Saturday, November 14, 2009

வான் துளிகள்!!


தேங்கிய குப்பைகள்

திணறிக் கொண்டிருக்கிறது!

அடைத்துக் கொண்ட சாக்கடை

அழுது வடிகிறது!


ஈரப்பதம்

தேடிய காற்று

அலைமோதி

ஆசுவாசப்

பெருமூச்சிட்டுச் செல்கிறது!


வெள்ளிக்

காசுகளாய் குலுங்கி

கொட்டுகிறது

தலைதுவட்டிய

மரங்கள்!


தேன் கசிந்திட

திரவம் கிடைத்ததாய்

பூத்துச் சிரிக்கிறது

வசந்த மலர்கள்!


களிமண்

கரைந்திடாமல் இருக்க

குடைபிடித்துச் செல்கிறான்

மனிதன்!


இந்த

இயற்கை

தனக்குக் காய்சல்

வருவதாய் சொல்லவில்லை!


யாரைத் தேடி

வந்தன

இம்மழைத் துளிகள்!


மீண்டும்

தேடலை துவங்கிய

காற்றாய் வான் நோக்கிச்

செல்கின்றனவே!

29 comments:

Subha said...

//வெள்ளிக்

காசுகளாய் குழுங்கி

கொட்டுகிறது

தலைத்துவட்டிய

மரங்கள்!//

ஹாஹா...முத்தான வரிகள்.
அருமையான கற்பனை சகோதரருக்கு!

நாமக்கல் சிபி said...

நல்ல சிந்தனை விக்கி!

பாராட்டுக்கள்!

Anonymous said...

இயற்கை தன் கடமையை மறவாமல் செய்கிறது..அது மாதிரியே கவியின் இயற்கைதனம் மாறாமல் கவிதை வடிகிறார் நம் கவிஞர்...மழை நல்லவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல ஜாதி மதம் பார்க்காமல் சோ என்று பெய்கிறது..அது மாதிரியே கமெண்ட்டு எழுதினாலும் எழுதாவிட்டாலும்....கவிதை மழை பொழிவார் நம் விக்க்..விக்க்..விக்கினேஸ்

வால்பையன் said...

//யாரைத் தேடி

வந்தன

இம்மழைத் துளிகள்!//


உங்களை தேடி தான்

வால்பையன் said...

//காற்றாய் வானோக்கிச்
செல்கின்றனவே! //

நீங்க நளினாக் கூட பிஸியா இருக்குறதால திரும்பி போயிருச்சாம்

pudugaithendral said...

மழை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

உங்கள் கவிதையை மிக மிக ரசித்தேன்.

A N A N T H E N said...

என்ன சொல்றதுன்னே தெரியலை, நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகுது உங்க எழுத்து

//களிமண்

கரைந்திடாமல் இருக்க

குடைபிடித்துச் செல்கிறான்

மனிதன்!//

இங்க சிரிச்சேன், மத்ததில் சிரிச்சேன்

மழையைப் பற்றிய கவிதை தானே?

anujanya said...

//வெள்ளிக்

காசுகளாய் குழுங்கி

கொட்டுகிறது

தலைத்துவட்டிய

மரங்கள்!//

//இந்த இயற்கை தனக்குக் காய்சல்
வருவதாய் சொல்லவில்லை! //

நல்ல வரிகள் விக்கி. நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

அனுஜன்யா

SPIDEY said...

//களிமண்

கரைந்திடாமல் இருக்க

குடைபிடித்துச் செல்கிறான்

மனிதன்!//

ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹா
HA HAA HA HAA HA HAA

பல மொழியில சிரிக்க வச்சி போட்டீங்க போங்க?

நட்புடன் ஜமால் said...

\\"வான் துளிகள்!!"\\

மழைக்கு அழகான பெயர் ...

நட்புடன் ஜமால் said...

\\வெள்ளிக்
காசுகளாய் குலுங்கி
கொட்டுகிறது தலைதுவட்டியமரங்கள்!\\

மிகவும் இரசித்தேன் ...

நட்புடன் ஜமால் said...

\\களிமண்
கரைந்திடாமல் இருக்க குடைபிடித்துச் செல்கிறான் மனிதன்! \\

ஆஹா அருமை

மண்டையில் இருப்பதைத்தானே ...

நட்புடன் ஜமால் said...

\யாரைத் தேடிவந்தனஇம்மழைத் துளிகள்!
மீண்டும்
தேடலை துவங்கியகாற்றாய் வான் நோக்கிச்செல்கின்றனவே!\\

கவிதை மொத்தமும் அருமை தோழரே ...

MADURAI NETBIRD said...

//*ஈரப்பதம்

தேடிய காற்று

அலைமோதி

ஆசுவாசப்

பெருமூச்சிட்டுச் செல்கிறது!


வெள்ளிக்

காசுகளாய் குலுங்கி

கொட்டுகிறது

தலைதுவட்டிய

மரங்கள்! *//

அருமை தோழரே.

"வான் துளிகள்!!" இது இயற்கையின் வழித்தடங்கள்..................

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சுபாஷினி

மிக்க நன்றி...

@ நாமக்கல் சிபி

நன்றி அண்ணே...

@ மூர்த்தி

நெம்ப புகழ்றிங்களே.... முடியல...

@ வால் பையன்

என்னையா... நளினாவா... வால் பகலயேவா நிதானமின்மையா.... அவ்வ்வ்வ்... ஆமா தமிழிஸ் ஓனர் யாருங்க...

@ புதுகைத் தென்றல்

நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆனந்தன்

நன்றி நண்பரே...

@ அனுஜன்யா

நன்றி தலைவரே...

@ ஸ்பைடி

வருகைக்கு நன்றி... சிரித்துக் கொண்டே மீண்டும் வருக...

@ ஜமால்

நன்றிங்க தலைவா...

@ மதுரை நண்பன்

நன்றி...

Anonymous said...

ஒரு நாட்டில மழை பெய்திட கூடாதே..
உடனே கவிதை எழுதிடுறதா?? :P

கிகிகி



கவிதை நன்றாக உள்ளது.. :)

அகரம் அமுதா said...

அருமை. வாழ்த்துகள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தூயா

நன்றிங்க...


@ அகரம் அமுதா

நன்றி நண்பரே...

Anonymous said...

~~வெள்ளிக்

காசுகளாய் குலுங்கி

கொட்டுகிறது

தலைதுவட்டிய

மரங்கள்!~~

enakku migavum piditirikirathu inta vari.... povoma... malaiyil oorgolam.... :D

ஹேமா, said...

vikki kavithai wallaa....irukku.mazhaiyaip pukazhwthu manithanaiyum thiddi ungkaL aaththiraththaith thiirththirukkIngka.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... ஓ நீங்க குடை பிடிக்கும் ஆள் இல்லையா?

@ ஹேமா

மனிதனை திட்டவில்லை ஹேமா... மனிதன் மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்கிறான். அது தவறான ஒன்று...

VG said...

iyarkaiyai rasikanum anubavikkanum... :) :P

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜி

நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

இப்படியொரு கோணம் இருக்கத்தான் செய்கிறது...

து. பவனேஸ்வரி said...

அழகான கவிதை...

அன்புடன் அருணா said...

அழகிய துளிகள்! பூங்கொத்து!

மின்னுது மின்னல் said...

அருமையான கற்பனை !!!

Tamilvanan said...

//யாரைத் தேடி

வந்தன

இம்மழைத் துளிகள்!//

அற்புத‌ம்