பத்து நபர்கள் மரணமடைவாரெனின் அதில் ஒருவர் புகையிலையின் பக்கவிளைவினால் மரணமடைகிறார். இதை ஒட்டு மொத்தமாக காண்கையில் ஒரு வருடத்திற்கு 5 கோடி இறப்புகளுக்கு சமமாகும். பெரும்பான்மையான மரணங்கள் மாரடைப்பு, புற்று நோய் மற்றும் சுவாச கோளாருகளால் எற்படுகின்றன. அமெரிக்காவில் மூச்சுக் குழாய் அடைப்பினால் மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சமீபத்தய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
புகை பிடிப்பது மரணத்தை நம் வீட்டின் அடி வாசலுக்கு அழைப்புவிடுக்கும் செயல் என்பார்கள். புகை பிடிக்கும் பழக்கமானது புகைப்பவனை மட்டுமல்லாது அவனைச் சூழ்ந்து இருப்பவரையும் பாதிக்கிறது. உறிஞ்சப்படும் புகை புகைப்பவனின் இருதயம், சுவாசப்பை மற்றும் மூளை போன்ற அங்கங்களை பாதிக்கிறது.
ஒரு வெண்சுருட்டில் அடங்கியுள்ள தார், நிக்கோடின், மற்றும் பல இரசாயன பொருட்களின் கலவை புற்று நோய், டீபி, மூளையில் இரத்தம் கசியச் செய்தல் என பல நோய்களை உண்டாக்கின்றன.
உறிஞ்சப்படும் புகையில் 4000 இரசாயனப் பொருட்களும் அவற்றுள் 200 விஷ இரசாயனங்களும் உள்ளன. மேலும் 43 வகை இரசாயனங்கள் புற்றுநோயை உண்டு பண்ணுபவை. வெளியேற்றப்பட்ட சிகரட்டு புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்க வாத நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம். பக்கவாத நோய் ஒருவரின் பார்வையிழக்கச் செய்யலாம், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்படையச் செய்யலாம், உயிரைக் கூட குடித்துவிடலாம்.
புகை பழக்கம் கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 1 முதல் 10 சிகரட்டுகள் புகைப்பாராயின் அவர்களில் 29 சதவிகிதத்தனரின் சிசுக்கள் ஊனமாய் பிறக்கிறது. இதை தவிர்த்து புகைக்கும் பழக்கம் ஒருவரின் பணத்தையும் பாழ்படுத்துகிறது என்பது நாம் அறிந்த விடயமாகும்.
கடந்த நான்கு நூற்றாண்டுகளாக புகை பழக்கத்தின் பாதிப்புகள் சரிவர அறியாமலே இருந்தது. ஆதலால் புகை பிடிப்பதின் பக்கவிளைவுகளும் கட்டுபாடின்றி வளர்ந்து கொண்டே இருந்தது. புகையிலையின் பக்க விளைவுகளை உணர்த்தும் நோக்கில் விழிப்புணர்வு பட்டரைகளும் விளம்பரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் புகைப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புகைப்பவரிடையே உண்டாகும் புற்றுநோயும், மாரடைப்பும் பிரிட்டனில் ஏற்படும் 30% மரணத்திற்கு முக்கிய காரணமாய் அமைக்கிறது.
புகை பழக்கத்தை விடுவோமேயானல் அதன் பலன்கள் ஐந்து வருடத்தில் நம்மால் உணர முடியும் என்கிறது ஒரு தகவல்.
புகைக்கும் பழக்கம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். உடலுறவில் அதிருப்தியும் சுக்கில உற்பத்தியும் குறைந்து போகும். ஒரு ஆய்வின்படி புகைபிடிக்கும் ஆண்களில் 30-40 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதத்தினருக்கு ஆண்மை வீரியம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
புகை பழக்கம் கொண்டவர்கள் விரைவாகவே முதுமைத் தன்மையோடுக் காட்சியளிப்பார்கள். இது புகை பிடிக்காதவரைக் காட்டினும் ஆண்களுக்கு 2 மடங்கும் பெண்களுக்கு 3 மடங்கும் ஒப்பானதாகும். இதற்கு என்ன காரணம்? சிகரட்டு புகை நம் உடலில் காணப்படும் A வகை விட்டமினைக் குறைக்கும். விட்டமின் A நமது தோல் பாதுகாப்பிற்குடையதாகும். இவ்விட்டமின் குறைவினால் இயல்பான வயதை விட முதுமை தோன்றமே முந்தி நின்று காட்சி அளிக்கும்.
புகையிலையில் காணப்படும் Acetyldehdye எனப்படும் இரசாயனம் நமது உடலில் காணப்படும் C வகை விட்டமீன்களை குறைத்துவிடும் தன்மையைக் கொண்டது. ஒரு துண்டு சிகரட்டு புகைப்பவரின் உடலில் காணப்படும் 20மில்லிகிராம் C வகை வைட்டமின்களை அழிக்கிறது.
ஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது. அதாவது புகை உறுஞ்சுபவரை காட்டினும் அவரை சுற்றி இருப்பவருக்கே பாதிப்புகள் பல மடங்கு அதிகமாக உள்ளது. முக்கியமாக குழந்தைகள் பெரியவர்களை காட்டினும் விரைவாக சுவாசிப்பார்கள், அப்படி சுவாசிக்கப்படுபவர்கள் இளம் பிராயத்திலேயே பாதிப்படைகிறார்கள், நோய்க்குற்படுகிறார்கள்.
70 கோடி சிறார்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் வீடுகளில் வாழ்வதாக குறிப்பிடுகிறார்கள். சிகரட்டு புகை, சிறார்களின் உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. அமேரிக்க ஆய்வறிக்கை ஒன்று மிதமான சிகரட்டு புகையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட ஆய்வின்படி அவர்களிடையே படிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக காட்டுகிறது.
புகை பழக்கம் கொண்டவர்கள் முல்லங்கி ரசம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் புகை பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஓர் தகவல் விளக்கம் கொடுக்கிறது. சீறிய வாழ்விற்கு புகை பிடிக்காதிருப்போம். இறுதியாக ஒரு கவுஜை சொல்லிக் கொள்கிறேன்.
புகைப்பழக்கம்
கைவிரலணைத்துக்
காதலிக்கும் செயல்.
காற்றைக்
கவலையின்றி
கற்பழிக்கும் புயல்.
(பி.கு: 5/6 மாதங்களுக்கு முன் எழுதி வைத்தேன். நேற்று தூசு தட்டபட்டது.)
21 comments:
நல்ல பதிவு...
:))
அருமையான கட்டுரை விக்கி. கவிதை அதைவிட சூப்பர்.. பாராட்டுக்கள்.
முள்ளங்கி 2 கிலோ வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.
:-(((...
மது மற்றும் புகையிலை கம்பனிகளை மூடுவதே இந்த தீய பழக்கங்களை ஒழிக்க ஒரே வழி. மற்றபடி எச்சரிக்கை செய்வதால் பெரிதாக எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அனால் இதை செய்ய வேண்டிய அரசோ இவற்றின் மூலம் எவ்வளவு வருவாய் என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
//
"வாங்க சார் ‘தம்’ அடிக்கலாம்!!"
//
என்ன ஒரு ஆணீய சிந்தனை தலைப்பில் கண்டனங்கள்!!
:)))
பதிவு அருமை
//புகைப்பழக்கம்
காலனைக்
கைவிரலணைத்துக்
காதலிக்கும் செயல்.காற்றைக்கவலையின்றிகற்பழிக்கும் புயல்.//
அருமை விக்கி!
இந்தப் பதிவை உங்கள் அனுமதியோடு அதிஷாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!
மிக நல்ல பதிவு..
நல்ல பதிவு, அருமை.
அருமையான பதிவு நண்பா... கவிதை கலக்கல் :)
//
புகைப்பழக்கம்
காலனைக்
கைவிரலணைத்துக்
காதலிக்கும் செயல்
//
நல்ல கேலப்புராய்ங்கயா பீதிய......
பதிவு அருமை....
நல்ல பதிவு, அருமை.
எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.
கவிதை அருமை.
நல்ல பதிவு. இது போல் பயனுள்ள நிறைய பதிவுகளைத் தொடர்ந்து எழுது....
வாழ்த்துக்கள்
நல்ல பதிவு ;)
இருங்க ஓரு தம் அடிச்சிட்டு வந்து படிக்கிறேன் :)
காலனைக்
கைவிரலணைத்துக்
காதலிக்கும் செயல்.
/
/ அருமை
உங்கள் புகைபழக்கம் பதிவுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த படங்கள் பகீர் என்கிறது.
இன்றிலிருந்து புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுகிறேன்!
புகை பிடிக்காதே என்று அதன் தீமை பற்றி விளம்பரம் செய்யும் அரசுகள் அந்தகம்பெனிகளை மூடலாமே?
அதை செய்வதில்லை !காரணம் புகையிலை அரசியல்!
அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள். நம்மை போன்ற தேசங்கள் அமெரிக்காவிடமும்,உலக வங்கியிடமும் புகையிலையால் ஏன் மண்டியிட்டு இருக்கின்றன என்பதையும் விளக்குங்கள்!
எல்லோருக்கும் நன்றி...
//ஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது. //
இதை புரிந்து கொண்டு "தம்மர்கள்" பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருத்தல் (யாவருக்கும்) நலம்.
நான் கூட ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் (http://mukkonam.blogspot.com/2009/05/blog-post_09.html) தலைப்பு: வாங்க சார், தியானம் பண்ணலாம்! என்ன ஒரு தற் செயல் நிகழ்வு!
Post a Comment