 நெடுநாட்களுக்கு பின் எழுதுவது சிரம காரியமாக தான் உள்ளது। பலரும்  எழுத்தில் சொல்லியதை தான் நான் மீண்டும் மீண்டும் எழுதிக்  கொண்டிருக்கின்றேனோ என்ற மன விஷ்க்கி என்னை ஆட்கொள்கிறது. இதையே சாணியடி  இப்படி சொகிறார்; எழுதிட்டு குடிச்சா பாசிடிவ் அப்ரோஜ், குடிச்சிட்டு  எழுதினா நெகடிவ் அப்ரோஜ்.
நெடுநாட்களுக்கு பின் எழுதுவது சிரம காரியமாக தான் உள்ளது। பலரும்  எழுத்தில் சொல்லியதை தான் நான் மீண்டும் மீண்டும் எழுதிக்  கொண்டிருக்கின்றேனோ என்ற மன விஷ்க்கி என்னை ஆட்கொள்கிறது. இதையே சாணியடி  இப்படி சொகிறார்; எழுதிட்டு குடிச்சா பாசிடிவ் அப்ரோஜ், குடிச்சிட்டு  எழுதினா நெகடிவ் அப்ரோஜ்.செப்டம்பர் முதல் நவர்பர்  வரை தலைநகர் வாசம்। கல்வி முடித்து  தலைநகரில் வேலை செய்த சில காலம் பொது வாகன சேவையை மட்டுமே  கதியென்றிருந்தேன். பணி நிமித்தம் இம்முறை வாகனத்தில் வந்தேன்.  வந்து நான்  பட்ட அவஸ்தைகள் நிச்சயமாக சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என பரிந்துரைக்கிறேன்। ஜி।பி.எஸ் போன்ற வஸ்த்துகளை பயன்படுத்தியும் பல முறை பாதைகளை  தவறவிட்டு விட்டேன். அடித்து பிடித்து ஜெய பக்தி புத்தக கடையை அடைந்தேன்.
 பலமுறை அவ்விடம் சென்றிருப்பினும் இம்முறை ஓர் அதிர்ச்சி. சமகால  இலக்கிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியை  கொடுக்கும் செய்திதான். நான் சமகால இலக்கியம் என குறிப்பிட்டவற்றில்  அதிகமானவை உயிர்மையின் புத்தகங்கள். மேலும் சில பெரிய பதிப்பகங்களின்  புத்தகங்கள் வைக்கப்படில் இன்னும் சிறப்பாக இருக்கும்
************ கடந்த திங்கள் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் எனும் நாவலை  வாசித்தேன்। எழுத்தாளர் பாலகுமாரனால் முன்மொழியப்பட்ட புத்தகபட்டியலில்  இந்நாவல் இருந்ததை குறித்து வைத்திருந்தேன்। பிறகொருநாள் நண்பர் கிருஷ்ண  பிரபுவும் இந்நாவலை பற்றி என்னுடன் உரையாடி இருந்தார் இருப்பினும்  இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது। அருமையான எழுத்து நடை। தன்னை  முற்போக்கு வாதியாக கருதும் ஒரு கேரக்டர் இறுதியில் சொல்லும் “என் தங்கையை  காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்” எனும் வாக்கியம் நச்.       
************
தற்சமயம் நான் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளம்।  முகப்புத்தகம் மட்டுமே. அதிகமாக என் நேரத்தை விழுக்கி கடிப்படிக்கிறது.  ‘ச்சே’ என்னிருப்பினும் என் போன்ற பிரம்மச்சாரிகளால் இதை தவிர்க்க  முடியவில்லை. இலச்சிமல ஆத்தா தான் கப்பாற்ற வேண்டும். இந்த பேஸ்புக்  பைத்தியத்தை New Mental Health Disorder என குறிப்பிடுகிறார்கள். இந்த  டிஸார்டர் பல கோடி மானுட ஜென்மங்களுக்கு ஏற்பட்டுள்ளது போல. நிச்சயம் உலகம்  அழிந்துவிடுமோ எனும் மனோபாவ நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறேன்.
**************   
சமீபத்தில் படித்த அருமையான Non Fiction முகில்  எழுதிய யூதர்கள்। யூதர்கள் தொடர்பான சரித்திரத்தை கொஞ்சமும் சலிப்பில்லாமல்  படிக்க முடிகிறது. இம்மாதிரியான புனைவு சார புத்தகங்கள் தமிழ்  வாசகர்களால் அதிகம் விரும்பப்படுவதில்லை எனும் நிலையை கிழக்கு  பதிப்பகத்தார் உடைத்துள்ளார்கள். கிழக்கின் பல புத்தகங்கள் வாசகர்களின்  விருப்பத்திற்கேற்றபடி கொடுக்கப்பட்டுள்ளது. 
************ ஐபோனின் பயன்பாடு மிக ஏதுவாக அமைந்துள்ளது। நோக்கியா  மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் பேசிகளில் ஒபேராவின் குறைந்தபட்ச சேவையில்  தமிழை படிக்க மட்டுமே முடிந்தது. இது முற்றினும் மாறுபட்டு ஐபோனின் தமிழ்  ஒபேராவின் துணை இல்லாமல் படிப்பதுமட்டுமின்றி முரசு போன்ற இலவச மென்பொருள்  வழி ‘டைப்’பவும் முடிகிறது. நன்றி முரசு.
 ************
இடைபட்ட காலத்தில் நான் பார்த்த படங்கள் மற்றும்  புத்தகங்களை பற்றி எதையும் எழுதவில்லை। சளிப்பும் சோம்பலும் தான் இதற்கு  காரணம். படித்ததையும் பார்த்ததையும் எழுதும் போது கிடைக்கும் ஆழமான  நோக்கும் பதிவும் அதைச் செய்ய தவறும் போது மறந்து போகிறது.
இந்த ஆண்டின் புத்தக கண்காட்ச்சியில் ஆர்டர் செய்யப்பட்ட புத்தக  பட்டியலை பிறகு கொடுக்கிறேன். அதில் நான் மிகவும் எதிப்பார்த்திருக்கும்  புத்தகம் அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் எனும் சொக்கன் எழுதிய நூல்.  பிரிட்டீஸ் ஆட்சியின் கொடூர தன்மை உச்சகட்டத் தில் இருந்த இடங்களில்  அந்தமான் சிறையும் அடங்கும். அதில் நமக்கு கொஞ்சமாக வெளிச்சம் போட்டு  காட்டியது பிரபு மற்றும் மோகன்லால் நடித்த சிறைச்சாலை எனும் திரைப்படம்.  அதை தாண்டி வேறு வாசிப்புகள் எனக்கு கிட்டியதில்லை. ஆகவே, படிக்கும்  வரிசையில் அது முதலிடத்தில் உள்ளது.
தில் இருந்த இடங்களில்  அந்தமான் சிறையும் அடங்கும். அதில் நமக்கு கொஞ்சமாக வெளிச்சம் போட்டு  காட்டியது பிரபு மற்றும் மோகன்லால் நடித்த சிறைச்சாலை எனும் திரைப்படம்.  அதை தாண்டி வேறு வாசிப்புகள் எனக்கு கிட்டியதில்லை. ஆகவே, படிக்கும்  வரிசையில் அது முதலிடத்தில் உள்ளது.
***********   தில் இருந்த இடங்களில்  அந்தமான் சிறையும் அடங்கும். அதில் நமக்கு கொஞ்சமாக வெளிச்சம் போட்டு  காட்டியது பிரபு மற்றும் மோகன்லால் நடித்த சிறைச்சாலை எனும் திரைப்படம்.  அதை தாண்டி வேறு வாசிப்புகள் எனக்கு கிட்டியதில்லை. ஆகவே, படிக்கும்  வரிசையில் அது முதலிடத்தில் உள்ளது.
தில் இருந்த இடங்களில்  அந்தமான் சிறையும் அடங்கும். அதில் நமக்கு கொஞ்சமாக வெளிச்சம் போட்டு  காட்டியது பிரபு மற்றும் மோகன்லால் நடித்த சிறைச்சாலை எனும் திரைப்படம்.  அதை தாண்டி வேறு வாசிப்புகள் எனக்கு கிட்டியதில்லை. ஆகவே, படிக்கும்  வரிசையில் அது முதலிடத்தில் உள்ளது.சமீபத்தில் படித்ததில் ஹைலைட்டான ஒற்றை வரி: வாசிப்பு மட்டும் அறிவல்ல। இதை வேறு கோணத்தில் கிருபானந்த வாரியார் சொல்கிறார்: வாசிப்பு என்பது அறிவை வளர்க்காது. வாசிப்பு அறியாமையை நீக்கும் என்பதே சரி.
******பொய் சரித்திரம்
எதிர்கால முட்டாள்களுக்கு
நிகழ்காலத்தில்
சாயம்பூசப்படும் இறந்தகாலம்
-கவிஞர் விக்கி (யாரென கேட்பவர்கள் தனிமடல் அஞ்சவும்)
********
சாவாவிலுள்ள  சோலோ ஆற்றங்கரையில் மாந்தனின் மண்டையோடும் இடது தொடை எழும்பும் இரண்டு  பற்களும் சென்ற 1884 ஆண்டு யூகின் துபாயீசு என்பாரால்  கண்டெடுக்கப்பட்டுள்ளன। இவனையே சாவா மாந்தன் என்று கூறினர். மாந்த  உடற்கூடுகளை ஆய்ந்தவர் இம்மாந்தனின் அகவை 10 இலக்கம் ஆண்டுகள் என  கணித்துள்ளார். இந்த உடற்கூட்டுக்கு முந்திய கால அளவில் எவையும்  கண்டெடுக்கபடவில்லை. சிலவிடங்களில் கண்டெடுக்கப்பட்ட மாந்த உடற்கூடுகள்  சாவா மாந்தனுக்கும் காலத்தால் பிற்பட்டவை என கருதுகிறார்கள்.
- குமரிக்கண்டம் எனும் நூலில் முதல் மாந்தன் எனும் தலைப்பில் இப்படி  தொடங்குகிறார் ம।சோ.விக்டர். முதற் பக்கத்தில் சொல்லாய்வு அரிமா எனும்  பட்டத்தை சேர்த்து பெயர் அச்சிடப்பட்டுள்ளது. ஆசிரியர் இப்புத்தகத்தை  எழுதியதற்கு சுமார் 61 புத்தகங்களை மேற்கோல் காட்டி இருக்கிறார்.  உள்ளடக்கம் யாவும் கிரந்தம் கலக்காத அக்மார்க் தமிழில் உள்ளது என் போன்ற  கடைநிலை வாசகனுக்கு வாசிப்பு தடையாக மட்டுமல்லாது. கூறினார்  குறிப்பிட்டுள்ளார் எனும் சொற்கள் பக்கத்துக்கு பத்து முறை  எழுதப்பட்டிருப்பது இது தொகுப்பு நூலோ எனும் சந்தேகத்தையும் கொடுக்கிறது.
 
 
5 comments:
nalla padivu
மீண்டும் வந்ததுக்கு வாழ்த்துக்கள் தோழா
மீண்டும் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்
டூ ஆல்:
தெங்க்ஸ் ஃபோர் த கமெண்ட்ஸ் காய்ஸ்...
தமிழ்ச் சங்கங்களின் வரலாறு என்னிடம் உள்ளது. நகல் எடுத்த பதிவு. முன்பு நீங்கள் கொடுத்த புத்தகம் தான்.
Post a Comment