தலைப்பு: வானம் தொட்டு விடும் தூரம்தான்
ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து
நயம்: சமூக நாவல்
பதிப்பகம்: சூர்யா
எனது செகரிப்பில் உள்ள புத்தகங்களில் கவிதை நூல்களும் அடங்கும். அதில் அதிக இடத்தை பிடித்திருப்பது கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை நூல்கள். பா.விஜய், கவிஞர் கண்ணதாசன், அறிவுமதி மற்றும் சில உள்ளூர் கவிஞர்களின் கவிதை நூல்கள் இருப்பினும், நேரம் அனுமதிக்கும் சமயங்களில் நான் அதிகம் புரட்டிப் பார்ப்பது கவிப்பேரரசின் கவிதை வரிகள்தான்.
சென்ற வருடம் கவிதை நூல்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது தட்டுப்பட்டது “வானம் தொட்டுவிடும் தூரம்தான்” எனும் புத்தகம். கவிதை நூலாக இருக்கும் என நினைத்துதான் கையில் எடுத்தேன். பின்னால் திருப்பிய பொழுது ‘இது கவிஞரின் முதல் நாவல்’ என அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு முன் கவிஞரின் ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’ என்ற கட்டுரை புத்தகத்தை வாசித்துள்ளேன். அதிக அளவிளான புத்திமதிகளை ஒரு இளைஞனுக்கு ஒரே புத்தகத்தில் புகட்ட முயற்சித்திருப்பது சற்று திகட்ட வைத்தது. அவரின் கவிதை வரியிலான புத்திமதிகளை ஏற்றுக் கொண்டு மனதையும் தேற்றிக் கொண்டேன்.
கையில் எடுத்த புத்தகத்தை வைக்க மனம் இல்லாமல், சரி என்னதான் இருக்கும், ஒரு கை பார்த்துவிடலாம் என வாங்கிவிட்டேன். உரைநடையில் கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் ஏமாற்றமாய் அமையலாம். உரைநடையையும் கவிதை தேனில் கலந்து கொடுப்பது கவிஞரின் பாணி.
நான் படித்து முடித்த பிறகு என் நண்பர் ஒருவர் இந்நூலை இரவல் வாங்கினார். இரண்டு வாரம் கழித்து “என்னால இரண்டு அத்தியாயத்துக்கு மேல முடியல மச்சி, நீங்களே வச்சிகுங்க” என திருப்பித் தந்துவிட்டார்.
நீங்கள் படிக்கும் போது வரிக்கு வரி இருக்கும் கவிதை வாடை உங்களை முகம் சுழிக்க வைக்கலாம். அதை ரசித்துக் கொண்டே புரட்டினால் நிச்சயம் இரண்டு நாட்களில் முடித்துவிடலாம்.
கதையின் நாயகன் வாஞ்சிநாதன், நாயகி செல்வி, மற்றும் முக்கிய கதா பாத்திரம் செந்தோழன். பட்டபடிப்பை முடித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் ஒரு இளைஞர் கூட்டத்தை சுற்றி நடக்கும் கதைக் கரு. வேலையில்லாமல் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கும் ஏழை இளைஞர்களுள் ஒருவன் தான் கதையின் நாயகன். அவன் செல்வியின் மேல் காதல் வயப்படுகிறான். யார் இந்த செல்வி? அந்த ஊர் பெரியவர் சங்கரலிங்கத்தின் மகள். சங்கரலிங்கம் கதையின் வில்லன்.
தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் ஊர் மக்களை தன் பிடியில் வைத்திருக்கிறான் சங்கரலிங்கம். சங்கரலிங்கத்தின் சூழ்ச்சியை ஊர் மக்களுக்கு உணர வைத்து வாஞ்சிநாதனையும் செல்வியையும் இணைத்து வைப்பதே கதைச் சுருக்கம். இந்நூலை வாசித்து முடித்தபோது பழைய சினிமா படத்தை பார்த்த கசப்பு உண்டானது. புதிய பாணியில் என்றால் சிம்புவின் படம். வித்தியாசமான நடையில் இருக்கும் நாவலை படித்த மகிழ்ச்சியும் உண்டானது.
கதையை படித்து முடித்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. “பணக்கார பெண்ணை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்ட வேலை இல்லா இளைஞன் இனி எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறான்?”
இது கவிஞரின் முதல் நாவல் என்பதை மனதில் வைத்து ஏற்றுக் கொண்டாலும், ஒரு மாறுதலுக்காக கதையை வேறு கோணத்தில் கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
சுவாரசியமான உரைநடை நாவலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் கசப்பு.
கவிதை வரியை நேசிப்பவர்களுக்கு தித்திப்பு.
18 comments:
அப்ப எனக்கு கசப்பு தான் :-)
நடுநிலை வகித்து நூல் ஆய்வினை செய்திருக்கிறீர்கள். அருமையான பதிவு..
//சுவாரசியமான உரைநடை நாவலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் கசப்பு.//
unmai ........
Dr.Sintok
his kavithai ok but he is bad story writer.........
kallikathu ethikasam.............. kodumai
Dr.Sintok
//கிரி said...
அப்ப எனக்கு கசப்பு தான் :-)//
வாயில் கொஞ்சம் சீனியை போட்டுகிட்டு படிக்கலாமே???
//சதீசு குமார் said...
நடுநிலை வகித்து நூல் ஆய்வினை செய்திருக்கிறீர்கள். அருமையான பதிவு..//
மிக்க நன்றி... அடிக்கடி இந்த பக்கம் வந்துட்டு போங்க...
//unmai ........
Dr.Sintok//
அவ்வ்வ்வ்வ்
//his kavithai ok but he is bad story writer.........
kallikathu ethikasam.............. kodumai//
அப்படி என்னங்க கொடுமை பன்னிட்டரு உங்கள...???
வணக்கம் இந்த நாவல் படமாகவும் வந்துள்ளது
கார்த்திக், ராதாரவி நடித்து படம் பெயர் நிணைவில்லை மண்ணிக்கவும்
நன்றி
//இராஜராஜன் said...
வணக்கம் இந்த நாவல் படமாகவும் வந்துள்ளது
கார்த்திக், ராதாரவி நடித்து படம் பெயர் நிணைவில்லை மண்ணிக்கவும்
நன்றி//
ஆஹா... என்ன ஒரு அவசரமான பின்னூட்டம்... தகவலுக்கு நன்றி.. மீண்டும் வருக...
ம்ம். நல்லாத்தாம் சொல்லியிருக்கீக... படிக்கிறேன்.... நன்றி...
//கார்த்திக், ராதாரவி நடித்து படம் பெயர் நிணைவில்லை மண்ணிக்கவும்//
நிணைவில்லை மண்ணிக்கவும் - அப்படின்னு ஏதாவது படம் வந்ததா என்ன!!!...ஹிஹிஹி
//இராஜராஜன் said...
வணக்கம் இந்த நாவல் படமாகவும் வந்துள்ளது
கார்த்திக், ராதாரவி நடித்து படம் பெயர் நிணைவில்லை மண்ணிக்கவும்
நன்றி
//
எனக்கு தெரிந்து இப்படி ஒரு படம் பார்த்திருக்கிறேன். அதன் பெயர் எனக்கும் நினைவில் இல்லை. அதனால் மன்னிக்கவும் தேவையில்லை :))
ஆனால் அந்தப்படத்தில் செந்தில் பத்து பைசா பிச்சைக்காரனாக நடித்திருப்பார்.
படம் பேர் யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா :(
//ச்சின்னப் பையன் said...
ம்ம். நல்லாத்தாம் சொல்லியிருக்கீக... படிக்கிறேன்.... நன்றி...//
படிங்க... படிங்க...
//நிணைவில்லை மண்ணிக்கவும் - அப்படின்னு ஏதாவது படம் வந்ததா என்ன!!!...ஹிஹிஹி//
:)
//எனக்கு தெரிந்து இப்படி ஒரு படம் பார்த்திருக்கிறேன். அதன் பெயர் எனக்கும் நினைவில் இல்லை. அதனால் மன்னிக்கவும் தேவையில்லை :))//
எனக்கு நினைவில்லை அதனால் மன்னிக்கவும் தேவையில்லை..படம் பேரு ரொம்ப பெருசால இருக்கு. எப்ப பார்த்த படம்... நீங்கதான் 1992ல இன்னும் பிறக்கவே இல்லையே...
//ஆனால் அந்தப்படத்தில் செந்தில் பத்து பைசா பிச்சைக்காரனாக நடித்திருப்பார்.
படம் பேர் யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா :(//
என்ன இது ஏதும் தண்ணி சாப்பிட்டு பின்னூட்டம் போடுறீங்களா? முதலில் தான் படம் பேரு எனக்கும் நினைவில் இல்லை அதனால் மன்னிக்கவும் தேவையில்லைனு சொன்னிங்க.. இப்ப என்னடான யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பானு சொல்றிங்க... ஸ்ப்பாபாபா... கண்ண கட்டுதே,,,,
கவிப்பேரரசு வைரமுத்துவின் எழுத்துக்கடலில் மூழ்கி மூச்சு முட்டிப்போனவர்களில் நானும் ஒருவன். தொடக்கக் காலத்தில் எனக்குள் இருந்த படைப்பாளனை எனக்கு அறிமுகம் செய்தது வைரமுத்துவின் வைர வரிகள்தாம்.
நல்ல நூலாய்வு. உங்களுக்குள் ஒரு நல்ல திறனாய்வாளர் இருக்கின்றார். அவருக்குத் தொடர்ந்து வேலை கொடுங்கள்.
தொடர்ந்து எழுதுகிறேன்.
இனியத் தமிழை
இணையத்தின் வழி
இணைந்து வளர்ப்போம்.
நற்குணன் ஐயாவிற்கு நன்றி... மீண்டும் வருக...
விக்கி.. சம்பந்தமில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்
பலத்த எதிர்ப்பின் காரணமாக என் கதையின் முடிவை மாற்றிவிட்டேன்!
வந்துட்டு போறது..
Post a Comment