Monday, September 22, 2008

பைத்தியகார வேலை தெரியுமா?


லண்டன் மாநகரில் நடந்த சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவு இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் இம்முடிவு இளைய
சமூகத்தினருக்கு ஒரு மிரட்டலாக அமைந்துள்ளது.

அலுவலக வேலைகள் அதிகமாகத் திணிக்கப்படுபவர்களிடையே அளவிற்கு அதிகமான மனஇறுக்கமும்,உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகரிக்குமாம். இப்பாதிப்பு மற்றவரை காட்டிலும் இளைஞர்களுக்கு இரு மடங்குகள் அதிகமாக இருக்கிறதாம்.

32 வயதிற்குட்பட்ட 1000 பேர்களுக்கிடையிலான இவ்வாராய்ச்சி நியுசிலாந்து
மற்றும் பிரிட்டனில் நடத்தப்பட்டது. அவர்களில் 45 சதவிகிதித்தினர்
வேலைபளுவின் காரணமாக மன இறுக்கத்திற்குள்ளாகி இருப்பதாக 'சைக்கோலாஜிக்கல் மெடிசன்' எனும் மாதிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வேலை பளு என்றால் என்ன? கட்டுப்பாடில்லா வேலைகள், வேலையினால் ஏற்படும் மன அழுத்தம், ஓய்வில்லாமை, வேலை முடிக்க முடியாமல் கிடக்கிறதே எனும் மனோநிலை, ஆரம்ப வேலையை முடிக்காமல் இருக்கும் முன்னமே அடுத்தடுத்த வேலைகளின் குவியல்கள், நேரமின்மை என இன்னும் பல.

இவ்வாராய்ச்சி நடிப்பு, மூளை நிபுணத்துவம், விமானி, ஆசிரியர், சுற்றுச்
சூழல் காப்பாளர் மற்றும் காவல்துறையினரிடையே நடத்தப்பட்டது.

முன் காலத்தில் இருந்த இளம்தொழிலாளர்களைக் காட்டினும் தற்காலத்தில்
பெரும்பாலானோர் மனநிலை பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். வேலையிடச் சூழலும் அளவிற்கதிகமான பளுவும் இதற்கான காரணமென என லண்டனைச் சேர்ந்த டாக்டர் மரியா குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் மற்றும் நியூஸிலாந்தில் ஒருவருட காலமாக 1000 பேர் கொண்ட
குழுவினரிடையே ஏற்படும் மன‌நிலை மாற்றத்தை குறிப்பெடுத்து வந்தார்கள்.
அவர்கள் வாழ்க்கை முறை மாற்றமும் கணக்கிடப்பட்டது.

அவர்களில் 10% ஆண்களும் 14% பெண்களும் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை உணர்ந்து ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள்.

வேலை பளு அதிகமிருப்பினும் அடுத்தடுத்த வேலைகளில் தாவுவது
பாதுகாப்பின்மையான செயல் என்பதினால் பலரும் மன அழுத்தத்தை
பொருட்படுத்துவதில்லை. வடிவேலு பாணியில் 'எவ்வளோ அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்' எனும் ஸ்டைலில் வாழ்க்கையை ஓட்டிக்
கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற மன அழுத்தத்தின் காரணமாக தூக்கமின்மையும், மனச் சோர்வும்
ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இவர்களால் சமூக நிகழ்வுகளில் ஈடுபடவும்,
ஈடுபாடு காட்டவும் முடியாமற் போகிறது.

இந்நிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதினால் குடும்பச் சூழலும் மிகவும்
பாதிப்படைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

9 comments:

வெண்பூ said...

//அலுவலக வேலைகள் அதிகமாகத் திணிக்கப்படுபவர்களிடையே அளவிற்கு அதிகமான மனஇறுக்கமும்,உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகரிக்குமாம்.//

கரெக்டு.. அதுக்குதான் நான் வேலையே செய்யறதில்ல..

Anonymous said...

விக்கி,

அதிகமாகப் பதிவு எழுதுபவர்களைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு ஏதும் இருந்தால் தெரியப் படுத்தவும்.

ஆட்காட்டி said...

இதற்கு யார் காரணம்? நாம் தான். வேலை செய்யாவிட்டால் வேலை போய்விடும் என்ற பயம். வேலை முடிந்தாலும் அதை வீட்டுக்கு கொண்டு போதல். வீட்டாருடன் சண்டை போடுதல். எல்லாமே நம்மால் வாறது தான். நான் இதிலே தெளிவு. மணி அடித்தால் வீட்டுக்கு கிளம்பீருவன். அப்புறம் மறுநாள் தான் வேலை நினைப்பு. சாப்பாட்டுக்கு பிறகு ஒரு குட்டித்தூக்கம் எல்லாமே. எனக்கு தெரியும் நான் எவ்வளவு முக்கியமானவன் என்று. பயப்படத் தேவையில்லை. பயப்பட்டதும் இல்லை. எனக்காகத் தான் நான் வேலை செய்கிறேன். மற்றவர்களுக்காக இல்லை. முதலில் என் சந்தோசம் முக்கியம் பிறகு தான் மற்றையவை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Anonymous said...

`மாந்த இனம் பெருவளர்ச்சி அடைந்துவிட்டது; வளர்ந்துகொண்டு இருக்கிறது' என்று சொல்கிறோம்.

வளர்ந்தது உண்மை; வளர்ந்துகொண்டு இருப்பதுவும் உண்மை; இது புறவளர்ச்சி.

புறவளர்ச்சியே வளர்ச்சி என்றெண்ணி உளநலத்தைப் புறந்தள்ளியதன் விளைவு இன்று நாம் எதிர்கொள்ளும் உள உளைச்சல்.

புறவளர்ச்சிக்கு முதன்மை தரலாம்; தவறில்லை.

உளநலத்தையும் சிறிது பேணினால் உள உளைச்சலைக் குறைக்க இயலும்; கட்டுப்படுத்தவும் இயலும்.

Thamiz Priyan said...

அவசர உலகத்தில் இது அனைவருக்கும் சகஜமாகி விட்டது... :)

Thamiz Priyan said...

///வடகரை வேலன் said...

விக்கி,

அதிகமாகப் பதிவு எழுதுபவர்களைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு ஏதும் இருந்தால் தெரியப் படுத்தவும்.///
:))

சின்னப் பையன் said...

//விக்கி,

அதிகமாகப் பதிவு எழுதுபவர்களைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு ஏதும் இருந்தால் தெரியப் படுத்தவும்.//

ரிப்பீட்டே....

குடுகுடுப்பை said...

//அதிகமாகப் பதிவு எழுதுபவர்களைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு ஏதும் இருந்தால் தெரியப் படுத்தவும்.//

அதிகமா பின்னூட்டம் இடுபவர்கள் பற்றியும்

VIKNESHWARAN ADAKKALAM said...

@வெண்பூ

நானும்தாங்கோ...

@வடகரை வேலன்

உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப்பூ உலகம்!!!

ஆராய்சி முடிவுகள் இவ்வாறு கூறுகின்றன... மாற்று கேள்விகள் உண்டா...

@ஆட்காட்டி

மிக்க நன்றி.. நீங்க தெளிவா இருங்கிங்க சார்...

@அ.நம்பி

நன்றி ஐயா.. மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள்...

@தமிழ் பிரியன்

நன்றி அண்ணே...

@ச்சின்னப்பயன்

இன்னும் எத்தன நாளைக்கு ரிப்பீட்டு போட்டுகிட்டே இருக்க போறிங்க... அவ்வ்வ்வ்

@குடுகுடுப்பை

உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் பின்னூட்ட உலகம்!!!

ஆராய்ச்சியின் முடிவை பார்த்தீரா... இந்த ஆராய்ச்சியே இப்படிதான்... என்னா ஒரு வில்லத்தனம் ஹூம்ம்ம்...