பாலத்திற்கடியில்ஆதிமனிதன்
கிழிசல் ஆடையில்
****
வண்ணப் பூச்சுகள்
மறைவில் ஓர் உறுவம்
நவீன ஓவியம்
****
உண்ணாவிரத போராட்டத்தில்
தவம் கிடக்கிறது
ஆரஞ்சு ஜூஸ்
****
போர் களத்தில்
குழந்தையின் கையில் கிளுகிளுப்பை
சிரிப்புக்கு ஏங்கும் தாய்
****
விதவைக் கோலம் கொண்ட
வெள்ளைக் காகிதங்களுக்கு
நீலமும் கருப்புமாகபொட்டிட்டுப் பூவைத்து
அழகு பார்க்கிறேன்
உன் பெயர் எழுதினால்
தமிழ் எழுத்தின்
அழகு இலட்சணங்கள்
அதிகமாகவே ஒட்டிக் கொள்கிறது
இரத்தச் சிவப்பான- உன்அதிகமாகவே ஒட்டிக் கொள்கிறது
செவ்விதழ் சிந்தும் துளிச் சிரிப்பின்
சிறு தருணத்திற்காக
கால காலமாக
தவம் கிடக்கும்
மனம்
செல் பேசியில்தவம் கிடக்கும்
மனம்
உன் பெயர் பார்த்து சிரிக்கிறேன்
பேசி முடித்து
சில நொடிகளே கடந்திருந்தது
இரண்டடி எஸ்.எம்.எஸ்
என்ன திருக்குறளின்
மாற்றுவடிவா?
மீண்டும் மீண்டும்
படித்து மனனம் செய்கிறேன்
புரிந்தது எது
புரியாதது எது
புத்தம் புதிய சூழலின்
புரியாத புதிர் ஒன்றில் மாட்டிக் கொண்டேனோ?
தண்ணொளியை வீசும்
பனித்திடும் கருணையும்
எரித்திடும் கோபமும் - சடுதியில்
திணறடித்திடும் வேகமாய்
கவிதைகள் பொழியுதடி
****
(பி.கு: பாசரம் எழுதி வெகு நாட்களாகிறது. ஏதோ மனதில் எழுந்ததை எழுதிவிட்டிருக்கிறேன்)