"வயது பதினைந்தோ அல்லது பதினாரோ இருக்கலாம். படிக்கவில்லை. செலவுக்கு ’டச் & கோ’ வியாபாரம்."
மலேசியாவில் இது வரை காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை மொத்தம் 6027. இக்கணக்கெடுப்பு மே 2004-ல் இருந்து 2009-ஆம் ஆண்டு வரையிலானது. பெண்கள் மட்டும் தான் தொலைந்து போகிறானரா? கண்டிப்பாக இல்லை. ஆண்களும், குழந்தைகளும், வயசாளிகளும் கூட காணாமல் போகிறார்கள். இதில் பெண்களின் எண்ணிக்கை மிகுதியானது. இப்படி காணாமல் போகும் பெண்களில் மிகுதியாக இருப்பவர்கள் 14 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆதலால் இப்புள்ளி விபரம் மிகுந்த கவனத்தைப் பெருகிறது.
காணாமல் போகும் பெண்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறார்கள். உந்துதலால் விருப்பம் கொண்டு காணாமல் போவோர், துரத்தி விடப்பட்டு காணாமல் போனவர்கள், கடைசியாக குறிப்பிட்டச் சூழலில் வாழப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனவர்கள் என சொல்லப்படுகிறார்கள்.
அதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்றுள்ளது. 40 ஆண்டுகளோ அல்லது 20 ஆண்டுகளோ முந்தய பெண்களின் வாழ்வியல் முறையும் இன்றய பெண்களில் வாழ்வியல் முறையும் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டது என்பது மிகையன்று. ’Generation Gap' அல்லது தலைமுறை இடைவெளி காலத்திற்கும் மாறுபட்டே வந்திருக்கின்றது. இன்றய நாட்களில் பெண்களின் வாழ்வியல் முறை பன் மடங்கு உயர்ந்துள்ளது.
உதாரணமாக பெண்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடும் அமைப்புகள் அல்லது விழிப்புணர்வு மையங்கள் உலகெங்கினும் செவ்வனே இயங்கிக் கொண்டிருக்கின்றன. முன் சமயத்தில் பெண்களுக்கான கட்டுபாடுகள் அதிகமாகவே விதிக்கப்பட்டிருந்தன. பற்றாக் குறைக்கு அவை ஒவ்வொரு சமூகத்தின் பண்பாடுகள் எனவும் சொல்லப்பட்டது.
இந்த விதிகள் பெண்களின் விடுதலைக்கு முட்டுக் கட்டையாக அமைந்தன. அடிப்படை கல்வியை பெறுவதற்கு கூட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மதம் மற்றும் சமூகத்தின் போர்வையிலும் இன்னமும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் இருக்கவே செய்கின்றன.
கன்பூச்சியஸ் தத்துவம் ஒன்றினை இங்கு முன் வைக்க முடியும். எந்த ஒரு சமூகத்தில் மிகுந்த அளவிலான கட்டுப்பாடுகள் இருக்கின்றதோ அச்சமூகத்தால் மிகுதியான குற்றச் செயல்கள் விளைவிக்கப்படுகின்றது. ஏன்? கட்டுப்பாடுகள் மிக குற்றங்களும் மிகும். எடுத்துக்காட்டிற்கு 1990-களில் ‘டோனல்ட் டாக்’ எனும் கேலிசித்திரத்தை அரபிய நாடொன்றில் தடை விதித்திருந்தார்கள். அக்கேலி சித்திரத்தின் முக்கிய பாத்திரமாக வரும் வாத்து காற்சட்டை அணியாமல் இருப்பதே அத்தடைக்கான காரணம். அப்படியென்றால் அந்நாட்டில் நீங்கள் ‘டோனல்ட் டாக்’ கார்டூனை கண்டு களிப்பது தேச குற்றமாகும்.
இளையோர்களிடம் வெளியுலக தொடர்புகள் மிகுந்துவிட்டன. கணினி, இணயம், மின்மடல், குறுஞ்செய்திகளென அவர்களுக்கான தொலை தொடர்புகளின் வழியும் வெளியும் விரிந்துக் கிடக்கிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கட்டொழுங்கு விதிகள் இக்கால இளைஞர்களுக்கு குறுங்கிவிட்டது. அதை பெரிதாக பொருட்படுத்துவதும் கிடையாது. சரி இங்கு ஒரு கேள்வியை வைக்கின்றேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்களால் மட்டும் ஏற்படுத்தப்பட்டவையா? ஆம் எனின் அதன் காரணம் யாதாக இருக்க முடியும்?
பொது மருத்துவ மனைகளில் வயது குறைவான மற்றும் திருமணம் ஆகாமல் பிள்ளை பெற்றுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 35 விழுக்காடாக இருக்கிறது. மீண்டும் நாம் இங்கு சிந்திக்க வெண்டியுள்ளது. இம்முறை கேடுகள் நடை பெற காரணம் அளவுக்கு மிகுந்த கட்டுப்பாடா அல்லது அளவுக்கு மிகுந்த தளர்வா? இவை இரண்டிற்கும் இடையே சிக்கிக் கொள்ளும் நபர்களே பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக வீட்டில் அதிக கட்டுப்பாடுகளோடு வளர்க்கப்படும் பிள்ளைகளே அதிக குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அடக்கு முறைகளே பிள்ளைகள் அதை மீறி செயல்பட துண்டுதலாக அமைகிறது.
அதி விரைவான வாழ்க்கை முறை பெருநகரங்களில் மக்களின் மனதை வெகுவாக நைத்துள்ளது. இந்த அழுத்ததில் இருந்து வெளிபட மனிதன் தனக்கு ஒத்த கருத்துடைய நண்பனை தேடிக் கொள்கிறான். இப்படி தமக்காக அமைத்துக் கொண்ட குழுமங்களில் கெடு செயல்களில் ஈடுபட்டு வாழ்வை கெடுத்துக் கொள்வோரும் உண்டு. தன்னை மறந்து இன்பகரமான மயக்க சூழல் கிடைப்பதாக நினைத்து போதை மருந்துகளுக்கு அடிமையாகிறார்கள்.
இடைநிலைப்பள்ளியில் சேரும் மாணவர்களில் 13 வயது தொடக்கம் போதை பொருட்களிடையே அடிமையாகிவிடுவதை காண முடிகிறது. வேலை நிமித்தம் நீதிமன்றத்தில் இருக்கும் போது அங்கு காண கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையில் இதை உறுதிபடுத்துகிறேன்.
தாதியாக பணிப்புரியும் என் தோழி மணவர்கள் உடல் நலன் பரிசோதனைக்கு இடைநிலை பள்ளி ஒன்றிக்கு சென்றிருக்கிறார். அப்போது பரிசோதனைக்கு வந்த பெண் மாணவிகள் சிலர் அவரிடம் கேட்டனராம், “நர்ஸ் நான் கற்பமாக இருக்கின்றேனா? இரத்த பரிசோதனை செய்தால் தெரிய வாய்பிருக்கிறதா” என்று. இவர்கள் நிலை மிக இளம் வயதிலேயே கட்டுபாடற்ற அல்லது பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட துவங்கிவிடுகிறார்கள். இதனால் பாலியல் நோய்கள் இவர்களை எளிதாக தாக்கிவிடுகிறது. முக்கியமாக பாலியல் தொற்று நோய்களால் தாக்கப்பட்டோர் 20-40 வயதிலானவர்களாக உள்ளனர்.
ஓரிரு மாதங்களுக்கு முன் நான் பணியிலிருக்கும் ஊரில் ‘டச் & கோ” எனப்படும் வியாபாரத்தை பற்றி செய்திகள் அதிகம் பேசப்பட்டன. ஆங்கில நாளிகையில் பணி புரியும் நண்பர் ஒருவர் இதன் தொடர்புடையவர்களை சந்தித்து செய்தி சேகரிக்க சென்றிருந்தார். நானும் உடன் சென்றிருந்தேன். இன்பார்மர் 3 பெண்களை அழைத்து வந்திருந்தான். ஒரு வேளை பணம் கொடுப்பதாக செல்லி இருந்ததால் வந்திருப்பார்கள் போல.
இளம் வயதுடைது இப்பெண்களில் பெரும்பாலோனோர் வீட்டை வீட்டு ஓடி வந்தவர்களாக உள்ளனர். அதிகபட்சம் 16/17 வயது தான் ஆகிறது. இப்படி ஓடி வந்து கூட்டாக கிடைக்கும் இடத்தில் ஆண் பெண் பாராமல் தங்கிக் கொள்கிறார்கள். இவர்களை நெருக்கடியாக்குவது வேறென்ன பணம் தான். பேதிய வயதற்றதால் வேலை கொடுக்க மாட்டார்கள். இவர்களை வைத்திருக்கும் காதலர்களும்??? வசதியான பசங்க கிடையாது. பொருக்கி தனம் செய்து கொண்டு உரை சுற்றும் ஊதாரிகள்.
இப்பெண்களோ தன் உடல் பாகங்களை தொட்டுக் கொள்ள இப்பகுதிக்கு இன்ன விலையென வியாபாரம் செய்து பணம் திரட்டுகிறார்கள். இதில் இவர்களுக்கு கிடைக்கும் பணம் ஓர் உயர் அதிகாரிக்கு கிடைக்கும் மாத வ்ருவாயை விட மிகுதி. இப்படி கிடைக்கும் பணமும் போதவில்லை என்றே இப்பெண்கள் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு கூத்தடிக்கும் நடவடிக்கைகள் (ஆக்டிவிட்டி) இவர்களிடையே இருக்கிறது.
இப்பெண்கள் இப்படி உடல் வியாபரம் செய்வது அவர்களுடைய காதலன்/லர்களுக்கும் தெரியும். இருந்தாலும் பிரச்சனையில்லை எனும் போக்கில் இவர்களின் உலகம் ஓடிக் கொண்டிருகிறது. இது தான் பின்னவீனதுவ வாழ்க்கையாமே? ஒருத்தர் இருக்காரு, உங்க வியாபரம் ‘மெனு கார்டு’ போடு விருத்தியடையும் அளவுக்கு ஐடியா கொடுக்கும் ஐடியா சாமி. யாரென வினவினார்கள். கிளம்பும் போது இது உங்களுக்கு உபயோகமாக இருக்குமென சாநியின் அகபக்க முகவரியை எழுதி கொடுத்துவிட்டு வந்தேன்.
உலகவிலும் பாலியல் தொழில் ஏதோ ஒரு வகையில் ஆதரிக்கப்பட்டே வருகிறது. தேசம் தேசமாக சென்று பெண்களை ருசி பார்க்கும் பணம் கொழித்த சுற்றுப் பயணிகளும் இருப்பதாக சர்வே தகவல்கள் இணையத்தில் காணக் கிடக்கின்றன. சுற்றுபயண மேம்பாட்டினை கருத்தில் கொண்டு உலகளவில் இப்பாலியல் தொழிகள் மறைமுகமாக அனுமதிக்கப்படுகின்றன.
அது போக பாலியல் தொழில் இல்லாமல் போகும் இடங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிடும். முக்கியமாக கற்பழிப்பு சம்பவங்கள். மொத்தத்தில் இதற்கு பழியாவதும் தன்னை பழி செய்து கொள்வதும் பெண் என்பவள் தான். ஒருவரின் குறைபாடுகளில் மற்றொருவர் வாய்ப்பு எடுத்துக் கொள்வது மிக கொடுமையான ஒன்று.
ANTI-TRAFFICKING IN PERSON ACT 2007 அல்லது HUMANS ANTI-TRAFFICKING ACT தொடர்பான செய்திகளை நீங்கள் அறிந்திருக்கலாம். தேசம் விட்டு தேசம் கடத்தப்படும் மனிதர்களை பற்றிய உரிமைகளையும் தண்டனைகளையும் இச்சட்டம் விளக்குகிறது. இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஆயின் இதில் பெண்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அடுத்த பகுதியில் ஆய்வு செய்வோம்.

13 comments:
//அதி விரைவான வாழ்க்கை முறை பெருநகரங்களில் மக்களின் மனதை வெகுவாக நைத்துள்ளது.//
மிகச்சரியே! வெளிப்படுத்திக்கொள்ள இயலா சூழலிருந்து தப்பிக்க நினைக்கும் மனத்திற்கு எது நல்லது கெட்டது தெரிந்துக்கொள்ள கூடிய அளவு பொறுமையில்லாததும் ஒரு காரணம் முடிவாக சொல்லும் செய்தி பெரும் சோகமே! :(
@ நன்றி ஆயில்யன்
தெரியாமல் இல்லை... தெரிந்து தான் செய்வார்கள்... வாய்ப்புகளும் வசதிகளும் அதிகரித்துவிட்டதனால்...
//அது போக பாலியல் தொழில் இல்லாமல் போகும் இடங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிடும்/
சரியான வாதம்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்,தமிலிஷில் தொடர்கிறேன்,
//அது போக பாலியல் தொழில் இல்லாமல் போகும் இடங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிடும். //
அது என்னவோ சரிதான்
//இப்பெண்கள் இப்படி உடல் வியாபரம் செய்வது அவர்களுடைய காதலன்/லர்களுக்கும் தெரியும். இருந்தாலும் பிரச்சனையில்லை எனும் போக்கில் இவர்களின் உலகம் ஓடிக் கொண்டிருகிறது.//
இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ அதே அளவு பல இடங்களில் நிலைகளில் கணவனுக்கும்,உடன் பிறப்புக்களுக்கும்,பெற்றோர்களுக்கும் தெரிந்தே இம்மதிரி உடல் வியாபாரங்கள் நடக்கின்றன.
மீண்டும் நாம் இங்கு சிந்திக்க வெண்டியுள்ளது. இம்முறை கேடுகள் நடை பெற காரணம் அளவுக்கு மிகுந்த கட்டுப்பாடா அல்லது அளவுக்கு மிகுந்த தளர்வா? இவை இரண்டிற்கும் இடையே சிக்கிக் கொள்ளும் நபர்களே பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக வீட்டில் அதிக கட்டுப்பாடுகளோடு வளர்க்கப்படும் பிள்ளைகளே அதிக குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
///
ஆமாங்க
சரியான அலசல்
நல்ல பதிவு விக்கி.
வித்யாசமான பதிவு.லே அவுட்டும்,படங்களும் அருமை
@ ஜெயசங்கர்.
நன்றி...
@ கீதப்பிரியன்
நன்றி
@ கோவி.கண்ணன்
நன்றி.
@ தமிழ்வாணன்
அதை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்.
@ பிரபு
நன்றி.
@ ஞானசேகரன்
நன்றி.
@ சிவா
நன்றி
@ செந்தில் குமார்
நன்றி. மீண்டும் வருக.
தூள் கிளப்பறீங்க.
சமுதாய சீர்கேடுகளில் இதுவும் ஒன்று.
மிக சிறந்த பதிவு! தொடருங்கள்!
Post a Comment