Friday, November 07, 2008

மரியாதை தெரியாத பசங்க...

விரும்பியோ விரும்பாமலோ சமுதாயம் என்பது மனிதனின் வாழ்வியல் அங்கமாகிவிட்டது. சமுதாயம் என்பது யாது? எனும் கேள்வியெழும் போது அது நாம் எனவும் நம்மை சார்ந்தது என்றேதான் பதிலாகிறது. ஒரு விடயத்தை பேசும் உரிமை பெறும் போது, நான் இந்த சமூகத்தின் அங்கம் ஆதலால் எனக்கு சமூகத்தைப் பேசவும் கேட்கவும் உரிமையுண்டு என்கிறோம்.

சமுதாய இணக்கத்தில் நம் அங்கமென்றாகும் போது பல விதிகளுக்கும் உட்படுகிறோம். அதை மனித நாகரீக வளர்ச்சியின் வித்துக்கள் என்கிறோம். மனித சமூகத்தில் முக்கியமாய் அமைவது நன்னெறி பண்புகள். பண் பட்டதால் பண்பு அல்லது பண்பாடு என்கிறோம்.

எதிலும் முதல் தாக்கம் என்பது மிக முக்கியமானது என அறிகிறோம். முதல் தாக்கமே நமது அடுத்த செயல்பாடுகளுக்கு அடிப்படையாய் விளங்குகிறது. சக மனிதர்களோடு பழகுகையில் அல்லது முக்கிய நபர்களின் மனதில் இடம் பிடிக்கவும் நம் மீது நன்மதிப்பும் நற்பெயரும் பெறவும் முதல் தாக்கத்தை வழியுறுத்திக் கூறப்படுகிறது. அது 'எதிக்ஸ்' எனும் பெயரில் பல நிறுவனங்களிலும் மேற்படிப்பகங்களிலும் கற்பிக்கப்படுகிறது. பொதுவாக ஐந்து வகைகளை நாம் அன்றாட வழக்கில் காண்கிறோம்.

அழைத்தல்

ஒருவரை சந்திக்கும் போது முறையாக அழைக்கப்படுவது மிக முக்கியம். இது அழைப்பவரின் முதிர்ச்சியையும் மன உறுதியையும் குறிப்பதாகச் சொல்வார்கள். தகுந்த வார்த்தை பிரயோகம் இங்கே வழியுறுத்தப்படுகிறது. அது போக அழைக்கப்படுபவரின் கண்களை பார்த்துப் பேசுவதும் முக்கியம். ஒருவரை பெயரிட்டு அழைப்பதைவிட 'ஐயா' 'அண்ணா' போன்ற சொற்களே நயமாக இருக்கும்.

கை குலுக்குதல்

கை குலுக்கும் முறையிலும் ஒருவரின் மன உறுதி வெளிபடும் என்பார்கள். தொட்டும் தொடாமலும் அல்லாமல் அதிக இறுக்கமாகவும் இல்லாமல் கை குலுக்குதல் நலம். கை குலுக்கல் ஒருவரை நம்மோடு நெருங்கச் செய்தலுக்கு அவசியமானது எனப்படுகிறது.


தயவு செய்து மற்றும் நன்றி

இன்று நன்றி சொல்வது வழக்குடைந்து வரும் விடயம் என்பதை யாரும் மறக்க இயலாது. இதன் காரணம் ஒரு செயல் அவரின் கடமை என நினைக்கத் தோன்றுவதே. உதாரணத்திற்கு உணவகத்தில் நமக்கு உணவு பரிமாறுபவருக்கு நம்மில் எத்தனை பேர் நன்றியுரைக்கிறோம். மாறாக தாமதமானால் கோபம் மட்டுமே கொள்கிறோம். ஒருவரை பணிக்கும் போது அதிகாரம் செலுத்துவதை விட தயவு செய்து எனவும் தயவு எனும் பணிவுக் கொண்டும் சொல்லப்படும் போது நமது பேச்சின் இறுக்கம் தளர்வடையும்.

மன்னிப்பு

மன்னிப்பு தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை என சினிமா வசனங்களை எளிமையாக பேசிவிடலாம். மன்னிக்க மனம் வேண்டும் என்பார்கள். தவறை உணர்ந்தவரே மன்னிப்பும் கோருவார். மனிதனாக பிறந்தவர் தவறு செய்யாமல் இருப்பவரும் அல்லர் அப்படி தவறு செய்தவர்கள் அனைவரும் திருந்தாமல் போனவர்களும் அல்லர். அடுத்தவரை பாதிக்கும் அல்லது கவனச் சிதறலுக்கு வழி வகுக்கும் சிறு நிகழ்வாகினும் மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை.


குறுக்கிடுதல்

ஒருவரின் காரியத்தில் குறுக்கிடுவது அவர்களின் கவனத்தையே அல்லது செயல் திறனையோ பதிப்படையச் செய்யும்.

இப்படியாக முக்கிய ஐந்து விடயங்களை நமது நடைமுறையில் காண்கிறோம்.

21 comments:

வெண்பூ said...

அழகாக தொகுத்திருக்கிறீர்கள் விக்கி.. கடைசி விசயத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருக்கலாம்..

***

நீங்கள் இந்தியா வரும் வாய்ப்பு இருக்கிறதா? போன பதிவுலேயே கேட்டிருந்தீர்கள். நான் சிங்கை வரும் வாய்ப்பு மிக மிக குறைவு :(

pudugaithendral said...

கட்டாயமாக ஒவ்வொருவராலும் பின்பற்றப்படவேண்டிய ஆனால் பலரால் பின்பற்றப்படாமல் இருக்கும் முறைகளை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

மிக அருமை.
இங்கனம் நாம் நடந்து கொள்வதால் நம் மேல் எதிராளிக்கு மதிப்பு கண்டிப்பாய் கூடும்.

மீனாட்சி சுந்தரம் said...

anna gud advice..thanks...write some thing abt politics

சென்ஷி said...

வணக்கம் அண்ணா..!

VIKNESHWARAN ADAKKALAM said...

@வெண்பூ

தொடர் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி... இதை யார் படிக்க போறாங்க எழுதலாம்னு எழுதினேன்... இன்னும் நிறைய விடயங்கள் இருக்கு...

சிறுவனாக இருந்த சமயம் வீட்டு பெரியவர்கள் அவர்கள் பேசும் போது எங்களை அருகில் அணுகவிட மாட்டார்கள். பெரியவங்க பேசுற இடத்தில் உனக்கென்னடா வேலை என வாங்கிக்கட்டியதும் உண்டு...

@புதுகைத் தென்றல்

பகைவனையும் விருந்தோம்ப வேண்டும் என வள்ளுவர் சொல்கிறாரே... வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்...

@ மீனாட்சி சுந்தரம்

தம்பி... அரசியல் ஒரு சாக்கடையென நான் சொல்ல மாட்டேன்... நான் அரசியல் சார்ந்து எழுதியவை மிகக் குறைவு... காரணம் எனக்கு உன் அளவிற்கு அரசியல் தெரியாதுப்பா... வருகைக்கு நன்றி...

@ சென்ஷி

வணக்கம் சொல்ல ஒரு பின்னூட்டமா.. மிக்க நன்றி...

ஹேமா said...

விக்கி வணக்கம்,நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை...எங்கள் சமூகத்தவரைப் பொறுத்தவரை இந்தப் பழக்கங்கள் குறைவாகவே இருக்கிறது.ஆனால் ஐரோப்பியர் மத்தியில் சாதாரணமாக அடிக்கடி பாவிக்கப்படும் பழக்கத்துட்பட்ட சொற்களே இவைகள்.அவர்களோடு அதிகமாகப் பழகுவதாலோ என்னவோ என(ங்களு)க்கும் நிறையவே உண்டு.எனவே நான் இலங்கை,
இந்தியா,சிங்கப்பூர் மலேசியா போனபோது வணக்கம்...நன்றி...
மன்னியுங்கோ...அண்ணா... என்ற
சொற்களைப் பாவித்தபோது என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்.ஏன்?

பிரயோசனமான பதிவு இது விக்கி.
யார் மனதில் பதித்துக்கொள்வார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

சின்னப் பையன் said...

வணக்கம் அண்ணே...

அந்த படத்தை எப்போண்ணே மாத்த போறீங்க????????

நன்றி...

மு.வேலன் said...

வணக்கம்.

நல்ல பயனுள்ள தொகுப்பு.
அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகளை சுட்டிக்காட்டிய கட்டுரை. அருமை.

இப்பொழுதுதான், இது போன்று பண்பின் அடிப்படையில், சொல்லைப் பற்றிய ஒரு கட்டுரையைப் பதித்தேன்.
http://aranggetram.blogspot.com/2008/11/blog-post_08.html

நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஹேமா...

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா...

@ ச்சின்னப் பையன்

எதுக்குங்க படத்தை மாற்றனும்... 10 காரணம் சொல்லுங்க... வருகைக்கு மிக்க நன்றி..

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மு.வேலன்

வருகைக்கு நன்றி வேலன்... இதோ பார்க்கிறேன் உங்கள் பதிவை...

கோவி.கண்ணன் said...

நல்லா எழுதி இருக்கிறாய் விக்கி !

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோவி.கண்ணன்

நன்றி அண்ணா...

ஆட்காட்டி said...

மன்னிப்பு, நன்றி எப்போதும் தேவையில்லை. ஒருவன் என்னை இடித்து விட்டான். மன்னிப்பு கேட்டு விட்டு போயிட்டான். அவனுக்கு என்னைத் திரும்பிப் முகத்தை பார்க்க கூட நேரமில்லை. அவனுகு தெரியுமா யாருக்கு கூறினான் என்று. அப்புறம் எதுக்கு fபோர்மாலிற்றிஸ்?

ஜோசப் பால்ராஜ் said...

விக்கியண்ணா,
நெம்ப நல்லா சொல்லியிருக்கீங்கண்ணா.

நன்றிங்ணா.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆட்காட்டி

வருகைக்கு நன்றி... உங்கள் பார்வையில் நீங்கள் சொல்வது சரியாகலாம்... ஒரு முறை ஒரு வெள்ளையின் மீது தெரியாமல் இடித்துவிட்டேன். நல்ல குடி போதையில் இருந்தான். அவன் என்னிடம் கேட்டான். 'டீ யூ திங் திஸ் இஸ் இந்தியா?' என்று? இந்த மாறி ஆட்களிடம் கூட மன்னிப்புக் கேளாமல் வந்துடுவிங்க அப்படி தானே?

ஆட்காட்டி said...

சரி தான்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜோசப் பால்ராஜ்

வருகைக்கு நன்றி அண்ணே...

@ ஆட்காட்டி

அப்ப சரி...

ச.பிரேம்குமார் said...

அருமையான மிகவும் பயனுள்ள ஒரு பதிவு விக்கி. இட்டதற்கு நன்றி

//ஒருவரை பெயரிட்டு அழைப்பதைவிட 'ஐயா' 'அண்ணா' போன்ற சொற்களே நயமாக இருக்கும்.//

பெயரை குறிப்பிட்டு மரியாதையாய் பேசினால் கூட சரி தான்.... ஆனால் போகும் வரும் எல்லோரையும் 'சார்' போட்டு கூப்பிடுபவர்களை கண்டால் தான் எனக்கும் இன்னும் எரிச்சல் வரும்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ பிரேம்குமார்

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி... ஏன் சார்ர்ர் உங்களுக்கு எரிச்சல் வருது :P சும்மா டமாஸ்...

Anonymous said...

நம்மை ஒருகணம் உள்நோக்கி பார்க்க செய்யக்கூடிய படைப்பு. சிறப்பான தொகுப்பு. எனக்குள் ஓர் அலசல் துவங்கிவிட்டது.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வெவ்வந்தி

அய்யய்யோ ரொம்ப அலசி சாப்பிட்டதை வாந்தி எடுத்துடாதிங்க... வருகைக்கு நன்றி... மீண்டும் வருக...