இந்தப் பறவைகள் மட்டும் ஏன் இவ்வளவு பிரபலம்? அதன் அழகிய வண்ணம் மட்டும் காண்போரை கவர்ந்திருக்காது. மனிதனைப் போல் பேசும் தன்மை கொண்டிருப்பதால் அந்த விசித்திர குணமும் அனைவரையும் கவர்ந்திருக்க வேண்டும்.
விந்தைகள் நிறைந்தது பெரு(Peru) நாடு. அது என்ன விந்தை என நீங்கள் சிந்திக்கக் கூடும். நாஸ்கா எனப்படும் இராட்சச கோடுகள் இங்குள்ளன. இந்த நாஸ்கா கோடுகள் இன்னமும் தீர்வு காணாத அதிசயங்கள் என்றே கூற வேண்டும். இங்கு கூற விளையும் செய்தி அதுவல்ல. அது கிளிகளைப் பற்றிய செய்தி.
பெரு நாட்டில் இருக்கிறது தம்போபட்டா(Tambopata) நதிக்கரை. சூரியன் உதித்தவுடன் மலை முகட்டுகளில் ஒட்டிய வானவில்லாய் இந்த வண்ண பட்சிகள் குழுமிவிடுகின்றன. அவை கீச்சும் சத்தம் அவ்விடத்தை சந்தைக் கடையாக்கிவிடுகிறது. இந்த Macaw இன கிளிகள் அங்கு வர காரணம் என்னவாக இருக்கும். களிமண் சாப்பிட வருகின்றன என நான் சொன்னால் உங்களுக்கு வியப்பாக தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை.
16 வகையான மக்காவ்(Macaw) இன கிளிகள் மத்திய மெக்சிக்கோ முதல் வட அர்ஜெண்டினா வரையிலுள்ள காடுகளில் வசிக்கின்றன. அவற்றில் எட்டு வகையானவை பெரு நாட்டில் உள்ளன.
இந்த மக்காவ்(Macaw) இன கிளிகளின் அழகு மிக வலிமையானவை. தடிமனான ஓடுகளைக் கொண்ட கொட்டைகளையும் விதைகளையும் இலகுவாக உடைத்து உண்ணக் கூடியவை. இவ்வகைக் கிளிகள் மரக் கிளைகளில் தலை கீழாக தொங்கவும் செய்யும். மக்காவ் (Macaw) மற்ற மிருகங்களையோ அல்லது பறவைகளையோ தாக்காது. அவைகளுக்கென தனிபட்ட பாதுகாப்பு முறைகளைக் கொண்டுள்ளன. தனக்கு ஆபத்து என அறிந்த கிளி அதி வேகமான சத்தத்தை எழுப்பும். அருகில் இருக்கும் மற்ற கிளிகளும் அவ்வாறே செய்ய தொடங்கும். இச்சத்தம் எதிரியின் செவிகளைப் பலமாக பாதிக்கச் செய்ய கூடியது. அதை தாங்க முடியாத எதிரி சட்டென அவற்றை விட்டு அகலும்.
ஆம், ஏன் கிளிகள் களிமண் தின்கின்றன என்ற விடயத்தைப் பார்ப்போம். உண்மையில் இந்தக் களிமண் தான் இவ்வகைப் பறவைகளை நச்சுத் தன்மையில் இருந்து காக்கிறது.
Macaw கிளிகள் இரப்பர், மா, பருத்தி என 60 வகையான மரங்களின் விதைகளையும் கொட்டைகளையும் தின்கின்றன. இவ்வகை விதைகளினால் அக்கிளிகளின் உடலில் அவசியமற்ற இரசாயனங்கள் தங்கி நச்சுத் தன்மையடைந்துவிடுகிறது. இதனால் கிளிகளின் உடலில் வீக்கம் உண்டாகும்.
அவற்றைத் தடுக்கும் பொருட்டு உப்புத் தன்மை நிறைந்த களிமண் வகையை இக்கிளிகள் தேடி தின்கின்றன. இதுவே Macaw கிளிகளுக்கு உண்டாகும் நோய்க்கு மருந்தாக அமைகிறது.
340 வகை கிளிகள் இருக்கின்றன. அவற்றில் Macaw இனக் கிளிகளை சுலபமாக கண்டறிந்துவிட முடியும். Macaw கிளிகளுக்கு இறகுகள் நீட்டமாகவும், அலகுகள் பெரிதாகவும் இருக்கும். பெட்டைக் கிளிகள் இரு முட்டைகளை ஈன்று அடைக்காக்கும். அச்சமயத்தில் ஆண் கிளிகள் உணவு தேடும் பெறுப்பேற்றுக் கொள்ளும். குஞ்சுகள் பொறித்த பிறகும் ஆண்கிளிகள் தனது உணவு வேட்டையில் தொடர்ந்திருக்கும். இறைப்பையில் அதக்கி வைக்கப்பட்ட தீனிகளை கக்கி குஞ்சுகளுக்கு ஊட்டும்.
Macaw கிளிகளின் கண்களைச் சுற்றி சிறு வலையம் இருக்கும். இவ்வலையத்தின் அடிப்படையில் அக்கிளிகளின் வயது நிர்ணயிக்கப்படுகிறது. இளங்கிளிகளுக்கு இவ்வலையம் கருப்பாக இருக்கும். முதுமை பருவத்தை எட்டும் சமயம் அவ்வலையம் மஞ்சல் கலந்த வெள்ளை நிறந்தில் மாறிவிடும்.
கூடுகட்டும் சமயம் இக்கிளிகள் அதிகமாக இரைச்சல் போட்டுத் திரியும். பெரும்பான்மையான Macaw கிளிகளின் கூடுகள் மரத்தின் மீது 50 மீட்டர் தூரத்தில் இருக்கும். நீலம், மஞ்சல் கலந்த Macaw கிளிகள் ஆற்று ஓரங்களில் காய்ந்து போன பால்மா மரங்களில் கூடுகளைக் கட்டிக் கொள்ளும். சிகப்பு பச்சை நிறத்திலான கிளிகள் காடுகளில் இருக்கும் உயரமான மரங்களிலும், சிகப்பு நிறத்திலானவை இவ்விரு இடங்களையும் தேர்வு செய்து கூடுகளை அமைத்துக் கொள்ளும்.
இவ்வகைக் கிளிகளின் ஆயுட் காலம் 75 எனக் கூறப்படுகிறது. பெருவாரியான கிளிகள் 30 முதல் 45க்குள் இறந்துவிடுகின்றன. கழுகு போன்றவற்றுக்கு இறையாகவும் நோய் வாய்பட்டும் பல இறந்துவிடுகின்றன. குறுகிய எண்ணிக்கையிலான கிளிகள் மட்டுமே 70 வயது வரை உயிர் வாழ்கின்றன.
தற்சமயம் இவ்வகைக் கிளிகள் அழிந்து வரும் நிலையில் இருக்கின்றன. அவற்றுள் 9 வகை கிளிகளின் நிலை பலமாக பதிப்படைந்துவிட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் இருக்கும் ஸ்பிக்ஸ் (Spix) வகை கிளிகள் விரைவில் அழிந்துவிடுமென கணிக்கப்படுகிறது.
தங்கச் சுரங்க வேலைகள் மற்றும் மர ஆலை வேலைகள் இவ்வின கிளிகளுக்கு ஊறு விளைவிக்கும் செயலாக அமைகிறது. எப்போதும் போலவே சில அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்புக்கு பாடுபட்டு வருகிறார்களாம். அவற்றின் வசிப்பிடங்களுக்கு கேடு விளைவிக்காமல் இருந்தால் போதும் அவைகளே தங்களைக் கவனித்துக் கொள்ளும் என்பதினை மனிதன் உணரப்போவது எப்போது?
(பி.கு: 22.02.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)

18 comments:
i'm the 1st..
எங்கிருந்து இந்த மாதிரி தகவல்களெல்லாம் உங்களுக்கு கிடைக்குது.
நீங்க பெரிய ஆராய்ச்சியாளரா இருப்பிங்க போலருக்கே!
(சரி என்ன ஆச்சு உங்க கல்யாணம் ப்ளஸ் லவ் மேட்டர்)
வரலாற்றுப்(புராதனப்) பதிவர் தம்பி விக்கி!
நல்லா இருக்கு செய்திகள். கலக்குங்க!
விக்கி அருமையான தகவல்கள் கிளிகளைப் பற்றி.இப்படியெல்லாம் இருக்குமா என்பதைப்போல.வாசித்து அதிசயித்தேன்.
விக்கி,எழுத்துப் பிழைகள் 2-3 இருக்கு மாற்றிவிடுங்கள்.அந்த வசனத்தின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது.
அருமையான தகவல்கள் விக்கி!
அந்த இரு கோடுகள் பற்றியும் எழுதுங்கள்!
நல்லா இருக்குது அண்ணா
@ வியா
நன்றி...
@ வால்பையன்
வருகைக்கு நன்றி நண்பரே... தொடர் எழுத நேரம் கிடைக்க மாட்டுது... எழுதனும் :))
@ ஜோதிபாரதி
நன்றி அண்ணா...
@ ஹேமா
நீண்ட நாட்களாக காணலையே? எங்க போய்டிங்க... சரி நேரம் கிடைக்கும் போது பிழைகளை திருத்திடுறேன்...
@ குசும்பன்
நன்றி... மை பிரண்டு நாஸ்கா கோடுகளை பற்றி ஏற்கனவே எழுதி இருக்காங்க...
@ அன்பு
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தப்பி... மீண்டும் வருக...
ம்..தேடி தேடி புதுபுது தகவல்களா தாறீங்கள்...நன்றி :-)
@ டொன் லீ
வாசிப்பிற்கு நன்றி...
அருமை விக்கி,
உங்களின் இந்தப்பதிவைப் படித்தவுடன் ஒரு எதிர்பதிவு எழுதத் தோன்றுகிறது.
விரைவில் எழுதுகிறேன்.
ஆமா, வால்பையன் கேட்டிருப்பது உண்மையா,
இந்தியா வந்ததும் உங்களுடன் பேசுகிறேன்.
அந்த களிமண் கிளிக்கு மட்டுமே மருந்தாகுமா? கண்டதையெல்லாம் தின்னும் மனிதனுக்கு மருந்தாகாதா??? ஆராய்ச்சி தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..
"களி தின்னும் கிளி" என்று போட்டிருந்தால் இன்னும் ரைம்மிங்காக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து நண்பா..
சரி என்ன ஆச்சு உங்க கல்யாணம் ப்ளஸ் லவ் மேட்டர்
இது என்ன கலாட்டா . . . .
விக்கி அமைதியா இருக்கீங்க ?
பதில் சொல்லுங்க
ஆச்சர்யமான தகவல்கள் விக்கி.. பார்க்க அழகாக இருக்கும் இவை மண் தின்னும் அளவுக்கு அறிவுடனும் இருப்பது இன்னும் ஆச்சர்யப்படுத்துகிறது..
Kiligalin alagaai irukindrana... unggal seithiyayi pondru!
@ தராசு
வருகைக்கு நன்றி... வால்பையன் சும்ம்மா லுலுலாயிக்கு பேசுகிறார். அதை நம்ப வேண்டா...
@ கிருஷ்ணா
மனிதன் தான் கண்ட மருந்தைத் தின்கின்றானே... இன்னும் மண்னை வேறு திங்கனுமா? பெண்கள் தமது கணவன் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மண் சோறு சாப்பிடுவார்களாமே... கேள்விபட்டிருக்கிங்களா? ஒரு வேளை அது இந்த கிளி டெக்னிக்காக இருக்குமோ? :))
@ வெங்கட்ராமன்
அட நீங்களுமா? தாங்காது சாமி...
@ வெண்பூ
நன்றி...
புத்திசாலி கிளிகளா இருக்கே!!!
@ அனந்தன்
நன்றி...
@ தூயா
ஆமாம் என்னைப் போல... :))
Post a Comment