Sunday, January 10, 2010

எப்போதும் பெண் (நாவல்) - சுஜாதா



புத்தகம்: எப்போதும் பெண்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை

"இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்.'' - முன்னுரையில் சுஜாதா.

தாய், சகோதரிகள், தோழிகள், பின்நாட்களில் மனைவி என ஆணின் வாழ்க்கை முறை அமைகிறது. இதில் பொரும்பாலான இடங்களில் பெண் என்பவளுடனான தொடர்பு நிலை தொடர்ந்து நிலைக்காமலும், பாதியாகவும் முடிவடைந்து விடுகிறது. பெண்ணின் சுதந்திரம் ஒரு வரையரைக்குட்பட்டு இருப்பதனால் இந்நிலை எற்படும் சாத்தியங்கள் அதிகம் இருக்க முடியுமென நாம் சொல்லலாம்.

அப்பா, அண்ணன்கள், தம்பிகள், தாத்தா, மாமா, கணவன், அம்மா, அக்காள் என அவளை சார்ந்த முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வயது நிலையிலும் பெண் என்பவளின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதை அவள் விரும்புகிறாளா அல்லது ஏற்றுக் கொள்கிறாளா என்பதையும் அவளை சூழ்ந்தவர்கள் அறிந்துக் கொள்ள விரும்புவது கிடையாது. இது தான் சமூக நியதி எனும் கட்டாயங்கள் திணிக்கப்படுகிறது. பெண் என்பவளின் சுதந்திரம் அவளால் விரும்பப்பட்டது அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை காட்டினும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டது என்பதே தகும்.

பெண் பாலியல் வன்முறைகளுக்கு எதிரானா சட்ட திட்டங்கள் தேவையற்று போய்விடும் நிலை மனித நாகரீகத்தின் அதீத வளர்ச்சியின் பின்னும் தீர்ந்தபாடில்லை. அது இன்னமும் மெருகூட்டப்பட்டு, சீர்திருத்தப்பட்டு
நீதி எனும் பெயரில் உபயோகிக்கப்படுகிறது. பெண்ணை போகப் பொருளாக பார்க்கவும் உபயோகிக்கவும் ஆண்களுக்கான கட்டளைகள் அவனது மரபணுவின் வழியாக செலுத்தப்பட்டுவிடுகிறது. பெண்களிடம் தோன்றும் காமத் தேடல்களை அவன் விரும்பச் செய்கிறான். ஆண் என்பவனுக்கு ஏன் அப்படி தோன்ற வேண்டும்? அவனுள் ஏற்படும் பௌதிக மாற்றமும், பெண்ணின் பருவ வளர்சிகளும் அவனை இத்தூண்டுதலுக்கு ஆளாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சுஜாதாவின் எப்போதும் பெண் எனும் நாவல் பெண்னை பற்றிய அடிப்படை புரிதலை நமக்கு நயமாக விவரித்துள்ளது என்பது மிகையற்றது. பெண்ணின் வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் காரணங்கள் யாவை என்பதினை எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார். வளர்ச்சி அல்லது மாறுதல்கள் என்பன பெண்ணின் உடல், உள்ளம் மற்றும் செயல்பாடுகள் யாவற்றிலும் அடங்கியுள்ளது. அவளின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் சில கட்டமைப்புகள் சூழ்ந்துக் கொள்கின்றன. ஒரு வரையரைக்குட்பட்ட தீர்மானங்களையோ செயல்பாடுகளை மட்டுமே அவளால் செய்ய முடிகிறது.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், ஓரிரு வயது வித்தியாசங்களுடன் ஒரு தாய்க்கு பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வளர்கப்படும் விதம் ஒரே விதமான சூழ்நிலையைக் கொண்டது. இருப்பினும் இருவரின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும் அது வேறுபாட்டை கொடுக்கிறது. இந்நிலைக்கான சாத்தியங்கள் நமக்கு குழப்பத்தை கொடுக்கின்றன. பிறப்பின் நியதி என இதை நாம் பொதுப்படையாக சொல்லிவிடுகிறோம்.

மூன்று ஆண் குழந்தைகளை பெற்று இல்வாழ்க்கையில் சலித்துப் போன ஒரு ஆண் தூக்கம் வராமல் போரடித்துப் போன இரவொன்றில் தன் மனைவியை சுகிக்க, விந்து அவளின் கரு முட்டையை தேடி ஓடுகிறது. நாவலின் முதல் பக்கத்தில் இதை படித்தவுடன் முடிவு வரை எப்படி கொண்டுச் செல்வார் எனும் தீர்மானத்தை ஓரளவேனும் யூகிக்க முடிந்தது. இக்கதையின் முடிவு எனக்கு அளப்பறிய பாதிப்பை கொடுக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும் இதன் வாசிப்பு புதிய அனுபவமாகவும், சுவாரசியமாகவும் இருக்கவேச் செய்தது.

இதை கதையென்றோ, நாவல் என்றோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் படித்துப் பாருங்கள் என ஆரம்பிக்கும் சுஜாதாவின் முன்னுரை இக்கதைக்காக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையை நமக்கு தெளிவிக்கிறது. நன்னெறிகளையும், நீதிக் கதைகளையும் விரும்பிப் படிபவர்கள் விரசமான எழுத்து என இப்புத்தகத்தை ஒதுக்கக் கூடும். நகைச்சுவை, எழுத்துநடை, சுவாரசியம் என தனக்கே உரிய பாணியில் கொடுக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம் எல்லோராலும் நிச்சயம் படிக்கக் கூடிய ஒன்றெனவே சொல்லமுடிகிறது.

14 comments:

goma said...

நிச்சயம் வாசித்துப் பார்க்கிறேன்

சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி

படிச்சிடுவோம்,

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படிச்சு போட்டியளா தம்பி!

பகிர்வு நன்று!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோமா

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி...

@ சங்கர்

நன்றி.

@ ஜோதிபாரதி

படிச்சி போட்டேன் அண்ணா. வருகைக்கு நன்றி...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சுஜாதாவின் வழக்கமான நாவல்களில் இருந்து வேறுபட்ட என்னை மிகவும் கவர்ந்த நாவல்களில் இதுவும் ஒன்று.

வாசிப்புக்கு அவசியப் பரிந்துரை.

தராசு said...

யோவ், எங்கய்யா போன,

இப்பல்லாம் ஆள பார்க்கவே முடியறதில்லை.

அண்ணாமலையான் said...

நன்றி...மதிப்பிற்குரிய சுஜாதா இன்னும் நம்மிடம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அறிவன்

உங்கள் கருத்துக்கு நன்றி...

@ தராசு

இங்கதான் இருக்கேன் பாஸ்...

@ அண்ணாமலையான்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

A N A N T H E N said...

சுஜாதாவின் முன்னுரையும் உங்களின் வர்ணனையும் வாசிக்க தூண்டுகின்றன... முடிவு என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே

வரதராஜலு .பூ said...

எனக்கு மிகவும் பிடித்த நாவல். நல்ல பகிர்வு

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனந்தன்

கதை என்வென்பதை நான் இங்கு குறிப்பிட்டுவிட்டால் புத்தகம் படிப்பதற்கான ஆர்வம் குன்றிவிடும். ஆக புத்தக அறிமுகம் மட்டுமே கொடுத்துள்ளேன்.

@ வரதராஜ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Tamilvanan said...

நூல் அறிமுக‌ம்,வாசித்துப் பார்க்க வேண்டும் எனும் ஆவ‌லை தூண்டுகிற‌து.

Unknown said...

I read this book. It's really one of the best novel of sujatha

Unknown said...

One of the best novel by Sujatha. No one can deny it.