Wednesday, August 26, 2009

பி.ரம்லி - மலாய் நடிப்புலகின் சகாப்தம்



"நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழ விருப்பப்படுகிறேன்" என அவரது நண்பரிடம் கூறினார். அவர் விளையாட்டாய் சொன்ன வார்த்தை எதிர்கால உண்மை என அவர் அறிந்திருக்க மாட்டார். வரலாற்றில் பெயர் பதிக்க வேண்டுமென அவர் அக்கறை எடுத்துக் கொண்டிருந்திருப்பாரா என்பது தெரியவில்லை. காலத்தால் சாலச் சிறந்த நிகழ்வுகளை நிழ்த்திய பெருமையே அவரை நிலைத்து நிற்கச் செய்துள்ளது.

சரித்திரம் படைத்த சாதனையாளர்களுக்கு அறிமுகம் என்பது அர்த்தமற்றது என்பார்கள். அறியாதவர்களுக்கு சொல்வது கடமையும் ஆகும்.

மலாய் திரை என்றில்லாமல் மலாய் இலக்கிய உலகிற்கு ஒரு சகாப்தமாய் அமைந்தவர் பி.ரம்லீ எனும் தான்ஸ்ரீ தெக்கு ஸாக்காரியா பின் தெக்கு ங்ஞா பூத்தே.

அவரின் நகைச்சுவைகளை கண்டு சிரித்திராதவர் இல்லை. அவர் பாடலை கேட்டு முனுமுனுக்காதவர் இல்லை. நெஞ்சுருகும் அவர் நடிப்புத் திரனை கண்டு மன உருக்கம் கொள்ளதவரும் இல்லை.

பீ.ரம்லி 1929-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி பினாங்கு மாநிலத்தில் பிறந்தார். இவரது தாயார் சே மா உசேன். தந்தையின் பெயர் தேக்கு ஞா பூத்தே. இவரது ஆரம்பக் கல்வியை 'கம்போங் ஜாவா' மலாய் பள்ளியிலும் உயர் நிலைக் கல்வியை பிரான்சிஸ் லைட் பள்ளியிலும் தொடர்ந்தார்.

அதன் பின் பினாங்கு 'பிரி ஸ்கூலில்' படிப்பை தொடர்ந்து போர் கால கட்டாயத்தின் பேரில் படிப்பை முடிக்காமல் நின்றார். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய 'நேவி' பள்ளியின் தனது படிப்பை தொடரும் வாய்ப்பைப் பெற்றார்.

சிறு வயது முதற் கொண்டு இசை துறையில் நல்ல முனைப்புக் கொண்டிருந்தார். அதன் பேரில் பல மலாய் இசை குழுக்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு தனது திறமைகளை வெளிக்கொனர்ந்தார்.

1947-ஆம் ஆண்டு நடை பெற்ற பினாங்கு வானொலியின் பாடல் திறன் போட்டியில் வெற்றி வாகைச் சூடிய பீ.ரம்லி மலாயாவின் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தந்தை பெயரின் அடையாலமாக 'பூத்தே' எனும் சொல்லைச் சுருக்கி 'பி' எனும் வார்த்தையை தனது பெயருக்கு முன் இட்டுக் கொண்டார். இது பினாங்கு வானொலி போட்டிக்காக செய்துக் கொண்ட பெயர் மாற்றம் எனினும் அவர் இறுதி காலம் வரையும் அது நிலைத்து நின்றது.

தொடர்ந்து 1948-ஆம் ஆண்டு பி.ரம்லி அவரது நண்பரோடு இணைந்து ஒரு இசைக் குழுவை தொடங்கினார். அக்குழுவிற்கு முஸ்திக்கா இசைக் குழுமம் என பெயரிட்டார்கள். அக்காலகட்டத்தில் புக்கிட் மெர்தாஜாமில் ஒரு நிகழ்வில் அவருக்கு பாடும் வாப்புக் கிட்டியது. அதே வேலையில் திறமை மிக்க படைப்பாளியை தேடும் பணியில் இருந்த B.S.Rahjans அந்நிகழ்விற்கு விருந்தினராக வந்திருந்தார். பி.ரம்லியின் திறமைமிக்க படைப்பில் மகிழ்ச்சி கொண்ட அவர் பி.ரம்லியை சிங்கைக்கு வரும்படியாக அழைப்புவிடுத்துச் சென்றார்.

அதே வருடத்தில் பி.ரம்லி சிங்கைக்கு தமது பயணத்தை மேற்கொண்டார். அவரது முதல் படமான CHINTA 'சிந்தா' 1948-ஆம் ஆண்டு வெளியீடு கண்டது. அத்திரைபடத்தில் வில்லனாக நடிப்பேற்றிருந்தது மட்டுமல்லாமல் பிண்ணனி பாடகராகவும் குரல் கொடுத்திருந்தார்.

அவரின் அயராத முயற்சியாலும் திறமையாலும் பல வாய்ப்புகள் அவர் வீட்டின் கதவை தட்டின. 1948 முதல் 1955 வரையினும் மொத்தம் 27 பட வாய்ப்புகள் அவர் கைவசம் இருந்தது.

1953-ஆம் வருடம் ஜுனைடா டாயெங் ஹரிஸ் எனும் பெண்னைக் கரம் பிடித்தார். அவர்களுக்கு முகமது நசீர் மற்றும் அர்ஃபான் என இரு குழந்தைகள் பிறந்தார்கள். ஜுனைடாவுடனான மண வாழ்க்கை 1954 ஆண்டு முறிவு கண்டது.

ஜுனைடாவுடனான மணமுறிவிற்குப் பின் 1955-ஆம் ஆண்டு நொருசான் எனும் பெண்ணுடன் தமது இல்லற வாழ்க்கையைத் தொடர்ந்தார். இருப்பினும் இந்த முறையும் பிசக்கு ஏற்பட்டு 1961-ஆம் ஆண்டு தமது இரண்டாம் தாரத்தை விட்டுப் பிரிந்தார்.

அதே வாருடம் சல்மா இஸ்மையிலை சந்திந்தார், சல்மா இஸ்மையில் 'சலோமா' எனும் புனைப் பெயரால் அறியப்பட்டவர். சலோமாவுடனான வாழ்க்கை அவரது இறுதி காலம் வரையினும் நீடித்தது.

மூன்று திருமணங்கள் புரிந்திருப்பினும் அவருக்கு இரு பிள்ளைகள் மட்டுமே இருந்தார்கள். அவர் பல பிள்ளைகளைத் தத்தெடுத்தும் வளர்த்து வந்தார். அவர்கள் பெத்தி, சாக்கியா, சபாருடின் மற்றும் டயன் போன்றோர் ஆவர்.

மலேசியத் திரைப்பட வரிசையில் பி.ரம்லி மொத்தம் 66 படங்கள் நடித்துள்ளார். மேலும் 359 பாடல்களையும் பாடியுள்ளார். அவரது இறுதிப்படம் 'லக்சமானா டோ ரே மீ' என்பதாகும்.

ஜகர்த்தா, ஹாங் கங், மனிலா, மற்றும் கோலாலபூரில் நடந்த ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த படைப்பாளிக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். அது போக அனைத்துலக திரைப்பட விருது நிகழ்வு பெர்லினின் நடந்த போது கலந்துக் கொண்டுள்ளார்.

29-ஆம் திகதி மே மாதம் 1973-ஆம் வருடம் பி.ரம்லி மரணமடைந்தார். அப்போது அவரின் வயது 44 ஆகும். மலாய் திரைப்பட உலகிற்கு அவராற்றிய சீரிய பணியின் பேரில் 1990-ஆம் வருடம் பேரரசரால் தான் ஸ்ரீ படம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பி.ரம்லியின் திரை காவியங்கள் இன்னமும் 'தியேடர் கிலாசிக்’ எனும் அங்கத்தில் மலேசிய தொலைக்காட்சிகளில் ஒளியேற்றப்படுகிறது. இவரின் படைப்புகளில் பல நகைச்சுவை தன்மையை அதிகமாக கொண்டிருக்கும். மக்களின் வாழ்வியல் முறைகளில் உள்ள சிக்கலான சிந்தனைகளை கூட தமது மெல்லிய நகைச்சுவை உணர்வில் தலையில் தட்டாத விதமாக சொல்லிவிடுவார்.

சிந்திக்க வைக்கும் நகைச்சுவை தன்மை மட்டுமன்றி, மலேசிய வாழ் பல இனங்களையும் தமது திரைப்படங்களில் அவர் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை சித்திரமாக படைத்த இவர் அப்படத்தின் ஒரு காட்சியில் சீன தையல்காரனை அறிமுகம் செய்திருப்பார். அரபிய நாட்டில் சீன தையல்காரன். சிரிக்க தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது. திடர்களின் தலைவர் ‘அனுவல் லீவ்’ கொடுப்பதும், ‘ஓடி’ செய்ய சொல்வது நகைச்சுவை தன்மையின் உச்சமென்றே சொல்லலாம். அதிக பணத்திற்கு வேலை செய்யும் சீனன், அதிகமாக பிலாச்சான்(இறால் மண்டையில் செய்தது) சாப்பிட்டு சிந்திக்க தவறும் மலாய்காரன் என நூலிலை தொடுதலில் அந்நாளைய மலேசிய மக்களின் நிலைபாட்டை விளக்கி இருப்பார்.

பி.ரம்லியின் திரைப்படங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், சீரியஸ் படங்களாக இருந்தாலும் சமுதாயத்தை சார்ந்த அவரது பார்வையும், கதை அமைப்புகளின் நிபுணத்துவமும் என்றுமே மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

14 comments:

கலையரசன் said...

பி.ரம்லியை பற்றி எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பா!

Tamilvanan said...

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத பல சினிமாக்களை வழங்கியவர். மக்களின் ரசனையை வாசிக்க தெரிந்தவர்.

வால்பையன் said...

அட மலேசியாவுல சினிமா கூட எடுப்பாங்களா?

ஜோ/Joe said...

இது தான் பதிவு.

Anonymous said...

cubaan... மறக்க முடியுமா அவரை??

sivanes said...

ஆபாசம் கலக்காத வாய்மொழி, அருவருப்பளிக்காத உடல்மொழி என அற்புதமான நகைச்சுவைகளை திரைக்கு அளித்துசென்ற மிக உன்னத கலைஞர்! சினிமாவின் பல்துறை வித்தகர், அவர் குரலில் ஒலிக்கும் பாடல்களும் கூட இன்றளவிலும் மக்கள் மத்தியில் வரவேற்புப்பெற்றுவருபவை!நல்ல பதிவு விக்னேக்ஷ்! பாராட்டுக்கள்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கலையரசன்

நன்றி கலை.

@ தமிழ்வாணன்

உண்மைதான். அதனால் தான் மக்கள் மனதை கவர்ந்த நாயகனாக அவரால் திகழ முடிந்தது.

@ வால்பையன்

:) குட் குவஸ்டின் பாஸ்...

@ ஜோ

என்ன சொல்லவரிங்க.... புரியலையே...

@ புனிதா

முழுசா சொல்லி முடிச்சா நாலு பேருக்கு விளங்குமில்லைங்களா... ஹம்ம்ம்ம்...

@ சிவனேசு

நன்றிங்க...

சி தயாளன் said...

//திடர்களின் தலைவர் //

திருடர்களின் தலைவர்..?

RAHAWAJ said...

நமக்கும் அவரின் படம் பிடிக்கும் மலேசிய எம் ஜி ஆர் என்றால் அது பி.ரம்லிதான்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டொன் லீ

ஆம் திருடர்கள் தாம்... வருகைக்கு நன்றி டொன் லீ

@ ஜவஹர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Anonymous said...

Hi anna, Viknesvary pesugiren. Karuthukkalai elimaiyana murai ill eluthi irukkingga. Unggal thiramai thodaravum. Intha Post arumai!

Unknown said...

விக்கி, இந்த பதிவு எழுதிய உங்களை எப்படி பாராட்டுவதுனு தெரியல. பி.ரம்லி எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர். அவர் படங்களை எத்தனை முறை போட்டாலும் விடாமல் பார்ப்பேன். நீங்கள் அவர் வாழ்க்கை வரலாறை இவ்வள்வு அழகாக தொகுத்து எழுதியிருப்பது மலாய் சினிமா உலகிற்கு மிக பெருமை எனலாம்....வாழ்த்துக்கள்!

Unknown said...

இவரை மலேசிய சிவாஜி என்றால் மிகத் தகும். மிகவும் திறமைசாலியான நடிகர்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விக்னேஸ்வரி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கையே...

@ உஷா

புகழ்வதற்கு ஒரு அளவு இல்லையா? :)வருகைக்கு நன்றி...