Thursday, May 21, 2009

இழந்தனள்...பெற்றனன்...

அவன் பெயர் இக்கதைக்கு அவசியமில்லை. அவள் பெயரும் தான். அவனுக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்க வேண்டும். முன் மண்டை பளபளத்தும் காதுகளில் கத்தை மயிர் அப்பிக் கொண்டும் இருந்தது. அவளுக்கு இருபது வயதிருக்கக் கூடும்.

கொழுந்திட்டு எரியும் காமத் தீயை பற்ற வைத்துக் கொள்ள அத்தனை அம்சங்களும் அவளிடம் பளிச்சிட்டது. அவனிடம் சில காலமாக வேலைப் பார்த்து வருகிறாள். ஆம் சில காலம் தான். இந்த சில காலத்தில் ஆப்பிஸ் வேலை ஹோட்டல் வரை வந்தாகிவிட்டது. அவனுக்கு திருமணமாகி குழந்தை குட்டிகள் இருப்பது இவளுக்குத் தெரியும். அவளது தோழிகள் சில முறை இவளிடம் கேட்டதுண்டு.

“ஏன் டீ போயும் போயும் அவனா கிடைச்சான்?”

“அது அப்படி தான்” என சுருக்கமாக தன் பதிலை முடித்துக் கொள்வாள்.

கதிரவன் சூப்பராய் உதித்து சுருக்கென அடித்து அடங்கிய அன்றைய தினம் வழக்கம் போல மேட்டர் கதைகளில் வரும் சத்தர்டே நைட் தான். அவளைக் கூட்டிக் கொண்டு ஊர் சுற்றினான். கேட்டதை வாங்கி கொடுத்தான். அவனும் தின்றான். இரவு ஹோட்டலுக்கு அழைத்து வந்தான். காமக் களியாட்டங்கள் சுபமாக நடந்தேறியது.

தனது காற்சட்டையை தேடி எடுத்து போட்டுக் கொண்டிருந்தான். கட்டிலில் பிறந்த மேனியாக அமர்ந்திருந்த அவள் அவன் பார்க்க புன்முறுவல் செய்தாள்.

“ஏன் சிரிக்கிற?” - அவன்.

”இது உங்க ஃப்போட்டோ தானே?” தன் பையில் வைத்திருந்த படத்தை எடுத்து நீட்டினாள்? அது அவனது இளமை கால புகைப்படம். அழகனாக காட்சியளித்தான்.

“அட... இது எப்படி உன்கிட்ட?”

“எங்கம்மா வச்சிருந்தாங்க”.

“என்ன?”


”எங்கம்மாவ நீ காதலிச்சு ஏமாற்றி ‘ரெட் லட்’ ஏரியாவுல வித்துட்டு போன. உன்ன நம்பினதுக்கு தெருவிலவிட்டுட்டு போயிட்ட. உன் போட்டோவ காட்டி சொல்லி இருக்காங்க. இப்ப அவுங்க உயிரோடில்லை”. அவன் பெருங்குழப்பத்தில் வியர்த்துப் போனான்.

“என் எய்ட்ஸ் வியாதி உனக்கும் ஒட்டிக்கிட்டிருக்கும்ல?” அவள் கேட்டதில் பத்து பதினைந்து இடிகள் ஒன்றாக தன் உச்சந் தலையில் இறங்கியதை அவன் உணர்ந்தான்.

(பி.கு: அவள் அவன் மகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.)

19 comments:

ஆளவந்தான் said...

I hope, me the first :))))

ஆளவந்தான் said...

கதையில் கில்மா சூப்பர் :)

Thamiz Priyan said...

ஹா ஹா ஹா! நல்லா புடிக்கிறீங்கய்யா கதைக்களம்.. ;-))

VG said...

Wow, once again u prooved that u r a good writer.. =)

i like the story very much. :))

Anonymous said...

கதைக் கரு நல்லா இருக்கு விக்கி.

நட்புடன் ஜமால் said...

படம் சொல்லுதே பல கதைகள்.

கூண்டுக்குள் கிலி

பார்த்தாலே வருது கிலி

நட்புடன் ஜமால் said...

நல்ல எழுத்து விக்கி ...

சென்ஷி said...

:)

வால்பையன் said...

இதுல பின்குறிப்பு வேறயாக்கும்!

ரத்தத்தை ஒரு சிரிஞ்சியில ஏத்தி போட்டு தள்ளிர வேண்டியது தானே!

காமகளியாட்டங்கள் கதைக்கு வலு சேர்க்கவா?

Anonymous said...

தவறான கருத்து. எய்ட்ஸ் உள்ளவருடன் ஒருமுறை உடலுறவு கொண்டாலே எய்ட்ஸ் ஒட்டிக்கொள்ளும் என்பது தவறு. அதற்கான வாய்ப்பு உள்ளது என்பதைத் தவிர கண்டிப்பாக முதல் முறை உடலுறவிலேயே 100% எய்ட்ஸ் வந்துவிடும் என்பது தவறு.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆளவந்தான்

நீங்களே முதல்... கில்மா என்றால் என்ன? நான் பச்ச புள்ள... அசிங்கமாக பேசாதிங்க :))

@ தமிழ் பிரியன்

நல்ல களமா?? :))வருகைக்கு நன்றி..

@ விஜி

அடடா... இது தான் ஓவர் ஐஸ்ஸா... நான் எழுத்தாளன் இல்லை :))

@ வடகரை வேலன்

நன்றி அண்ணாச்சி... நிஜமா கரு இருக்கா :))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ நட்புடன் ஜமால்

நன்றி.. :))

@ சென்ஷி

நன்றி :)

@ வால்பையன்

சூப்பர் ஐடியாவா இருக்கே... இத வச்சு ஒரு கதை எழுதளாம் போல... நன்றி தல...

@ அனானி

பதிவில் அது தான் முதல் முறை என நான் குறிப்பிட்டுள்ளேனா? கதையை சரியா படிக்காம பின்னூட்டம் போடுவதற்கு அடையாளம் இது தான். உங்கள் தகவலுக்கு நன்றி...

ஆர்வா said...

அடடா கலக்கிடீங்க

வியா (Viyaa) said...

சுருக்கமான கதை..
இருந்தாலும் சூப்பர்..
வாழ்த்துக்கள் விக்கி

ஆளவந்தான் said...

//
எய்ட்ஸ் உள்ளவருடன் ஒருமுறை உடலுறவு கொண்டாலே எய்ட்ஸ் ஒட்டிக்கொள்ளும் என்பது தவறு.
//
இதுவும் தவறே அனானி. உடலுறவினால் எய்ட்ஸ் பரவும்..

”எத்தனை முறைக்கு அப்புறம்” என்பது தான் வரையறுக்கபடவில்லை :)))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கவிதைக் காதலன்

அடடா அப்படியா? :)

@ வியா

நீங்க எப்போதுமே ஒரே மாதிரியாக பின்னூட்டம்...

@ ஆளவந்தான்

அடடா எய்ட்ஸ் பற்றி நிறய தெரிந்து வச்சிருக்கிங்க... குட் குட்...

Anonymous said...

anna kadaisiya oru athirchiya undu pannithingga! its a nice story. carry on. Viknes(b.com)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விக்கி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சிவாஜி said...

பின் குறிப்பு கூட அவசியமில்லை... நல்ல கதை!