Wednesday, January 21, 2009

தீராத காதல் நோய்!


முத்தொளிகள் சிதறிடவே
முகமலர சிரித்தவளே!
மூச்சடைத்துப் போனேனே
முத்தமொன்று நீ கொடுக்க!

காலையிலே உன் நினைவு
கச்சிதமாய் நிக்குதடி!
காதல் ரசம் கேட்குதடி
கஞ்சதனம் காட்டாதே!

விழிகளிலே மின்னளொளி
வீழ்ந்திடுதே என் மனமும்
வேல் கொண்டு தாக்கியதாய்
வண்ண மயில் நீ காண!

சேலைகட்டி நீ வரவே
சோலையிலே கிசுகிசுப்பு
செவ்விதழ்களிரண்டு கொண்ட - உன்
செவ்வாயும் மலர் என்றே!

சீரான நடை கொண்டு
சித்திரமாய் நீ வரவே!
சின்ன மயில் நடனமென
சீண்டல்கள் செய்வேனடி!

மாற்றங்கள் பல கண்டேன்
மதி மயங்கி நான் நின்றேன்!
மங்கை நீ வருவாயோ - என்
மனதை தான் தருவாயோ!

14 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தம்பி விக்கி, காதலில் விழுந்தேன் என்று உணர்த்துகிறீர்கள். இந்த நோய்க்கு மருத்துவர் எங்கு இருக்கிறார் என்று கண்டு பிடித்தாயிற்றா? :P

A N A N T H E N said...

//மூச்சடைத்துப் போனேனே
முத்தமொன்று நீ கொடுக்க!//
கொலை முயற்சி நடந்திருக்கு!!!

//காதல் ரசம் கேட்குதடி
கஞ்சதனம் காட்டாதே!//
காதல் ரசம் சமைப்பது எப்படி? குறிப்பு தாங்க

//உன்
செவ்வாயும் மலர் என்றே!//
அப்போ புதன் வியாழன் வெள்ளி எல்லாம்???

//சின்ன மயில் நடனமென
சீண்டல்கள் செய்வேனடி!//
பெட்டை மயில் நடந்து வந்தா நல்லாவா இருக்கும்?

//மங்கை நீ வருவாயோ - என்
மனதை தான் தருவாயோ!//
ஏன் மனச திருடிட்டு போயிட்டாங்களா?

நட்புடன் ஜமால் said...

காதல் நோய்க்கு

மருந்து தந்து நோயயை கூட்டுமே ...

து. பவனேஸ்வரி said...

என்னங்க ஒரே காதல் கவிதையா இருக்கு? யாருங்க விக்கி மனசைத் தூக்கிட்டுப் போனது? பாவங்க மனுசன், தயவு செய்து திருப்பிக் கொடுத்திடுங்க.

A N A N T H E N said...

//காதல் நோய்க்கு

மருந்து தந்து நோயயை கூட்டுமே ...//

இது எனக்கு புடிச்ச பாட்டுங்க! உங்களுக்குமா?

மோனோலிசா said...

அப்படியே திருவள்ளுவரின் காமத்துப் பாலைக் கரைத்துக் குடித்தாற்போல் தீட்டியிருக்கின்றீர்.

VG said...

##காலையிலே உன் நினைவு
கச்சிதமாய் நிக்குதடி!##

puriyuthu puriyuthu, athan 6.30 lam eluntudiringala?? :P:P

##மாற்றங்கள் பல கண்டேன்
மதி மயங்கி நான் நின்றேன்##

Taniya full adica apaditan. I MEAN GYM. :P :P



##
து. பவனேஸ்வரி said...
என்னங்க ஒரே காதல் கவிதையா இருக்கு? யாருங்க விக்கி மனசைத் தூக்கிட்டுப் போனது? பாவங்க மனுசன், தயவு செய்து திருப்பிக் கொடுத்திடுங்க.
##

i do support her. ppl who stolen his heart, pls return back to him. so pity. :D

VG said...

##
ஜோதிபாரதி said...
தம்பி விக்கி, காதலில் விழுந்தேன் என்று உணர்த்துகிறீர்கள். இந்த நோய்க்கு மருத்துவர் எங்கு இருக்கிறார் என்று கண்டு பிடித்தாயிற்றா? :P
##

SAANIYADI SITTAR GOT THE MEDICINE.. nambathi viknesh kitte kettu paarunga...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா... கவிதைக்கு கருத்து சொல்லும் நீங்கள் தான் மருத்துவர்.

@ ஆனந்தன்

என்ன இது சின்ன புள்ள தனமா? வருகைக்கு நன்றி...

@ ஜமால்

நன்றி நண்பரே...

@ பவனேஸ்

என்ன இது புரளிய கிளப்புறிங்க... வருகைக்கு நன்றி...

@ மோனாலிசா

ஆஹா... இது நக்கலாக இருக்கே... வருகைக்கு நன்றிங்க...

@ விஜி

நீங்களும் சின்ன புள்ள தனமாதான் சொல்லி இருக்கிங்க... வளர்க :P வருகைக்கு நன்றி...

Anonymous said...

ennoda height patti yellam inga pesa koodathu.
aaalu varalenalum, atleast moolai valarntu irukku yennaku, but inga naatule sila per padiche ara LOOSA suttikittu irukkanga...

:D:D:D

நான் said...

வருவார்கள் தருவார்கள் வாழ்த்துகள்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ நான்

வாழ்த்துக்கு நன்றி... இது முழுக்க முழுக்க கற்பனைதாங்க....

சி தயாளன் said...

ஓ....நான் பிறகு வந்து கமெண்ட் போடிறன்..

VIKNESHWARAN ADAKKALAM said...

@டொன் லீ

பிறகு வரலையே...