Sunday, July 06, 2008

ஒரு தாயின் மனம்


நினைவுகளை சுமக்கிறாள்
ஒரு தாய்!
பசிக்கு அழுதிடுவானோ
எனக் கனவு
கலைந்த
பச்சை உடல் காலம்!
விளையாடுகையில்
விழுந்திடுவானோ எனப்
பதறிய மாலைப் பொழுதுகள்!
தேர்வுக்காகத்
தேக்கி வைத்த
தூக்கத்தோடு
தேனீர் கலக்கிய இரவுகள்!
கல்லூரியில்
சேர்த்த போது
கண் கலங்கிய
இள நரைக் கிழவி,
திருமணம் செய்வித்து
கடமை முடிந்த
நெகிழ்ச்சியில் திளைந்திருந்தாள்!
இன்று அவள்
இறுதி மூச்சை
சுவாசிக்க மறந்து போனாள்
முதியோர் இல்லத்தில்.

46 comments:

நாமக்கல் சிபி said...

அருமையான தாய்மையைப் பற்றிய கவிதை!

கடைசி வரிகளில் முதியோர் இல்லத்தில் என்னும்போது மனசு இன்னும் கனத்துப் போகிறது!

வல்லிசிம்ஹன் said...

:(((((((((((((((((((
ஏன் அவள் முதியோர் நிலையத்துக்குப் போகவேண்டும்.

மாற்றி யோசிக்கலாம். சரியா:)

வெண்பூ said...

நல்ல கவிதை. கடைசி வரிகளில் மனது கனக்கிறது, ஆனால் அதுதானே உண்மை.

நாமக்கல் சிபி said...

//மாற்றி யோசிக்கலாம். சரியா:)//

சரியே! வல்லியம்மா!

VIKNESHWARAN ADAKKALAM said...

//நாமக்கல் சிபி said...
அருமையான தாய்மையைப் பற்றிய கவிதை!
கடைசி வரிகளில் முதியோர் இல்லத்தில் என்னும்போது மனசு இன்னும் கனத்துப் போகிறது!//


என்ன செய்ய காலம் இப்படி இருக்கிறது... வருகைக்கு நன்றி பாஸ்... மீண்டும் வருக...

அகரம் அமுதா said...

//////இன்று அவள்
இறுதி மூச்சை
சுவாசிக்க மறந்து போனாள்
முதியோர் இல்லத்தில்.//////

கவிதை அருமை. இந்த இறுதிவரிகள் என்னை மிகவும் உலுக்கியெடுத்துவிட்டது. வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//வல்லிசிம்ஹன் said...
:(((((((((((((((((((
ஏன் அவள் முதியோர் நிலையத்துக்குப் போகவேண்டும்.
மாற்றி யோசிக்கலாம். சரியா:)//

உங்களை கவலையாக்கியதற்கு வருந்துகிறேன். உதாரணத்திற்கு எப்படி அமைக்கலாம் என கூறினால் அடுத்த முறை இந்த தவறை செய்ய மாட்டேன்... வருகைக்கு நன்றி... மீண்டும் வருக...

Sathis Kumar said...

தாரம் வந்ததும் தாய்மையின் பாசம் கசந்து விடுகிறது சிலருக்கு.. :(

முதியோர் இல்லத்தில் கொண்டுச் சேர்ப்பதாய்க் கூறி மரியாதையாக வீட்டை விட்டு ஒருத் தாயை வெளியே விரட்டும் மகன்/மகள்கள் இன்னும் இருந்து வருவது வேதனைக்குரியது.

விரட்டப்பட்டவர்களின் முராரி இராகம் முதியோர் இல்லத்தில் தனது கடைசிச் சுருதியை மீட்டி வருகிறது.. :(

நண்பரே, தொடர்ந்து சமுதாயக் கருத்துகளை கவிதைகளின் வழி மீட்டிட எமது வாழ்த்துகள்..

VIKNESHWARAN ADAKKALAM said...

//வெண்பூ said...
நல்ல கவிதை. கடைசி வரிகளில் மனது கனக்கிறது, ஆனால் அதுதானே உண்மை.//

வாங்க வெண்பூ... ஒரே கிறுகதை மயமாக உள்ளதே உங்கள் தளம்.. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//சரியே! வல்லியம்மா!//

ஜிங்கு ச்சான்... பாஸ் இப்படி கட்சி மாறி பேசினால் கம்பேனி இரகசியங்களை வெளிய சொல்லிடுவேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//கவிதை அருமை. இந்த இறுதிவரிகள் என்னை மிகவும் உலுக்கியெடுத்துவிட்டது. வாழ்த்துக்கள்.//

கருத்து தந்ததிற்கு நன்றி... இனி நான் உங்கள் மாணவன்.. உங்கள் கருந்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும்

VIKNESHWARAN ADAKKALAM said...

//சதீசு குமார் said...
தாரம் வந்ததும் தாய்மையின் பாசம் கசந்து விடுகிறது சிலருக்கு.. :(
முதியோர் இல்லத்தில் கொண்டுச் சேர்ப்பதாய்க் கூறி மரியாதையாக வீட்டை விட்டு ஒருத் தாயை வெளியே விரட்டும் மகன்/மகள்கள் இன்னும் இருந்து வருவது வேதனைக்குரியது.
விரட்டப்பட்டவர்களின் முராரி இராகம் முதியோர் இல்லத்தில் தனது கடைசிச் சுருதியை மீட்டி வருகிறது.. :(
நண்பரே, தொடர்ந்து சமுதாயக் கருத்துகளை கவிதைகளின் வழி மீட்டிட எமது வாழ்த்துகள்..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே... கண்டிப்பாக எழுதுகிறேன்...

நாமக்கல் சிபி said...

//ஜிங்கு ச்சான்//

அப்போ வல்லியம்மாவுக்கு நான் ஜால்ரா போடுறேன்னு சொல்றீங்களா?

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை!

பதிவுலகத்துல நான் ஜால்ரா போடுறது(போட்டது) ஒரே ஒருத்தருக்குத்தான்!

அது யாருக்குன்னு எங்க சங்கத்து ஆளுகளுக்கு மட்டும்தான் தெரியும்

Anonymous said...

ஐயஹோ!

தாயுள்ளம் ஒன்று காப்பகத்தில் தவித்ததா?

என் தாய்க்குலமே உன்னைக் காக்கத் தவறி விட்டேனா!

ஐயோ! என் மனசு பதறுதே அம்மா! பதறுதே!

Anonymous said...

என்ன............?

வயசான காலத்துல வீட்டுல வெச்சிப் பாத்துக்காம காப்பகத்துல விட்ட ராஸ்கல் யாரு?

இடியட் ஃபெலோ!

தேடினேன் தேடினேன்! கண்டு கொண்டேன் அன்னையே!

நாமக்கல் சிபி said...
This comment has been removed by the author.
Anonymous said...

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா!

பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா!

Anonymous said...

தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு! நீ தனித்தனியா கோயில் குளம் அலைவதும் எதுக்கு!

பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தாத்தான் மதிப்பு!

நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாத்தான் மதிப்பு!

நாமக்கல் சிபி said...

// இனி நான் உங்கள் மாணவன்..//

அமுதா.அகரம் டீச்சர்!

அப்படியே என்னையும் உங்க இஸ்டூடண்டா சேர்த்துக்கணும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன்!

(விக்னேஷ் கொஞ்சம் நீங்களும் ரெகமெண்ட் பண்ணுங்கப்பு)

நாமக்கல் சிபி said...

//வருகைக்கு நன்றி பாஸ்... மீண்டும் வருக...//

!?

பாஸ்!???????????

Anonymous said...

என் தாயெனும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே!

எந்தன் வாயும் வயிறையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே!

என்னைத் தொட்டாலும், பார்த்தாலும் தோஷமடி கிளியே!

Ramya Ramani said...

நல்ல கவிதை தாய்மையின் அழகை கூரியது நன்றாக இருக்கிறது :))

\\வல்லிசிம்ஹன் said...
:(((((((((((((((((((
ஏன் அவள் முதியோர் நிலையத்துக்குப் போகவேண்டும்.

மாற்றி யோசிக்கலாம். சரியா:)
\\

என் கருத்தும் அதுவே!

Thamiz Priyan said...

நிதர்சனமான கவிதை!,........ :(

///நாமக்கல் சிபி said...

//வருகைக்கு நன்றி பாஸ்... மீண்டும் வருக...//

!?

பாஸ்!???????????//
எங்க சங்கத்து 'தள'யை வாய் நிறைய அழகா 'தள' ன்னு சொல்லுங்க விக்கி!

பரிசல்காரன் said...

//இன்று அவள்
இறுதி மூச்சை
சுவாசிக்க மறந்து போனாள்
முதியோர் இல்லத்தில்//

:((((((

”இன்றவள் இறுதி ஊர்வலத்தில்
விசா கிடைக்காத மகனுக்கு பதில்
கொள்ளிவைக்கிறார்
முதியோர் இல்ல நிர்வாகி”

இப்படி ஏதாவது ட்ரை பண்றேன்.. மூடு வர்ல,, என்னமோ பண்ணுது உங்க கவிதை!

முகுந்தன் said...

//இன்று அவள்
இறுதி மூச்சை
சுவாசிக்க மறந்து போனாள்
முதியோர் இல்லத்தில்.//

ரொம்ப ஆழமான வரிகள்.
ஆனால் சில பாவிகள் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள் :-(

Anonymous said...

உறவுகளிலும் கூட புதுசுக்குத்தான் மவுசு ஜாஸ்தி, விக்னேஷ். என்ன செய்வது? பெற்று வளர்த்த தாயை காப்பாற்ற வேண்டிய கடைசி காலத்தில் அந்த தாயை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது சிலருக்கு ட்ரெண்டாகி விட்டது. பெற்ற மனம் பித்து பிள்ளை மன்ம் கல்லு என்று ஒன்றுமில்லாமலா சொல்லி வைத்தார்கள்.கவலையை விடுங்கள் கண்ணீரை துடைங்கள். இனி வரும் காலங்களில் இந்த மாதிரியான வழக்கங்கள் மாறுவதற்கான சாத்தியங்களும் உண்டு....தாய்க்கு தொண்டு செய்து அடையும் திருப்தி வேறு எதிலும் கிட்டாது என்பது என் உறுதியான நம்பிக்கை!

VIKNESHWARAN ADAKKALAM said...

எம்.ஜி.ஆர், சிவாஜி. அருணாசலம், டவுசர் பாண்டி, ராஜ்கிரன் எல்லோருக்கும் நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

//Ramya Ramani said...
நல்ல கவிதை தாய்மையின் அழகை கூரியது நன்றாக இருக்கிறது :))//

நன்றி ரம்யா... மீண்டும் வருக... அடுத்த முறை கவலையை தவிர்து எழுதுகிறேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//தமிழ் பிரியன் said...
நிதர்சனமான கவிதை!,........ :(

///நாமக்கல் சிபி said...

//வருகைக்கு நன்றி பாஸ்... மீண்டும் வருக...//

!?

பாஸ்!???????????//
எங்க சங்கத்து 'தள'யை வாய் நிறைய அழகா 'தள' ன்னு சொல்லுங்க விக்கி!//

வாங்க நண்பரே... சரி உங்கள் பதிவை எப்போது புதுப்பிக்க போகிறீர்கள்... நந்தினியின் சரித்திர தொடர் எங்கே...

VIKNESHWARAN ADAKKALAM said...

//:((((((

”இன்றவள் இறுதி ஊர்வலத்தில்
விசா கிடைக்காத மகனுக்கு பதில்
கொள்ளிவைக்கிறார்
முதியோர் இல்ல நிர்வாகி”

இப்படி ஏதாவது ட்ரை பண்றேன்.. மூடு வர்ல,, என்னமோ பண்ணுது உங்க கவிதை!//

வாங்க வாங்க... வருகைக்கு நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

//முகுந்தன் said...
//இன்று அவள்
இறுதி மூச்சை
சுவாசிக்க மறந்து போனாள்
முதியோர் இல்லத்தில்.//
ரொம்ப ஆழமான வரிகள்.
ஆனால் சில பாவிகள் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள் :-(//

என்ன செய்ய... கால ஓட்டத்தின் மாற்றங்கள் அப்படி :(

VIKNESHWARAN ADAKKALAM said...

//கு.உஷாதேவி said...
உறவுகளிலும் கூட புதுசுக்குத்தான் மவுசு ஜாஸ்தி, விக்னேஷ். என்ன செய்வது? பெற்று வளர்த்த தாயை காப்பாற்ற வேண்டிய கடைசி காலத்தில் அந்த தாயை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது சிலருக்கு ட்ரெண்டாகி விட்டது. பெற்ற மனம் பித்து பிள்ளை மன்ம் கல்லு என்று ஒன்றுமில்லாமலா சொல்லி வைத்தார்கள்.கவலையை விடுங்கள் கண்ணீரை துடைங்கள். இனி வரும் காலங்களில் இந்த மாதிரியான வழக்கங்கள் மாறுவதற்கான சாத்தியங்களும் உண்டு....தாய்க்கு தொண்டு செய்து அடையும் திருப்தி வேறு எதிலும் கிட்டாது என்பது என் உறுதியான நம்பிக்கை!//

ஆஹா இது சாதரன கவிதை தானே. எதற்கு இப்படி ஒரு உணர்சி வேக பின்னூட்டம்...

கிரி said...

கவிதை எல்லோரும் கலக்குறீங்க..

வாழ்த்துக்கள்

சின்னப் பையன் said...

அடடா... கவித கவித...
எல்லாம் காலம் செய்யும் கோலம்.... ம்....

VIKNESHWARAN ADAKKALAM said...

//ரி said...
கவிதை எல்லோரும் கலக்குறீங்க..
வாழ்த்துக்கள்//

நன்றி கிரி...

VIKNESHWARAN ADAKKALAM said...

//ச்சின்னப் பையன் said...
அடடா... கவித கவித...
எல்லாம் காலம் செய்யும் கோலம்.... ம்....///

அவ்வ்வ்வ்வ்

Anonymous said...

//ஆஹா இது சாதாரண கவிதைதானே. எதற்கு இப்படி ஒரு உணர்சி வேக பின்னூட்டம்...//

என்ன ஆபிசர் இப்படி சொல்லிட்டீங்க? உங்க கவிதை உண்மையில் கருத்தாழம் மிக்கது. நாட்டு நடப்பைத்தானே சொல்லியிருங்கீங்க!

VIKNESHWARAN ADAKKALAM said...

//என்ன ஆபிசர் இப்படி சொல்லிட்டீங்க? உங்க கவிதை உண்மையில் கருத்தாழம் மிக்கது. நாட்டு நடப்பைத்தானே சொல்லியிருங்கீங்க!//

நன்றிங்க புனித்தா... மீண்டும் வருக...

கயல்விழி said...

நீங்க எழுதியதா? ரொம்ப உருக்கமான கவிதை.

VIKNESHWARAN ADAKKALAM said...

//கயல்விழி said...
நீங்க எழுதியதா? ரொம்ப உருக்கமான கவிதை.//

ஏங்க இப்படி ஒரு கேள்வி... :(

வல்லிசிம்ஹன் said...

விக்னேஸ்வரன்,
கவிதை என்னைக் கலக்கிய வேகத்தில் நான் பின்னூட்டம் இட்டு விட்டேன்.

அது நடந்து முடிந்த சம்பவத்துக்கான,
,ஒரு இழப்புக்கான வருத்தம்.
தவறாகச் சொல்லி இருந்தால்,

மன்னித்துவிடுங்கள்.
மாற்றி யோசிக்க வேண்டியது பெற்றோர்களே. அந்த நிலமைக்குப் போகாமல் தங்களைக் காத்துக் கொள்ள அவர்களுக்குத் தெரிய வேண்டும்.
அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
ஓகேயா:)

ஜி said...

//தேர்வுக்காகத்
தேக்கி வைத்த
தூக்கத்தோடு
தேனீர் கலக்கிய இரவுகள்!
//

arumaiyaana varigal.... kadaisithaan konjam varuthamaa pochu :(((

Kavinaya said...

நல்லா எழுதியிருக்கீங்க..

//கடைசி வரிகளில் முதியோர் இல்லத்தில் என்னும்போது மனசு இன்னும் கனத்துப் போகிறது!//

வழிமொழிகிறேன்..

goma said...

இரு துளி ,கண்ணீர் எழுதிய கவிதை.
இருக்கும் போது அருமை தெரியவில்லை
இழந்தபின்னே அழுகை நிற்கவில்லை

raja said...

அருமை ! மிக அருமை !

தாய்மை தெரிகிறது......

VIKNESHWARAN ADAKKALAM said...

@வல்லிசிம்ஹன்

@ ஜி

@கவிநயா

@கோமா

@ராஜா

மிக்க நன்றி... மீண்டும் வருக...