum than thaai meethu pasam kondavar avargalai muzhuvathum purithavar enpathal avarudaya thaayin unarvugalai avaral purinthukolla mudium so avar varaintha ooviam antha penin vazhkayin thunpathilum avaludaya thairiyathai unarthuvathagavum avaludaya avaludaya parvaiyil ethayo sadika vendum endra ennathaum kuripathagaum iurkalam en enndral avarudaya thaai than avaridam saidkavenum ennathai koduthavar ithan karanamaga intha ooviyathai avarukaga avar padithu irukalam... ithu en karuhtu intha thogupai paditha pin enaku thondriya karpanai thavara irupin mannikavum davinsi alavuku karpanai seiya mudiya villai endralum konjam haha

Anonymous said...

well said brother..thz was really superb .....lv it..alda bst for ur actions..keep it up

Anonymous said...

Thanks nanba for this information

VIKNESHWARAN ADAKKALAM said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...