Monday, June 09, 2008

'பாரோ' மன்னனின் மர்மக் கல்லறை

(ஹாவட் கார்டர் மற்றும் லாட் கார்னர்வான்)


ஒரு கற்பனைக்கு எடுத்துக் கொள்வோம், ‘மம்மி’கள் உயிர் பிழைத்தால் என்ன நடக்கும்? அவை மனிதனை அழிக்கும் சக்தி கொண்டவையாக இருக்குமா? சரித்திரத்தின் சுவடுகளை துள்ளியமாக அறிந்துக் கொள்ள வழிவகுக்குமா?இல்லை அதையும் மனிதன் மிருகக்காட்சி சாலையில் அடைத்து வைத்து அழகு பார்ப்பானா? இவையனைத்தும் உலகைப் படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

அக்காலத்தில் இறந்த எகிப்திய மன்னர்களை பாடம் செய்து கல்லரையில் வைத்துவிடுவார்கள். எகிப்திய மன்னர்களை ‘பாரோ’ மன்னர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வாரு பாடம் செய்யப் பட்ட பிரேதத்தை நாம் ‘மம்மி’ என்று அழைக்கிறோம். ஒரு சில வருடங்களுக்கு முன் 20000 வயதை கொண்ட ‘மம்மி’கள் இன்னமும் கண்டரிய படாமல் இருக்கலாம் என படித்த ஞாபகம் உண்டு.

எகிப்திய தேசத்தில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்சியில் ஆகக் கடைசியாக கிடைத்தாகக் கருதப்படுவதுதான் இந்த ‘தூத்தன்கேமன்' அரசரின் கல்லறை. இவரது கல்லறையானது முழுமை அடைந்த கல்லறையாகக் கருதப்படுவது மட்டுமின்றி கண்டரியப்படாத பல மர்மங்களைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எகிப்திய பழங்குடியினரால் அது ‘தூத்’ அரசரால் எற்பட்ட சாபமெனவும் கூறப்படுகிறது. அவர் அறையப்பட்டிருக்கும் கல்லறையையோ அல்லது உடலையோ யாராவது தொந்தரவு செய்தால், தொந்தரவு செய்தவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் சாகும் அளவிற்கு ‘தூத்’ அரசர் சாபத்தை எற்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எந்த அளவிற்கு உண்மை என்பது கேள்விக்குறிதான்.

‘தூத்’ அரசர் தமது 9-வது வயதில் எகிப்திய அரசராக அரியனை ஏரினார். இளம் வயதில் ஆட்சி பீடத்தை பிடித்த இவர் தனது 19-வது வயதில் காலமானார்.
இவர் இறப்பிற்கான காரணம் மர்மமானதாகவும், இன்றளவும் ஆராய்ச்சியாளர்களால் உறுதியான காரணங்களை கூற முடியாமல் இருப்பதும் ஆச்சர்யமே!

1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஹாவட் கார்டர்’ என்ற தொள் பொருள் ஆராய்ச்சியாளரும் அவர் தம் குழுவினரும் ‘தூத்’ அரசரின் கல்லறையைக் கண்டரிந்துள்ளனர். அதிக அளவிலான செலவை கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு ‘லாட் கார்னர்வோன்’ என்ற செல்வந்தரால் நிதி உதவி செய்யப்பட்டுள்ளாது.

இந்தக் கல்லறைக் கண்டுபிடிக்கப்பட்டதே தனிக் கதை. ‘தூத்’ அரசரின் கல்லறை வேலி ஆப் கிங்ஸ் ‘Valley of the Kings’ எனப்படும் வெஸ்ட் பேங்கின் ‘West Bank’ தீபிஸ் ‘Tebes’ மலைத் தொடரில் உள்ளது. எப்படி அந்தக் கல்லறையைக் கண்டுபிடித்தார்கள்? அந்த மலையில் தேடிக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அப்பொழுது தண்ணீர் சுமந்து வந்த எகிப்தியச் சிறுவன் ஏதோ இடற விழுகிறான். அப்படிக் கண்டுபிடித்ததுதான் இந்தக் கல்லறை. அந்தச் சிறுவனுக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்தக் கல்லறைக்குள் முதலில் நுழைந்தது (அனுப்பப்பட்டது) மற்றுமொரு எகிப்தியச் சிறுவன். அவனுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

இவரின் கல்லறையை கண்டு பிடித்த ஆராய்ச்சி குழுவினர் வெற்றியின் விழும்பை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்கிக் கடலில் இருந்தனர். பின் நாளில் ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டியின்’ கதையாகியது இவர்களின் நிலை.

“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக” இவ்வாசகம் ‘தூத்’ அரசரின் நுழைவாயில் பழங்கால எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிக் குழுவினர், இது மக்களின் கவனத்தை திருப்ப நினைக்கும் வாசகமாக கருதினர். இவர்கள் கணிப்பின் படி உள்ளே விலை மதிக்க தக்க புதையல் இருக்கலாம் எனவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் இதில் முக்கிய தடயங்கள் இருக்கலாம் எனவும் கருதினர்.

இவர்களது கணிப்பு 100% சரியாகவே இருந்தது. உண்மையாகவே உள்ளே சென்றவர்கள் யாரும் முதலை, சிங்கம் மற்றும் குதிரைக்கு உணவாகவில்லை. ‘தூத்’ அரசரின் கல்லறை மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்ததாகவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் முழுமையடைந்ததாகவும் குறிப்பிடபட்டுள்ளது. முக்கியமாக விலைமதிக்க தக்க புதையலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவாரய்ச்சி குழுவினரில் பலர், ஒருவர் பின் ஒருவராக இறந்திருக்கிறார்கள். இவையாவும் சாபத்தால் ஏற்பட்ட மரணங்கள் தான என்பது புரியாத புதிர்தான். முதலில் இறந்தவர், ஆராய்ச்சி குழுவினருக்கு நிதி உதவி செய்த ‘லாட் கார்னர்வோன்’. இவர் 4 ஏப்ரல் 1923-ல் கொசு கடித்து இறந்ததாக நம்பப் படுகிறது. கன்னத்தில் கொசு கடித்த இடமும், ‘தூத்’ அரசரின் கன்னத்தில் இருந்த சிகப்பு நிறத்திலான வடுவும் ஒரே மதிரியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இதையடுத்து அவர் வளர்த்த நாய் காரணமின்றி, சாகும் வரை குரைத்து உயிர் விட்டதாகக் கூறப்படுகிறது. ஆராய்ச்சி குழுவின் தலைவரான ‘ஹாவட் கார்டர்’ வளர்த்த ‘லக்கி பேர்டு’ எனப்படும் பறவை நாகத்தால் விழுங்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தை ‘தூத்’ அரசரின் தலையில் இருக்கும் கிரீடத்தின் நாகத்தோடு இணைத்துப் பேசுகிறார்கள். கல்லறைச் சொத்துகளின் ஆய்வாளராக இருந்த ‘ஆர்தர் மேஸ்’ எனப்படும் ஆராய்ச்சியாளர் சுய நினைவற்று சிறிது காலத்தில் இறந்தார்.

இது ‘தூத்’ அரசரின் சாபம் என்பதில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களில் ‘ஆடம்சன்’ என்ற கல்லறைக் காவலரும் ஒருவர். இவருக்கு நேர்ந்த ஒரு கோர விபத்தில் தன் மனைவியை இழந்தார். மகனின் முதுகொழும்பு உடைந்தது மற்றும் துரத்திற்கு தூக்கி வீசப் பட்ட இவர், காரின் சக்கரம் தன் தலையில் ஏருவதிலிருந்து உயிர் தப்பினார். இதுவும் அனைவருக்கும் நேர்ந்தது போன்ற தற்செயலாக நடந்த சம்பவமே என்ரே எண்ணினார்.

இவையணைத்தும் எப்படி சம்மந்தப் பட்ட நபர்களையே பதித்திருக்கும்?
இது தொடர்பாக ‘பிரான்ஸ்’ நாட்டைச் சேர்ந்த சைல்வியன் கேண்டோன் ‘Sylvian Gandon’ எனும் ஆராய்ச்சியாளர், தொடர்ந்து இறக்கும் ஆராய்ச்சி குழுவினரின் மர்ம மரணத்திற்கு தனது ஆய்வின் கூற்ரை ‘Proceedings of The Royal Society’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘மைக்ரோ ஸ்போரா’ மற்றும் 3300 வருடங்களாக ‘தூத்’ அரசின் கல்லறையில் அடைந்து கிடக்கும் பல செயற்கை உயிர் கொல்லி கிருமிகளே இந்த மரணங்களுக்கு காரணம் என விளக்கம் கூறியுள்ளார்.

லாங் ஐலேண்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ‘பாப் பாரியர்’ மம்மிகள் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவராவார். ‘தூத்’ அரசரின் மரணத்தை பற்றி இவர் கூறுகையில் அது ஒரு கொலையாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். தூத்தன்கேமனின் ஆளோசகரும் மற்றும் உதவியாளருமான ‘ஆய்’ என்பவரால் கொலை செய்யப்பட்டிருக்களாம் என கருத்து தெரிவித்திருக்கிறார். ‘தூத்’ அரசரின் மறைவிற்கு பின் அவரின் பதவியை வகிக்க வாரிசு இல்லாத காரணத்தால், ‘ஆய்’ தன்னை எகிப்திய மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

‘தூத்’ அரசரின் மம்மியை ஊடுகதிர் ‘X-Ray’ செய்யப்பட்டதில் அவரது பின் மண்டையில் பெரிய அளவிலான இரத்தக் கசிவு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது அவரை தாக்கியதால் எற்பட்டதாக இருக்கக்கூடும் எனவும், அத்தாக்குதளே அவரது மரணத்திற்கு காரணமாக இருக்களாம் எனவும் கூறப்படுகிறது.

தூத்தன்கேமனின் மறைவைத் தொடர்ந்து அவரது இளைய மனைவியான ‘Ankhesenamum’, புதிய அரசராகியிருக்கும் ‘ஆய்’யை மணந்துக் கொள்ளா விருப்பமில்லாததால், தனது மகனை எகிப்தின் மன்னராக்குவதற்கு அனுப்பி வைத்திருக்கிறாள். ஆனால் அவளது மகன் எகிப்தை வந்தடைவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டுள்ளார்.

அரியனை ஏறிய ‘ஆய்’ சில வருடத்தில் மரணமடைந்திருக்கிறார், இதைத் தொடர்ந்து மூன்று வருடங்களில் ‘Ankhesenamum’-மும் எகிப்திய சரித்திரத்திலிருந்து காணாமற் போகிறாள். அவளைப் பற்றிய தடயங்களும் எதுவும் இல்லாமற் போய்யிருக்கிறது. அவளும் இந்த தொடர் கொளைகளுக்கு ஆளாகியிருப்பாளா என்பதும் கொள்விக்குறியே.


இவரையடுத்து அரசரானவர் ‘ஹோரெம்ஹெப்’. தளபதி ‘ஹோரெம்ஹெப்’ ஆரம்ப காலத்தில் ‘அக்ஹிநேத்தனிடம்’ உதவியாளாராக பணிபுரிந்து வந்தார். ‘அக்ஹிநேத்தன்’ யார்? இவர் ‘தூத்’ அரசர் அரியனை எறுவதற்கு முன் அரசராக இருந்தவர். ‘தூத்’ அரசரின் ஆட்சியின் போது ‘ஹோரெம்ஹெப்’படைத் தளபதியாகவும், முக்கிய அமைச்சு பதவிகளையும் வகித்து வந்திருக்கிறார். ‘தூத்’ மற்றும் ‘ஆய்’ அரசரின் மறைவிற்கு பின்னர் ‘ஹோரெம்ஹெப்’ தன்னை அரசராக நியமித்துக் கொண்டார்.

சில தகவல்கள் ‘ஹோரெம்ஹெப்பிற்கும்’ தூத் அரசரின் இளய மனைவியான ‘Queen Ankhesenamun’-கும் இடையிலான தகாத உறவினால் இந்த தொடர் கொலைகள் நடந்திருகலாம் எனவும் கூறுகின்றன. ‘ஹோரெம்ஹெப்’ அரசர் பதிவியை ஏற்ற பிறகு ‘ஆய்’ சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் சரித்திரத்தில் இடம் பெற முடியாமற் போகும் அளவிற்கு அழித்திருக்கிறார். இதற்கு இவர்களுக்கிடைய இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம்.

புதிய ஆராய்ச்சிகள், இவரின் மூட்டுகள் பதிக்கப் பட்டதால் இவர் இறந்திருக்கக் கூடும் எனவும் கொலை அல்ல என குறிப்பிடுகிறார்கள். இவர் தொடைபகுதி எழும்புகள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். இதுவே இவரின் இறப்பிற்கு காரணம் எனவும் கூறுகிறார்கள்.

இதையடுத்து 1968-ஆம் ஆண்டின் ஆராய்ச்சி அவர் மண்டையிளுள்ள எழும்பு துகள்கள் இவரைத்தாக்கியதால் ஏற்பட்டவை எனவும் பின் அவர் கிழே விழுந்து கால் முறிந்திருக்கக் கூடும் என கூறியுள்ளார்கள்.

மற்றோறு தகவல் இவை அனைத்தும் 1922-ஆம் ஆண்டு இவரை கல்லறையிலிருந்து எடுக்கும் போது பாதுகாப்பாக கையாழப்படாத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எனவும் கூறுகிறார்கள்.

இன்றளவும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இவரது மறைவிற்கும், கல்லறையின் மர்மத்திற்கும் இன்னமும் திருப்தியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.


(இப்பதிவு நான் வெட்பிரஸ் வலைபதிவில் எழுதியது. சில திருத்தங்கள் செய்து பிளாகரில் கொடுத்துள்ளேன்)

22 comments:

puduvaisiva said...

வாழ்க்கைப் பயணம்!

“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக” இவ்வாசகம் ‘தூத்’ அரசரின் நுழைவாயில் பழங்கால எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது"

வலைப்பதிவில் இதைப்பற்றி எழுதிலால் அந்த பாதிப்பு உங்களை தாக்காதா??

புதுவை சிவா

Athisha said...

அருமையான கட்டுரை , ஒரு முழுமையான திரில்லர் போல இருந்தது

VIKNESHWARAN ADAKKALAM said...

// siva said...
வாழ்க்கைப் பயணம்!

“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக” இவ்வாசகம் ‘தூத்’ அரசரின் நுழைவாயில் பழங்கால எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது"

வலைப்பதிவில் இதைப்பற்றி எழுதிலால் அந்த பாதிப்பு உங்களை தாக்காதா??//

நாங்க சிங்கம்ல....

VIKNESHWARAN ADAKKALAM said...

//அதிஷா said...
அருமையான கட்டுரை , ஒரு முழுமையான திரில்லர் போல இருந்தது//

தெங்ஸ்... மீண்டும் வருக...

MyFriend said...

திகில் பறக்கும் கட்டுரை. பட்டிக்கவும் விருவிருப்பாக இறுக்கிறது விக்னேஷ். :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

//.:: மை ஃபிரண்ட் :
திகில் பறக்கும் கட்டுரை. பட்டிக்கவும் விருவிருப்பாக இறுக்கிறது விக்னேஷ். :-)//

வாங்க.. இப்ப எந்த ஊர்ல இருகிங்க... பிசியோ பிசி போல...

MyFriend said...

மலேசியாதான்.. இந்த ஊர வ்விட்டு எங்கேயும் போகுறதில்லை. :-)

ஆ.கோகுலன் said...

சுவாரசியமான தகவல்கள். தொகுத்துத் தந்தமைக்கு நன்றிகள்.
பதிவில் ள, ழ, ல தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. :)

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஆ.கோகுலன் said...
சுவாரசியமான தகவல்கள். தொகுத்துத் தந்தமைக்கு நன்றிகள்.
பதிவில் ள, ழ, ல தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. :)//

மன்னிக்கவும் நண்பரே.. இந்த ள, ழ, ல தவறு விடமாட்டெங்குது... நான் என்னதான் செய்ய...

வால்பையன் said...

ஆராய்ச்சி செய்தவர்கள் இறந்தால் மம்மி பழி வாங்கிவிட்டது என்று ஒத்து கொள்ளலாம்
அவர்களின் வளர்ப்பு பிராணிகளும், உறவினர்களும் இறந்ததர்க்கேல்லாம் மம்மி தான் காரணமென்றால் இது ஒரு புரட்டு என்று தெரிகிறது,

வால்பையன்

Anonymous said...

நல்ல பதிவு.
ஆனால் ல, ள, ர, ற தகராறு ரொம்ப (இல்லை முழுவதும்)இருக்கிறது.
வலையில் எழுதுபவர்கள் தயவு செய்து இதை சீரியசாக சரி செய்யவும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஆராய்ச்சி செய்தவர்கள் இறந்தால் மம்மி பழி வாங்கிவிட்டது என்று ஒத்து கொள்ளலாம்
அவர்களின் வளர்ப்பு பிராணிகளும், உறவினர்களும் இறந்ததர்க்கேல்லாம் மம்மி தான் காரணமென்றால் இது ஒரு புரட்டு என்று தெரிகிறது,
வால்பையன்//

மம்மி எப்படி பழி வாங்கும்? இந்தக் கல்லறைச் சொத்தின் மதிப்பு கோடி கணக்கில் தேரும். எல்லாவற்றையும் சுருட்டிக் கொள்ளலாம் என நினைத்து அவர்களில் ஒருவர் கூட செய்திருக்கலாம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//நல்ல பதிவு.
ஆனால் ல, ள, ர, ற தகராறு ரொம்ப (இல்லை முழுவதும்)இருக்கிறது.
வலையில் எழுதுபவர்கள் தயவு செய்து இதை சீரியசாக சரி செய்யவும்.//

ஓகே பாஸ்

Unknown said...

போட்டோ மாத்து விக்கனேஷ்,
அப்புறம் என்ன வீடு மாத்திட்ட . என்ன காரணம் .

அப்புறம் செவ்வாய் சிறுவன் இன்னும் கண்டுபிடிக்காத பிரமிட் பற்றி எழுதியிருக்கிறான் . பார்த்தீர்களா

Anonymous said...

Super

VIKNESHWARAN ADAKKALAM said...

//Xavier said...
Super//

நன்றி மீண்டும் வருக...

Unknown said...

என் கேள்விக்கு என்ன பதில்.

//விக்னேஷ் நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு//

அந்த நாலு என்ன?

VIKNESHWARAN ADAKKALAM said...

//அந்த நாலு என்ன?//

1
2
3
4
:-)))

Prabhu said...

நல்லாருக்கு. நானே tutukamen பத்தி எழுதனும்னு ஆசைப்பட்டேன். ஆனா நான் சொல்ல நினைச்சதும் அதுக்கு மேலயும் நல்லா எழுதிருக்கீங்க.

Anonymous said...

the mummy returns!!!

Subash said...

மிக அருமையாக தொகுத்துத் தந்துள்ளீர்கள். அற்புதம்.
நன்றிகள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ பப்பு

நன்றி... நீங்களும் எழுதுங்கள் புதிய கோனங்கள் கிட்டும்...

@ தூயா

வாங்க...

@ சுபாஸ்

நன்றி... :)