Friday, June 07, 2013

ONLY 13 - தாய்லாந்தின் விபச்சார உலகம்


TOO MANY WOMEN
FROM TOO MANY COUNTRIES
SPEAK THE SAME LANGUAGE
OF SILENCE

புத்தகம்: ONLY 13 - THE TRUE STORY OF LON
நயம்: சுயசரிதம்
பக்கம்: 330 PAGES
பதிப்பகம்: BAMBOO SINFONIA PUBLICATIONS

புத்தகத்தின் சில வரிகள்:
1. My culture holds all women to be not only inferior — but expendable.
2. My mother knows only two things; Old men want to sleep with me, and she wants money.
3. I tried to commit suicide twice because I wanted to see my father in heaven, so he could stop searching for me.


தாய்லாந்து பயணத்தின் போது சாலையோர ஒட்டுக் கடைகளை கணிசமாக காண முடியும். வருத்த புழு பூச்சி வகைகளும் காரம் மிகுந்த உணவு பண்டங்களும் சாலையோர கடைகளில் பிரபலம். இது போக பொரித்த எலி, தவளை, பாம்பு போன்றவற்றையும் காணலாம்.

பயணிகளுக்கு இது விசித்திர உணவாக இருக்கும். அந்த வியாபாரியிடம் கேட்டீர்கள் எனில் ‘விட்டமீன் விட்டமீன்’ என சொல்வான். அவற்றை சுவை பார்க்கும் பயணிகள் ‘இட்ஸ் நைஸ்’ என சொல்வதையும் காணலாம்.

இந்த உணவு பண்டத்தின் வரலாற்று பின்னணி தாய்லாந்தின் எல்லையில் இருக்கும் ’ஈசான்’ (Issan) எனும் வறுமை மிகுந்த மாநிலத்தில் தொடங்குகிறது. தாய்லாந்தின் உடல் வியாபார மையங்களில் இருக்கும் 80% பெண்கள் இந்த ஈசான் பகுதியில் இருந்து வந்தவர்கள். இன்னமும் வந்துக் கொண்டிருக்கிறார்கள். தாய்லாந்து பெருநிலத்தில் ஈசான் எனும் மாநிலம் கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளின் எல்லையில் உள்ளது.

பால்வினை தொழிலில் ஈடுபடும் தாய்லாந்து பெண்களுக்கு தினமும் பிறந்த நாள் வரும், ஊரில் இருக்கும் அம்மாவோ அப்பாவோ உடல் நலமற்று இருப்பார்கள். தன்னிடம் ’ஜொல்லு’ வடிக்கும் ஆண்களிடம் பணம் பறிக்க ஏவப்படும் வியாபார உத்திகள் இவை. இதை அறியாமல் போகும் பின்நவீனதுவ எழுத்தாளன் குட்டியின் ஜாக்கெட்டில் பணத்தை சொருகிவிட்டு மெக்கோங் நதியை இரசித்ததாய் கூறிக்கொள்வது தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மைல் கல்லாக அமைந்துள்ளது.

ஈசான் போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் தன்னை தாய்லாந்து மக்கள் என கூறிக் கொள்வதில் வெட்கப்படுகிறார்கள். தாய்லாந்து அரசாங்கமும் இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொள்வதில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் கம்போடிய இராஜியத்தில் இருந்து தாய்லாந்தில் சேர்க்கப்பட்ட பகுதியாக இது கருதப்படுகிறது. இதனால் இன்னமும் அவர்கள் முழு தாய்லாந்தியர்களாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி வாழ் மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். விளைச்சல் குறைந்து போகும் நாட்களில் வயலில் இருக்கும் புழு, கூட்டுப்புழு, பாம்பு, எலி போன்றவை இவர்கள் சாப்பாட்டுக்கு வழி செய்கின்றன.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வந்த காலத்தில் இப்பகுதி வாழ் மக்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள். விபச்சாரத்தை நாடிவரும் சுற்றுப் பயணிகளின் பண வாசனை இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்ள செய்தது. ’லேடி பாய்ஸ்’ எனப்படும் திருநங்கைகளும் தாய்லாந்தில் அதிகமாக உள்ளதற்கு காரணம் பொறுப்பற்ற இந்த சுற்றுலாத் துரையே. குடும்ப வருமையின் காரணம் தன்னை பெண்ணாக்கிக் கொண்ட ஆண்களின் கதைகளையும் இங்கு அதிகம் காண முடிகிறது.

ஒன்லி 13 எனப்படும் புத்தகம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்ட ஒரு பெண்ணின் சுயசரிதையை நமக்கு விளக்குகிறது. இந்த சுயசரிதம் ‘லோன்’ எனும் பெண்ணால் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தாய்லாந்தின் Krabi எனும் ஊருக்குச் சென்றிருந்த சமயம் ONLY 13 THE TRUE STORY OF LON மற்றும் LADYBOYS எனும் இரு புத்தகங்களை அதன் விமான நிலையத்தில் வாங்கினேன்.

லேன் எனும் சிறுமி ‘உபோன்’ எனும் ஊரில் பிறந்தவள். அவளது வாழ்வில் நிகழும் சில கசப்பான சம்பவங்களால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். பாங்கக் வந்தடையும் அவள் கிடைக்கும் வேலைகளை செய்து தனது வாழ்வை தொடர முயற்சிக்கிறாள்.

பாங்காக்கில் பெயர் போன பாலியல் தொழில் வீதியில் மது பான கடையில் (கோ கோ பார்) சுத்தம் செய்யும் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்யும் போது அவள் காணும் காட்சிகள் நாளடைவில் அவளை பாலியல் தொழிலுக்கு ஈர்கச் செய்கிறது. தாய்லாந்தில் மெத்த படித்த ஒருவன் சம்பாதிக்கும் பணத்தை காட்டினும் பாலியல் தொழிலில் எவ்வளவு அதிகமான பணம் கிடைக்கிறது என்பதை ஒப்பீடு செய்கிறாள் லோன்.

’கோ கோ பார்களில்’ வேலை செய்யும் பெண்கள் தங்களுக்கான கஷ்டமர்களை தேர்ந்தெடுக்கும் முறைகளையும் தொழில் உக்திகளையும் மிகச் சிறப்பாக விளக்குகிறது இந்த நூல். மூன்றாம் உலக நாடுகளின் இந்த அவல நிலைக்கு மேலை நாடுகளின் பங்களிப்பு என்னவென்பதை நாம் அறிய முடிகிறது. ’கோ கோ பார்களில்’ காதலை தேடும் வெளிநாட்டு ஆசாமிகள் அந்நாட்டின் பாலியல் தொழிலாளர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். அப்படி இருந்தும் பாங்காக், பட்டாயா, புக்கேட் போன்ற பாலியல் தொழில் மலிந்து காணப்படும் இடங்களில் வெளிநாட்டு பயணிகளின் வருகை மிகுந்தபடியே உள்ளது. ஆண்களுக்கு ஏற்படும் சுக்கில தோஷத்தின் கொடுமையை இது நமக்கு உணர்த்துகிறது.

தனது சுயசரிதத்தில் லோன் தன்னை ஒரு தாய்லாந்துகாரியாக ஒப்புக் கொள்ள மறுக்கிறாள். உபோன்/ஈசான் நிலத்து மக்களின் வருமை மிகுந்த வாழ்வு ஏனைய தாய்லாந்து மக்களிடையே ஒரு மோசமான பார்வையை ஏற்படுத்தியுள்ளதை இதற்கு காரணம் காட்டுகிறாள். தனது 13-வது வயதில் வீட்டை விட்டு ஓடும் லோன் 14-வது வயதில் தனது கன்னி தன்மையை ஒரு சுவீஸ் கிழவனுக்கு விற்பனை செய்கிறாள். இதற்காக அவளக்கு கிடைக்கும் பணம் 1200 அமேரிக்க டாலர்கள். ஆண்டு முழுக்க நான் பணி புரிந்த மதுபான கடையை கூட்டி பெருக்கினாலும் எனக்கு இவ்வளவு பணம் கிடைத்திருக்காது என அடுத்த கட்டங்களுக்கு இவளது பாலியல் தொழில் பயணிக்கிறது.

18 வயதுக்கும் குறைவானோர் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தாய்லாந்தில் சட்டபடி குற்றம், இருந்தும் கையூட்டுகளின் வழி இந்த சட்டம் கண்னை மூடிக்கொள்கிறது. பாங்காக்கில் இருந்து பட்டாய செல்லும் லோன் அவளுக்கு விருப்பம் குறைவான பணம் காய்க்கும் காதல்களால் பல நாடுகளுக்கு பயணம் செய்கிறாள். தனது பாலியல் வியாபாரத்தில் அங்கும் பணம் சம்பாதித்து தன் அம்மாவுக்கு கொடுக்கிறாள்.
ஈசான் குடும்பங்களின் முதலாவதாக பிறக்கும் பெண்ணின் குடும்ப சுமை பெரிது. அக்குடும்பங்களில் ஆண்களின் பங்கு குடிப்பதும், சூதாடுவதும், இனப்பெருக்கம் செய்வதும் என அமைகிறது. பெண்ணாக பிறப்பவளின் வாழ்வு குடும்பத்திற்காக பொன் முட்டையிடும் வாத்தாக அமைகிறது. 

லோன் வாழ்க்கையின் விரக்தியில் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அதிலும் அவளுக்கு தோல்வியே எஞ்சுகிறது. பல பல இன்னல்களினால் மனதாலும் உடலாலும் சேர்வடையும் லோன் ‘பைபோலா டிசார்டரினால்’ பாதிப்படைகிறாள். அவளின் ஆரோக்கிய நிலை இன்றளவும் கேள்விக்குட்பட்டே உள்ளது.

லோனின் ஆரோக்கிய பாதிப்பிற்கு பின் மருத்துவ உதவிகள் செய்த கென் எனும் இங்கிலாந்துகாரரால் இந்த நூல் எழுதி முடிக்கப்படுகிறது. லோன் ஆரோக்கிய பாதிப்பில் இருக்கும் போது சொல்லப்படும் தகவல்கள் கென்னின் விளக்கத்தில் மாறுபாடடைவதை வைத்து லோனின் மன பாதிப்பை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த புத்தகம் மூன்றாம் உலக நாடுகளில் பாலியல் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க பங்களிக்கும் ஒவ்வொருவரின் முகத்திலும் அறைவதாக அமைகிறது. இருந்தும் ‘செக்ஸ் பயணிகளின்’ வருகையை இது இம்மியும் குறைக்கப் போவதில்லை என்பதே உண்மை.

15 comments:

Anonymous said...

Arumayana padaipu
Thailan silarin sorgavasal
palarin naraga boomi

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனானி

சுடும் உண்மை அது தான்...

indrayavanam.blogspot.com said...

புதிய தகவலுக்கு நன்றி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ இன்றயவானம்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Tamilvanan said...

தாய்லாந்து உபசார உலகம். பணிவு மிக்க மக்கள். எதையும் எதிர்பார்த்து செல்லலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இதை அறியாமல் போகும் பின்நவீனதுவ எழுத்தாளன் குட்டியின் ஜாக்கெட்டில் பணத்தை செருகிவிட்டு மெக்கோங் நதியை இரசித்ததாய் கூறிக்கொள்வது தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மைல் கல்லாக அமைந்துள்ளது.//

இந்தக் "குட்டு"- அருமை ஆனால் அந்த எருமைக்கு உறைக்காது.
இப்போ கியூபா, பிறேசில் சென்று "குட்டியின் ஜாக்கெட்டில் பணத்தை செருக" பிச்சை எடுக்கிறது.

-தோழன் மபா, தமிழன் வீதி said...


நல்லதொரு புத்தக அறிமுகம். மிகச் சிறப்பாக செய்து இருக்கிறீர். வாழ்த்துகள் ! இதே போன்று தமிழில் வந்த " கலைவாணி-ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ' என்ற புத்தகத்திற்கு நான் எழுதிய விமர்சனம்.

http://tamilanveethi.blogspot.in/2010/02/blog-post_25.html

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

உங்க ஸ்டேட்மன் ஒரு வகையாக தான் உள்ளது... :-))

@ யோகன் பாரிஸ்

உங்கள் எதுகை மோனை பின்னூட்டம் அருமை. போகட்டும் விடுங்கள். ஐந்தில் வலையாதது ஐம்பதிலா நிமிர போகிறது.

@ தோழன் மபா

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நீங்கள் கூறியுள்ள புத்தகத்தை வாசித்துவிட்டேன். நிச்சயம் உங்கள் பதிவினை படித்து பார்க்கிறேன்.

www.only13.net said...

Thank you for writing about Lon's book. It is selling well in Malaysia, and I am really surprised about how well it is actually doing. If you have any questions about Lon, please feel free to write me at only 13info@yahoo.com

Thanks

derek

VIKNESHWARAN ADAKKALAM said...

@ DEREK

THANK YOU FOR VISIT MY PAGE AND YOU COMMENT.

Radhuka said...

Unmayaana Padaippu...

saravanan said...

இந்த வேதனை படும் பெண்களை
பற்றித்தான் கண்ணதாசன் ரசித்து


தாய்லாந்து கிளிகள் என்ற கவிதை எழுதினார்
அவர் ஒரு அற்புதமான கவிஞர்.
ஆனால் ஆணாதிக்க சிந்தனை கொண்டவராக
இருந்தார்.

உங்கள் பதிவு அந்த பெண்களை நினைத்து

வேதனையுற செய்தது.

saravanan said...

இந்த வேதனை படும் பெண்களை
பற்றித்தான் கண்ணதாசன் ரசித்து


தாய்லாந்து கிளிகள் என்ற கவிதை எழுதினார்
அவர் ஒரு அற்புதமான கவிஞர்.
ஆனால் ஆணாதிக்க சிந்தனை கொண்டவராக
இருந்தார்.

உங்கள் பதிவு அந்த பெண்களை நினைத்து

வேதனையுற செய்தது.

Radhuka said...

where can I get this book in India(Chennai)?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ Radhuka

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் அமெசோன் தளத்தில் வாங்க முடியும். இந்தியாவில் விநியோகிக்கப்படும் இடங்கள் தெரியவில்லை. மன்னிக்கவும்.

@ சரவணன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கும் அந்த கவிதை மிக பிடிக்கும். மனவாசம் நூலின் கடைசி கவிதை. கண்ணதாசன் ஒரு இரசிகன்.