40 வயதை தாண்டியவர் என கணிக்க கூடிய நபர். 1.8 மீட்டர் உயரம். தெளிவான முக பாவனை. கூரிய பார்வை. திடமான உடல். உறுதியான எண்ணம். முதிர்ச்சியான கதாநாயகனைக் காட்டக்கூடிய அத்தனை அம்சங்களும் இவரிடம் இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஷெர்லக் ஹோம்ஸ். சிலருக்கு பரிட்சயமான கதாபாத்திரமாக இருக்கலாம்.
சில கதைச் சொல்லியின் யுக்திகள் இரசனை மிகுந்தவை . கணேஷ் வசந்த் எனும் இரு வழக்கறிஞர் கதாபாத்திரங்களை சுஜாதாவின் வாசகர்கள் சிலாகித்திருக்கக் கூடும். இக்கதாபாத்திரங்கள் நிஜ வாழ்வில் இருக்கும் மனிதர்களென கருதிய வாசகர்களின் கேள்வியும் எழுத்தாளர் சுஜாதவிடம் எழுப்பப்பட்டிருக்கிறது. அவ்விரு கதாபாத்திரங்களுக்கும் துரித உயிரோட்டம் கொடுத்து வாசகர்களின் கண் முன் நிறுத்திய பெருமை சுஜாதாவையே சேரும்.
சுஜாதாவின் படைப்புகளை விமர்சித்தவர்கள் முன் வைத்த கருத்துகளில் ஒன்று டாக்டர் ஆர்தர் கோனன் டாயில் சாயலில் இவரின் துப்பரியும் கதைகள் இயம்பப்பட்டுள்ளது என்பதேயாகும். ஆயின் அது முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட. ஏனெனின் சுஜாதா தன் கதைகளில் கணேஷ் மற்றும் வசந்த் கதா பாத்திரங்களின் முக்கியதுவம் சம பங்கென அமைக்கப்பட்டிருக்கும். டாயில், டாக்டர் வட்சன் மற்றும் ஷெர்லக் ஹோம்ஸ் எனும் இரு கதாபத்திரங்களை தமது கதைகளில் வரும் பாத்திரங்களாக அமைத்திருப்பார்.
இதில் மாற்றம் என்னவெனில் இவரின் பெரும்பாலான கதைகளில் டாக்டர் வட்சன் கதை சொல்லியாக அறிமுகமாகிறார். டாயில் கதைகளில் ஷெர்லக் மைய கதா பாத்திரமாகவும், கதை சொல்லியான வாட்சன் கதைகளில் வரும் முக்கிய பாத்திரமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
டாயிலின் கதைகள் பிற மொழிகளிலும் அதிகமாக மொழி பெயர்கப்பட்டிருக்கிறது. பிரசித்தி பெற்ற இவரின் கதைகள் திரைப்படங்களாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. எந்த ஒரு விசயமாக இருப்பினும் அதன் சிக்கல்கள் ஆரம்பத்தில் வியப்பளிக்கலாம், ஆர்வத்தையும் அதிகமாக சிந்திக்கச் செய்யும் ஒன்றாகவும் இருக்கலாம். அதனை கட்டவிழ்த்துப் பார்க்கையில் இவ்வளவுதானா எனும் வெறுமையே எஞ்சி நிற்கும் என்பது டாயிலின் கூற்றாகும். திறமை மிகுந்த துப்பறிவாளர் ஷெர்லாக் மிகவும் அமைதியான மன நிலை கொண்ட நபராக சித்தரிக்கப்படுகிறார். இவரின் செயல்கள் ஏனையோரை வாய்பிளந்து வியக்க வைத்துவிடுகிறது.
பின் புதுமையியல் (பின்னவீனதுவத்தை) சிலாகிக்கும் சிகாமணிகளுக்கு ஷெர்லக் கதைகள் நிச்சயம் பிடிக்காது. டாயிலின் எழுத்து முழுக்க முழுக்க மசாலா சார்ந்த ஜனரஞ்சக கதைகளாகவே அமைந்துள்ளன. ஷெர்லக் கதை வரிசைகளை உன்னித்து கவனிக்கையில் அது மிக சாதாரணமானவையே. கதை சொல்லியின் பார்வையும் கதையை விவரிக்கும் கோணங்களும் வாசகர்களை வாசீகரித்து மூழ்கச் செய்கிறது. கதைச் சொல்லி ஷெர்லக்கின் நடவடிக்கைகளை வியந்து பாராட்டும் பொழுது ஷெர்லக் ஓர் உன்னத மனிதனாக வாசகர்களுக்கு தெரிகிறார். அதன் போக்கில் வாட்சனும் மனதில் பதிந்துவிடுகிறார்.
செயல்களின் விளைவுகள் தோற்றத்தில் கடினமாக காண்பினும் இயல்பில் அவை எளிமையில் இருந்து தொடங்கியவையே என்பது ஷெர்லக்கின் துப்பறியும் தத்துவம். ஷெர்லக்கின் புத்தி சாதூர்யம் இது ஒன்றும் பெரிய விசயமல்ல, இமைப்பதற்குள் முடித்துக் காட்டுகிறேன் பார் என செயல்படுகிறார். Sherlock Holmes : A Study in Scarlet எனும் நாவலில் ஷெர்லக்கை சந்திக்கும் டாக்டர் வட்சன் அவரிடம் குறைகளே நிறம்பி இருப்பதாக முடிவு செய்கிறார். இக்கதையில் ஷெர்லக்கை தற்குறியாக சித்தரிக்கும் வட்சன் கதையின் முடிவில் அவரின் தீவிர விசிறியாக தன்னை காண்பித்துக் கொள்கிறார்.
ஏனையை நாவல்களிலும், சிறுகதைகளிலும் டாக்டர் வாட்சனின் காதாபாத்திரம் ஷெர்லக்கின் கூஜா தூக்கியாகவே காண்பிக்கப்படுகிறது. ஷெர்லக் தம்மை மற்றவர் புகழ வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒரு நபர். புதிராக தெரியும் முறையீடுகளை எளிமையான முறையில் தீர்த்து வைக்க தம்மைக் காட்டினும் மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பது ஷெர்லக்கின் அசைக்க முடியாத மன உறுதி. தூரத்தில் ஒரு மனிதன் வருகிறானே அவன் நடவடிக்கைகளை கவனியுங்கள் ஷெர்லக், விந்தையாக இருக்கிறதல்லவா? எனும் வாட்சனிடம். அவன் என்னை தேடி தான் வந்துக் கொண்டிருக்கிறான் வாட்சன் என பார்த ஓரிரு நெடிகளில் சொல்கிறார் ஷெர்லக்.
அது எப்படி சாத்தியப் படும் எனும் கேள்வியை ஒவ்வொரு நிமிடத்திற்கும் வாசகனுள் எழுப்பி நூல் விடாமல் படித்து முடிக்க முடிகிறது. ஃபசல் எனும் விளையாட்டில் வெட்டி கலைக்கப்பட்ட படங்களை சரிவர அடுக்கி வைப்பது போன்றது தான் இங்கு வைக்கப்படும் புகார் விவரங்கள். அதில் சில ஒட்டாத கலவை சேர்க்கப்பட்டிருப்பது குற்றவாளிகள் தம்மை புத்திசாலிகளாக கருதும் இயல்பு தன்மை. ஷெர்லக் தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு விவரங்களையும் கவனத்தை பிசகச் செய்யாமல் கையாளும் தன்மையால் தன்னை மறுப்பின்றி உலகின் மிகச் சிறந்த துப்பறிவாளராக காட்டிக் கொள்கிறார். கொடுரமான கொலை குற்றமோ அல்லது சாதாரண பிக் பாக்கெட் திருட்டும் ஷெர்லக்கிற்கு ஒன்று தான்.
ஆய்வுகளில் கிடைக்கும் தகவல்களை முன்னுக்கு பின் கிடைத்ததாயினும் அதை சரி வர அடுக்கி ஒரு சிக்கலான கணிதத்துக்கு தீர்வு செல்வதை போல் விவரித்துவிடுகிறார். ஷெர்லக்கை பொருத்தமட்டில் அவரால் தீர்வு காண முடியாத சிக்கலான நிகழ்வுகள் எதுவும் கிடையாது என்பதே. இருப்பினும், ஷெர்லக் தவறாக தீர்மனம் செய்ததாகவும் ஓர் கதையை விவரிக்கிறார் டாக்டர் வாட்சன்.
சுஜாதா தமது கதைகளில் கணேஷ் எனும் கதா பாத்திரத்தை முதலில் அறிமுகம் செய்தார். சில காலத்திற்கு பின் வசந்த் எனும் கதாபாத்திரம் சில துள்ளல் நகைச்சுவைகளோடு அறிமுகமானது. முக்கியதுவம் பெற்ற ஒரே காதாபாத்திரத்தின் வழி துப்பறிவாளனின் எண்ண ஓட்டங்களை விவரிப்பது தடைபடுவதால் இரு முக்கிய பாத்திரங்கள் அதை கலந்தாலோசிக்கும் வண்ணம் வர்ணனை கொடுக்க வசந்த் எனும் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தமது கேள்வி பதிலில் அவர் விவரித்திருந்தார்.
ஷெர்லக் கதை சொல்லியாக தமது துப்பறியும் வேலைகளை விவரிப்பதை காட்டினும், அவற்றை கவனிக்கும் கதாபாத்திரம் அதை இன்னும் திறம்பட செய்வதை டாயிலின் கதைகளினூட நாம் வாசித்து அனுபவிக்க முடிகிறது. சுஜாதா தமது கதைகளில் கணேஷ், வசந்த் பாத்திரங்களை எப்பொழுதும் இளமை எனும் பாணியில் காட்டி இருப்பார். டாயிலின் கதையில் ஷெர்லக் தமது வயோதிக காலத்தில் ஓய்வொடுக்கச் செல்லும் இடத்திலும் தமது துப்பறியும் மூளையை பயன்படுத்துவதாக கதை அமைத்திருக்கிறார்.
ஷெர்லக்கின் கதா பாத்திரம் தாம் கண்டிராத செய்திகளை தடயங்களோடு விவரிக்கும் தன்மையை படிக்கும் சமயங்களில் அவர் ஓர் மந்திரவாதியா எனும் எண்ணத்தை முதலில் எழும்பச் செய்து. பிறகு ஏன் அப்படி ஒரு விவரணை சொல்லப்பட்டது என்பதையும் அழகாக வடிவமைத்திருப்பது ஆசிரியரின் வெற்றியே. ஷெர்லக் மற்றும் வாட்சனைக் காட்டினும் டாயில் தாமறிந்த தகவல் களஞ்சியத்தை நாம் இன்றளவிற்கும் பேசும் வகையில் அமைத்துக்காட்டி இருப்பதும், அதை சில எழுத்தாளர்கள் முன் உதாரணமாக எடுத்துக் கொண்டதும் நமது வாசிப்பிற்கு கிடைத்த அவல் பொறி தான். எந்த ஒரு துப்பறியும் நாவலும் இரண்டாம் வாசிப்பிற்கு ஆர்வம் கொடுப்பவை அல்ல.

10 comments:
;-) சுஜாதாவின் “கணேஷ், வசந்த்” கதாபாத்திரங்களுக்கும் ஷெர்லக் ஹோம்ஸ், டாக்டர் வட்சன் கதாபாத்திரங்களுக்கு நேரடி சம்மந்தம் இல்லாவிடிலும், பின்னதன் பாதிப்பால் முன்னது உருவாகியிருக்கலாம்.
:-)
ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றிய செய்திகளினை மட்டும் பார்த்ததுண்டு அவரின் துப்பறிதல் பற்றிய நாவல்கள் பதிவிலில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது!அவரது நாவல்களை அடிப்படையாக கொண்ட படங்கள் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன!
நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவு பக்கம் வந்தமைக்கும் நன்றி :)
ஷர்லக் பற்றிய பதிவு நன்றாக வந்திருக்கிறது. அவரது கதை சொல்லும் விதம் அலாதியானது. சுஜாதா ஒருவரின் பாதிப்பு அல்ல. கலவையான விசித்திர மனிதர் அவர். அதனால்தான் பன்முகத்தன்மை அவர் எழுத்தில் வந்தது. நீங்கள் ஷெர்லக் பற்றிய கட்டுரையில் சுஜாதாவை ஏன் ஒப்பு நோக்கியது தேவையற்றது என்று கருதுகிறேன்.
@ டொன் லீ
சாத்தியங்கள் இருக்க வாய்ப்புள்ளது... இருப்பினும் சுஜாதா அதை அவருக்குரிய நடையில் மெறுகேற்றி அமைத்திருக்கலாம்....
@ ஆயில்யன்
திரைப்படங்களை கண்டிருக்கவில்லை... எழுத்துகளில் உள்ள சுவாரசியம் மிக பிடித்துள்ளது...
@ அகநாழிகை
வாசுதேவன் நான் இங்கு குறிப்பிடுவது சுஜாதா தமது கதைகளில் பயன்படுத்திய கணேஷ் வசந்த் பாத்திரங்களையும் டாயிலின் ஷெர்லக் மற்றம் வாட்சனின் வேறுபாடுகளை மட்டுமே. சுஜாதா ஜீனியஸ் என்பதை மறுபதற்கில்லை...
எல்லா துப்பறியும் படத்திலேயும் ஒரு துப்பறிவாளர் ஒரு அஸீஸ்டெண்ட் இருப்பார்
ஷெர்லக், ஹார்லிக்ஸ் மாதிரி நல்லா இருக்குமா..???
@ ஜெய்சங்கர்
அனைவருக்கும் மிக அரிதாக தெரிந்த இத்தகவலை நீங்கள் இங்கு சொல்வதன் காரணம் என்ன?
@ மின்னல்
குடிச்சு பாருங்க பாஸ்... :)
இப்படி எல்லாம் எழுதக் கூடிய ஆற்றல் இருக்கின்ற மனிதர் நகர வாழ்க்கை வேண்டாம், கடல் வாழ்க்கையே போதும் என்றால் அதன் பொருளைப் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கின்றது. வாழ்த்துகள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவு எழுதுகிறீர்கள். நல்லது. தொடர்ந்து எழுத வேண்டும் என்பதைக் ஒரு அழுத்தமான கோரிக்கையாகவே வைக்கிறேன்.
சுஜாதாவைப் பற்றி இங்கே சில பேர் இத்தனை வக்காலத்து வாங்கி இருக்கத் தேவையில்லை. துவரை செடியில் காய்க்கிறதா, மரத்தில் காய்க்கிறதா? முடக்கத்தான் என்பது செடியா மரமா? இது கூடத் தெரியாமல் சங்க இலக்கியப் பாடல்களுக்கு உரை எழுதியவர் இந்த சுஜாதா. கவிஞர் அறிவுமதி இதை நன்றாக அம்பலப்படுத்தினார்.
@ முத்துக்கிருஷ்ணன்
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. சிலருக்கு சில விசயங்களில் பிடித்தம் இருக்கும். எனக்கு இந்நீலக் கடலோசை பிடித்திருக்கிறது...
@ அனானி
உங்கள் கருத்துக்கு நன்றி.
Post a Comment