Thursday, June 26, 2008

பின்னூட்டமே பதிவாக (உடையார்)

(நேற்றய பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று. திரு.விஜய் அவருடைய கண்ணோட்டத்தில் உடையார் புத்தகத்தை பற்றி சொல்லி இருக்கிறார். இதை பின்னூட்டமாகவே விட்டுவிடால் பலரையும் போய்ச் சேராது என்ற நோக்கில் பதிவாகப் போடுகிறேன்.)

வணக்கம்

பொன்னியின் செல்வன் ஒரு கற்பனைப் புதினம். ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன் போன்றவை கற்பனைப் பாத்திரங்கள். இதில் சேந்தன் அமுதன் அரியணை ஏறும்வரையிலான சம்பவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன, சில பல கற்பனைச் சம்வங்களோடு. இவ்வாறு கூறுவதால் கல்கியைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். எள்முனையளவும் எனக்கு அத்தகைய நோக்கம் கிடையாது.

உடையார், ராஜராஜ சோழனின் வாழ்வை வேறு தளத்தில் அலசுகிறது. ராஜராஜரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களான தேவார மீட்பு, பெரிய கோயிலைக் கட்டுவித்தல், அதிமுக்கியமாக அவருடைய அந்திமக் காலம் ஆகியவை பொன்னியின் செல்வனில் கூறப்படவில்லை. அந்தக் குறையை உடையார் போக்குகிறது. மேலும் ராஜராஜர் நிகழ்த்திய முக்கியமான யுத்தங்களைப் பற்றியும், அவருடைய காலத்தில் இருந்த சமூகத்தின் அமைப்பையும் பற்றி உடையார் அலசுகிறது. பொன்னியின் செல்வன் நூல் ராஜராஜரை ஒரு காதல் இளைஞனாக (சாக்லேட் பாய்), பிள்ளைக் குறும்புகள் மாறாத ஒரு இளைஞனாக மட்டுமே காட்டுகிறது. முதிர்ந்த அறிவுடன் ஒரு மகத்தான தியாகத்தைச் செய்யும் மகோன்னதத்துடன் அந்த பாத்திரம் முடிவுக்கு வந்துவிடுகிறது.

மேலும் பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகன் வல்லவரையர் வந்தியத்தேவர். ஆனால் உடையார் முழுக்க முழுக்க ராஜராஜரை மட்டுமே கதை நாயகராகக் கொண்டது.

உடையாரில் அவருடைய காதல் வாழ்வு மட்டுமல்லாது அவருடைய மணவாழ்வும் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதிர் பருவத்தில் பஞ்சவன் மாதேவிக்கும் அவருக்கும் இடையே நிலவிய அனுக்கமான காதல் வாழ்வு பொன்னியின் செல்வனில் விவரிக்கப்பட்ட அருண்மொழிக்கும் வானதிக்கும் இடையிலான காதல் வாழ்வைப் போன்றே சுவைபடக் கூறப் பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ்த்த இயலாத மகோன்னதங்களை நிகழ்த்திக் காட்டிய ராஜராஜரின் வாழ்வை கல்வெட்டு மற்றும் தாமிரப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம் உடையார்.

ராஜராஜரைத் தவிரவும், பெரிய கோயில் என்ற கலை அதிசயத்தின் கட்டுமானக் காலத்தில் அதற்கு உறுதுணையாக இருந்த பலருடைய வாழ்வையும் விவரிக்கிற நூலாகவும் உடையார் விளங்குகிறது.
இப்போது தயாரிப்பில் இருக்கும் உளியின் ஓசை என்ற திரைப்படம் கூட பெரிய கோயிலின் கட்டுமாத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு சிற்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையே.

பொன்னியின் செல்வனில் சற்றேறக் குறைய என்பத்திமூண்றாண்டுகள் வாழ்ந்த ராஜராஜரின் வாழ்வில் முதல் முப்பது ஆண்டுகள் கூட விவரிக்கப் படவில்லை என்பது எனக்குள் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. உடையார் அந்தக் குறையை நிவர்த்திக்கிறது.

பொன்னியின் செல்வனைப் போலவே உடையாரும் வாசிப்பிற்குகந்த ஒரு நல்ல நூல் என்பதே இதன் வாயிலாக நான் கூற விழைவது.

நன்றி.

11 comments:

யாத்ரீகன் said...

>>> ராஜராஜரின் வாழ்வை கல்வெட்டு மற்றும் தாமிரப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம் உடையார் <<<

No, Udayaar is lot more imagination than truth. The theme taken by balakumaran is very creative and great, but the execution has too much of his style making it little odd to read it with Poniyin Selvan style of writting in mind.

Anonymous said...

padika vandiya nool pool ullathu........!


Dr.Sintok

Thiyagarajan said...

//No, Udayaar is lot more imagination than truth. The theme taken by balakumaran is very creative and great, but the execution has too much of his style making it little odd to read it with Poniyin Selvan style of writting in mind.//
I too agree with the above.
But, he has described a lot about our culture and how the people lead their life.

VIKNESHWARAN ADAKKALAM said...

//No, Udayaar is lot more imagination than truth. The theme taken by balakumaran is very creative and great, but the execution has too much of his style making it little odd to read it with Poniyin Selvan style of writting in mind.//

இரு படைப்பாளர்களுக்கும் அவர்களுக்கே உரிய தனி பாணி இருக்க நடையை வேறு விதமாக எழுதி இருக்கலாம்.

சின்னப் பையன் said...

ம்ம்... அப்போ இதையும் படிக்கணுமா...

VIKNESHWARAN ADAKKALAM said...

//padika vandiya nool pool ullathu........!
Dr.Sintok//

ஆமாம்

VIKNESHWARAN ADAKKALAM said...

//I too agree with the above.
But, he has described a lot about our culture and how the people lead their life.//


படித்துப் பார்க்கிறேன் நண்பரே...

Thamiz Priyan said...

நன்றாக பாராட்டி பின்னூட்டம் இட்டுள்ளார். படிக்க வேண்டிய பட்டியலில் வைத்து இந்தியா வரும் போது வாங்க வேண்டும்.... :)

ஜி said...

:))) Aduthathu methuvaathaan aarambikkanum :)))

VIKNESHWARAN ADAKKALAM said...

//தமிழ் பிரியன் said...
நன்றாக பாராட்டி பின்னூட்டம் இட்டுள்ளார். படிக்க வேண்டிய பட்டியலில் வைத்து இந்தியா வரும் போது வாங்க வேண்டும்.... :)//

நிச்சயமாக படிக்க வேண்டும்...


//ஜி said...
:))) Aduthathu methuvaathaan aarambikkanum :)))//

வேகமாகவே ஆரம்பிக்கலாமே...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

செம்பியன் மாதேவியார் பற்றி விக்கிப்பீடியாவில் எழுதியிருக்கிறேன். மேலும் சில ஆவனங்களை புரட்டிய போது சேந்தன் அமுதன் என்பது கற்பனையான பாத்திரமா. இல்லை உண்மையா என்ற குழப்பம் நேரிட்டது. அடுத்தாக சேந்தன் அமுதன் பற்றி எழுத நினைத்ததை கைவிட்டு குறிப்புகளை தேடினேன்.

மிகவும் அழகாக இதில் அந்த பாத்திரம் கற்பனையானது என்பதை அறிந்தேன். மேலும் உடையார் நாவலை படிக்கவும் ஆவல் உண்டாகிறது. நன்றி.