Wednesday, November 26, 2008

மலேசியாவில் தமிழ் பள்ளிகளை மூடிவிடலாமா?

ஒவ்வொரு 5 ஆண்டு கால ஆட்சியின் போதும் தமிழ் பள்ளி பிரச்சனைகளை முதன்மையாக கொண்டு, 'நான் அதை செய்தேன்', 'நான் இதை செய்தேன்' என பேசியே தீர்த்துவிடுகிறார்கள் சிலர். தமிழர்கள் பழம்பெருமை பேசுவதில் திறமைசாலிகள் என சும்மாவா சொன்னார்கள். அது அரசியல் அப்படி தான் இருக்கும் என சிலர் சுலபத்தில் சொல்லிவிடலாம்.

எதையுமே அடிப்படையில் சிந்தித்து செயல்படாத இனம் தமிழரினம் என்பது இந்தத் தமிழ் பள்ளி பிரச்சனைகளில் கண்கூடு. வருமுன்னர் காவாதார் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூரு போலக் கெடும் என்பது வள்ளுவர் வாக்கு. 50 வருடங்களுக்கு முன்பிருந்த 1000 தமிழ்பள்ளிகள் இன்றய நிலையில் 500-ஆக இருப்பதற்கு காரணம் என்ன? அதற்கு முன் சில ஐயப்பாடுகளை காண்போமாக.

தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு இனமான பற்று எவ்வகையில் உள்ளது? போதுமான வருமானம், நிரந்தர வேலை எனும் நோக்கோடு சிலர் ஆசிரியர் தொழிலை தேர்வு செய்யலாம். இப்படியானவர்களுக்கு 'நீ படித்தால் படி, படிக்காவிட்டால் போ. எனக்கென்ன கவலை' எனும் எண்ணம் இருக்கலாம்.

எதிர்காலத்தைப் பற்றிய சரியான திட்டமிடும் சிந்தனை இல்லாமல். பிரச்சனைகள் எழும்பும் போது மட்டும் வாய்கிழிய பேசி நாயகனாக மாறும் அரசியல் தலைவர்களின் போக்கு எப்படிபட்டது? தமக்கு புகழ் கிடத்தால் போதும் பிரச்சனை வரும் வரை காத்திருக்கலாம் என்பதை போன்றதல்லவா?

தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து முழு உதவியும் கிடைப்பதில்லை. ஆசிரியர்களின் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வழி இவ்விடயங்கள் எந்த அளவுக்கு தீர்வு காண முடிகிறது? முக்கிய தரப்பினரின் பார்வைக்கு இதை கொண்டு செல்ல முடியாவிடில் அச்சங்கத்தின் அவசியம் என்ன?

அரசாங்கம் ஒரு கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது என்றால் சீன சமூகத்தினர் அதை பலமான முறையில் சீர்தூக்கிச் செயல்படுகிறார்கள். 90% சீன பிள்ளைகள் சீன பள்ளிகளில் தான் பயில்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் நிலை என்ன? தமிழ்ப் பள்ளி என்றவுடன் சிலரது முதல் கேள்வி 'தமிழ் சோறு போடுமா' என்பது தான்.

தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை மலாய்/ ஆங்கில கல்வி முறைக்கு அனுப்புவதில் ஆர்வம் கொள்வது அடுத்தவருக்கு கோணலான தூண்டுதல் இல்லையா? இச்செயல், ஒர் உணவகத்தின் சமையல்காரன் அடுத்த உணவகத்திற்கு சென்று சாப்பிடுவதை போன்ற செயல் இல்லையா?

ஐயய்யோ தமிழ்ப் பள்ளிக்கூடமா? அங்கே படித்தால் பிள்ளை உருப்பட்டதை போல் தான் என்பது சில பெற்றோர்களின் எண்ணம். இப்படிபட்ட எண்ணங்கள் இருக்கும்பட்சத்தில் தமிழ்ப் பள்ளி பிரச்சனைகள் அரசாங்கத்திடம் எடுபடாமல் தான் போகும். ஒருமைபாடு கொண்ட சிந்தனை இல்லாமல் ஆளாளுக்கு திட்டுதிட்டாகச் சிந்திப்பது நமது குறையே.

தற்காலத்தில் பச்சைத் தமிழர்கள் கொச்சைத் தமிழில் பேசுவதில் அலாதி பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கை போலவும், எறுமை மாட்டின் மீது மழை பெய்த கதையாக எதையும் கண்டுக் கொள்ளாமல் இருக்கும் சில தமிழ் ஊடகங்களின் செயலை தடுக்க முடியாமல் இருப்பது வேதனைக்குறியது. அதற்கு சரியான முறையில் தீர்வு காணாமல் இருப்பதும், இன்னமும் அவற்றுக்கு ஆதரவு கொடுத்து வருவது மக்களாகிய நமது தவறே.

இப்படி பல பிரச்சனைகள் நம்மில் தீர்வு காணாமல் இருக்கும் போது அரசாங்கத்தைக் குறை கூறி என்ன இருக்கிறது? 50 வருடங்களில் 1000 தமிழ்ப் பள்ளிகள் 500-ஆக மாறியுள்ளது எனின் இன்னும் 50 வருடத்தில் அதன் நிலை எப்படி இருக்கும்?

ஆரம்பக் கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சனைகளை மட்டும் சிந்திக்கும் மக்கள், உயர்நிலைக் கல்விமுறையைப் பற்றி சிந்திப்பதுண்டா? இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் ஒரு தனி பாடமாக மட்டுமே போதிக்கப்படுகிறது. மாணவர் பற்றாகுறை எனின் அதுவும் இல்லாமல் போகும் நிலை உள்ளது.

உயர்நிலைக் கல்வியெனின் மலாயா பல்கலைகழகத்தில் மட்டும் தான் தமிழ் போதிக்கப்படுகிறது. அதுவும் இளங்கலை பட்டத்திற்கு மேல் தொடர வாய்ப்பில்லை.மலாயப் பல்கலைகழகத்தில், தமிழ் மொழி கல்வி திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டு இத்தனை வருடங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்பினை கொண்டு வர முடியாமல் போகுமானால் அது யார் தவறு?

தேசிய மொழி காப்பகமாக 'டேவான் பகாசா டான் புஸ்தாகா' இருப்பது போல் சீன மொழி காப்பகமாக 'டொங்ஜோங்' கல்வி கட்டுப்பாட்டு குழு உள்ளது. கல்வியமைச்சின் முடிவுகள் இப்படிபட்ட மொழி காப்பகங்களில் சீர் தூக்கிப் பார்க்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு கொண்டுச் செல்லப்படும். மலேசிய தமிழ் கல்விக்கு அப்படி ஏதும் காப்பகம் உள்ளதா? உண்டு எனின் இன்றய நிலைக்கு இவர்களின் பங்கு என்ன?

ஆண்டுதோறும் மலேசியாவில் இருந்து நான்கு சீன விரிவுரையாளர்கள் பெய்ஜிங் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முனைவர் பட்டம் வாங்கி வரச் செய்கிறார்கள். அவர்களுக்கு மலேசிய அரசு உபகார நிதி ஒதுக்குகிறது. இதற்கு உறுதுணையாக மலேசிய சீன சங்கம் (ம.சி.சா) உதவி புரிகிறது. அது போல ஒரு தமிழராவது தமிழகம் சென்று முனைவர் பட்டம் பெற --- உதவியுள்ளதா? அப்படி இல்லை என்றால் அவர்கள் என்ன **** (வேண்டாம் விடுங்கள்).

கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போகும் கதையாக UPSR தேர்வின் போது இத்தனை தமிழ்ப் பள்ளி பிள்ளைகள் இத்தனை 'எ' என மார்தட்டி கொள்பவர்கள்
SPM தேர்வில் தமிழ் பாடம் எடுப்போரின் விழுக்காடு குறைந்து போவதை கவலைக் கொள்வதில்லை. ஏன் இந்த நிலை?

தமிழ்க் கல்வி எனும் ஒரு நிலையிலேயெ இவ்வளவு விடயங்கள் அடங்கி கிடக்கும் போது, எதையும் சிந்திக்காமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டும் சதா
'லபோ திபோ' என கத்திக் கொண்டு தமிழர்கள் பிரதிநிதி எனக் கூறும் அரசியல் கட்சிகள் நமக்கு அவசியம் தானா?

தமிழ்க் கல்வியை சுயநலத்திற்கு அரசிலாயாக்குவதை தவிர்த்து, முறையான தமிழ்க் கல்விக் குழு அமைத்து பிரச்சனைகளை சீர் தூக்கி செயல்படவில்லை என்றால் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இந்நிலை மாறாது.

தனியாக தமிழ்ப் பள்ளிகள் அவசியமில்லை, சிங்கப்பூரைப் போல தேசியப் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக மட்டும் இருந்தால் போதும் எனக் கூரும் சில இனத் துரோகிகளின் கை ஓங்குமானால் அடுத்த நூற்றாண்டில் இங்கே தமிழ்ப் பள்ளிகள் இல்லாமல் தான் போகும்.

எந்தப் பிரச்சனை வந்தாலும் துளி அளவும் முயற்சி இல்லாமல் 'எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்' என மேலே கையை உயர்த்துவது தமிழர்களின் மகா மடத்தனமான செயலாகிப் போய்விட்டது. அதைப் போலவே சமுதாய பிரச்சனையை அரசியல் கட்சி பார்த்துக் கொள்ளும் எனும் எண்ணம் பலரில் உண்டு. இதுவும் ஒரு மூட நம்பிக்கை என்பதை உணர்வார்களா?

19 comments:

அறம் செய விரும்பு said...

///தற்காலத்தில் பச்சைத் தமிழர்கள் கொச்சைத் தமிழில் பேசுவதில் அலாதி பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கை போலவும், எறுமை மாட்டின் மீது மழை பெய்த கதையாக எதையும் கண்டுக் கொள்ளாமல் இருக்கும் சில தமிழ் ஊடகங்களின் செயலை தடுக்க முடியாமல் இருப்பது வேதனைக்குறியது./////

இது உலகளாவிய பச்சைத் தமிழர்கள் உணரவேண்டிய வார்த்தைகள் !!! இவர்கள் ஆங்கில மொழியறிவு வளர்த்துக் கொள்ள தமிழரிடமும் தங்க்லீஷ்(!!!) பேசுவது கொடுமையிலும் கொடுமை.அதுவும் தமிழ் ஊடகங்கள் செய்யும் மொழிக்கொலை உண்மைத் தமிழுனர்வாளர்களின் உதிரம் கொதிக்கச் செய்கிறது.பணம் தேடி இனம் அழிக்கும் ஓரினம் உண்டென்றால் அது தமிழினம் தான். வேதனையான உண்மை.

ஆதவன் said...

தமிழ்ப்பள்ளி - தமிழ்க்கல்வி நோக்கிய தங்களின் ஆய்வுப் பார்வையும் சிந்தனையும் மிக நன்று.

தங்கள் கருத்துகள் அனைத்தும் பலகாலமாகச் சிந்திக்கப்பட்டவைதாம் என்றாலும் தமிழர்நலம் சார்ந்த சிக்கல்களை மீண்டும் மீண்டும் சிந்தித்தால்தான் - சிந்திக்க வைத்தால்தான் சிறந்த தீர்வுகள் பிறக்கும்.

தமிழ்ப்பள்ளிகளை வெறும் கல்வி நிலையங்களாக மட்டும் பார்க்காமல் அது இந்த இனத்தின் மொழி, சமயம், பண்பாடு,கலை,இலக்கியம், பாரம்பரியம் ஆகியவற்றின் காப்பகம் என்பதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ்ப்பள்ளியை மூடிவிடலாம் என சிந்திப்பவர்கள்:-

1.பிறப்பால் தமிழராக இருக்க மாட்டார்கள்
2.தமிழராக இருந்தாலும் உள்ளத்தால் திரவிடராக - இந்தியராக இருப்பார்கள்
3.தமிழ் வரலாற்றை - பாரம்பரியத்தை அறியாதவர்களாக இருப்பர்
4.தமிழ்மொழியை - தமிழ்ப்பள்ளியைக் காக்க வேண்டிய தேவையை உணராதவராக இருப்பர்
5.இனநலத்தைவிட தன்னலத்திற்கே முதலிடம் கொடுப்பவராக இருப்பர்
6.எதோ ஒருவகையில் எதேனும் ஒரு நயப்புக்கு ஆட்படவராக இருப்பர்
7.அரசியில், பொருளியல், குமுக மதிப்பியல் ஆகியவற்றில் எதேனும் ஈட்ட(இலாப) எண்ணம் கொண்டிருப்பார்கள்
8.அன்னிய இனத்தாரிடம் செல்வாக்குப் பெற்று வாழ்வை வளமாக்கிக்கொள்ள துடிப்பவர்கள்
9.பிற இனத்துக்கும் மொழிக்கும் அடிவருடிகளாக இருப்பார்கள்
10.சொந்த அறிவோ சிந்தனையோ இல்லாமல் நத்திப்பிழைக்கும் அறிவடிமைகளாக இருப்பார்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

அனானி உங்கள் பின்னூட்டம் தவிர்க்கப்படுகிறது... தயவு செய்து தகாத வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்...

குசும்பன் said...

//தமிழ்ப் பள்ளி என்றவுடன் சிலரது முதல் கேள்வி 'தமிழ் சோறு போடுமா' என்பது தான்.//

நிச்சயமாக நியாயமான கேள்விதானே, தமிழ்மட்டும் படிச்சால் வேலைக்கிடைக்குமா? மற்ற மொழியும் வேண்டும் அதே சமயத்தில் தமிழையும் படிக்கவேண்டும், தமிழிலேயே அனைத்தையும் படிக்கவேண்டும் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்காது!

தமிழ் வழியில் படித்துவிட்டு வேலை தேடி போன பொழுது டெல் சம் திங் அபவுட் யு! என்று கேட்கும் கேள்விக்கே நாக்கு வறட்டு போன அனுபவம் எல்லாம் இருக்கு பாஸ்!

Anonymous said...

இன்றைய நாளிதழ்களைப் புரட்டி பார்த்தீர்களா? தமிழ்ப்பள்ளிகளுக்கு விடிவு காலமாம்; மீண்டும் இருட்டி விடாமால் இருந்தால் சரி!

மு.வேலன் said...

வாழ்த்துக்கள்!

'தமிழ் பள்ளி பிரச்சனைகள்' என்று பொதுவாக பேசாமல், தமிழ் பள்ளியில் என்ன பிரச்சனை என்று ஆய்வு செய்து, அதற்கான வழிமுறைகளையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்?

//எதையுமே அடிப்படையில் சிந்தித்து செயல்படாத இனம் தமிழரினம் என்பது இந்தத் தமிழ் பள்ளி பிரச்சனைகளில் கண்கூடு.//
இந்தக் கூற்று கூறுவதுதற்கு சரியான சான்று வேண்டும்.முதலில் நம்மை நாமே இழிவுப்படுத்திக்கொள்வது தவறு. அதாவது நமது இனத்தை சரியாக மதிப்பிடல் வேண்டும்.

//50 வருடங்களுக்கு முன்பிருந்த 1000 தமிழ்பள்ளிகள் இன்றய நிலையில் 500-ஆக இருப்பதற்கு காரணம் என்ன? //
இதற்கு நீங்களே சரியான பதில் அளிக்கவில்லையே.

//தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு இனமான பற்று எவ்வகையில் உள்ளது? போதுமான வருமானம், நிரந்தர வேலை எனும் நோக்கோடு சிலர் ஆசிரியர் தொழிலை தேர்வு செய்யலாம். இப்படியானவர்களுக்கு 'நீ படித்தால் படி, படிக்காவிட்டால் போ. எனக்கென்ன கவலை' எனும் எண்ணம் இருக்கலாம்.//
இது கண்டனத்துக்குரியது. இந்த மாதிரி பொதுவான கருத்து பல பேர்களின் மனதைப் புண்படுத்தும். கவனம்! என் அனுபவத்தில் பல ஆசிரியர்கள் தெய்வங்கள். சிலர் வேண்டுமானால் இப்படி இருக்கலாம். அப்படி இருந்தால் சரியாக குறிப்பிட்டு எழுதுதல் நன்று.


//தமிழர்கள் பழம்பெருமை பேசுவதில் திறமைசாலிகள் என சும்மாவா சொன்னார்கள்.//
இதற்கு நீங்களே ஒரு சான்று. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சிலர் இப்படிதான் இன்னும் குறை கூறுவதையே பழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதைவிட அறிவுபூர்வமாக சிந்தித்து, தமிழ் பள்ளிகளுக்கு நன்மை விளைவிக்கும் தகவல்களை சில கொடுத்திருக்கலாம்.

நன்றி.

மு.வேலன் said...

//தேசிய மொழி காப்பகமாக 'டேவான் பகாசா டான் புஸ்தாகா' இருப்பது போல் சீன மொழி காப்பகமாக 'டொங்ஜோங்' கல்வி கட்டுப்பாட்டு குழு உள்ளது. கல்வியமைச்சின் முடிவுகள் இப்படிபட்ட மொழி காப்பகங்களில் சீர் தூக்கிப் பார்க்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு கொண்டுச் செல்லப்படும். மலேசிய தமிழ் கல்விக்கு அப்படி ஏதும் காப்பகம் உள்ளதா? உண்டு எனின் இன்றய நிலைக்கு இவர்களின் பங்கு என்ன?//
தமிழா நன்றாக சுட்டி காட்டி சிந்திக்கச் செய்தாய். இந்நாட்டில் தமிழ் மொழி காப்பகம் இல்லாமல் இருப்பதற்கு நம் நாட்டு இந்திய அரசியல் அமைப்புகளே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஆட்காட்டி said...

தமிழன் தன்னாலேயே கெட்டான். எப்பொழுது அவன் இந்தியன் இன்று குறி சுடப் பட்டானோ அன்றே தமிழினதும் தமிழனினதும் அழிவு தொடங்கி விட்டது. இங்கே அரசியல் வேண்டாம். உங்களுக்குப் புரியும்-இல்லாவிட்டால் தனி மடலில்.
யாரோ சொன்னாங்களாம் தமிழில எழுத்துக்கள் கூட அதால படிக்கக் கடினம் எண்டு. சீன மொழியில் எத்தனை எழுத்துக்கள்? தமிழின் அழகே எந்த ஒலி வடிவத்தையும் வரி வடிவில் கொண்டு வருவது தான்.
அப்புறம் எனக்குத் தெரிந்த நிறைய மலேசிய தமிழர்கள் தமிழ் படிக்கவில்லை. காரணம் சிரமாம். மலே படித்துள்ளார்கள். பிழைப்புக்கு. தமிழ் பேசினாலே பிச்சைக்காரன் சத்தி எடுத்த மாதிரி இருக்கும், அதில எங்களுக்கு மலே சொல்லித் தர வந்தாங்கள். இது எப்படி இருக்கு? அதனால் தான் உங்களை கூட ஒரு முறை கேட்டேன்.

பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆரம்பம் முதலேயே ஆர்வப் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் எப்படிப் படிப்பார்கள்?

Unknown said...

//ஐயய்யோ தமிழ்ப் பள்ளிக்கூடமா? அங்கே படித்தால் பிள்ளை உருப்பட்டதை போல் தான் என்பது சில பெற்றோர்களின் எண்ணம்.//

தமிழ் பள்ளிகளில் படித்து வாழ்க்கையில் சாதித்தவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் இருக்கிறார்களே...

இன்னுமா தமிழ் பள்ளிகளின் தரத்தின் மீது சந்தேகம்?

பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது வைத்திருக்கும் அக்கறையின் தரத்தைப் பொருத்துத்தான் பிள்ளைகளின் கல்வித் தரம் அமைகிறது...

அதை முதலில் சரி செய்தால் பின் எந்த பள்ளியில் படித்தால் என்ன...

"ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்" என்ற கதையாக இருக்கிறது...

K.Sehgar said...

தமிழ் பள்ளி அழிந்தால் .................இந்த நாட்டில் நாம் அழிந்தோம்.நம் மொழி அழியும். எதிர்காலத்தில் நமது பெயர் பொருட்காட்சியகத்தில் கூட இருக்காது.மலாக்கா பரமேஸ்வராவுக்கு ஏற்பட்ட கதி நமக்கு பாடமாக அமைய வேண்டும்.

Anonymous said...

தமிழ்மொழிக்கென்று காப்பகம் நம் நாட்டில் உள்ளது..அரசு சாரா இயக்கமான அதன் இன்றைய நிலைத்தான் கேள்விக்குறி..பொறுத்திருந்துப் பார்க்கலாம் :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அறிவுடை நம்பி

வருகைக்கு நன்றி ஐயா... உங்கள் கருத்து நிதர்சனமானது. அதைப் பற்றி பேசும் நாம் அவர்களிடம் கேள்வி கேட்க முடியவில்லை... கேள்வி கேட்க்க உரிமையுள்ளோர் கேட்பதில்லை...

@ ஆய்தன்

வருகைக்கு நன்றி ஐயா...

//2.தமிழராக இருந்தாலும் உள்ளத்தால் திரவிடராக - இந்தியராக இருப்பார்கள்//

இது புரியவில்லை...

@ தமிழ் பிரியன்

நானும் :(

@ குசும்பன்

வருகைக்கு நன்றி... கற்றலை பற்றிய விடயமல்ல ஆனால் ஒரு இன முறையை அழிக்க நினைப்பது தவறு இல்லையா?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மு.வேலன்

உங்கள் கருத்தினை தனி மடலில் போட்டீர்கள் என்றால் பலரையும் சென்றடைய வாய்ப்பாக அமையும்...
//இந்த மாதிரி பொதுவான கருத்து பல பேர்களின் மனதைப் புண்படுத்தும். கவனம்! //

நீங்கள் சற்று கவனத்தோடு படித்திருக்கலாம்... சிலர் எனும் வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளேன்..
அது போக நான் கேள்விகளாக கேட்ட வரிகளிலேயே தமிழ் பள்ளிகளூக்கு என்ன செய்யலாம் என்ற விடையும் உள்ளது.

காப்பகம் இருப்பதாக சொல்கிறார்கள்.. இது வரை நான் அறிந்ததில்லை.

@ ஆட்காட்டி

உங்களோடு தனிமடலில் பேச விருப்பம் கொள்கிறேன்... மின்மடல் முகவரி கிடைக்குமா?

@ சேகர்

வருகைக்கு நன்றி ஐயா...

@ புனிதா

உங்கள் கருத்துக்கு நன்றி...

நாடி பார்க்கிறேன் said...

விக்னேஷின் தமிழ் பற்று பாரட்டுகுரியது.தமிழ் பள்ளிகளை காக்க இன்னும் பல ஆக்கரமான செயல்முறைகளை அமுல்படுத்த வேண்டும்.அதற்கு இவர்களின் ஒத்துழைப்பு அவசியம்....
பெற்றோர் ஒத்துழைப்பு.
பெற்றோர் ஆசிரியர் சங்கம்...
தலைமை ஆசிரியர்.....
முன்னால் மாணவர்கள்கள்..
என்னிடம் ஒரு திட்டம் உண்டு ....கை கொடுக்கவும் தோள் கொடுக்கவும் ஆள் இருந்தால் சொல்ளுங்க....

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அகஸ்தியர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... என்ன திட்டம் என்பதை சற்று விளக்கி சொல்லுங்களேன்...

A N A N T H E N said...

//தற்காலத்தில் பச்சைத் தமிழர்கள் கொச்சைத் தமிழில் பேசுவதில் அலாதி பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.//

பச்சை, கொச்சை... இதுலதான் இவுங்களுக்கெல்லாம் இச்சை... ஹிஹிஹி...
பேசுவது பைந்தமிழாயினும், அதற்கான செந்தமிழை உணர்ந்து பேசுவதில் பாதிப்பு ஒன்றும் பெரிதில்லை என்பது என் கருத்து.
ஊருடன் கூடி வாழ் என்பர், நம்மை செவிமடுக்கும் மக்களுக்கு புரியும்படி பேசுவதில் தவறு இல்லையே. ஆனால், சுற்றம் அறிந்தாக வேண்டும்.

//சில தமிழ் ஊடகங்களின் செயலை தடுக்க முடியாமல் இருப்பது வேதனைக்குறியது//
நல்ல தமிழ் இருக்க, ஊடகங்களில் வேண்டுமென்றே அயல் சொற்களைத் தேவை இன்றி திணிப்பது யாருக்காக என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஊடகம் என்பது பொதுவானது, அங்கே இயன்றவரை புழக்கத்தில் உள்ளதுபோல், அனைவருக்கும் புரியும்படியே பேசிவிடலாமே? இடையிடையே ஆங்கிலமும் மலாயும் சில நேரங்களில் சீனத்தையும் நுழைப்பவர்கள், நிசத்தில் அந்த எந்தவொரு மொழியிலும் தணித்து பேச முடியுமா என்பதை அவர்களே சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்ற மொழி ஊடகங்கள் இப்படித்தான் செயல் படுகின்றனவா என்பதை ஆய்ந்து பாருங்கள்...! நல்ல தமிழை ஆளும் தமிழ் ஊடகங்களும் அறிவிப்பாளர்களும் நிறையவே இருக்கின்றனர், இங்கே சொன்னவை அவர்களைப் பற்றி அல்ல. சில புல்பூண்டுகளை.

//சிந்திக்காமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டும் சதா
'லபோ திபோ' என கத்திக் கொண்டு தமிழர்கள் பிரதிநிதி எனக் கூறும் அரசியல் கட்சிகள் நமக்கு அவசியம் தானா?//
மூவின மலேசியாவின் சிறுபான்மை இனமான இந்திய சமுதாயத்துக்கு ஏன் இத்தனை கட்சிகள்? முரண்பாடான கருத்துகள் கட்சிகளுக்கு இடையில் மட்டும்தான் என்றால், இப்போது உறுப்பினர்களுக்குள்ளும். இப்போதெல்லாம், தமிழ் நாளெடுகளில், கொலை, கொள்ளை செய்திகளுக்குப் போட்டியாக மலேசிய அரசியல் செய்திகளும் இடம் பெறுகின்றன. மலேசிய அரசியலில் நாங்கள் மட்டும் கிள்ளுக்கீரை அல்லர் என்பதைப்போல் இந்திய அமைப்புகள் மற்றும் கட்சிகளின் உட்பூசல். மானக்கேடு.

//சிங்கப்பூரைப் போல தேசியப் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக மட்டும் இருந்தால் போதும்//
அரசியலமைப்பு எழுதும்போதே இதை ஆழமாக சிந்தித்து இருந்தால், அதை நேர்மையாக வழிநடத்த நல்ல தலைவர்களை மலேசியா கொண்டிருந்திருந்தால், இப்படி சிதறிக் கிடக்க வேண்டிய அவசியமில்லை. மலாய்க்காரர்களைப் போல மற்றவர்களும் தாய்மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என அன்றே ஒரு சட்டம் செய்திருந்தால்...? (மலாய் அல்லாதார் மலாய் கற்க அவசியமில்லை என்று நான் சொல்லவில்லை.)

//தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை மலாய்/ ஆங்கில கல்வி முறைக்கு அனுப்புவதில் ஆர்வம் கொள்வது அடுத்தவருக்கு கோணலான தூண்டுதல் இல்லையா? //
பொது அறிவுப்பு பலகையில் நான்கு மொழிகளும் (தமிழ், மண்டாரின், மலாய், ஆங்கிலம்) இருக்கின்றன என வைத்துக் கொள்வோம். நம்மில் எத்தனை பேர் முதலில், தமிழில் உள்ளதை வாசிக்க முனைகிறோம்? பகட்டுக்காக எத்தனை நாள் கழிக்க போகிறோம்? சீனர்களைப் பாருங்கள், மண்டாரினில் உள்ளதை வாசித்த பின்னரே தமக்குத் தெரிந்த ஏனைய மொழியில் உள்ளதை வாசிக்க முற்படுவர். நான் சீனர்களைப் புகழ் பாடுவதாய் எண்ணினால், நான் என்செய்வேன்?

//அதைப் போலவே சமுதாய பிரச்சனையை அரசியல் கட்சி பார்த்துக் கொள்ளும் எனும் எண்ணம் பலரில் உண்டு//
அப்படிப்பட்ட கட்சி எதற்கு? யாருக்காக? யார் அவர்களைத் தேர்வு செய்தது?அவர்கள் தங்கள் மனசாட்சிக்கே பிரதிநியாக இருக்க முடியாத போது, சமுதாயத்தை எப்படி பிரதிநிதிப்பர்? எழுதாத பேனாவைக் கொண்டு தேர்வுக்குச் செல்லலாமா?

Anonymous said...

வணக்கம் வாழ்க

தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்க்கல்வி தொடர்பான தங்கள் கருத்துகள் மிகவும் கூர்ந்து சிந்திக்கத்தக்கவை.தங்களைப் போன்று பலரும் சிந்திக்கின்றனர், ஆனால் செயல்வடிவம் பெறுவதுதான் இல்லை என்பது உண்மை. மலேசியத் தமிழனுக்கு முதலில் நான் தமிழன், என் மொழி தமிழ் என்ற உணர்வு முதலில் வரவேண்டும். ஒற்றுமைதான் வாழ்க்கைக்கு வழிகாட்டி

Anonymous said...

வணக்கம் வாழ்க

தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி தொடர்பான தங்கள் கருத்துகள் நாம் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. தமிழர்கள் தமிழால் ஒன்றிணையாதாவரை எல்லாம் கடினமே. தமிழர்கள் சிந்திப்பார்களா?

தமிழ் எங்கள் உயிர் தமிழ்ப்பள்ளி எங்கள் உடல்

அன்புடன்
கோவி.மதிவரன்

VIKNESHWARAN ADAKKALAM said...

//பச்சை, கொச்சை... இதுலதான் இவுங்களுக்கெல்லாம் இச்சை... ஹிஹிஹி...
பேசுவது பைந்தமிழாயினும், அதற்கான செந்தமிழை உணர்ந்து பேசுவதில் பாதிப்பு ஒன்றும் பெரிதில்லை என்பது என் கருத்து.
ஊருடன் கூடி வாழ் என்பர், நம்மை செவிமடுக்கும் மக்களுக்கு புரியும்படி பேசுவதில் தவறு இல்லையே. ஆனால், சுற்றம் அறிந்தாக வேண்டும்.//

சரி... உங்கள் கருத்தின் படி ஊருடன் கூடி வாழ் என எடுத்துக் கொள்வோம் என வையுங்கள்.... அது திருட்டு பய ஊராக இருந்தாலும் இதை அமலாக்கம் செய்ய வேண்டுமா?

//இடையிடையே ஆங்கிலமும் மலாயும் சில நேரங்களில் சீனத்தையும் நுழைப்பவர்கள், நிசத்தில் அந்த எந்தவொரு மொழியிலும் தணித்து பேச முடியுமா என்பதை அவர்களே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.//

நல்ல வேளை பூர்வக் குடியினரின் மொழி தப்பியது.

பல நிதர்சன கருத்துக்களை சொல்லி இருக்கிங்க ஆனந்தன் நன்றி.