Monday, November 11, 2013

காமம் செப்பும் சாக்லெட் & Chocolate and Sex Life

சாக்லெட் அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆண்களா பெண்களா? பெயர் தன்மையைப் போல ’சக்’கென மனதில் ஒட்டிக் கொள்கிறது சாக்லெட். ஆண்கள் தன் காதலிக்கோ மனைவிக்கோ சாக்லெட் வாங்கிக் கொடுப்பது இன்றய நாட்களில் இயல்பாகி விட்டது.

சாக்லெட் சாப்பிடுவது காம உணர்ச்சியைத் தூண்டுமா? Montezuma மகாராஜா அஸ்டெக் (Aztec) ஆட்சிகால மன்னன் ஆவன். ஒரு நாளைக்கு 50 கோப்பை சாக்லேட் அருந்துவானாம். சக்லெட் அருந்துவதுவதினால் ஒரு புதிய வகை உற்சாகம் பிறக்க்குமாம். அதன் பிறகே தன் இணைகளுடன் கூடுவானாம். சாக்லெட் அருந்துவதை அஸ்டேக் கால உயர்குடி மக்கள் ஒரு கலாச்சாரமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Casanova, உலகமறிந்த காதலன். தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ள தினமும் சாக்லெட் அருந்துவானாம். champagne அல்லது சாக்லெட் எனக் கேட்டால். சாக்லெட் என்பது தான் அவரின் பதிலாக அமையுமாம். இந்தக் கதைகள் உண்மை தானா? தெரியாது. ஆனால் ஒரு சுவாரசியம் அதில் இருப்பதாக அறிகிறேன்.

சாக்லெட் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் எனும் தகவலை முன்பு படித்ததாக நினைவு. காமத்திற்கும் சாக்லெட்டுக்கும் இருக்கும் தொடர்பு இன்னமும் பல விதமாக அலசப்பட்ட வண்ணமே இருக்கிறது. அதனால் தான் என்னவோ அதை நம்பியோ நம்பாமலோ சக்லெட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

சாக்லட் காதலின் அடையாளமாக இன்று கருதப்படுகிறது. காதல், காம உணர்சியை மேலிட செய்வதற்கு மட்டும் இன்று சாக்லட் பயன்பாட்டிற்கு இல்லை. புதிய நட்புபையும் பாசத்தை வெளிப்படுத்தவும் சாக்லெட் கொடுக்கப்படுகிறது.

சாக்லெட் தொடர்பான ஆய்வுகளை செய்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் சளைத்ததாக தெரியவில்லை. தெ மெசேஜ் ஆப் லவ் என சாக்லெட்டின் தனித் தன்மையைக் குறிப்பிடுகிறார்கள். அது போக சாக்லெட் 2000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (திருவள்ளுவர் சாக்லெட் பற்றி ஏதும் எழுதி இருக்கிறாரா) இந்த எண்ணம் தன் உடனே எழுந்தது. நக்கலாக தோன்றினால் மன்னிக்கவும். :)


சாக்லெட்டில் phenylethylamine(PEA) எனும் வேதிப் பொருள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது மனிதனின் ஆனந்த உணர்ச்சியை தூண்டுகிறது. அதாவது ஒரு மனிதன் ஆனந்தம் அடையும் போது வெளிப்படும் ஹார்மோன் போலவே இது செயல்படுகிறது. இந்த வேதிப் பொருள் மனிதனின் காம உணர்சியை தூண்ட தக்கது. காதல் வயப்படும் ஒரு மனிதனின் மன நிலையை தர வள்ளது.


உணவுப் பொருட்களில் இருக்கும் PEA வேதிப் பொருள் நிலைத் தன்மையற்று என்பதால் அதை மனித உணர்வோடு ஒப்பிடுவதை பொரும்பாலும் தவிர்க்க முனைகிறார்கள். இன்றய நிலையில் சாக்லெட்டின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ரொட்டி, கேக், ஐஸ் கிரிம், குளிர் பானம் என பல உணவுப் பொருள்களில் சாக்லெட் கலக்கிறார்கள்.

சாக்லெட்டை பரிசளிப்பது இன்று இயல்பாகிவிட்டது. மனதிற்கினியவர்களுக்கு சாக்லெட்டை பரிசளிப்பது உறவை வளர்க்கும் செயலாகக் கருதப்படுகிறது. பெரு வணிக அங்காடிகளில் சாக்லெட்டிற்காக தனியொரு பகுதியை ஒதுக்கி இருப்பதைக் காணலாம். பொதுவாக குழந்தைகளுக்கு அது தான் விருப்ப இடமாக இருக்கும். சில பொற்றோர்கள் குழந்தைகள் இனிப்பு பண்டங்கள் தின்பதை விரும்ப மாட்டார்கள். திருட்டு ‘தம்’ போல குழந்தைகளுக்கு திருட்டு மிட்டாய் என்ற கதையாகிவிடுகிறது.

அங்காடிகளில் கவரும் ஒரு விடயம் ஹெம்பர் என பொட்டலங்களாக மடிக்கப்படும் விதம். இது 100 முதல் 10000 ரிங்கிட் வரையிலும் ஹெப்பர்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. இது சாக்லெட்டிற்கான வரவேற்பையே குறிக்கிறது.

சாக்லெட் ஆரோக்கியமான பண்டம் அல்ல அதனால் உடல் நலம் பாதிப்படையும் என்பதே பொதுவாக மக்களிடையே நிலவும் கருத்தாகும். இதனால் சாக்லெட் சாப்பிடுவோரிடையே தமக்கு நீரிழிவு நோய் ஏற்படுமோ, உடல் எடை கூடுமோ, பல் பழுதடையுமோ என்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன.

ஒரு ஆய்வறிக்கையின் தகவல் சாக்லெட் வியாதிகளுக்கு வித்திடுவதில்லை என்பதை தெரிவிக்கிறது. அது போக சாக்லெட் சாப்பிடாதவரைக் காட்டினும் சாக்லெட் சாப்பிடுபவர்கள் ஒரு வருடம் அதிகபடியான ஆயுளை கொண்டிருப்பார்கள் என்பது அவ்வறிக்கையின் கூடுதல் தகவலாகும்.

கொக்கோ பழத்தில் பற்களைப் பாதுக்காக்கும் கிருமி எதிர்ப்பு சத்து நிறம்ப உள்ளன. சாக்லெட்டில் சேர்க்கப்படும் இனிப்பு வகைகள் அவற்றை சேதமுறச் செய்வது மட்டுமின்றி பற்களையும் பாழடையச் செய்கின்றன. இது ஜப்பானிய ஒசாக்கா பல்கலைக்கழத்தின் ஆய்வறிக்கையாகும்.


சக்லெட்டினால் முகப்பரு ஏற்படுவதில்லை. ஆனால் அதிகமான பால் கலந்த சாக்லெட் முகப்பரு ஏற்பட காரமாகிறது. சாக்லெட்டின் வாசனை மன அமைதியை ஏற்படுத்த வல்லவை.


மாயா மற்றும் அஸ்டெக் கால கட்டங்களில் மக்கள் கசப்பு மிகுந்த சாக்லெட்களை உணவாகக் கொண்டிருக்கிறார்கள். 1500 வருடங்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டினரால் ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஐரோப்பியர்கள் இனிப்பு வகை சாக்லெட்டை விரும்பி சாப்பிட்டிருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவிலும் சாக்லெட் மேல்மட்ட மக்களுக்கு மட்டுமென சட்டங்கள் இருந்திருக்கின்றன.

சாக்லெட் Theobroma என அறிவியல் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. அது இறைவனின் உணவு என பொருள்படும். இரண்டாம் உலகப் போரின் சமயம் அமேரிக்க இராணுவத்தினரால் ஜப்பானில் சாக்லெட் அறிமுகப்படுத்தப்பட்டது. சராசரியாக 1.7கிலோ சாக்லெட் வருடந்தோரும் ஒரு ஜப்பானியரின் உணவாகக் கொள்ளப்படுகிறது.

சாக்லெட் பற்றிய தகவல்கள் எண்ணிலடங்கா. நாளுக்கு நாள் புது தகவல்கள் நிறைந்து காணப்படுகிறது. சாக்லெட் உறுகுவதைப் போல் அதை பரிசாக பெறுவோரின் மனமும் உருகிவிடுகிறது. உலகளாவிய நிலையில் சாக்லெட் காதலோடு தொடர்புடைய பண்டமாகவே மக்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:

30 comments:

சி தயாளன் said...

அடடா....உது பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்...சிலவேளைகளில் சொக்லட் சாப்பிடுவது உளவியல் புத்துணர்ச்சியை தருகுதோ...?

ஜோசப் பால்ராஜ் said...

தம்பி,
நீங்க பதிவில் சொல்லியிருக்கபடி சாக்லேட்டில் இருக்கும் ஃபீனைல் எத்தில் அமீன்(PEA) காதல் உணர்வுகளைத் தூண்டக் கூடியது என்பது உண்மை தான்.
சாக்லேட்டப் பத்தி ஒரு இனிமையான பதிவு எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Prabhu said...

இதப் பத்தி நானே எழுதலாம்னு இருந்தேன். நீங்களே நல்லா எழுதிருக்கீங்க!

na.jothi said...

நிறைய விசயங்கள் சாக்லெட் பத்தி
சொல்லிருக்கிங்க
வாழ்த்துக்கள் விக்கி
கடையில கிடைக்கிற விலை குறைவான சாக்லேட்ல உள்ளது கோக் , சாக்லெட் கிடையாது
கோக் அதிகமா சாப்பிட்டா
வயிற்றுவலி வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகம்

து. பவனேஸ்வரி said...

அருமையான கட்டுரை. எனக்கு ஒரு சாக்லெட் கிடைக்குமா?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டொன் லீ

அப்படி தான் கேள்வி... நீங்க சாப்பிட மாட்டிங்களா? வருகைக்கு நன்றி...

@ ஜோசப் பால்ராஜ்

வருகைக்கு நன்றி அண்ணா. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிங்க... நீங்க சொன்ன வார்த்தைய மொழி பெயர்க்க தெரியாமல் தினறினேன். கருத்துக்கு மிண்டும் ஒரு நன்றி.

@ பப்பு

வருகைக்கு நன்றி.

@ புன்னகை

கேக் சாப்பிட்டால் வயிறு வலிக்குமா? தகவலுக்கு நன்றி... மீண்டும் வருக.

@ பவனேஸ்

ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சின்ன புள்ளைங்க சாக்லெட் சாப்பிடக் கூடாது. பல் வலி வரும். சமத்தா போய் புக்கு படிங்க.

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

இனிப்பான விடயம்

இனிப்பாக.

(எனக்கு சாக்கி-லேட்-டே பிடிக்காதே)

வியா (Viyaa) said...

ஒரு ஆய்வறிக்கையின் தகவல் சாக்லெட் வியாதிகளுக்கு வித்திடுவதில்லை என்பதை தெரிவிக்கிறது. அது போக சாக்லெட் சாப்பிடாதவரைக் காட்டினும் சாக்லெட் சாப்பிடுபவர்கள் ஒரு வருடம் அதிகபடியான ஆயுளை கொண்டிருப்பார்கள் என்பது அவ்வறிக்கையின் கூடுதல் தகவலாகும்.//


அப்போ எனக்கு ஆயிசு கெட்டி..
நான் ரொம்ப சாக்லேட் சாப்பிடுவேன் அதனால் நான் ரொம்ப நாள் வாழ போறேன்.. :)

வியா (Viyaa) said...

நல்ல ஒரு பதிவு..இதை முதலில் என் விட்டில் உள்ள நபர்கள் படிக்க வேண்டும்..நான் சாக்லேட் சாப்பிடுவதால் திட்டுகிறார்கள்

Xavier said...

சாக்லேட் என்ன தருமோ... ஆனா நீ போட்டிருக்கிற படம் ஒரு ரேஞ்சுக்கு இருக்கு !!!

தேவன் மாயம் said...

நல்ல கருத்தான பதிவுங்க!

தேவன் மாயம் said...

சாக்கலேட்
எனக்குப்
பிடிக்காது!!

ஆயின்
குழந்தைகள்
கேட்குமா?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜமால்

வருகைக்கு நன்றி... சாக்லெட் பிடிக்காதுங்களா? :))

@ வியா

வாங்க வியா... அதிகமா சக்லெட் சாப்பிடுவிங்களோ...

@ சேவியர்

வாங்க அண்ணா... நலமா? ஹா ஹா ஹா... சும்மா தமாஸ்க்கு... :))

ரிஷி (கடைசி பக்கம்) said...

cool informative

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தேவன்மயம்

வருகைக்கு நன்றி... பிள்ளைகள் சாப்பிடலாம் தானே டாக்டர்.

@ கடைசி பக்கம்

வருகைக்கு நன்றி :))

தராசு said...

சாக்லெட்,

அடுத்தவங்க வாங்கி குடுத்தா சாப்பிடறது உடம்புக்கு நல்லது.

Joe said...

நானும் இதைப் பற்றி முன்னமே கேள்விபட்டிருக்கிறேன்.

எனக்கென்னமோ சாக்லேட் உடல் எடையை தான் கூட்டுகிறது.
இருந்தாலும் யார் விட்டது?

தராசு said...

//சாக்லெட் அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆண்களா பெண்களா?//

ம்ம்ம், அடுத்த பட்டி மன்றத்துக்கு நல்ல தலைப்பு,

//சாக்லெட் சாப்பிடுவது காம உணர்ச்சியைத் தூண்டுமா?//

ரொம்ப அவசியமான கேள்வி.

//காமத்திற்கும் சாக்லெட்டுக்கும் இருக்கும் தொடர்பு இன்னமும் பல விதமாக அலசப்பட்ட வண்ணமே இருக்கிறது. அதனால் தான் என்னவோ அதை நம்பியோ நம்பாமலோ சக்லெட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள்.//

அதான் நீங்களே பதிலும் சொல்லீட்டீங்களே.

ஆளவந்தான் said...

//
Casanova, உலகமறிந்த காதலன். தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ள தினமும் சாக்லெட் அருந்துவானாம். champagne அல்லது சாக்லெட் எனக் கேட்டால். சாக்லெட் என்பது தான் அவரின் பதிலாக அமையுமாம். இந்தக் கதைகள் உண்மை தானா? தெரியாது. ஆனால் ஒரு சுவாரசியம் அதில் இருப்பதாக அறிகிறேன்
//


சுவாரஸ்யம் தான்,விக்கி.

நீங்க சொல்வதை உறுதி படுத்துவது போல, போன வாரம் என் ஆஸ்தான நாயகி Juliette Binoche நடித்த
Chocolat என்ற படம் பாத்தேன்.. அதிலும் வில்லன் சாக்லேட் சுவையில் மயங்கி திருந்துவது போல இருந்தது.. படம் முழுவதும் மக்கள் சாக்லேட் சுவையில் மயங்கு கிறங்குகிறார், அருமையாக இருந்தது..


அதேபோல என் சக-அலுவலரிடம் பேசும்போது சொன்னது, அவர் சோம்பேறிதனமா உணரும்போது நல்ல ”குத்து” பாடல்களையும் உ.ம் காதல் வைபோகமே ரீமிக்ஸ் (படம்:பெருமாள் ), சாகலேட்டும் சாப்பிடுவாராம், புத்துணர்ச்சி உடனே கிடைக்கும் என்றார்.

Tamilvanan said...

இனி மேலாவது யாவருக்கும் அல்வா தருவதை விட்டு சாக்லெட் தரலாமோ என்ற எண்ணம் எழும்படி கட்டுரை அமைந்திருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு விக்கி!
ஆமா, நீங்க நிறையா சாக்கிலேட்டு வாங்கி சாப்புடுரியலாமுளே!
நல்லா இருக்கு!

குமரன் மாரிமுத்து said...

உங்க பதிவ படித்ததும் நான் திருந்திட்டேன்... இனிமேல் நானும் உங்களப் போலவே நிறைய சாக்லெட்டுகளை அள்ளி போட்டுக்கப்போறேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தராசு

வருகைக்கு நன்றி..

@ ஜோ

:)) ஆம் யார் விட்டது...

@ ஆளவந்தான்

உங்கள் தகவலும் சுவாரசியமாக உள்ளது. நன்றி..

@ தமிழ்வாணன்

வருகைக்கு நன்றி... :))

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா :)

@ குமரன்

நான் நிறைய சாக்லெட் சாப்பிடுவேனா? :)) அது சரி...

dondu(#11168674346665545885) said...

//சாக்லெட் 2000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (திருவள்ளுவர் சாக்லெட் பற்றி ஏதும் எழுதி இருக்கிறாரா)//
கண்டிப்பாக எழுதியிருக்க முடியாது. ஏனெனில் சாக்லேட் 2000 ஆண்டுகளாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் திருவள்ளுவர் 2055 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார். (நான் சமீபத்தில் 1954-55 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தபோது எங்கள் ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார் என கூறியுள்ளார்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ dondu

முதல் வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றி ஐயா, அப்படி என்றால் சாக்லெட் அறிமுகத்துக்கு 55 வருடங்கள் முன்னமே திருவள்ளுவர் காலமாகிவிட்டார் என்கிறீர்களா? தகவலுக்கு நன்றி ஐயா.

dondu(#11168674346665545885) said...

//அப்படி என்றால் சாக்லெட் அறிமுகத்துக்கு 55 வருடங்கள் முன்னமே திருவள்ளுவர் காலமாகிவிட்டார் என்கிறீர்களா?//
தெரியல்லே. பாஷ்யம் ஐயங்காரைத்தான் கேட்கணும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜ நடராஜன் said...

தொலைக்காட்சியில உட்கார்ந்தா,பதிவுக்கு வந்தா இந்த பாலியல் மருத்துவர்கள் தொல்லை தாங்கமுடியலப்பா:)

உணர்வளிக்குதோ இல்லையோ குண்டாவதும்,பல்லு சொத்தையாவதும் உறுதி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ dondu

:) நன்றி ஐயா...

@ ராஜா நடராஜன்

வருகைக்கு நன்றி... நான் மருத்துவன் இல்லைங்க :))ரொம்ப பாதிப்படைஞ்சி பின்னூட்டம் போட்டிருக்கிங்க போல.

வெங்கட்ராமன் said...

இப்பொழுது சாக்லெட் பாங்களும் அதிகமாக பிரபலம் அடைந்துள்ளன.
ஊட்டச்சத்து பானங்க்ள் கூட, சாக்லெட் சுவையில் வர ஆரம்பித்துவிட்டன.

பசி எடுக்கும் போது, அதை உடனே அமர்த்த 150 மில்லி சாக்லெட் பானம் போதுமானது. என் அலுவலகத்தில் இந்த முறையை தான் நான் பின்பற்றுகிறேன்.

பின் குறிப்பு: பசி எடுக்கும் போதெல்லாம், சாக்லெட் பானம் சாப்பிட்டு, உணவு உட்கொள்ளாமல் இருக்காதீங்க :-)))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வெங்கட்ராமன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... :)