Thursday, June 19, 2008

பிரமாண்ட முறையில் மருதநாயகம்- கமல்ஹாசன் பேட்டி


கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படம் உலகம் முழுவதிலும் ரிலிஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இதில் கமல்ஹாசன் 10 வேடங்களில் கலக்கலாக நடித்துள்ளார். தசாவதாரம் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கே: தசாவதாரம் படம் எடுக்கும் ஐடியா எப்படி வந்தது?

ப: தசாவதாரம் எடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தேன். இப்படத்தை எடுத்தது கஷ்டமான காரியம் அல்ல. அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்.

கே: நீங்கள் மிக பெரிய பராட்டாக எதை கருதுகிறீர்கள்?

ப: நான் எப்போதுமே விரும்புவது ரசிகர்களின் பாரட்டைதான். அவர்கள் பாராட்ட பாராட்டதான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள் பாரட்டுதான் முக்கியம்.

கே: தசாவதாரம் படம் தொழில் நுட்பரீதியாக நன்றாக உள்ளது. ஆனால் கதை பலவீனமாக இருப்பதாக சொல்கிறார்களே?

ப: குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அதை பற்றி எல்லாம் நான் கவலைப் படுவதே இல்லை. என்னை பொறுத்தவரையில் ‘தசாவதாரம்’ படம் மிக நன்றாக வந்துள்ளது. அதில் எந்த குறையும் காணமுடியாது. அந்த அளவிக்கு கவனமாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

கே: இப்படம் வேகமாக செல்வதால். சாதாரண ரசிகர்களினால் புரிந்துக் கொள்ள முடியாதே?

ப: எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். படம் வேகமாகச் செல்வதால் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். விரைவில் ரசிகர்களை மகிழ்விற்பதர்காக எனது கனவு படமான “மருதநாயகத்தை” பிரமாண்டமான முறையில் எடுக்க இருக்கிறேன். இப்படத்தை மர்மயோகிக்கு பிறகு எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

கே: தசாவதாரத்தில் நீங்கள் நடித்த கேரக்டர்களில் மிகவும் பிடித்த கேரக்டர் எது?

ப: ஒரு தாயிடம் சென்று நீங்கள் பெற்ற பத்து குழந்தைகளில் எந்த குழந்தை பிடிக்கும் என கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாளே அதுதான் என் பதிலும். தசாவதாரத்தில் நான் நடித்த 10 கேரக்டர்களும் என் குழந்தைகள் மாதிரி.

கே: சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா?

ப: சிரஞ்சீவி எனது நெருங்கிய நண்பர். அவர் சினிமாவில் வெற்றி பெற்றது போல் அரசியலிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
நன்றி: மலேசிய நண்பன்.

17 comments:

பரிசல்காரன் said...

ஐய்ய்ய்யா.. நான்தான் ஃபர்ஸ்ட்!

வரட்டும் மருதநாயகம்.. அதுக்குத்தானே காத்துட்டிருக்கோம்.. (ஏய்.. யாருப்பா அதுக்குள்ள விமர்சனம் எழுதறது??)

rapp said...

//எனது கனவு படமான “மருதநாயகத்தை” பிரமாண்டமான முறையில் எடுக்க இருக்கிறேன்//ஆஹா, அடுத்து எந்த மாங்காமடயனுக்கு ஆட்டயப் போடப் போறாரு. இப்போ அப்போன்னு கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டுருந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்போ சன்யாசம் வாங்கப் புறப்பட்டாச்சாமே(அதான் ஆண்டி கோலத்துக்கு கமல் ஏற்கனவே கொண்டு வந்துட்டாரே, அதனால காஸ்ட்யும் மாத்துற வேலையில்ல)

ers said...

மர்மயோகிக்கு பின்பு மருதநாயகமா? தகவலுக்கு நன்றி.

சின்னப் பையன் said...

நெஸ்கபே / கோல்கேட் வாழ்க!!!
(காபி/பேஸ்ட் சொன்னேங்க....)

VIKNESHWARAN ADAKKALAM said...

//பரிசல்காரன் said...
ஐய்ய்ய்யா.. நான்தான் ஃபர்ஸ்ட்!
வரட்டும் மருதநாயகம்.. அதுக்குத்தானே காத்துட்டிருக்கோம்.. (ஏய்.. யாருப்பா அதுக்குள்ள விமர்சனம் எழுதறது??)//

வாங்க... வாங்க...

பஷ்ட்டா வந்த பரிசல்காரனுக்கு ஜோர ஒரு கைதட்டு கொடுங்க...

ஏய் யாருப்பா அது விமர்சனம் எழுதவது.. சார் கேக்குறாருல்ல... வாய தொறந்து பதில் சொல்றது...

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஆஹா, அடுத்து எந்த மாங்காமடயனுக்கு ஆட்டயப் போடப் போறாரு. இப்போ அப்போன்னு கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டுருந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்போ சன்யாசம் வாங்கப் புறப்பட்டாச்சாமே(அதான் ஆண்டி கோலத்துக்கு கமல் ஏற்கனவே கொண்டு வந்துட்டாரே, அதனால காஸ்ட்யும் மாத்துற வேலையில்ல)//

வேண்டா நல்லால... அழுதிடுவேன்... அவ்வ்வ்வ்

VIKNESHWARAN ADAKKALAM said...

//தமிழ்சினிமா said...
மர்மயோகிக்கு பின்பு மருதநாயகமா? தகவலுக்கு நன்றி.//

வாங்க வாங்க.. அடிக்கடி வந்துட்டு போங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

//ச்சின்னப் பையன் said...
நெஸ்கபே / கோல்கேட் வாழ்க!!!
(காபி/பேஸ்ட் சொன்னேங்க....)//

வாங்க... படு பிசி போல...

கிரி said...

//ஆஹா, அடுத்து எந்த மாங்காமடயனுக்கு ஆட்டயப் போடப் போறாரு. இப்போ அப்போன்னு கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டுருந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்போ சன்யாசம் வாங்கப் புறப்பட்டாச்சாமே(அதான் ஆண்டி கோலத்துக்கு கமல் ஏற்கனவே கொண்டு வந்துட்டாரே, அதனால காஸ்ட்யும் மாத்துற வேலையில்ல//

ஹா ஹா ஹா ஹா ராப் நீங்க பேட்ட ராப் :-)))

மர்மயோகி படம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

மோகன் கந்தசாமி said...

///யாருப்பா அதுக்குள்ள விமர்சனம் எழுதறது??///
அதான் பொது மன்னிப்பு பதிவு போட்டுட்டேனப்பா, அப்பறமும் கிழிச்சா எப்புடி?

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஹா ஹா ஹா ஹா ராப் நீங்க பேட்ட ராப் :-)))
மர்மயோகி படம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.//

நன்றி.. மீண்டும் வருக...

VIKNESHWARAN ADAKKALAM said...

//அதான் பொது மன்னிப்பு பதிவு போட்டுட்டேனப்பா, அப்பறமும் கிழிச்சா எப்புடி?//

ஏங்க சார கிழிக்கிறிங்க... பாவம் விட்டுடுங்க.... மோகன் நீங்க போட்டிருந்த கேள்வி பதில் பதிவு டாப்பு...

கானா பிரபா said...

மருதநாயகம் சரித்திரம் படைக்கும்

மருதநாயகம் said...

//வரட்டும் மருதநாயகம்.. அதுக்குத்தானே காத்துட்டிருக்கோம்//

அதான் வந்துடோம்ல

KARTHIK said...

//மருதநாயகம் சரித்திரம் படைக்கும்.//
sure.

VIKNESHWARAN ADAKKALAM said...

கான பிரபா.. கார்த்திக்... மருத நாயகம் வருகைக்கு நன்றி... மீண்டும் வருக...

Anonymous said...

அட்ரா.. அட்ரா...
தமிழ் சினிமா மூலம் தமிழ் புகழ் உலகமெங்கும் பரவட்டும். அதற்கு கமல் போன்றவர்கள் நிச்சயம் வேண்டும்.