நேற்றய தினம் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள். இன்றைக்கு தமிழை ஆண்டுக் கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலேயே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடக்கூடிய வல்லமை வாய்ந்தவராக வைரமுத்து திகழ்கிறார்.
அவருடைய கவிதைகள் பல எனக்கு மிக அத்துப்படி. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் நினைவில் இருந்து அழியாது. முக்கியமாக அம்மா, கூடு மற்றும் உலகம் எனும் கவிதைகள் படிக்க படிக்க திகட்டாது. அவருடைய தமிழுக்கு நிறம் உண்டு எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இருந்து ஒரு கவிதையை இங்கே எழுதிப் போகிறேன்.
பிற்சேர்க்கை
ஒன்று:
சொல்லுங்கள் புலவரே!
முத்துக்கள் பிறக்கும்
இடம் பத்து…
முத்துக்கள் பிறக்கும்
இடம் பத்து…
மேகத்தில் பிறக்கும்
சங்கில் ஜனிக்கும்
சிற்பியில் இருக்கும்
தாமரையில் உயிர்க்கும்
வாழையில் கிடைக்கும்
மூங்கிலில் முளைக்கும்
தந்தத்தில் வெடிக்கும்
நாகத்தில் தெரிக்கும்
சங்கில் ஜனிக்கும்
சிற்பியில் இருக்கும்
தாமரையில் உயிர்க்கும்
வாழையில் கிடைக்கும்
மூங்கிலில் முளைக்கும்
தந்தத்தில் வெடிக்கும்
நாகத்தில் தெரிக்கும்
“ஒன்றை மறந்தீரே…”
“என்னது?”
“உழைப்பவன் நெற்றி”
“என்னது?”
“உழைப்பவன் நெற்றி”
இரண்டு:
சொல்லுங்கள் அறிஞரே!
மூடநம்பிக்கை
எவை எவை?
கழுதை கத்துதல் சுபம்
விதவை எதிர்வந்தால் பாவம்
மொட்டையடித்தால் முக்தி
உள்ளங்கை அரித்தால் வருவாய்
காலையில் காணும் கனவு பலிக்கும்
விதவை எதிர்வந்தால் பாவம்
மொட்டையடித்தால் முக்தி
உள்ளங்கை அரித்தால் வருவாய்
காலையில் காணும் கனவு பலிக்கும்
“ஒன்றை மறந்தீரே!”
“என்னது”.
“மந்திரியிடம் மனு”
“என்னது”.
“மந்திரியிடம் மனு”
மூன்று:
சொல்லுங்கள் ஜோசியரே!
இருட்டில் செய்யத்தகாதவை
எவை எவை
இருட்டில் செய்யத்தகாதவை
எவை எவை
முடிவெட்டலாகாது
நகம் களைதலாகாது
பேன் பார்த்தலாகாது
அழுக்குத்துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது
நகம் களைதலாகாது
பேன் பார்த்தலாகாது
அழுக்குத்துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது
“ஒன்றை மறந்தீரே!”
“என்னது?”
“தொலைக்காட்சி ஆகாது”
“என்னது?”
“தொலைக்காட்சி ஆகாது”
நான்கு:
சொல்லுங்கள் பண்டிதரே!
பார்க்க முடியாதவை எவை?
பார்க்க முடியாதவை எவை?
அலையற்ற கடல்
இறவாத உடல்
ஆகாயம் இல்லாத ஊர்
நீர் கலவாத மோர்’
திரையரங்கில் தேசிய கீதம்
பிழைக்கத் தெரிந்த கவிஞன்
கைதொடாத காதலன்
வாழைமரத்தில் ஊஞ்சல்
உலோபியின் புன்னகை
இறவாத உடல்
ஆகாயம் இல்லாத ஊர்
நீர் கலவாத மோர்’
திரையரங்கில் தேசிய கீதம்
பிழைக்கத் தெரிந்த கவிஞன்
கைதொடாத காதலன்
வாழைமரத்தில் ஊஞ்சல்
உலோபியின் புன்னகை
“ஒன்றை மறந்தீரே”
“என்னது”
“ஜனநாயகத்தின் சத்தியம்”
“என்னது”
“ஜனநாயகத்தின் சத்தியம்”
நன்றி: தமிழுக்கு நிறம் உண்டு
43 comments:
மீ த ஃபர்ஸ்ட்டு :)
வைரமுத்துவிற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
எனக்கு வைரமுத்துவின் கவிதைகளை விட கதைகள் அதிகம் பிடிக்கும். அதிலும் கவிதை நடையில் எழுதப்பட்ட தண்ணீர் தேசம்.. அப்பப்பா... கவிஞர் கலக்கியிருப்பார் :)
வைரமுத்துவின் அருமையான கவிதை வரியை கொடுத்ததற்கு நன்றி விக்னேஷ் :))
//சொல்லுங்கள் பண்டிதரே!
பார்க்க முடியாதவை எவை?
அலையற்ற கடல்
இறவாத உடல்
ஆகாயம் இல்லாத ஊர்
நீர் கலவாத மோர்’
திரையரங்கில் தேசிய கீதம்
பிழைக்கத் தெரிந்த கவிஞன்
கைதொடாத காதலன்
வாழைமரத்தில் ஊஞ்சல்
உலோபியின் புன்னகை
“ஒன்றை மறந்தீரே”
“என்னது”
“ஜனநாயகத்தின் சத்தியம்”//
கலக்கல் :))
//நன்றி: தமிழுக்கு நிறம் உண்டு//
ஆம்.. தமிழுக்கும் நிறம் உண்டு..
//இன்றைக்கு தமிழை ஆண்டுக் கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலேயே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடக்கூடிய வல்லமை வாய்ந்தவராக வைரமுத்து திகழ்கிறார்.//
இதே கேட்டகிரியில இன்னொருவர் கவிஞர் வாலி :)
//அவருடைய கவிதைகள் பல எனக்கு மிக அத்துப்படி. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் நினைவில் இருந்து அழியாது. //
சந்தோஷமான விஷயம் :)
//முக்கியமாக அம்மா, கூடு மற்றும் உலகம் எனும் கவிதைகள் படிக்க படிக்க திகட்டாது. //
அதை எப்ப வலையேத்தப் போறீங்க?
//முத்துக்கள் பிறக்கும்
இடம் பத்து…
மேகத்தில் பிறக்கும்
சங்கில் ஜனிக்கும்
சிற்பியில் இருக்கும்
தாமரையில் உயிர்க்கும்
வாழையில் கிடைக்கும்
மூங்கிலில் முளைக்கும்
தந்தத்தில் வெடிக்கும்
நாகத்தில் தெரிக்கும்
“ஒன்றை மறந்தீரே…”
“என்னது?”
“உழைப்பவன் நெற்றி”
//
சிறுபிள்ளையின் பற்கள் :)
//இருட்டில் செய்யத்தகாதவை
எவை எவை
முடிவெட்டலாகாது
நகம் களைதலாகாது
பேன் பார்த்தலாகாது
அழுக்குத்துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது
“ஒன்றை மறந்தீரே!”
“என்னது?”
“தொலைக்காட்சி ஆகாது”//
மற்றொன்று இருட்டில் தொலைந்த பொருள் தேடுதலும் ஆகாது :)
//சொல்லுங்கள் பண்டிதரே!
பார்க்க முடியாதவை எவை?
அலையற்ற கடல்
இறவாத உடல்
ஆகாயம் இல்லாத ஊர்
நீர் கலவாத மோர்’
திரையரங்கில் தேசிய கீதம்
பிழைக்கத் தெரிந்த கவிஞன்
கைதொடாத காதலன்
வாழைமரத்தில் ஊஞ்சல்
உலோபியின் புன்னகை
“ஒன்றை மறந்தீரே”
“என்னது”
“ஜனநாயகத்தின் சத்தியம்”
//
இந்த வரிசையில் அடுத்து.. பொய் சொல்லாத நாக்கு :)
என்னது இது.. திறந்தா நேரா பின்னூட்ட பேஜுக்கு வருது?
//மூடநம்பிக்கை
எவை எவை?
கழுதை கத்துதல் சுபம்
விதவை எதிர்வந்தால் பாவம்
மொட்டையடித்தால் முக்தி
உள்ளங்கை அரித்தால் வருவாய்
காலையில் காணும் கனவு பலிக்கும்
“ஒன்றை மறந்தீரே!”
“என்னது”.
“மந்திரியிடம் மனு”
//
நான் மொதோ பின்னூட்டம் போட்டா ஹிட்டு :)
கும்மி?
கும்மி??????
//நேற்றய தினம் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள். /
நேத்து ஏன் போஸ்ட் போடல :(
//Your comment has been saved and will be visible after blog owner approval. /
கும்மியடிக்க கூப்பிட்டுட்டு மூடி வைக்கறதுதான் மனிதாபிமானமா :(
//"தமிழுக்கு நிறம் உண்டு"
No comments yet. -//
;((
இது வைரமுத்துவுக்காக...
தமிழை தமிழால் தமிழாய் தந்தாய்
தமிழா... நீ வாழ்க.. வாழ்க...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
என்னது இது.. திறந்தா நேரா பின்னூட்ட பேஜுக்கு வருது?
//
கும்மியடிக்கற எடத்துல பதிவுக்கு என்ன வேல :)
அவருடைய புதல்வர் கபிலனும் சிறந்த கவிஞர் :)
சென்ஷி.. இந்தியா வராம மலேசியாவுல என்ன கும்மி? வாருமைய்யா.!
வைரமுத்துவுக்கு..
வந்தனங்கள் மட்டுமே.. வாழ்த்துக்கள் சொல்லத் தகுதியுண்டா தெரியவில்லை!
//நேத்து ஏன் போஸ்ட் போடல :(//
repeatuu.. ;-)
விக்கி,
அருமையான தேர்வு. நல்ல வரிகள். 'மந்திரியிடம் மனு' அபாரம்.
சென்ஷி, என்ன இந்த கும்மி!
அனுஜன்யா
நூல் அறிமுகத்துக்கு நன்றி விக்கி!.. :)
வைரமுத்துவின் வரிகள் தமிழ் கற்றுக் கொடுக்குள் பள்ளிக்கூடம் என்றால் மிகையாகாது... தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றவை நான் மிகவும் ரசித்தவை.
///சென்ஷி said...
//நேற்றய தினம் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள். /
நேத்து ஏன் போஸ்ட் போடல :( ///
ஆமா ஏன் பதிவு போடலை... :(
சூப்பர் கவிதை...
எனக்கும் அவர் கவிதைகள் பிடிக்கும். மிகவும் பாதித்தது யாருக்கோ பூத்த பூக்கள்
//மீ த ஃபர்ஸ்ட்டு :)//
நன்றி சென்ஷி... தமிழ் மணத்தில் இணைப்பதற்கு முன்னமே வந்துட்டிங்க..
//வைரமுத்துவிற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்//
கேக் வெட்டலாமா??
//எனக்கு வைரமுத்துவின் கவிதைகளை விட கதைகள் அதிகம் பிடிக்கும். அதிலும் கவிதை நடையில் எழுதப்பட்ட தண்ணீர் தேசம்.. அப்பப்பா... கவிஞர் கலக்கியிருப்பார் :)//
அது கண்ணீர் தேசம்
//கலக்கல் :))//
ஆமாம்
//ஆம்.. தமிழுக்கும் நிறம் உண்டு..//
ம்ம்ம் தமிழன் எனும் நிறம்
//இதே கேட்டகிரியில இன்னொருவர் கவிஞர் வாலி :)//
இல்லாமலா.. தசாவதாரத்தில் எழுதி இருக்காரே. ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜந்தான் என. அவர் இரங்கராஜன் தானே...
//சந்தோஷமான விஷயம் :)//
மிக்க நன்றி
//அதை எப்ப வலையேத்தப் போறீங்க?//
ம்ம்ம் செய்யலாம் :))
//சிறுபிள்ளையின் பற்கள் :)//
அடடே
//இந்த வரிசையில் அடுத்து.. பொய் சொல்லாத நாக்கு :)//
நான் சொல்ல மாட்டேங்க... :)) உண்மையைனு சொல்ல வந்தேன்...
//மற்றொன்று இருட்டில் தொலைந்த பொருள் தேடுதலும் ஆகாது :)//
அப்படியா? உங்க பணப் பை தொலைந்து போனால் சொல்லவும்
//நான் மொதோ பின்னூட்டம் போட்டா ஹிட்டு :)//
அதே....
//கும்மியடிக்கற எடத்துல பதிவுக்கு என்ன வேல :)//
அவ்வ்வ்வ்வ்வ்
//நேத்து ஏன் போஸ்ட் போடல :(//
நேரம் கடித்துவிட்டது நண்பரே...
//கும்மியடிக்க கூப்பிட்டுட்டு மூடி வைக்கறதுதான் மனிதாபிமானமா :(//
திறந்தாச்சு திறந்தாச்சு... என்ன ஒரு வில்லத்தனம்...
//இது வைரமுத்துவுக்காக...
தமிழை தமிழால் தமிழாய் தந்தாய்
தமிழா... நீ வாழ்க.. வாழ்க...//
அடடே... கவிதை மாதிரி இருக்கே...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
என்னது இது.. திறந்தா நேரா பின்னூட்ட பேஜுக்கு வருது?//
வரும் வரும்... கும்மியடிக்கனும்னு வந்தாச்சு... பிறகு என்ன கதை..
//பரிசல்காரன் said...
சென்ஷி.. இந்தியா வராம மலேசியாவுல என்ன கும்மி? வாருமைய்யா.!
வைரமுத்துவுக்கு..
வந்தனங்கள் மட்டுமே.. வாழ்த்துக்கள் சொல்லத் தகுதியுண்டா தெரியவில்லை!//
பரிசலுக்கு என்ன வயிற்றெரிச்சல்... பரிசல கொலுத்திடுவேன் ஜாக்கிரதை...
//அனுஜன்யா said...
விக்கி,
அருமையான தேர்வு. நல்ல வரிகள். 'மந்திரியிடம் மனு' அபாரம்.
சென்ஷி, என்ன இந்த கும்மி!
அனுஜன்யா//
வாங்க அனுஜன்யா... நீங்களாவது கும்மியடிக்காம விட்டிங்களே... ரொம்ப தெங்ஸ்
//தமிழ் பிரியன் said...
வைரமுத்துவின் வரிகள் தமிழ் கற்றுக் கொடுக்குள் பள்ளிக்கூடம் என்றால் மிகையாகாது... தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றவை நான் மிகவும் ரசித்தவை.//
உண்மைதான் அண்ணே... ரொம்ப நன்றி அண்ணே...
//ச்சின்னப் பையன் said...
சூப்பர் கவிதை...
//
சீரியசாக பின்னூட்டம் போட முயற்சி செய்து இருக்கிங்க...
//இனியவள் புனிதா said...
எனக்கும் அவர் கவிதைகள் பிடிக்கும். மிகவும் பாதித்தது யாருக்கோ பூத்த பூக்கள்//
நன்றி...
விக்னேஷ்வரன்
நல்ல பதிவு. :)
உங்கள் பதிவுகள் வழக்கம் போல இல்லாமல் வித்யாசமாகவே இருக்கின்றன.
// கயல்விழி said...
விக்னேஷ்வரன்
நல்ல பதிவு. :)
உங்கள் பதிவுகள் வழக்கம் போல இல்லாமல் வித்யாசமாகவே இருக்கின்றன.//
நிஜமாகவா... இதில் ஏதும் உள்குத்து இல்லையே...
Post a Comment