Thursday, November 12, 2009

சொல்லாததும் உண்மை


சரித்திரம் தனக்கு தோதாக சில வேளைகளில் வேடமிட்டுக் கொள்கிறது.

பூர்வ குடி தோழர் சொன்னார்.

கொடும் பாவிகள் சூழலிலிருந்து இருந்து தப்பித்துக் கொள்ளவே எம்மினம் தூர விளகிப் போனது என அவர் கூறினார். முன் நாட்களில் அவர்களுக்கு நடந்தவற்றை நாம் முழுமையாக அறிந்துக் கொள்ள செய்திகள் சொற்பமாகவே இருக்கிறது. எப்போதோ சொல்லி, எங்கெங்கோ பரவிய விசயங்கள் திட்டுத்திட்டாக நமக்கு கிடைக்க பெறுகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பேரரசுகளின் சாம்ராஜிய விஸ்தரிப்பு கடல் கடந்து பல தேசங்களுக்கு நீண்டிருந்தது. கடல் வழி பயணங்கள் அதிகரித்திருந்த அவ்வேளையில் வியாபாரங்களும் அதிகரித்திருந்தது. வியாபாரம் எனும் பெயரில் சுரண்டிய செல்வங்களை வெவ்வேறு தேசங்களுக்கு இட்டுச் செல்லும் போது கடற்கொள்ளையர்களின் தொல்லை வலுத்திருந்தது. திருடனிடம் திருட்டு, திருட்டுக்கு மேல் திருட்டு என கொள்ளையர்களின் அழிச்சாட்டியம் பல்கிப் பெருகிப் போனது.

பாதுகாப்பின் பொருட்டு சாம்ராஜியபதிகள் கடல் காவலை வலுப்படுத்த முற்பட்டார்கள். பல காலமாக கொள்ளையிட்டு வாழ்ந்துவிட்டவர்கள் எங்கு போவார்கள். காவல் நெருக்கடிகளின் பாதிப்பு அதிகரிக்கவும் விட்டதை விட்டபடி அவர்கள் காடுகளுக்குள் புகுந்தார்கள். காட்டுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்தவர்களின் இடங்களை ஆக்ரமிக்க எத்தனித்தார்கள். அவர்களை அழிக்கவும் செய்தார்கள். நாகரீகம் அவ்விடத்தில் இன்னமும் தன் சிறுபிள்ளை பிராயத்தில் தான் இருந்திருக்கிறது.

காட்டில் இருந்த பூர்வ குடி மக்களால் ஏன் அவர்களை எதிர்க்க முடியவில்லை? அவர்கள் இனத்தால் சிறுத்திருந்தார்களா? பலத்தால் வலுவிழந்து இருந்தார்களா? கொள்ளையர்களின் ஆயுதங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லையா? யார் இந்த கொள்ளையர் கூட்டம்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? எனும் கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு விடப்படுகிறது.

ஓர் இனம் நெடுங்காலமாக தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதற்கான இக்காரணங்களை அறிய மேலும் சில முயற்சிகள் தேவைப்படுகிறது. மாயா நாகரிக மக்கள், சிவப்பிந்தியர்கள் என இன்னும் பல இன அழிப்புகள் சரித்திரத்தில் தொன்றியும் மறைந்தும் இருக்கிறது.

**********

"பொதுவாவே உங்களுக்கு நிறைய உதவி கிடைக்குமே... யார் உங்களை வந்து பார்ப்பாங்க.... யாருக்கு ஆதரவா இருக்கீங்க..."

"எனக்கு காசு கிடைச்சா போதும். மத்தத பத்தி எனக்கு கவல ல்ல. அரசியல் எல்லாம் சும்மா ஏமாத்துவானுங்க... காசு கொடுத்தா வாங்கிப்பேன்... அது போதும்..."

பூர்வீக குடி தோழர் சொன்னார்.

பொருளியல் சிந்தனை. மனித நாகரீக வளர்ச்சியின் மேன்மையான சித்தாந்தம். அதில் வலுத்தவன் சமுதாயத்தின் மத்தியில் தன்னை உயர்வாக காட்டிக் கொள்கிறான். பொருளியில் அடிப்படையிலான இச்சிந்தனை எதனால் அந்த தோழரிடம் உறுவானது? எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்பதன் அர்த்தம் என்ன? பணம் கிடைத்தால் நான் எது வேண்டுமானாலும் செய்ய தயார் என்பதா?

***********

மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சரித்தி புத்தகத்தை நீங்கள் தலை கீழாக கூட புரட்டிப் பார்க்கலாம். பூர்வீகக் குடியினரைப் பற்றிய செய்திகள் எத்தனை இடங்களிடல் உள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் புதிதா அச்சிடப்பட்ட ரித்திர புத்தகத்தில் மலேசிய நாட்டின் பெருன்பான்மையினரின் சகோதரர்கள் இவர்கள் என எங்கோ ஒரு மூலையில் குறிப்பிடப்பட்டிருந்தது. போற்றுதலுக்குறிய விடயம் தான். சரி அதைப் பற்றி நமக்கென்ன.

போர்த்துகீரியர் ஆட்சி காலம், பிரிட்டிஷ் ஆட்சி காலம், ஜப்பானிய ஆட்சி காலம் என்பன மலாயா சரித்திரத்தில் குறிப்பிட தக்கவை. இக்காலகட்டங்களில் இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா? பூர்விக குடியினரின் சிறப்பு சழுகைகள் அப்போதே வழங்கப்பட்டுவிட்டதா?

மக்களை சக்கையாக பிழிந்தெடுத்த இந்த ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து இவர்கள் தப்பி வாழ்ந்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அக்காலகட்டத்தில் நடந்தவற்றிற்கான குறிப்புகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதை மீட்டெடுப்பது இப்போது சாத்தியம் தானா?

**********

உங்களில் கற்றறிந்து உயர் நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்களே என்றேன்.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

பொருளியல் தோடல் அதிகரித்த போது மக்கள் வெளி வர ஆரம்பித்தார்கள். அக்காலகட்டங்களில் மதம் சார்ந்த அமைப்புகள் சில ஆங்காங்கு பல உதவிகள் செய்து வந்தார்கள். பெயர் மாற்றம், மதம், புதிய நம்பிக்கை என சமூகத்தில் மாற்றங்கள் பரவலாக நடந்து வந்தது. இவர்களின் வழி சமூகத்தில் கல்வி, பொருளாதாரம் வாழ்க்கை முறை என புதிய சிந்தனைகள் பரிநாமம் பெற்றது.

இவ்வமைப்புகளைக் கண்டு அச்சம் கொண்டவர்களும் உண்டு. நம்மை மாற்றி ஏதாவது செய்துவிடுவார்களோ என மூத்த குடியினர் பயந்தார்கள். இன்னமும் பலருக்கு பயம் இருக்கிறது. அவர்களிடம் இருந்து இலகுவாக உதவி கிடைக்கும்படி இருப்பினும் அவர்களின் மதம் எனும் போர்வையை போர்த்திக் கொள்ளாத வரையில் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கருணை கிட்டும் என சொல்லி அமைதிகாத்துவிடுகிறார்கள்.

**************

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சுற்றுலா துரைக்கு மவுசு கூடிற்று. காலப் போக்கில் பூர்வக் குடி மக்களின் வாழ்வும் கலாச்சார முறைகளும் சுற்றுலா துரைக்கு கொண்டு வரபட்டது.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

இதன் வழி பூர்வக் குடி மக்கள் பொருள் சம்பாதித்துக் கொள்ள வழிவகுத்தது. பிள்ளைக் கறி கேட்ட கதையாக பெண் சதை வியாபாரமும் ஆங்காங்கு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதில் யாரை குறை சொல்ல முடியும். அடிதட்டு மக்களும் வாழ்ந்தாக வேண்டிய நிலை. வயிற்றைக் கழுவ அவர்களுக்கும் பணம் தேவைபடுகிறது. சரி தவறென்பது அவர்களின் சிந்தனைக்குட்பட்டது. நான் சொல்லி ஏதுமில்லை என்றார்.

************

மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் இடங்களில் இருப்பவர்கள் அதை எப்படி சமாளிக்கிறார்கள்.

பூர்வக் குடி தோழர் சொன்னார்.

பொரும்பான்மையாக இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதால் அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருக்கிறது. சளி, காய்ச்சல் போன்றவற்றை பெரிதாக கருதுவதில்லை. அவற்றைப் போக்க சில இயற்கை உணவுகள் சாப்பிடப்படுகிறது.

.......

பூர்வீகக் குடியினரில் இயற்கையாக மரணம் ஏய்துபவர்கள் பலரும் மத்திம வயதினரைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களது முகத் தோற்றம் உடல் அமைப்பு போன்றவற்றிற்கு மரபணு எவ்வளவு தூரம் காரணமாக இருக்கிறதோ அதே போல இவர்களின் மரணத்திற்கு அதுவே காரணமாக சொல்லப்படுகிறது. ஊது குழாய் வழி வேட்டையாடிய உணவுகளை சாப்பிடும் போது அதன் நச்சுத் தன்மை பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சில மருத்துவ குறிப்புகள் உள்ளன. இக்காலத்தில் ஊது குழாய் வேட்டை குறைந்திருப்பினும் அதன் பாதிப்பு இருக்கவே செய்கிறது.

*************

டுரியான் மற்றும் மங்குஸ்தின் பழ காலங்களில் வெளி வேலையில் ஈடுபட்டிருப்போரும் அதற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, பழ வியாபார வேட்டையில் இறங்கி விடுகிறார்கள். தினமும் கிடைக்கும் கைக்காசு மட்டும் காரணமல்ல. சாதாரண வேலையை விட இதில் ஈட்டும் தொகை அதிகம்.

பழ காலத்தில் பூர்வக் குடி தோழர் அவரிடம் அழைத்துச் சென்றிருந்தார். அந்தி சாய்ந்த வேலையில் ஓரிரு நண்பர்களோடு கைவிளக்கு எடுத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியின் பகுதிக்கு நடை பயணப்பட்டோம். சுற்றுலா மையமாக்கப்பட்ட அவ்விடம் பயணிகளுக்கு அவ்வேளையில் மூடப்பட்டிருந்தது.

"இது தான் சரியான நேரம், கருக்கிருட்டு நேரத்தில் வரக் கூடாது. 'டத்தோ' இருக்கும்" என்றார்.

அவர்கள் கையில் இருந்த விளக்குகளை நீரோட்ட பகுதியில் இருந்த பாறைகளின் இடுக்குகளில் ஒளியிட்டு அடித்தபடி நடந்தார்கள்.

நகைகளை களையாமல் நிர்வீழ்ச்சி பகுதிகளில் குளிப்பவர்களின் ஆபரணங்கள் அடித்துச் செல்லப்பட்டு இப்படி பாறைகளின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். இருட்டிய வேளையில் விளக்கொளி படும்போது நகைகள் மினுக்கும். இப்படியும் இவர்களின் பொருளியல் தேடல்கள் அமைகின்றன.

*********

பூர்வக் குடி தோழர் கேட்டார்.

எங்களைப் பற்றி எழுதப் போவதாக சொன்னாயே? புனைவா அல்லது நிஜமா?


******************************************************************


பார்வைக்கு சில சுட்டிகள்:

http://malaysiana.pnm.my/Alat%20Tradisonal/buru_sumpitan.htm

http://en.wikipedia.org/wiki/Orang_Asli

http://www.malaysiasite.nl/orangeng.htm

15 comments:

ஆயில்யன் said...

பூர்வ குடி மக்கள் பற்றி நிறைய கேள்விகள் - விடை தெரியாமலேயே அந்த மக்களை ப்போன்று தனித்து நிற்கிறது! காடுகளில் மட்டுமல்ல நகரங்களிலும் வாழ்ந்த - மண்ணின் மைந்தர்கள்- பற்றி வரலாற்று தகவல்கள் கிடைப்பது மிக அரிதாகிவிட்டது!

கடைசி வரிகளில் நண்பர் கேட்டது நச்!

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

ஆராய்ச்சிகள் செய்வதிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைப்பதிலும் உள்ள ஆர்வம் பாராட்டத் தக்கது.

நல்ல அரிய தகவல்கள் - புனைவு அல்ல

நல்வாழ்த்துகள்

ஜெகதீசன் said...

நல்ல அரிய தகவல்கள்

கோவி.கண்ணன் said...

சிறப்பான இடுகை !

பழங்குடியினர் உதிரத்தில் தான் நாகரீகம் வளர்கிறது !
:(

Tamilvanan said...

சரித்திரம் என்பது நிகழ்வு, நிகழ்ந்தவை.அதற்கு வேடமில்லை மாறாக சிலர் தனக்கு தோதாக அதனை மாற்றிக் கொள்கிறார்கள், ஏமாற்றிக் கொள்கிறார்கள், ஏமாற்றிக் கொல்கிறார்கள்.
எந்த‌ நாடாயினும் பூர்வ‌க் குடி ம‌க்க‌ள் உரிமை பாதுகாக்க‌ப் ப‌ட‌வேண்டும்.

ராமலக்ஷ்மி said...

அருமையான இடுகை. பாராட்டுக்கள்.

ரவி said...

good star post, voted.

கு.உஷாதேவி said...

மிக அருமை விக்கி. உங்கள் கட்டுரையைச் சொன்னேன்!

வால்பையன் said...

நிறைய விசயங்களை சேகரித்து வைத்திருக்கிறீர்களே!

தல வழக்கம் போல போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி எனக்கு அனுப்புங்க!

Anonymous said...

அருமை ,இவர்களை இன்னும் நினைவில் வைத்துருப்பது உங்கள் மனிதாவிமானத்தை காட்டுகிறது ,வாழ்த்துக்கள் அய்யா.சி.நா.மணியன்

மனோவியம் said...

அருமையான படைப்பு.காட்டிலே கறைந்த மக்களை வலைப்பதிவில் ஏற்றிவிட்டீர்.அவர்களின் நாகரீகம் தனி தன்மை வாய்ந்த பண்பாடுக் கூறுகளை கொண்டது.எத்தியோப்பிய, அல்லது சோமலியாவிலிருந்து வந்த ஆதி இன மக்ககளின் இன கூறுகள் இவர்களாக தான் இருக்க வேண்டும்.இவர்கள் மலேசியாவில் மட்டும் இல்லை,இந்தியா,பர்மா,இலங்கை,சுமத்திரா மற்றும் ஆஸ்திரலியா வரக்கும் பரவி இருந்தாக வரலாறு கூறுகிறது.இவர்கள் பூர்வ குடி மக்கள் மட்டும் இல்லை, இவர்கள் ஆதி இனமக்கள்.இவர்களையும் தன் இனத்தோடு கறைக்க பார்க்கிறது ந்மது அரசாங்கம்,நல்ல பதிவு விக்கி. வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆயில்யன்

நன்றி பாஸ்... அதான் நாம் டையரி எழுதனும் சொல்றது.

@ சீனா

நன்றி ஐயா

@ ஜெகதீசன்

நன்றி பாஸ்

@ கோவி.கண்ணன்

ஏன் அப்படி சொல்கிறீர்கள்? விளக்கம் [பிலிஸ்...

@ தமிழ்வாணன்

உரிமையை பாதுக்காக்கும் சாத்தியங்கள் தகர்க்கப்படுகின்றன.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ராமலக்‌ஷ்மி

நன்றி...

@ செந்தழல் ரவி

நன்றி அண்ணா

@ வால்

நிச்சயம் செய்கிறேன், நன்றி தல.

@ சி.நா.மணியன்

நன்றி.

@ மனோகரன்

நன்றி நண்பரே.

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

மாதேவி said...

பூர்வக் குடிமக்கள் பற்றிய தகவல்கள் நன்று.