Monday, August 02, 2010

கொசுறு 02/08/2010

2000 ஆண்டுகளாக என் பணி படித்துக் கிடப்பதே என படித்திருந்து 500 ஆண்டுகளாக வருடத்தின் 730-நாட்களிலும் இராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கும் பாரு பவதிக போன்ற எழுத்தாளர்கள் தமிழை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் போது. நீயெல்லாம் எழுதாவிட்டால் எவனுக்கும் குடிக்க குவாட்டர் கிடைக்காமல் போய்விடாது என சாணியடி சித்தர் என் முகத்தில் சாநி புகழ்பாடி சாணியடித்து அனுப்பிவிட்டார்.
****

கொஞ்ச காலம் பிளாக் எழுதாமல் இருந்தால், ஏன் எழுதவில்லை என கேட்பவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருக்கிறார்கள். இப்படி என்றால் எப்படி ஐயா தமிழ் வளரும்? சரி அதுதான் பரவாயில்லை என்றால் தமிழே அதோ கதியென கிடக்கும் என் போன்றோரை சொம்மொழி மாநாட்டுக்கு வருகிறீரா என ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியாவது கேட்டிருக்கலாம். அதுவும் கிடையாது. இது தான் நீங்கள் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு, கவிஞனுக்கு, தமிழ் அறிஞனுக்கு கொடுக்கும் மரியாதையா? -இப்படிக்கு ஒரு நல்லவன்.
****இராவணன் படத்தை பார்த்ததில் இருந்து மண்டைக்குள் டண்டண்டண்டனக்கனு ஒரே சவுண்டாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பேச்சு தடுமாறி போய் தவளையை போல் ஆ... ஊ... ஏ... என வாயை திறப்பதோடு நிறுத்திக் கொண்டேன். பலமான லெங்குவஜோபோபியா நோயின் பிடியின் சிக்கி இருப்பதாக கூறி நான்கைந்து பாகவதர் படங்களை பார்க்கச் சொல்லி டாக்டர் எழுதி கொடுத்தார். இப்போது உடல் நலம் பரவாயில்லை.

இது இரண்டாவது அடம்ப்ட். முன்பு சீரோ டிகிரி படித்த போதும் இதோ போன்ற நோய் தாக்குதலில் உண்டானேன். ஒரு வேளை சீரோ டிகிரியை படித்துவிட்டு புதுமை செய்கிறேன் பார் என மணி சார் படம் எடுக்க கிளம்பி இருக்கலாம்.
படம் முழுக்க ஒரே கத்தல், கதறல். இல்லை என்றால் அடித் தொண்டையில் கொட்டை சிக்கிக் கொண்டதை போல் சவுண்டே இல்லாத பேச்சு. பழக் கொட்டையை சொன்னேன். அடிக்கடி லே...லே...லே... என பேசிக் கொல்கிறார்கள். சுஹாசினி வசனமாம். அடுத்து இந்த பெயரை எங்கேயெனும் பார்த்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓடிட வேண்டும்.
*****இடைபட்ட காலத்தில் பல புத்தகங்களை வாசித்தாகிவிட்டது. எழுதாமல் இருந்தது வாசிப்பிற்கு அதிகமான நேரத்தை ஒதுக்கி கொடுத்தது. சில ஆய்வு புத்தகங்கள் மேலும் தேடுதல்களை தூண்டும் வகையில் அமைந்தன. ஆனால் தற்சமயம் இருக்கும் இடத்தில் உள்ள நூல் நிலையத்தில் போதுமான அளவில் தகவல் திரட்ட முடியவில்லை. புத்தக கடைகளும் குறைவாக உள்ளதால் வெளியிடத்தில் இருந்து ஆர்டர் செய்து வாங்க வேண்டியுள்ளது.

தற்சமயம் சுஜாதாவில் கந்தளூர் வசந்தகுமாரன் எனும் நாவலை வாசித்து வருகிறேன். இது இவரது இரண்டாவது சரித்திர நாவல் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயின் இவரின் முதல் சரித்திர நாவல் யாதென தெரிந்தவர்கள் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
****

சில காலத்திற்கு முன் உசுரே போகுதே எனும் பாடல் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் வாங்கிக் கொண்டிருக்கலாம். ஏனோ இப்பாடல் என்னை அப்படி ஒன்றும் வசீகரிக்கவில்லை. சமீபமாக எந்திரன் பாடல்களை சிலாகித்து எழுதப்படுவதைக் கவனிக்கின்றேன். எப்படியெல்லாம் வெறுப்பேற்றப்பட போகிறோம் என தெரியவில்லை.
******

எழுத்தாளர் சேவியரின் கவிதைகள் எனக்கு விருப்பமானவை. இதற்கு முந்தய கொசுறு பகுதிகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். அவரின் கவிதைகளில் ஒன்று:

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம் சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு
*****

மேலும் ஒரு கவிதை:
நாம் அமர்ந்திருந்த
பூங்கா இருக்கையில் படுத்துறங்குகிறான்
பிச்சைக்காரன்
நேற்றுஅவன் காதலியோடு
வந்திருப்பான் போல
-பின்னிரவுப் பெருமழை கவிதை தொகுப்பில் ரிலுவான் கான்.
****
எதையாவது எழுது... எழுதுறத விட்டுட்டா பிறகு எழுத சிரமப்படனும்.... சிரேயா படத்தை போட்டாவது ரெண்டு வரி எழுதுனு நண்பர் அதிஷா கொடுத்த உ(ர்)சாகத்தை கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்.

ஊக்குவிற்பவன்
ஊக்குவித்தால்
ஊக்குவிற்பவனும்
தேக்கு விற்பான் - கவிஞர் வாலி
****

Google image-ல் Charu என தட்டச்சு செய்தால் ஏதேதோ படங்கள் வருகின்றன. ஒரே கிளுகிளுப்பா போச்சு....
***

18 comments:

Tamilvanan said...

ந‌ண்பா.. உன்னை யார் எழுத‌ சொன்ன‌து? இனி நீ ப‌ட‌ங்க‌ளை ம‌ட்டும் ப‌திவா போடு.சிரேயா போட்டுருக்க்கிற‌ பாவாடை சூப்ப‌ர் அழ‌கு.

தராசு said...

சுஜாதா எழுதுனது ரெண்டே ரெண்டு சரித்திர நாவல்தான். ஒண்ணு “ரத்தம் ஒரே நிறம்”, இன்னொன்னு நீங்க படிச்சிகிட்டிருக்கிறது.

ரத்தம் ஒரே நிறம்ல, சிப்பாய் கலகத்தை மையமா வைத்து அதில் ஒரு தமிழனுக்கும் ஒரு ஆங்கிலேயனுக்கும் இருக்கும் விரோதத்தை வெளிக்காட்டுவதோடு, ஒரு மெல்லிய காதலையும் இணைத்து கட்டியிருப்பார். படியுங்கள்.

ஆமா, ராவணன் படத்தை பத்தி பேசும் போது, அந்த படத்தோட ஸ்டில்ல போடுங்கைய்யா.....

அடங்க மாட்டீங்கறேங்க

அப்பாவி முரு said...

ஊக்குவிற்பவன்
ஊக்குவித்தால்
ஊக்குவிற்பவனும்
தேக்கு விற்பான் - கவிஞர் வாலி

வாழ்க அதிஷா...

RAHAWAJ said...

எழுத்தை விட போட்டோ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விக்கிகிகிகிகிகி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

அது பாவாடையா பாஸ்... நீங்க சொன்ன பிறகு தான் உன்னிப்பாக கவனித்தேன்... நல்ல அழகு...

@ தராசு

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி... நிச்சயம் வாங்கி படிக்கனும். வசந்த குமாரன் கதைக்கு நிஜமாகவே நிறைய முயற்சித்திருக்கிறார். நான் அறிந்திராத பல தமிழ்ச் சொற்களையும் அறிமுக படுத்தி இருப்பது சிறப்பு.

இராவணன் படத்துல இந்த பொண்ணு நடிச்சதுங்களே நீங்க கவனிக்கலையா???

@ அப்பாவி முரு

ரைட்டு புது மாப்பி....

@ ஜவஹர்

ர்ர்ர்ர்ர்ரும் கிகிகிகியும் இழுக்கிறது....

வால்பையன் said...

ரெண்டாவது போட்டோவுல இருக்குறது ஸ்ரேயா தானே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தம்பி,

நல்லவேளை வந்தீங்க!

இல்லன்னா உங்களத்தேடி மலையகத்துக்கு நாங்க வந்திருப்போம்!

:)))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வால்பையன்

போட்டோல 6 வித்தியாசம் சொல்லுங்க பார்ப்பம்...

@ ஜோதிபாரதி

அண்ணா.... உங்கள் பாசத்தை மெச்சுகிறேன்...

Athisha said...

சுராயா படம் மிக அருமை.. ப்ரியாமணி படம் திருஷ்டி. சாரு படம் சூப்பரோ சூப்பர்!

பரிசல்காரன் said...

எனக்கு ப்ரியாமணி படம் அவ்வளவு பிடித்தது.

முதல் இரண்டு பத்திகளை வெகுவாக ரசித்தேன்.

மின்னுது மின்னல் said...

ஊக்குவிக்கிறேன் :)

priyamudanprabu said...

எழுத்தை விட போட்டோ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
/.

ரிப்பீட்டேஏஏஏஎ

Anonymous said...

Ezhutha Vendiyathai ezhuthu thambi :) Y.... is waiting....

Xavier

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அதிஷா

நல்லது... இதுக்கு பேரு தான் படம் பார்த்து வாக்கியம் எழுதுறதுனு சொல்லுவாங்க....

@ பரிசல்

எவ்வளவு??? உங்களுக்காக பிரியாமணி இனியும் வருவார் :) நன்றி பரிசல்

@ மின்னுது மின்னல்

ஊக்குவாங்குறேன்....

@ பிரியமுடன் பிரபு

நன்றி...

@ சேவியர்.

எழுதிக் கொண்டிருக்கின்றேன் அண்ணா...

Tamilvanan said...

'ரத்தம் ஒரே நிறம்' என்னிட‌ம் உள்ள‌து. இங்கு வ‌ந்தால் த‌ருகிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

ஊக்குவிக்கிறேன் விக்கி :)))

படம் எல்லாம் ஜூப்பரு :)

A N A N T H E N said...

கொசுறு அருமை. சாநி என்ற அரசியல் பிடிச்சிருக்கு. ரிலுவான் கான் கவிதை சரியா விளங்கல. சேவியர் கவித நல்லாருக்கு. ஷ்ரேயா போட்டிருப்பது சுலுவாரு... நல்லா பாருங்க பின்க் கலருல

Unknown said...

ஊக்குவிக்கிறேன் அருமை..