பதினேழு இலக்கம் தமிழர்கள் வாழும் மலேசிய நாட்டுக்குத் தானே தமிழ் வாழ்த்து எழுதித் தருவதாக்க் கூறிய கவியரசு வைரமுத்துவின் பேச்சுக்கு மலேசியக் கவிஞர் காரைக்கிழார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவின் இந்தப் பேச்சு தன்மூப்பானது என்றும் மலேசியக் கவிஞர்களை மதிக்காத வரம்பற்ற செயல் என்றும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கரைக்கிழார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்நாட்டில் உள்ள தமிழ்க் கவிஞர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முத்து கிளவாச் செரிவு’
அறிவுமிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது!
கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் பற்றி அறிந்தபோது, வள்ளுவரின் மேற்கண்ட குறள் மீண்டும் நினைவுக்கு வந்தது.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரனின் நூல் வெளியீட்டு விழாவின்போது, கவிஞர் சீனி நெய்னா முகமதுவின் பாடல் தமிழ் வாழ்த்தாகப் பாடப்பட்டது. அந்த தமிழ் வாழ்த்துப் பற்றிக் கருத்துச் சொல்ல வந்த சிறப்பு பேச்சாளர் வைரமுத்து, தமிழ்வாழ்த்து சுருக்கமாக இரண்டொரு மணித்துளிகளில் இருக்க வேண்டும் என்றும், அது ஒரே பாடலாகவும் எல்லா அமைப்புக்களுக்கும் அதனையே பாடுமாறும் அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.
அத்தோடு நிறுத்தியிருந்தால் தேவலை. அதற்கும் ஒரு படி மேலே சென்று, நானே எழுதி நானே இசையமைத்துத் தருகிறேன். அதனை மலேசியத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த நாட்டின் சுவாமி இராமதாசர், கவிஞர் க.பெருமாள், புலவர் முத்தையனார், கனல் கவிஞர் அ.பு.திருமாலனார், கவி புயல் கரு.வேலுச்சாமி, போன்ற இன்னும் பன்னூறு மறைந்த கவிஞர்களின் படைப்புகள் மங்கிப் போகமல் இருக்கின்றன.
வாழ்ந்துக் கொண்டிருக்கும் பன்னூறு பாவலர்களின் படைப்புகளும் இங்கே வலம் வந்து கொண்ருக்கின்றன. அவற்றிலிருந்தெல்லாம் சில வரிகளை தேர்ந்து தமிழ் வாழ்த்தாக அமைக்க முடியாதா என்ன?
முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தியவர்கள் நாங்கள். முதல் தமிழ் கவிதை மாநாடு நடத்தியவர்கள் நாங்கள். முதல் சித்தர்கள் மாநாடு நடத்தியவர்கள் நாங்கள் எங்கள் நடுவிலேயே இப்படி ஒரு அவலமா?
தான் பிறந்த மண்ணிலேயே தமிழ் வாழ்த்து எழுத வாய்ப்பில்லாத வைரமுத்துவுக்கு மலேசிய மண்ணில் இப்படி பேசும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது?
'மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் நீராருங் கடலுடுத்த’ எனும் பாடல் தமிழகத்தின் தமிழ் வாழ்த்தாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்த கவிஞர் கண்ணதாசனை ஒரு தமிழ் வாழ்த்து எழுதுமாறு எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டார். அதற்கு கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா?
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பாடலைக் காட்டிலும் ஒர் உயர்வான பாடல் உண்டா? அந்தப் பாடலில் எல்லாமும் இருக்கிறது. அந்தப் பாடலே இருக்கட்டும் என்று சொன்னார் கவியரசு கண்ணதாசன்.
நாட்டுக்கொன்று ஒரு நாட்டு பண் உண்டு. கட்சிக்கென்று ஒரு கட்சிப் பண் உண்டு. இயக்கத்திற்கென்று ஒரு இயக்கப் பண் உண்டு. அவையாவும் அந்த நாட்டுக் குடி மக்களால், குடிமக்களில் ஒரு பாவலனால் எழுதப்பட்டவையே என்பதைக் கூட வைரமுத்து உணரவில்லையே?
இங்கிருக்கும் என்ணற்ற கவிஞர்களின் பாடல் வரிகள் அவ்வப்போது அந்தந்த மேடைகளில் தமிழ் வாழ்த்தாக ஒலிப்பதால் என்ன கெடுதல்?
என்னருந்தமிழே என்று ஒருத்தன் மகிழட்டுமே, என்னுயிர் தமிழே என்று இன்னொருத்தன் நெகிழட்டுமே, இன்கனிச்சாறே என்று ஒருத்தன் உருகட்டுமே, இன்பத்தேன் ஊற்றே என்று பிரிதொறுவன் மயங்கட்டுமே. இப்படி ஆயிரமாயிரம் தமிழ்க் கவிஞர்களும் தமிழை வாழ்த்தி அதன் சுவையை பருகட்டுமே.
கோடிக்கணக்கில் படைப்பாய்ச்சலாய் வரும் சுக்கிலத்தில் ஒன்றே ஒன்று கருவாகி உருவாகிக் காலத்தை வென்று நிலைப்பது போல். எங்கள் சொந்த வித்திலே கருக் கொள்ளட்டும் தமிழ் வாழ்த்து. உருக்கொள்ளட்டும் மலேசிய தமிழ் வாழ்த்து.
தமிழுக்கு நான் தான் கஞ்சி ஊற்றுகிறேன். தழிழுக்கு நான் சோறு போடுகிறேன். தமிழ் என்னால் தான் வாழ்கிறது. தமிழை வாழ வைக்கிறேன் என்று சொல்லி தமிழ்நாட்டு அறிஞர்பெருமக்களின் ஆத்திரத்தையெல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஒரு கவிஞன், எங்கள் தமிழ் இலக்கியக் கோட்டைக்குத் தமிழ் வாழ்த்துப் பாடிக் கொடியேற்ற நினைப்பதா?
என்ன கொடுமையப்பா இது?
இந்நாட்டு தமிழ் எழுத்தாளச் சிங்கங்களின் சுயமரியாதைக்கு எத்தகைய சோதனையப்பா இது.
மேலும் ஒரு சேதி. மலேசிய நாட்டு தமிழ்க் கவிஞர்களின், தமிழ் எழுத்தாளர்களின், தமிழ் படைப்பாளிகளின் மானம் காக்க வேண்டிய மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் அதன் தலைவரும் வைரமுத்துவின் இந்தச் செயலைப் பாராட்டுவதும் பெரும் பாக்கியம் எனக் குறிப்பிட்டிருப்பதும், இந்த நாட்டு தமிழ் இலக்கிய உலகம் பெற்ற சாபக்கேடு. சமுதாயக் கறை என்றுதான் கூற வேண்டும்.
கொல்லன் தெருவில் ஊசி விற்கும் முயற்சியைக் கைவிடுங்கள். அன்றேல் உங்கள் பண்டமாற்று பெரு வணிகம் ஊசிப் போகும்.
வைரமுத்துவின் வரம்பு மீறிய பேச்சும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரங்கதக்க செயலும் விரைந்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
‘வருமுன் காவாதான்
வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்’.
நன்றி: மலேசிய நண்பன்
31 comments:
தமிழீழழத்திற்கும் தேசிய கீதம் தான் எழுதி தருவதாக வைரமுத்து சொல்லியிருக்கிறார். :)
கவிஞர்கள் பொதுவாக உணர்ச்சி வசப்படுபவர்கள். வைரமுத்து கொஞ்சம் கூடுதலாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.
மலேஷியக் கவிஞர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. அவை புண்படப் பேசிய தவற்றினை வைரமுத்துவுக்குப் புரிய வைத்தால் மன்னிப்பும் கேட்கக் கூடிய அளவுக்கு இளகியவர் தான் என்றே நினைக்கிறேன்.
:( இது வைரமுத்து பேச்சிற்கு..
:)) இது கண்ணதாசன் பேச்சிற்கு..
ஹா ஹா ஹா
//முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தியவர்கள் நாங்கள். முதல் தமிழ் கவிதை மாநாடு நடத்தியவர்கள் நாங்கள். முதல் சித்தர்கள் மாநாடு நடத்தியவர்கள் நாங்கள் எங்கள் நடுவிலேயே இப்படி ஒரு அவலமா?
தான் பிறந்த மண்ணிலேயே தமிழ் வாழ்த்து எழுத வாய்ப்பில்லாத வைரமுத்துவுக்கு மேலேசிய மண்ணில் இப்படி பேசும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது?//
வைரமுத்து சொன்னது தவறுதான்.
ஆனால் அதென்ன நாங்கள் நாங்கள் என்ற வார்த்தை பிரயோகம். அப்ப நீங்கள் வேறு இந்தியத் தமிழர் வேறு என்றுதானே அர்த்தம்.ஏற்கனவே, இந்தியாவிலிருந்து போகும் தமிழனை மலேசிய தமிழர்கள் மதிக்க மாட்டார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன்.
எனக்கு என்ன தோணுதுனா, மலேசியாவிற்கு தமிழ் வாழ்த்து வைரமுத்து எழுது கூடாதுனா அது தமிழல எழுதக் கூடாது.. தமிழ் வாழ்த்துனா அது எந்த தமிழனும் எழுதலம்... அது என்ன மலேசிய தமிழன் மங்கோலிய தமிழன்.. எனக்கு இந்த மாதிரி அடையாளம் எதுவுமே பிடிப்பதில்லை.. எப்படி ஒருவன் நான் இந்த மதம் இந்த சாதி என்று மார்தட்டுகிறானோ அது போல்தான் இதுவும்... அது தவறென்றால் இதுவும் தவறுதான்.. மனுஷனா இருங்கப்பா அப்புறம் இந்தியனா தமிழனா இந்துவா அய்யரா இருக்கலாம்...
//கொல்லன் தெருவில் ஊசி விற்கும் முயற்சியைக் கைவிடுங்கள். அன்றேல் உங்கள் பண்டமாற்று பெரு வணிகம் ஊசிப் போகும்.//
இது சூப்பர், வைரமுத்துவின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. திறமைசாலிகளுக்கு ஆணவம் இருக்கும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியத் தேவை இல்லை. பேச்சின் காரணத்தை உணர்ந்து கொண்டு புறம் தள்ளுவதே நல்லது.
ஆளாளுக்கு பிரசனைன்னா அப்போ ஓடி வாருவாய்ங்க, எல்லாரும் தமிழன் அப்படீன்னு. இப்போ மட்டும் மலேஷிய தமிழன் வேற, ஒரிஜினல் தமிழன் வேறன்னு பேச்சு!
பிரச்னையின் போது மட்டும் உங்க முதுகு சொரிதலுக்கு நாங்க தானா கிடைச்சோம்?
வைரமுத்து சொன்னதில் தவறேதுமில்லை.
அது தவறு என்றால், பிரச்னையின் போது தமிழகத்தை நோக்கி ஓடி வருவதையும் அவர்கள் நிப்பாட்ட வேண்டும்.
@கொழுவி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
@ரத்னேஸ்
நன்றி
@சென்ஷி
நன்றி தலைவரே.
@அகரம் அமுதா
எதுக்கு இந்த சிரிப்பு.
//இந்திய தொழிலாளிகள் சிலர் கொடுமை செய்யப்பட்டது நான் அறிவேன். அதற்காக வருந்துகிறேன்.//
ஐயா, இந்திய தொழிலாளிகள் பிரச்சனை பற்றி நான் எழுதவில்லை.
நான் சொல்ல வந்தது என்னவெனில் ஏன் மலேசியத் தமிழன் , ஈழத்தமிழன் என பிரிக்கின்றீர்கள். கொழுவி வந்து வேறு கும்மிவிட்டு போகிறார். ஆனால் மலேசியத் தமிழனுக்கும் , ஈழத்தமிழனுக்கும் பிரச்சனை என்றால் மட்டும் தொப்புள்குடி உறவு ஞாபகத்திற்கு வந்துவிடுமா?
நிற்க. கவிஞர் வைரமுத்து மலேசிய நாட்டுக்குத் தமிழ் வாழ்த்து எழுதி தருவதாய் சொல்லவில்லை.
உலக தமிழர்கள் அனைவருக்கும் ஏற்ற தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக மலேசியாவில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கூறினார்".
இதற்கு கவிஞர் வைரமுத்து முழு உரிமை உண்டு.
தவறான கருத்தை மலேசியா தமிழர்கள் ஏற்படுத்தி உள்ளனர். இப்போது உள்ள தமிழ்த்தாய் வாழ்த்து மற்ற தேசத்துக்கு பொருந்தாது என்று கூறி தானே பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து எழுத போவதாக தான் வைரமுத்து கூறியுள்ளார். இதில் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.
இப்படித்தான் அடிச்சுக்கிட்டு ஒரு தேசம் விடியல் காணமால் உள்ளது. மறுபடியுமா?
முதலில் நமக்குள் ஒற்றுமையாக இருப்போம். வீண் விவாதம் வேண்டாம்.
உங்கள் பதிவைப் படித்துவிட்டு கொழுவி சொல்லவந்ததை தான் சொல்லவந்தேன். வைரமுத்துவின் ஆர்வக் கோளாறு என்று விட்டு விடுங்கள்
@அனானி
வருகைக்கு நன்றி. எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் சம்பந்தப்பட்டவர் மற்றவரை துச்சமாக எண்ணுவது மட்டும் முறையா நண்பரே? நீங்கள் பேச வருவது பதிவுக்கு சம்பந்தம் இல்லா தகவல். இந்திய தொழிலாளிகள் சிலர் கொடுமை செய்யப்பட்டது நான் அறிவேன். அதற்காக வருந்துகிறேன்.
@கார்க்கி
வருகைக்கு நன்றி நண்பரே,
நான் சொல்ல வருவது பிறிவினையை அல்ல. நெய்னா முகமதுவின் வாழ்த்துப் பாடலில் என்ன வந்தது. நெய்னா நாடறிந்த மூத்தக் கவிஞர். அவர் கவிதையில் குற்றம் இருப்பின் கூறலாம். மாற்றி அமைக்க வேண்டும் என்பது என்ன முறை. பிறிவினையப் பார்த்திருந்தால் வைரமுத்துவை எதற்காக அழைக்கின்றார்கள். எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வு இருக்கிறது. மலேசிய திருநாட்டில் எவ்வளவோ தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவ்ர்களை குறைத்து மதிபிடுவது முறையா?
@மாயவரத்தான்
வருகைக்கு நன்றி. பதிவிற்கும் நீங்கள் பேசுவதற்கும் சம்பந்தம் இருக்கிறதா தோழரே?
@அனானி
மீண்டும் வருகைக்கு நன்றி. உங்கள் தகவலுக்கும் நன்றி. ஊடகங்களில் எழுதி இருப்பதை விட நேறில் கண்டவர்களுக்கு, அவர் பேசியதை கேட்டவருக்கு இதை பற்றி தெரியாதா என்ன பேசினார் என்று?
@கோவி கண்ணன்
வருகைக்கும். கருத்துக்கும் நன்றி நண்பரே.
@திலிபன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.
@கானா பிரபா
நன்றி தோழரே.
என்னால தமிழ்த்தாய் வாழ்த்து எழுத முடியும் சொல்றது நம்பிக்கை..
என்னால மட்டும்தான் அது முடியும் சொல்றது தலைக்கனம்.. இதுல எந்த ஊர் தமிழனா இருந்தா என்ன?
கண்ணதாசனோட அற்புத வரிகள்தான் ஞாபகத்துக்கு வருது...
"பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா..!"
மிகவும் ஆழமான பதிவு.வைரமுத்து எல்லோரும் மதிக்கக் கூடிய கவிஞர்.அவரது பேச்சை ஏன் ஆக்கப்பூர்வமனதாக ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?நானும் இதே மலேசியாவில் கூலி வேலை செய்யும் தமிழகத் தொழிலாளி தான்.வைரமுத்துவின் பேச்சு சற்று எல்லை மீறியது என்றாலும்,மலேசியத் தமிழர்,இந்தியத்தமிழர் என பிரிகக வேண்டாமே !!!!
தமிழ் நாட்டிலே, தமிழ் பாடப் புத்தகங்களிலே, தமிழ் வதைக்கப் படுகிறது. அதை கவிப்பேரரசு தடுத்து நிறுத்துவாரா? இதற்க்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவர் என்றால் தனி இடம். தமிழைப் பேணுவதில் புலம் பெயர்ந்தவர்கள் ஒரு படி மேலே இருக்கிறார்கள் என்பது என் கருத்து.
விக்கி உங்கள் எழுத்தை தவறாது படிக்கிறேன். நல்ல பதிவுகள் தருகிறீர்கள். இதனை நேற்றே நண்பனில் படித்தேன்.
பதிவிடவே தோன்றியது. உங்கள் பதிவைப் பார்த்ததும் பின்னூட்டம் இருகிறேன்.
கவிஞர்கள் பொதுவாக உணர்ச்சி வசப்படுபவர்கள். எப்பவுமே கூடுதலாக உணர்ச்சி வசப்படுவார். அது இப்பொது நடந்து இருக்கிறது. அவர் மீது குற்றம் தான். எவ்வளவோ படித்துள்ள அவருக்கு தமிழுக்கும் மலேசிய தமிழுக்கும் வேறுபாடு தெரியாது போய் விட்டது.
மலேசியாவில் மற்ற பிற நாடுகளில் பிரச்சினை என்றால் தமிழர்கள் குரல் கொடுக்கனுமாம். அப்படி இல்லைனா அவன் தமிழினத் துரோகி.
அவர் உங்களுக்கு முடியாது என்று கூறியதாக எப்படி கூறமுடியும். என்னாலும் உங்களுக்குத் தேசிய கீதம் எழுத்தித் தரமுடியும் என ஒருகவிஞன் விருப்பம் சொன்னது குற்றமா?
உங்களின்(மலேசிய தமிழ்ச் சமூகத்தின்) செயல்கள் அனைத்தும் மதிக்கப் படுகிறது.
சோற்றை மதிக்காத ஒருவனை சோற்றுப்பானைக்கு கோவில் கட்ட சொன்ன என்ன சொல்வானோ அதுதான் இப்போது நடந்துள்ளது.
இங்கு வைரமுத்து பிரச்சினை இல்லை. அவர் வந்த இடமும், அவரின் தமிழினப் பற்றும் தான் பிரச்சினை.
பாவம்!!! வெளுத்தது எல்லாம் பால் என்றெண்ணிவிட்டார் போலும்.
பரவாஇல்லை கவிஞரே!!!
உலகம் உன்னைப் பார்த்து.... என்ற உம் கவிதான் இங்கு முடிவாகக் கூறமுடியும்.
தமிழனை எல்லையற்றுப் பார்க்கத் தெரியாத "இருவாழ்வித் தமிழன்" இல்லை என்று நம்புவோம்
தமிழன் நம்பி.
உலக தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார் ஒரு பொதுப்பாடல் தேவை. தமிழ்நாட்டின் `நீராரும் கடலுடுத்த' மலேசிய மண்ணுக்கு பொருந்தாது.
அதனால் தாயகத்தை பிரிந்து வாழும் தமிழர்கள் அனைவரும் எல்லா நாடுகளிலும் பாடுவதற்கு ஏற்றவாறு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதி என் சொந்த பொறுப்பில் இசையமைத்து ஒலிப்பதிவு செய்து வழங்கலாம் என்று கருதுகிறேன் என்றார். இப்படி கூறியதில் என்ன தவறு என்பது புரியவில்லை? இதற்காக இந்திய தமிழன், மலேசிய தமிழன் எல்லாம் ரொம்ப ஓவர்...
கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற தன்னடக்கம் இருந்திருந்தால் அவர் இப்படி பேசியிருக்க மாட்டார்...
@சென்ஷி
அண்ணே அடிச்சி ஆடுரிங்களே... தெய்வம் நீங்க... சஞ்சய் ராமசாமியான சென்ஷி வாழ்க.
@செல்வம்
வருகைக்கு நன்றி நண்பரே. பிறிவினையை காட்டவதற்கு முனைப்பாக இவ்வறிக்கை இல்லை. மலேசியாவில் உள்ளவர்கள் தமிழுக்காக மாநாடுகளையும் பல நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார்கள். இங்கே இருக்கும் தமிழறிஞர்களாலும் கவிதை வடிக்க முடியும் அதை ஏன் வைரமுத்து உணரவில்லை. நெய்னா முகமதுவின் பாடலில் என்ன குத்துது.
@பழமைபேசி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே, மீண்டும் வருக.
@அனானி
பதிவை பற்றிய கருத்துக்கு நன்றி. அரசியலை புகுத்துவதற்கு கண்டனங்கள். அரசியல் சார்ந்து வரும் பின்னூட்டங்களை இனி வெளியிட மாட்டேன். நன்றி.
@ஞானசேகரன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
@உஷா
உலகளவு கற்றுவிட்டால் தன்னடக்கம் தேவை இல்லைனு சொல்றிங்களா?
@ ஆட்காட்டி
உங்கள் விமர்சனம் மிக கடுமையாக இருக்கிறது. அதை இப்பொழுது வெளியிட முடியாததற்கு வருந்துகிறேன். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
காசுக்கு மட்டுமே கவிதை எழுதறவரை அதுவும் ஆங்கிலம் கலக்காமல் எழுதத் தெரியாத ஒருவரை கவிப்பேரரசு( கண்ணதாசன் கூட கவியரசு தான்.. இவர் பேரரசு.. கர்மம் ) என்று சொல்லி ஏத்தி விட்டால் இதுவும் பேசுவார் இதர்கு மேலும் பேசுவார். :(
@sanjai
வருகைக்கு நன்றி அண்ணாச்சி
@Bleachingpowder
உங்கள் பின்னூட்டம் வெளியிட முடியாததால் வருந்துகிறேன். சற்றும் சம்பந்தம் இல்லாத விடயம். வருகைக்கு நன்றி நண்பரே.
நான் பார்த்த, சந்தித்த மக்களை பற்றி என்னுடைய அனுபவத்தையும், கருத்தையும் மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். இது உங்கள் பதிவு. பின்னூட்டத்தை வெளியிடவும், மறுக்கவும் எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. பின்னொரு சந்தர்பத்தில் சந்திப்போம். நன்றி.
@ஜோசப்பால்ராஜ்
அண்ணா நீங்கள் கூறிய கருத்து நியாயமானது. இப்பதிவு அரசியல் சார்ந்தது இல்லை என்பதனால் அதை வெளியிடவில்லை. மன்னிக்கவும்.
நண்பரே!
நிற்க. முன்னதை கவனத்தில் கொள்க. எம்ஜிஆர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பதிலிறுத்த காலக் கவி கண்ணதாஸ் கூறியது மரபு.
ஆக இங்கு தான் ஒரு சிறப்பு விருந்தினனாக சென்ற இடத்தில் மார்தட்டுதல் பிறழ்வு, இது அவருக்கு மட்டுமில்லை. சார்ந்திருக்கும் மொழிக்கும். அனைத்து தமிழ் ஆன்றோர்களும் கூடி ஆலோசித்து யாவருக்கும் பொதுவான புதிய தமிழ் வாழ்த்து புனைய வேண்டி வரும் போது அதற்கான பணி ஒப்படைக்க வைரவனை கேட்டுக் கொள்ளல், அதற்கு இவர் பணிவுடன் செவி சாய்த்தல், ஆக மிக விருத்தம் காணல் மரபினும் மரபு. மற்றவை சேற்றில கால் வைத்தல் காலமறியாது போல.
அவையடக்கத்தை அவர் கற்றுக் கொள்ளல் நலமே.
வைரவனே அடக்கி வாசிப்பா!
நன்றி
இராஜா-பெங்களூரூ
விக்னேஷ்,
தங்கள் தளத்தைப் பார்வையிட்டேன். காரைக்கிழார் ஐயாவின் கண்டன அறிக்கையை வெளியிட்டு நல்ல பணி செய்துள்ளீர்கள். பாராட்டுகிறேன்.
தமிழகத்தையும் வைரமுத்துவையும் நாம் பெரிதும் மதிக்கிறோம். அதற்காக நம்முடைய தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியுமா என்ன?
முதலில் நாம் எல்லோரும் தமிழ் அன்னையின் பிள்ளைகள் என்று அன்புடன் உணர்ந்திடுவோம். பல நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ் உணர்வால் நாம் ஒன்றுபட்டுத் தானே இருக்கிறோம். இலங்கையில் கொடுமையில் வாடும் நமது மக்களை சட்டப்படி எப்படி காப்பாற்றுவது என்று யோசிப்போமே!
அன்புடன்
என் சுரேஷ்
nsureshchennai@gmail.com
கவிப்பேரரசின் தமிழில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். அதற்காக, அவர் சொல்லுவதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ள முடியுமா?
தமிழ் நாட்டுக்கு வெளியே பாடுவதற்குத் தனியாக ஒரு தமிழ் வாழ்த்தை எழுதித் தர அவரை யாரும் கேட்கவில்லை. இருப்பினும், இருக்கின்ற மிகச் சிறந்த தமிழ் வாழ்த்துகளுக்கு இணையாக ஒன்றை அவர் எழுத விரும்பினால் அதற்கும் யாரும் தடை போடப் போவதில்லை.
எனவே, கவிப்பேரரசு தாராளமாக ஒரு மிகச்சிறந்த தமிழ் வாழ்த்தை எழுதட்டும்; முன்னணி இசையமைப்பாளரைக் கொண்டு இசை அமைக்கட்டும்.
கவிப்பேரரசு அவர்களின் தமிழ் வாழ்த்துக்கு மனோன்மணியனார், பாரதியார், பாரதிதாசனார், பாவாணர், பெருஞ்சித்திரனார் முதற்கொண்ட தமிழ்ப் பெரியார்களின் பாடலுக்கு இருக்கின்ற தனித்தன்மையும் தெய்வத்தன்மையும் இருந்தால் காலத்தால் நிற்கும்! கல்வெட்டாய் நிலைக்கும்! உலகத் தமிழர் ஊர்களிலும் உள்ளத்திலும் நீங்காமல் ஒலிக்கும்!
ஆக, கவிப்பேரரசு தாராளமாக வாழ்த்துப் பா எழுதலாம்!
ஒரு சபையில் உள்ள அறிஞர்களால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒரு கவிஞன், அங்கு பாடப்பட்ட பாடலை கேட்டு விட்டு தான் வேறொரு பாட்டு எழுதி தருகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
அங்கு இருக்கும் அனைவரும் ,பாடலை எழுதியவரும்,
பாடலும் ,பாடப்படும் தகுதியற்றது என்பது தானே அர்த்தம்?
இது வைரமுத்துவின் மனபிறழ்ச்சி என்றே படுகிறது?
அகந்தை மனதில் இருக்கும் மனிதனால் தான் இப்படி பேசப்படும் (நீங்கள்எழுதியிருப்பதுஉண்மையானால் )
இன்னொரு வகையில்நண்பர் கார்க்கி சொன்னது போல் அதென்ன தமிழர்களில் பிரிவு?(கொடுமை)
எந்த வகையில் பார்த்தாலும் வைரமுத்து சொன்னது தவறு என்றே படுகிறது.
அவர் ஒரு பாடலை எழுதி அது அனைத்து தமிழர்களுக்கும்,தமிழறிஞர் களுக்கும் பிடித்து போனபின் ஒத்த கருத்துடன் அந்த பாடலை தமிழ்வாழ்த்துபாடலாய் வைக்கலாம்.
அதைவிடுத்து "கைப்புள்ள" மாதிரி நான் எழுதுவது தான் தமிழ் இது போதும் உங்களுக்குஎன்ற ரீதியில் நான் எழுதித்தருகிறேன் வைத்துக்கொள்ளுங்கள் என்பதெல்லாம் மனபிறழ்ச்சி இல்லாமல் வேறென்ன?
மேலும் வைரமுத்து அளவுக்கு சிறந்த கவிஞர்கள் தமிழ் எழுத்துலகில் இல்லையா?
கொஞ்சம் பதில் சொல்லவும்.
//தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார் ஒரு //
ஐயா,
எனக்கு ஒரு சந்தேகம்;தமிழ்த் தாய்மார்கள் இரண்டு பேர் அல்லவா?இதில் எந்த தாயைப் பற்றி கவிப்பேரரசு பாடப்போவதாக பயமுறுத்தியிருக்கிறார்?
Post a Comment