Monday, December 02, 2013

யூதர்கள் தொடர்பான 15 குறிப்புகள்


1.உலகில் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்களும் அதிகமாக சபிக்கப்பட்டவர்களும் யூதர்களே எனும் ஆங்கில சொற்றொடர் பிரபலமானது.


2. நான் யூதர்களை கொன்றுக் குவித்த காரணங்களை மிச்சம் விட்டு வைத்திருப்பவர்களை கண்டு தெரிந்துக் கொள்வீர்கள் எனச் சொல்கிறார் ஹிட்லர்.

3. ஹிட்லரின் தந்தையின் பெயர் அலாய்ஸ் ஹிட்லர். அலாய்ஸ் ஹிட்லருக்கு தன் தந்தை யார் என தெரியாது. அவர் தாய் (ஹிட்லரின் பாட்டி) ஒரு யூதனின் வீட்டில் தங்கி பணி புரிந்த காலத்தில் பிறந்தார் என்பது மட்டுமே தெரியும். அப்படி இருப்பின் ஹிட்லர் வெறுத்த முதல் யூதன் தன் தந்தை தான். ஹிட்லருக்கு தன் அப்பாவை பிடிக்காது.

4. தனது மதம், தனது இனம் என விட்டுக் கொடுக்காமல் சரித்திர சங்கிலியில் தொடர்ந்து இரத்தம் சிந்தி வருகிறார்கள் யூதர்கள்.

5. மோசஸ் எனும் இறை தூதனின் வழி தோரா எனும் புனித நூலை பெற்றவர்கள் இன்னமும் ஒர் இறை தூதன் தனது இனத்தில் தோன்றுவான் என காத்திருக்கிறார்கள். ஏசு ஒரு யூதனாக இருப்பினும் அவரை யூத குலம் முழுமையாக ஏற்க மறுத்தது. ஒரு யூதனால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஏசு (யூதாஸ் கொடுத்த முத்தம்) யூதர்களால் வதைத்துக் கொல்லப்படுகிறார். நபிகள் நாயகம் யூத குலத்தில் பிறக்காததால் அவர்ரையும் தேவ குமாரனாக ஏற்க மறுத்தவர்கள் யூதர்கள்.

6. ஏசுவை கொன்றவர்கள் என கிருத்தவர்களாலும் நிலத்தை அபகரித்தவர்கள் என முஸ்லிம்களாலும் சுமார் முந்நூறு ஆண்டு கால சிலுவை போரில் பந்தாடபட்டவர்கள் யூதர்கள்.

7. முகில் எழுதிய யூதர்கள் எனும் புத்தகம் யூதர்கள் தொடர்பான மேலோட்ட தகவல்களை கொடுக்கிறது. மிகவும் சிறப்பானதொரு தொகுப்பு நூல் இது.

8. இதனை தொடர்ந்து மேலதிக தகவல்களுக்கு பா.ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் எனும் நூலினை வாசிக்கலாம். நிலமெல்லாம் இரத்தம் யூதர்கள் மற்றும் இஸ்ரேல் எனும் தேசம் உருவானதின் பின்னனியை முழுமையாக விளக்குகிறது.

9. நில வங்கியை கண்டுபிடித்து, கடன் கொடுத்து, நில அபகரிப்பு செய்து கொஞ்சம் கொஞ்சமாக தன் தேசத்தை உருவாக்க எத்தனித்தவர்கள் யூதர்கள். லஞ்சம், கிரேடிட் கார்டு, எம்.எல்.எம் போன்ற இன்னும் பல வஸ்துக்களுக்கு இவர்களே முன்னோடிகள்.

10. யூதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கருவில் இருந்தே போதனை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்க ஆரோக்கிய உணவு, சிறந்த நூல்கள், கணிதம் என பல வழிமுறைகளை கரு உண்டான காலம் முதல் பின்பற்றுகிறார்கள். உலகில் தனித்துக் காணப்படும் இனமாக அறியப்பட இவர்களின் புத்தி கூர்மையும் ஒரு காரணமாகும்.

11. தீவிர மதப் பற்றுக் கொண்ட யூதர்கள் தாடியையும் கிருதாவையும் வெட்டுவதில்லை.

12. யூத ஆண்கள் சிறு குல்லாவை அணிவார்கள். அவர்கள் அணியும் குல்லா ‘கிப்பா’ என அழைக்கப்படும். கிப்பா எல்லா வேளையிலும் அணிய வழியுறுத்தப்படுகிறது. கிப்பாவை அணியாமல் விடுவது அவர்களின் சடங்கு முறைக்கு எதிரானது.

13. யூதனாக பிறப்பவன் மட்டுமே யூதமத்தில் இருக்க முடியும். யூத மதத்தை துறப்பது சுலபம். யூத மதத்தை தழுவுவது சிரமம்.

14. வெள்ளிக்கிழமை சூரியன் உதிக்கும் சமயம் ’சப்பத்’ தொடங்குகிறது. சப்பத் என்பது யூதர்களின் வார நாள். மிக முக்கிய நாளும் கூட. குடும்பத்தோடு ஒன்று கூடி வழிபாட்டில் ஈடுபடுவார்கள். சப்பத்தின் போது யூதர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். எந்த விதமான சிறு வேலையாக இருந்தாலும் கூட அதைச் செய்ய மாட்டார்கள். ஒரு விளக்கை ஊதி அனைப்பது உட்பட. அந்நாள் முழுக்க அவர்களின் கடவுளை நினைத்தபடி இருப்பார்கள்.

15. Western Wall அல்லது wailing wall என்பது ஜெருசலத்தில் அமைந்திருக்கும் யூதர்களின் புரதான புனிதத் தளம். கி.மு 7-ஆம் நூற்றாண்டில் யூதக் கோவிலாக இருந்த இவ்விடம் ரோமனியர்களின் படையெடுப்பினால் தரைமட்டம் ஆனது. அக்கோவிலில் எஞ்சிய தூண் இன்றும் காணப்படுகிறது. பல யுத்தங்களையும், துப்பாக்கிச் சூடுகளையும், குண்டடிகளையும் கண்ட தூண் அது. யூதர்கள் இன்னமும் அத்தூணை கண்ணுக்குள் வைத்து போற்றுகிறார்கள். அங்குச் செல்லும் ஒவ்வொரு யூதனும் அத்தூணை கட்டித் தழுவி அழுகிறார்கள். அவர்களின் சரித்திர சுவடுகளுக்கு அத்தூண் ஒரு மாபெரும் சாட்சி.

8 comments:

ko.punniavan said...

அரிய தகவல்கள் நண்பரே. நீங்கள் இதனை ஒரு கட்டுரையாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

கோ.புண்ணியவான்.

VIKNESHWARAN ADAKKALAM said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா... நிச்சயமாக அடுத்த முறை முயற்சிக்கின்றேன்...

Tamilvanan said...

எப்போதோ படித்தது, உயிரே போகும் சூழ்நிலையில் கூட ஒரு யூதன் தன்னை யூதன் என்றே அடையாளப் படுத்தி கொள்வான்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்...

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத தகவல்கள் நண்பரே... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தனபாலன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

Arcot Indian missionary service said...

யூத வறலாற்றின் அறிவுகூர்மைக்கும் , வறலாற்றின் சேவைக்காகவும் நன்றியும் வாழ்த்துக்களும். நன்றி.