Wednesday, May 27, 2009

பிரபாகரன் தீவிரவாதி! ஒசாமா போராட்டவாதி?

ஒருவர் சரியென சொல்வது மற்றவருக்குப் பிசகாக தோணலாம். உலகில் இது சரி, இது தான் நியாயம் என ஒரு விடயத்தை அவ்வளவு எளிதாக வரையறுத்து விட முடிவதில்லை. சித்தனைகளும் கருத்து முரண்பாடுகளும் மனிதனின் எண்ண வெளிபாடுகளை வலுவாகவே ஆக்ரமித்துள்ளன. இதை 'யின் யாங்' எனும் சீனத்து கபூசியஸ் தத்துவ முறையில் எதிர்வினை முரண்பாடுகள் என அழகாக விவரித்துள்ளார்கள்.

சரி கருத்து கந்தசாமித்தனத்தை விட்டுவிட்டு நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். முன்பு ஒசாமா, சதாம் ஹுசேன், அல் கொய்தா, இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா என ஆதரவளித்து பேசிய மலாய் நாளேடுகள் தாம் இன்று பிரபாகரனை உலக தீவிரவாதியென கிழிகிழியென கிழித்து நார்நாராக்கி காயப்போட்டு இருக்கிறது. வழக்கம் போல கேட்பார் இல்லை. ஒசாமா துப்பாக்கி எடுத்தால் ஜிகாத். பிரபாகரன் துப்பாக்கி எடுத்தால் தீவிரவாதம்.

கடந்த ஞாயிறு நடைபெற்ற அமைதி பேரணி சம்பந்தமாக மலாய் அரசியல் தலைவர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் இலங்கையில் ஏற்பட்ட நிலை இங்கு பின்பற்றபட்டுவிடுமோ என்ற எண்ணமே இவர்களின் வசைபாடல்களின் அப்பட்டமாக தெரிகிறது. இன போராட்டம் தவறென சொல்பவர்கள் இஸ்லாமிய நாடுகளில் ஏற்படும் மத போராட்டத்துக்கு குரல் கொடுப்பது மட்டும் நியாயமாகுமா? கையில் வய்ன் கோப்பையை வைத்துக் கொண்டு குடிக்காரனாக இருக்காதே அது தவறு என அறிவுரை சொன்னானாம் எவனோ ஒருவன்.
எதனால் மக்களிடையே இப்படிபட்ட மங்குஸ்தின்* தனமான சிந்தனைகள். நாம் இங்கு எடுத்துக் கொண்ட உதாரணத்தையே காண்போம். ஒசாமாவையோ அல்லது சதாம் ஹுசேனையோ அவர்கள் கவனிக்கும் போது இஸ்லாம் எனும் போர்வையில் நின்று கவனிக்க முற்படுகிறார்கள். அதே சமயம் பிரபாகரன் அவர்களுக்கு அன்னியம். யாரோ ஒரு தீவிரவாதி. அதே போல் ஒசாமாவும் சதாமும் பலருக்கு தீவிரவாதியாகவும் மேலும் பலருக்கு தேவ தூதுவனாகவும் தெரிகிறார்கள். இதில் யாரை நாம் குறை சொல்ல.

இவர் செய்தது தப்பு அவர் செய்தது நியாயம் என நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அப்படி சொன்னால் என் டவுசரை கழட்டி ஓட ஓட விரட்டியடிக்க சில சொம்பு தூக்கிகள் வந்துவிடுவார்கள் என்பது நான் சொல்லி தெரிய வேண்டும் என்றில்லை. இப்படி ஒரு கட்டமைப்பிற்குள் இருந்துக்கொண்டு ஒரு விசயத்தை அணுகுகிறார்கள். அவர்களுக்கு சாதகமாக அது சரி தவறு என்றும் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் செய்யும் தவறுகளை விட அடுத்த வீட்டுப் பிள்ளைகள் செய்யும் தவறுகள் தாம் பெரிதாக தெரியுமாம். அப்படிபட்டது தான் இந்நிலையும். இப்படி ஒரு கட்டமைப்புக்குள் தங்களைத் திணித்துக் கொண்டு தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தான் இன்ன சாதியன் என சொல்லிக் கொள்ளும் பச்சைப் பார்ப்பானியத்தனத்துக்கும் என்ன வித்தியாசத்தைக் காண முடியும். என்னைப் பொறுத்தமட்டில் இரண்டிற்கும் கிஞ்சித்தும் வித்தியாசம் கிடையாது என்றே சொல்வேன்.

இதே சிந்தனை யுக்தியை ஒரு நாடளவில் எடுத்துக் கொண்டு பார்ப்போம். மக்களாட்சி கொண்ட நாட்டில், மக்கள் தேர்வின் அடிப்படையிலேயே ஆட்சி அமைக்கப்படுகிறது. திருடர்களின் நாட்டில் திருடு தவறில்லை என்ற சட்டத்தை அமல் செய்யப்பட்டால் திருடு தவறில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளலாகுமா? உலக வாழ்க்கையில் நமது சிந்தனைகள் எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? நமது வாழ்க்கையை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும் என மார் தட்டிக் கொள்ளலாம். இன்று எத்தனை நாடுகளில் அத்தேசத்து மக்கள் தாம் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதன் அடிப்படையில் மக்களாட்சியே சிறந்த ஆட்சி முறையென நாம் சொல்லலாகுமா?
பிரச்சனைகளின்றி அரசியலில் காய் நகர்த்த முடியாது. இன்றையச் சூழலில் சொந்த உறவுகளுக்குள் கூட பணத்தை கடன் கொடுக்கும் போது வட்டியையும் சொல்லிவிட்டுத்தான் கொடுக்கிறார்கள். இன்றோ அதிசயகரமாக அமெரிக்கா, ஜப்பான், சீனா, நோர்வே என பல நாடுகளும் இலங்கைக்கு பண உதவி செய்து வருகிறது. இதைத் தான் 'ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியோவ்வ்வ்வ்' என்பார்கள் போலும்.

இலங்கை, காஷ்மீர் இவ்விரண்டு இடங்களும் அதீத வளர்ச்சியடையக் கூடிய இடங்கள். உலக வர்த்தகத்திற்கு இலங்கை சிறந்த துறைமுகமாக அமையக் கூடும். காஷ்மீர் உலகப் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தளமாக அமையக் கூடிய ஓர் இடம். இவ்வளவு காலமாகவும் இவ்விடங்களில் தீவிரவாத அல்லது இனவாத பிரச்சனைகள் நீடித்தவண்ணமே உள்ளது. இதற்கு உலக நாடுகளும் ஒரு காரணம். வெள்ளையன் தமது ஆதிக்கத்தை விட்டுச் செல்லும் போது எல்லா இடங்களிலும் இப்படிபட்ட பிரச்சனைகளை விட்டுச் சென்றிருக்கவே செய்கிறான். இலங்கை சிறந்த துரைமுகமாக அமையுமெனில் அது சிங்கை போன்ற நாடுகளை பாதிக்கக் கூடுமென பொருளாதார நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று அதீத வளர்ச்சியடையக் கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. உலக நாடுகளுக்கு இவற்றை கவனிக்க ஓர் இடம் வேண்டும். தென் பகுதியில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் நாளை காஷ்மீர் பாகிஸ்தானுக்குத்தான் என சொல்லுமானால் அதில் அதிசயிக்க ஒன்றும் இல்லை. 2013-ல் இந்தியா வல்லரசாகுமா என ஜாதகம் கணிக்கும் ஜோதிட வல்லுனர்கள் அதனைச் சுற்றியுள்ள ஏனைய நாடுகளின் ஜாதகத்திலும் தங்களது ஒற்றைக் கண்ணை வைத்துக் கொள்வது நலம் பயக்கும். எதிர்காலத்தில் சீனா இந்தியா மீது படையெடுக்குமா? என்ற ஜோதிடக் கேள்வியுடன் என் புலம்பல்களை கொட்டித் தீர்த்துக் கொள்கிறேன்.

26 comments:

Anonymous said...

இருவருமே தீவிரவாதி தான் அதான் அகோரமா புட்டுகிட்டானுக

Tamilvanan said...

இலங்கை பிரச்சனை உள் நாட்டு விவகாரமாம். வெளி நாட்டின் பிரச்சனைகளில் தலையிடாதாம் அரசாங்கம் ஏனென்றால் நமது வெளி நாட்டு கொள்கைகள் அப்படித்தானான். ஆஹா .. ஓஹோ.. என்ன ஒரு உண்மையான புனிதமான கொள்கைகள். நம்பிட்டோம் சாமி் நம்பிட்டோம் நல்லாவே நாங்க நம்பிட்டோம்.

அது சரி நமது அண்டை நாடான பிலிப்பைன்ஸில், அங்குள்ள அரசாங்கதிற்கும் சிறும்பான்மை முஸ்லிம்களுக்கும் பிரச்சனை நடந்த போது நமது அரசாங்கம் சும்மா கைகட்டி வேடிக்கை மட்டும்தான் பார்த்ததா? இல்லை முன்னின்று சமரசம் செய்து வைத்ததா? இன்னும் சொல்ல போனால் அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு நேரிடையாகவே பொருளுதவி செய்தது. அப்பொழுது நமது அரசாங்கம் உண்மையான புனிதமான வெளி நாட்டு கொள்கைகளை தற்காலிகமாக மறந்து போனது ஏனோ?
நமது அரசாங்கம் மக்களை முட்டாள் என நினக்கின்றதோ !!!! இல்லை அதிக ஞாபக மறதி உள்ளவர்கள் என நினைக்கிறதோ !!!!

Dr.Sintok said...

//Anonymous said...
இருவருமே தீவிரவாதி தான் அதான் அகோரமா புட்டுகிட்டானுக

May 27, 2009 10:16 AM//

ungga amma unnai petthathuku pathil oru naayai petthurukulam...:(

அருண்மொழி said...

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html

சி தயாளன் said...

மனித உரிமைமீறல் சம்மந்தமான பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று...

:-)))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனானி

உங்கள் கருத்துக்கு நன்றி...

@ தமிழ்வாணன்

அவனுக பண்ணுற அழிச்சட்டியம் நிஜமாகவே தாங்கலை... பேராக் பிரச்சனையை பற்றிய கட்டுரை தயாராகிறது.

@ சிந்தோக்

தனிமனித தாக்குதல் எதனால்? :(

@ அருண்மொழி

சுட்டிக்கு நன்றி...

@ டொன் லீ

என்ன தான் சொல்வது :(

குடுகுடுப்பை said...

விக்கி உணர்வுகளை புரிகிறது, இக்காலத்தில் வெற்றி பெற்றவனாக இருக்கவேண்டும். வெற்றியை நோக்கி செல்லுங்கள்.

நானும் உணர்வுகளோடு நிறைய பின்னூட்டலாம் வேண்டாம் இங்கே..

Anonymous said...

// ஒசாமா, சதாம் ஹுசேன், அல் கொய்தா, இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா என ஆதரவளித்து //

ஆரம்ப கட்டத்தில் அனைத்து(?) முஸ்லிம்களிடத்திலும் இவர்களுக்கு ஆதரவு இருந்தது உண்மைதான். பிறகு இவர்களின் உண்மை முகம் தெரிந்தபிறகு அதரவு குறைந்தது பற்றி நீங்கள் ஆராயவே இல்லையே?

இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களின் அதரவு அவர்களுக்கு இருக்கா என்பதை ஆராய்ந்தால் நலமாக இருக்கும்.

தமிழர்களுக்கு ஆபத்து என்று நாம் தமிழர்களை ஒன்றினைப்பது போலத்தான், அவர்களும் உலக முஸ்லிம்களுக்கெல்லாம் ஆபத்து என கூறி மக்களை பிரிக்க முயற்சித்தனர்.

முஸ்லிம்கள் உண்மையை உணர்ந்தனர். அவர்களுக்கான ஆதரவு அளிப்பதை விட்டுவிட்டார்கள் அல்லவா?

முன் நடந்ததை மட்டும் பிடித்துக் கொண்டு, பிந்தைய மாற்றத்தை மறைப்பது நன்றன்று.

manokarhan krishnan said...

நல்ல சொன்னிங்க விக்கி.போஸ்னியா ஹெசகோனியா,அல்பானியா.பாலஸ்தினம் இவர்கள் வாரி வாரி பணததை இரைத்தார்கள்.அது எல்லாம் வேற நாடு என்பது அவர்கள் கண்னுக்கு தெரியவில்லை போலும் அவர்களுக்கு ஒர் நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம்.இதுதானே உலக நீதி.

வியா (Viyaa) said...

//பிரச்சனைகளின்றி அரசியலில் காய் நகர்த்த முடியாது. இன்றையச் சூழலில் சொந்த உறவுகளுக்குள் கூட பணத்தை கடன் கொடுக்கும் போது வட்டியையும் சொல்லிவிட்டுத்தான் கொடுக்கிறார்கள். இன்றோ அதிசயகரமாக அமெரிக்கா, ஜப்பான், சீனா, நோர்வே என பல நாடுகளும் இலங்கைக்கு பண உதவி செய்து வருகிறது. இதைத் தான் 'ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியோவ்வ்வ்வ்' என்பார்கள் போலும்///

நிங்கள் கூறுவது உண்மையே விக்கி..
நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்..

RAHAWAJ said...

என்ன செய்வது யாரை குறை கூறுவது

VIKNESHWARAN ADAKKALAM said...

@ குடுகுடுப்பை

எதை வைத்து வெற்றியை தீர்மானிப்பது? :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ அனானி

நீங்கள் கூறுவதில் எத்தனை விழுக்காட்டினர் அடக்கம் என்பதைச் சொல்ல முடியுமா?

@ மனோகரன்

அவர்கள் இப்படி அப்பட்டமாக செயல்படுவது தான் மற்றவர்களுக்குள்ளும் இருக்கும் இன வெறியை தூண்டுகிறது. இது இன்னும் எத்தனை காலம் தொடருமோ...

@ வியா

வருகைக்கு நன்றி வியா

@ ஜவஹர்

வருகைக்கு நன்றி

Anonymous said...

malaysia ilangaikku support panrathu irukkattum.india ilangayai support panniyadhum,inrum un councilil ilangaikku support panrathum ungalukku thriyadha? unga ullur prachnaile yeyya oppari vaikkiringa? malaysiya crime rate kannapinnannu kooduradhukku tamil pesum kaalippayalgal than kaaranam engirargale idhu unmaiya?

வால்பையன் said...

இப்பமட்டும் சீனா காஷ்மீருக்கு உதவி செய்யலைன்னு நினைக்கிறிங்களா?

அதெல்லாம் நடந்துகிட்டு தான் இருக்கு!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனானி

இப்படி வெக்கங்கெட்ட தனமா தொடர்ந்து மின்மடலும் கமெண்டும் போட கேவளமா இல்லையா... இப்ப நீர் மட்டும் என்ன ம** கமெண்டு போட்டு கிளிச்சீரு... களிபயலாட்டும் தான் உன் கமெண்டும் இருக்கு... அதுக்கு களிப்பய தனமா தான் நானும் பதில் சொல்வேன். உம் மடலிலும் பின்னூட்டிலும் உமது மத வெறிதான் அப்பட்டமாக தெரிகிறது...


@ வால்ப்பையன்

காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு கொடுக்க என்கிறீர்களா? கருத்துக்கு நன்றி வால்

Anonymous said...

THIS IS FOR INDIANS
WHEN U ALL ARE GIVE KASMEER TO PAKISTAN THE
SRILANKA WILL GAVE THE EELAM...

DJHILLAL@GMAIL.COM

Subha said...

// ’டொன்’ லீ said...
மனித உரிமைமீறல் சம்மந்தமான பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று...

:-)))//

வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் தான்..என்ன செய்ய..தமிழனாய் இருந்து நம் உணர்வு துடிக்கிறது. ஆனால் அதற்கு செவி சாய்க்க யார்தான் இருக்கிறார்கள்? தமிழன் இல்லாத நாடில்லை..தமிழனுக்கென்று ஒரு நாடில்லா..எவ்வளவு உண்மை!

VETRI AZHAGAN said...

IPPADI NAAM ANAIVARUM PALA AGAPPAKKANGGALIL KARUTHUGALUM PIN OOTTUGALUM THERIVIPPATHAAL NAMATHU MALAYSIA ARASAANGGATHIRKUM MALAY NAALEDUGALUKKUM ONDRUM PURIYA POVATHILLAI. THODARNTHU VIDUTHALAI PORAATTATHAI AVARGAL THEEVIRAVATHAM ENDRE SOLVAARGAL! AVARGALUKKU PADIKKA THERINTHATHU MALAY MATRUM KONJAM AANGGILAM MATTUMTHAAN! AAGAVE UNMAI NILAVARATHAI VILAKKA VENDUM ENDRAL MALAY MOZHIYIL EZHUTHA VENDUM. THIRU VIKNESH KOORIYA KARUTHUGAL ORALAVIRKU NIYAAYAMAANAVAIYE! MUDINTHAAL ATHAI MALAY MOZHIYIL MOZHI PEYARTHU VELIYIDUNGGAL. TAMILEEZHAM VARALAARAI VIRIVAAGA MALAY MOZHIYIL EZHUTHI ARASAANGGATHIRKUM ARASAANGGA KAIKOOLI NAALEDAANA UTUSANUKKUM ANUPPI VAIKKA VENDUM. ILANGGAI SUTHANTHIRATHUKKU MUNBU / VELLAIYARGAL VARUGAIKU MUNBU TAMIZHAR PAGUTHI VERU NAADAAGAVUM SINGALAN PAGUTHI VERU NAADAGAVUM IRUNTAHTHAI NAAM ARIYA VENDUM. SUTHANTHIRAM KIDAIKKUM NERAM VELLAIYARGAL SINGALAVANIDAM ILANGGAIYAI ORE NAADAGA KODUTHATHU MAABERUM THAVARU! ATHU IRANDU NAADAAGAVE IRUNTHIRUKKA VENDUM! AAGA IPPOTHU NADANTHATHU UL NAATTU POR ALLA. IRANDU NAADUGALUKKIDAIYILAANA POR! TNANATHU THAMIZH NAATTAI (EEZHATHTHAI) THARKAAKKUM POR! SINGALA ARASU ATHTHU MEERI THAMIZH EEZHATHTHIL NUZHAINTHULLATHAAGAVE NAAM ITHAI KARUTHA VENDUM! SONTHA NAATTILEYE THAMIZHARGAL AGATHIGALA? ATHUVUM 3 AANDUGAL AGATHIGAL MUGAAMILEYE IRUKKA VENDUMENA SINGALA ARASU SOLGIRATHU! ENTHA NAATTIL IPPADI ORU KODUMAI NADAKKUM? AAGAVE ULAGA NAADUGAL ITHIL THAARAALAMAAGA THALAIYIDALAAM!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனானி

பரவாலியே பாக்கிஸ்தான் சப்போட்டருக்கு தமிழ் கூட படிக்க தெரியுது...


@ சுபா

உங்கள் கருத்துக்கு நன்றி...

@ வெற்றி அழகன்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி... இங்குள்ள தமிழ் நாளேடுகளே தமிழ் வலைப்பதிவுலகத்தை இருட்டடிப்புச் செய்ய எத்தனிக்கின்றன. இந்த இலட்சனத்தில் மாற்றானுக்கு அறிவுரை சொன்னால் ஏற்பார்களா? எண்ணால் ஆன சிந்தனைகளை எனக்கென தளம் அமைத்து இங்கு கொட்டி தீர்த்துக் கொள்கிறேன்.

A N A N T H E N said...

/ஆனால் இலங்கையில் ஏற்பட்ட நிலை இங்கு பின்பற்றபட்டுவிடுமோ என்ற எண்ணமே இவர்களின் வசைபாடல்களின் அப்பட்டமாக தெரிகிறது. //
sariya sonninge

A N A N T H E N said...

//இன்றோ அதிசயகரமாக அமெரிக்கா, ஜப்பான், சீனா, நோர்வே என பல நாடுகளும் இலங்கைக்கு பண உதவி செய்து வருகிறது.//

varuthamaane seithi thaan, enna pandrathu...!

Sanjai Gandhi said...

//எதிர்காலத்தில் சீனா இந்தியா மீது படையெடுக்குமா? என்ற ஜோதிடக் கேள்வியுடன் //

கேள்வியா விருப்பமா? :)

கே.பாலமுருகன் said...

விக்கி, பதிவு மிகத் துணிச்சலாக உள்ளது.
நாம் பயன்படுத்தும் வெளியீடும் ஒவ்வொரு சொற்களுக்கும் நாம்தான் பொறுபெடுக்க வேண்டும்.
அனானி கடிதங்கள் கேவலமான பதிவுகளாக இருந்தால் அதைப் பிரசுரிப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் சிற்ப்பாக இருக்கும் காரணம் முற்போக்குத்தனமான கட்டுரைக்கு இடையில் வசைப்பாடல்கள் அதன் பயணத்திற்கு தடையாக இருக்கும்.
(அனானி என்கிற போர்வையில் பெயரை வெளியீட தைரியமில்லாத கோழைகளின் அலட்டலுக்கு அதிகம் கவனம் தர வேண்டாம்- பெயருடன் தமது கருத்தை முன் வைக்கத் தெரியாத ஒரு கோழைக்காக நீங்கள் ஏன் வார்த்தையை கடுமையாக்குகிறீர்கள்.) வாழ்த்துகள். தொடரட்டும்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனந்தன்

உங்கள் கருத்துக்கு நன்றி...

@ சஞ்சய் காந்தி

:( ஏன் இப்படி ஒரு கேள்வி...

@ பாலமுருகன்

கவனம் செலுத்தியே பின்னூட்டங்களை வெளியிடுகிறேன். அதனால் பிரச்சனைகள் ஏதும் இல்லை... :)) உங்கள் கருத்துக்கு நன்றி....

Anonymous said...

நீங்கள் கூறுவது ஏற்றுக் கொள்ளதக்கது.

//வெள்ளையன் தமது ஆதிக்கத்தை விட்டுச் செல்லும் போது எல்லா இடங்களிலும் இப்படிபட்ட பிரச்சனைகளை விட்டுச் சென்றிருக்கவே செய்கிறான். //
இலங்கையில் நடந்த போரில் இலங்கை வெற்றியை நெருங்கி கொண்டிருந்த போது பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கேட்டாராம் உடனடியாக போர் நிறுத்தத்தை செய்யும் படி காரணம் பிரச்சனைகள் முடிந்து விடுவதை வெள்ளையர்கள் ஒரு போதும் விரும்பவில்லை.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனானி

கருத்துக்கு நன்றி அனானி...