பாலைவனங்கள் பல புதிர்களை அடக்கிக் கொண்ட பூமி. முக்கியமாக சஹாரா போன்ற இடங்கள் ஒரு காலத்தில் செழிப்பான பூமியாகவும் அங்கு உயிரினங்கள் வாழ்ந்த ஒரு சில குடில்களையும் கண்டறிந்திருக்கிறார்கள். பின் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தில் பல நிலப் பிரிவுகள் உண்டாகி இருப்பதாக சரித்திர மற்றும் அறிவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். மணல் பறக்கும் பாலைவனத்தில் அதிசயத்தக்க ஒன்று பிரமிடுகள். சரித்திரச் சுவடுகளை அறிய பேருதவியாக இருந்தவற்றுள் ஒன்று. பிரமிடுகளை பற்றி சொல்லும் போது அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த அரசர்களையும் உயர்குடியினரையும் தவிர்க இயலாது. பிரமிடுகள் முக்கியமாக அமைக்கப்பட்டதே இந்த அரச குடியினர்களின் பிணங்களை பதப்படுத்தி 'மாற்று உலகத்துக்கு' அனுப்ப தான் என்பது பொதுவாக அறிந்த ஒன்றே.
'மம்மி'கள் பற்றிய ஆராய்ச்சிக்களும் ஆய்வுகளும் வியகதக்கவை. மம்மிகள் மற்றும் பிரமிடுகள் சம்பந்தமான எனது தகவல் சேமிப்புகளுக்கு என்னை கட்டி இழுத்தது தூத்தன்கமன் எனும் பாரோ மன்னனின் ஆய்வுகள் தாம். இது சம்பந்தமான கட்டுரை போதுமான விளக்கங்களுடன் முன்னமே எழுதியிருக்கிறேன்.
இன்றய திரையுலகம் மம்மிகளை பேய்களாகவே காட்ட முற்படுகின்றன. மம்மிகள் என்றாலே வெறுக்கத்தக்க ஒன்றாகவும், அகோரமான மர்ம பொருள் எனவும் மக்கள் கருதுகிறார்கள். மம்மிகள் புதைக்கப்பட்ட கல்லறைகள் திறக்கப்படும் போது பல வருடங்கள் அழுத்தத்தில் இருந்த மைக்ரோஸ்போராக்கள் அதீத செயல்பாடுகளோடு இயங்கச் செய்கின்றன. இதன் காரணமாக குறைவான நோய் எதிர்ப்புச் சத்தியைக் கொண்டவர்கள் மம்மிகள் அறையப்பட்ட கல்லறையை அணுகிய சில காலத்தில் இறக்க நேரிடுகிறது. இது மம்மிகளின் பழி வாங்கள் என மேலும் மக்களிடம் பீதியை கிளப்பிவிடுகிறார்கள்.
பிரமீடு திருட்டு வெள்ளையன் ஆரம்பித்து வைத்த ஒன்றல்ல. அரசன் வேற்றுலகில் மிகுந்த சுகத்துடன் வாழ வேண்டுமென பிரமிடுகள் சொல்வம் கொழிக்க நிறப்பப்படுகிறது. துத்தன்கமன் அரசனின் கல்லறயில் கண்டெடுத்த அவனது செருப்பு கூட தங்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது.
எகிப்தியர்களின் நம்பிக்கைபடி கடவுளர்களாகிய அரசர்கள் பூமியில் தமது ஆட்சியை முடித்து வேற்றுலகிற்கு செல்கிறார்கள். அரசரை நன்முறையில் வழி அனுப்ப தங்கத்தால் ஆன பொருட்கள் கல்லறையில் நிறப்பப்படுன்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் தைரியம் கொண்ட சில எகிப்திய திருடர்களாலும் பிரமீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் ஆராய்ச்சி எனும் பெயரில் கால் பதித்த வெள்ளையன் இவ்வேலைகளில் கொஞ்சம் தீவிரம் செலுத்தி கொள்ளையடித்திருக்கிறான். இப்படிபட்ட திருட்டுக்களை தவிர்க்கவும் பிரமிடுகள் மற்றும் மம்மிகள் சம்பந்தமான பீதியான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கலாம்.எகிப்திய அரசன் ஃபாரோ என அறியப்படுவான். துத்தன்கமன் ஃபாரோவின் மம்மி கண்டெடுக்கப்பட்டது 'தி வேளி ஆப் கிங்' எனப்படும் பகுதியாகும். துத் சரித்திரத்தில் சொல்லப்படுபவர்களுள் ஹைதித் எனப்படும் அரசகுமாரனும் ஒருவன். துத் அரசனின் மரணத்தைப் போலவே இவனது மரணமும் சில மர்மங்களுக்குறியது.
முன்பு ஹித்தித்தின் உடல் என கூறப்பட்ட மம்மியும் பின்னாட்களில் அதுவல்ல என அறியப்பட்டது. கஹேராவில் இருந்து சுமார் 460 கிலோமீட்டர் தூரத்தில் Deir El Bahri எனப்படும் பள்ளத்தாக்கு இருக்கிறது. கால்கள் இருக்கக்கட்டப்பட்டு, இதயத்தை இருகைகளில் பற்றியபடியும், கடுமையான முகத்தோடு கத்திக் கதற வாய் திறந்த தோற்றத்தில் ஒரு மம்மி கண்டெடுக்கப்பட்டது. 'கதறும் மம்மி' என அடையாளப்படுத்தப்பட்ட அவ்வுடல் பலமான ஆராய்ச்சிகளுக்குட்பட்டது. ஆரம்ப நிலை ஆராய்ச்சிகள் அந்த மம்மியிடன் உடல் துத்தன்கமன் காலத்தில் வாழ்ந்த ஹித்தித் எனும் அரசகுமாரனுடையது என குறிப்பிட்டன.
1881-ஆம் ஆண்டு கதறும் மம்மி கண்டெடுக்கப்பட்டது. தற்சமயம் கஹேராவில் அமைந்துள்ள எகிப்திய தொல்பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த மம்மியில் செய்யப்பட்ட மேலாதிக்க ஆராய்ச்சிகள் எகிப்திய நாகரீகத்தில் திட்டமிட்ட ஒரு கொலை முயற்சியை வெளிக்கொனர்ந்தது.
எகிப்திய நாகரீகத்தில் குறிப்பிட தக்க அரசருள் ஒருவர் 3-ஆம் ரம்சேஸ் ஃபாரோவாகும். அவரின் மகனான Pentewere எனும் அரசகுமாரன் ஆட்சியைப் பிடிக்க தந்தையை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறான். ஆராய்ச்சியில் கி.மு 12-ஆம் நூற்றாண்டின் பைப்ரஸ் படிவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3-ஆம் ரம்சேசின் மனைவி அவரைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் சம்பந்தப்பட்ட விசாரனை குறிப்பு அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Pentewere அரசகுமாரனுக்கு இரண்டு தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அரசனை கொல்ல திட்டமிட்டது. இரண்டு தந்தையை கொல்ல திட்டமிட்டது. முதல் குற்றத்திற்கு விஷத்தை அருந்த தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாம் குற்றத்திற்கு அவனது உடல் கல்லறையில் வைக்க தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்லறையில் வைக்கப்படாத உடலுக்கு மறுபிறப்பு இல்லை என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை.
அரசகுமாரனின் ஆதரவாளர்கள் அவன் உடலை கைப்பற்றி அவசர அவசரமாக பதப்படுத்தி இருக்கிறார்கள். மம்மியாக்கப்படுவதற்கான வேலைபாடுகள் முழுமையடையவில்லை என்றே சொல்ல வேண்டும். கதறும் மம்மியின் உடல் முழுமையாக உலர்வடையவில்லை. மூலை மற்றும் உள்ளுறுப்புகள் அகற்றப்படாமல் ஒன்றும் பாதியுமாக செய்திருக்கிறார்கள்.
அது போக அவ்வுடல் ஆட்டுத் தோலில் சுற்றி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கைபடி ஆட்டுத் தோலில் சுற்றப்பட்டது புனிதமற்றது எனப் பொருள்படும். தீயவர்களின் உடலை இப்படி ஆட்டுத் தோலில் சுற்றி வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.
Pentewere-யின் உடல் ஏன் தூக்கியெறியப்படமால் பதப்படுத்தப்பட்டது எனும் கேள்ளி எழும் சாத்தியங்கள் உண்டு. பிரபுக்களின் சபையினரில் யாரேனும் இதை விரும்பாமல் இருந்திருக்கலாம். அவர்கள் அரசகுமாரனின் பக்கம் இருந்தவர்களாக இருந்திருக்கலாம்.
சில ஆராய்ச்சியாளர்கள் அது Pentewere-யின் மம்மிதான் என்பதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். 3-ஆம் ரம்சேஸ் அரசனின் மம்மிக்கும் கதறும் மம்மிக்கும் இருக்கும் ஒறுமைபாடுகளை பற்றிய மரபணு சோதனைகள் பல கட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.





கேலிஸ் அரண்மனையில் இன்னமும் கண்டறியப்படாத இரகசிய அறைகளும் சுரங்கப் பாதைகளும் உள்ளன. நான் இது வரை மூன்று முறை இவ்விடத்திற்கு சென்று வந்துள்ளேன். 


.jpg)