சமீபத்தில் 'நாசா'வால் சில தொலை நோக்கு புகைப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அப்புகைபடங்களின் அடிப்படையில் ஆராயப்பட்ட சில தகவல்கள் திடுக்கிடும் வண்ணம் உள்ளன. வட துருவத்தில் உறைந்து இருக்கும் பணிக்கட்டிகள் பெரும்பான்மையாக உருகிவிட்டன.
மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த அதீத பாதிப்பு எப்படி பட்டது தெரியுமா? அதாவது ஆர்டிக் பணி படலத்தை ஒரு சுற்றில் வலம் வந்துவிடும் அளவில் உள்ளது.
கவலை தரும் இச்செய்தி சில பன்னாட்டு கப்பல் நிறுவனங்களின் காதில் தேன் வார்த்துள்ளது. இம்மாறுதலினால் நெடுந் தூர பயணங்களை சுருக்கிக் கொள்ள முடியும். இதனால் எரி பொருள் மற்றும் நேரமும் மிச்சப்படுமென மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.
அறிவியல் வல்லுநர்கள் இது பூமிப் பந்தை நாசப்படுத்த ஏற்பட்டிருக்கும் ஒரு கண்டமெனவே கருதுகிறார்கள். இதனால் ஒட்டு மொத்த பூமிக்கும் பாதிப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது என கருத்துரைக்கிறார்கள்.
புவி வெப்பத்தைப் பற்றிய விழிப்புணர்வுகள் நெடுங்காலமாக நடத்தியும் மனித குலத்தினரிடையே அது எடுபடாமல் போயிருப்பது மிகவும் வேதனைக்குரியதே. இனியும் நாம் செய்யப் போகும் தவறுகள், நமக்கே நாம் பறித்துக் கொள்ளும் சவக் குழி என்பதை அறிந்து செயல்பட்டால் நன்மை பயக்கும்.
பணிகட்டிகளின் ஆராய்ச்சி நிபுணரான மார்க் சீரீஸ் கூறுகையில், இப்போது எற்பட்டிருக்கும் மாற்றமானது சரித்திரத்தில் முக்கிய அங்கமெனவும், மனிதர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
125000 வருட பூவியியல் வரலாற்றில் முதன் முறையாக அட்லாந்திக் மற்றும் பசிஃப்பிக் கடல் பகுதிகள் ஒன்றென கலந்து சந்தித்துக் கொள்ளப் போகிறன. கரை பகுதிகள் மேலும் கரைந்து போக போகின்றன. இப்பாதிப்பு சூனாமியின் பாதிப்பை விட மோசமானதாக இருக்குமோ?
16 comments:
:-(((....
என்ன ஆகப்போகுதோ இந்த பூமி...
ஒரு அருமையான சமூக சிந்தனையுள்ள பதிவு. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இதற்கு.
மிகவும் மெதுவாக நடக்கம் என்பதால் சுனாமி அளவுக்கு பாதிப்பு இருக்காது.
ஆனால் இரவு நேரங்களில் அலைகள் வீட்டிற்குள் வர வாய்ப்பிருக்கிறது.
இன்னொரு விஷயம் இதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நினைக்கவேண்டாம்.
அங்கே நீர் மட்டம் உயர்ந்தால் உலகில் எல்லா பக்கமும் உயரும்
அதாவது அங்கே மணி அடித்தால் சென்னையில் சங்கு ஊதப்படும்
நான் தான் பர்ஸ்டா
பீதியைக் கிளப்புறிங்க சாமி !
//125000 வருட பூவியியல் வரலாற்றில் முதன் முறையாக அட்லாந்திக் மற்றும் பசிஃப்பிக் கடல் பகுதிகள் ஒன்றென கலந்து சந்தித்துக் கொள்ளப் போகிறன. கரை பகுதிகள் மேலும் கரைந்து போக போகின்றன. இப்பாதிப்பு சூனாமியின் பாதிப்பை விட மோசமானதாக இருக்குமோ?//
irukkum....
methuvaa nadanthaalum ithan paathippu oru tsunamiyai vida athigam!
கடல் மட்டம் உயரப்போகுது.
தென் துருவமும் கொஞ்சநாளில் இப்படி ஆகலாம்.
இங்கேயும் பெரிய பெரிய ஐஸ் ஷெல்ஃப்கள் இடம்பெயர்ந்து வருது(-:
அங்கிருக்கும் மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து கூடுதல்(-:
//கவலை தரும் இச்செய்தி சில பன்னாட்டு கப்பல் நிறுவனங்களின் காதில் தேன் வார்த்துள்ளது. இம்மாறுதலினால் நெடுந் தூர பயணங்களை சுருக்கிக் கொள்ள முடியும். இதனால் எரி பொருள் மற்றும் நேரமும் மிச்சப்படுமென மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.//
எல்லா கெட்டவைகளிலும் ஒரு நல்ல விசயம் ஏற்படும். என்ன இது மிக மிக கெட்ட விசயம் அதில் ஒரு மிக மிக சிறிய நல்ல விசயம் ஏற்படுகிறது :(
பயமா கீதுப்பா!
ஏதாச்சும் செய்யணும் பாஸ்!!!
@விஜய் ஆனந்த்
நானும் :(
@ஜோசப் பால்ராஜ்
பதில் சொல்லும் வரை காலம் காத்திருக்குமா?
@வால்பையன்
மணி அடிச்சா சாப்பாடு போட மாட்டாங்களா?
தண்ணீரில் மிதப்பதற்கு முன் தண்ணீரில் மிதக்கனும்னு சொல்லவரிங்க...
இல்லை நீங்க தெர்ட்டு...
@கோவி கண்ணன்
அண்ணே உங்க ஞான திருஷ்டியில் பார்த்து சொல்லுங்களேன் இதுக்கு என்ன நிவாரனி?
@மைஃபிரண்ட்
ஆமா இருக்கலாம்
நிலமெல்லாம் நீராச்சினா நான் பறக்கலானு இருக்கேன் நீங்க என்ன செய்ய போறிங்க?
@துளசி கோபால்
ஆமாம்... நாமும் நாசம் தான்.... எல்லாம் விதி...
@வெண்பு
அடெங்கப்பா.... தத்துவம்லாம் சொல்றிங்களே... நீங்களும் ஞானி அயிட்டிங்க.... குசும்பன் உங்ககிட்ட ஏதோ சொல்ல வராரு போல.
@பரிசல்காரன்
நீங்க பரவாயில்லை பரிசல வெச்சி தப்பிச்சிடுவிங்க.... நாங்க :(...
arumaiyaana pathivu
kaalaththin koolam maari vidathu.
rahini
யோசிக்கவே பயமாயிருக்கு :((
ஒரு அருமையான சமூக சிந்தனையுள்ள பதிவு. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இதற்கு...
ஐயோ...பயனுள்ள தகவலாக இருப்பினும் பீதி அதிகமாகிவிட்டது...என்ன கொடுமை விக்னேஸ்..பகிர்வுக்கு நன்றி
@ராகினி
நன்றிங்க ராகினி. மீண்டும் வருக.
@புதுகை அப்துல்லா
ஆமா அண்ணே பயமாதான் இருக்கு. சாவதற்குல் நிறையா பதிவு எழுதிடலாம்.
@ச்சின்னப் பையன்
நன்றி தலைவரே.
@மலர்விழி
நன்றி.
Post a Comment