Monday, May 17, 2010

தூண்டில் மீன்

கடந்து செல்கையில்
உணர்ந்து கொள்கிறேன் சுவாசத்தின்
சுத்திகரிப்பு இரகசியங்களை
உன்னைச் சூழ்ந்த
காற்றும் வாசனை தெளித்துச் செல்கிறது

சுதந்திரப் பறவையாய்
சிறகடித்துக் கொள்கிறது
உள்மனம்கேசம் பறக்க
நீ நடந்து வரும் காலைப் பொழுதுகளில்

பெண் மனது
ஆழம் நிறைந்தது தான்
இன்னமும் நீந்திக் கடக்கவில்லை
விழுந்த தூரத்தை
உன் இடையைப் போலவே
கொஞ்சமாக இருக்கிறது
என் மீதான உனது பார்வை
மூன்றாம் மனிதனாக
சாலையில் நிற்கும் வழிப்போக்கன் நான்

முதல் கவிதைபழைய காகிதமாகிவிட்ட பின்பும்
இன்னும் பிறக்கவில்லை
எனது முதல் வார்த்தை
உனைக் காண்கையில்

உனக்கான நேசம்அத்தனையும் புதிய
அணுக்களாய் பிறந்து கொண்டே இருக்கின்றது
அவற்றை நாணேற்றி அம்புகளெய்திட
திராணியற்றுப் போனேன்
இங்கே காயம் என்பது
வில்லாளிக்கு மட்டும் தானோ?
நேற்று என் தோழர்கள் சிரித்தார்கள்
அனைத்தையும் கலைத்து
அழித்துக் கொண்டிருக்கின்றேன்
ஏதோ ஒரு பாரம் இன்னமும்
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
கர்பம் தரித்த உன் வயிற்றைக் கண்ட பின்
புரிந்துக் கொண்டேன்
உன் தூண்டில் விழிகளுக்கான மீன் வேறென்று


A Poem by Kavinyar Vicky

13 comments:

மின்னுது மின்னல் said...

கவிதைனு இருக்கும் போதே ஓடியிருக்கனும்

ம்ம்ம்

VIKNESHWARAN ADAKKALAM said...

என்னாச்சி மின்னல்... சேதாரம் அதிகமோ...

சி தயாளன் said...

//
A Poem by Kavinyar Vicky
//

ஆவ்

Unknown said...

//கவிதைனு இருக்கும் போதே ஓடியிருக்கனும்//

கவிதைனு இருக்கும் போதே தலை தெரிச்சு ஓடியிருக்கனும்.

சீக்கிரம் கல்யானம் பண்ணிக்குங்க. இது தான் பிரச்சனைக்கு தீர்வு

A N A N T H E N said...

அடுத்தவன் பொண்டாட்டிய ரசிக்கிறதே வேலையா போச்சு.... ஹிஹிஹி

படங்கள் சூப்பரு... கவிதையும் சூப்பரு தான்.. குறிப்பாக இவை

//சுதந்திரப் பறவையாய்
சிறகடித்துக் கொள்கிறது
உள்மனம்கேசம் பறக்க
நீ நடந்து வரும் காலைப் பொழுதுகளில்//

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டொன் லீ

அடுத்து என்னை எப்படி அழைக்க வேண்டும் என அறிந்துக் கொண்டமைக்கு நன்றி...

@ ஜெய்சங்கர்

அட சம்பந்தமே இல்லாம கமெண்ட் அடிக்கிறிங்களே பாஸ்... சரி... சரி...

@ அனந்தன்

அது என்ன கவிதையும் சூப்பருதானு ஒரு இழுவை...

உலகத் தரமான கவிதைகளை படிக்கும் போது அதை கமெண்ட் பண்ண ஒரு கான்பிடண்ட் வேண்டாமா...
ச்சே எப்பொழுதுதான் இந்த தமிழ் உலகம் என்னை போன்ற கவிஞர்களை மதிக்குமோ...

RAHAWAJ said...

உலக மகா கவிஞர் விக்கியார் அவர்களே,பல நாள் தூங்கம எழுதிய கவிதையா,கல்யாணம் பன்னுப்பா அப்புறம் கவிதை வருதான்னு பார்ப்போம்

மின்னுது மின்னல் said...

பெண் மனது
ஆழம் நிறைந்தது தான்
இன்னமும் நீந்திக் கடக்கவில்லை
விழுந்த தூரத்தை
//\


நீச்சல் தெரிந்தவனுக்கு ஆழம் பொருட்டல்ல என்று எடுத்து கொள்ளலாமா.. பாஸ் :)

வியா (Viyaa) said...

கவிதை மிகவும் அழகு..அதில் சேர்த்து இருக்கும் வார்த்தைகள் மேலும் அர்த்தத்தை சேர்க்கிறது..நான் மிகவும் ரசித்த வரிகள்..
//உன் இடையைப் போலவே
கொஞ்சமாக இருக்கிறது
என் மீதான உனது பார்வை
மூன்றாம் மனிதனாக
சாலையில் நிற்கும் வழிப்போக்கன் நான்//

//முதல் கவிதைபழைய காகிதமாகிவிட்ட பின்பும்
இன்னும் பிறக்கவில்லை
எனது முதல் வார்த்தை
உனைக் காண்கையில்//

VELU.G said...

நன்றாகயிருக்கின்றன உங்கள் வரிகள்

ரசித்தேன்

பாரத் ராஜ் குணசேகரன் said...

அருமை சார்....

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜவஹர்

கல்லாணத்துக்கு முன் நீங்க நிறைய கவிதை எழுதி இருப்பிங்க போல....

@ மின்னல்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மீன் குஞ்சுக்கு ஸ்வீம் பண்ண கத்துகொடுக்கனுமா...

@ வியா

நீங்க மெய்யாதான் சொல்லுறிங்களா... என்னால நம்பவே முடில போங்க....

@ வேலு

நன்றி

@ பரத்

நன்றி
===================================

மக்கள்ஸ் நீங்க யாருமே வகைபடுத்தலை பார்க்கலையா?

Tamilvanan said...

அதென்ன‌ "வாக்கிய‌ம் பிறித்த‌ல்". க‌விஞ‌ர் விக்கி? யாருய்யா அது? ஏன் அடுத்த‌வ‌ன் க‌வித‌யை போட‌னும். நீங்க‌ளே க‌விதை எழுத‌லாமே?