Monday, February 23, 2009

நான் கடவுள் - திரை விமர்சனம்

"அதாண்ணே ஜாலியா பிச்சை எடுத்து சந்தோசமா இருக்கணும்", என்று சொல்கிறான் அந்தப் பிச்சைக்காரச்சிறுவன். பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை எடுப்பதில் தான் சந்தோஷம் போல என எளிதில் நினைக்கத் தோன்றும் இதைக் கேட்பவர்களுக்கு. உண்மையில் அவர்கள் தாம் நிகழ்காலத்தில் வாழ்கிறார்களோ என்ற எண்ணம் என்னுள் சில வேளைகளில் எழுந்ததுண்டு. அன்றைய வாழ்க்கைக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

நாளைய நிகழ்வுகளுக்காக இன்றைய தினத்தில் வாழ்வதில்லை அவர்கள். முற்போக்கு சிந்தனை இல்லாதவர்கள் என நாம் நினைக்கக் கூடும். ஆனால் செல்வங்கள் நிரந்தரமற்று போகும் நேரத்தில் கவலை கொள்ளாமல் இருப்பது பிச்சைக்காரர்களாகத் தான் இருக்கக் கூடும் என நிச்சயம் சொல்ல முடியும்.

அம்மா தாயே எனும் கவலை தோய்ந்த சோகக்குரல் மட்டும் அவர்கள் வாழ்க்கையாக அமைந்து விடுவதில்லை. கேலியும் கிண்டலும் அவர்கள் உலகிலும் நிறைந்துக் கிடக்கிறது.

"சாமி இருக்காரா..."

"ஏன் எங்களப் பார்த்தா சாமி மாதிரி தெரியலையா?"

"சடை பிடிச்சவனெல்லாம் சாமினு சொல்லிக்கிட்டு திரியுறானுங்க"

"பிச்சக்கார பயலுக்கு பேச்சப்பாரு"

"ஆமாம் இவரு பெரிய அம்பானி"

மேற்காணும் சம்பாஷனைகளில் திறம்படவே நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தகவல்களை நகைச்சுவை வடிவில் சொல்லும் போது சட்டென மனதில் பதிந்துவிடும் என்பார்கள். அப்படித்தான் இருந்தது அந்த பிச்சைக்காரச் சிறுவனின் கதாபாத்திரம்.

மற்ற அம்சங்களைக் காட்டிலும் என்னை பெரிதும் கவர்ந்தது அச்சிறுவனின் கதாபாத்திரம் என்றே கூறுவேன். நிதர்சனமான நடிப்பு. எதார்த்தமான நகைச்சுவை வசனங்கள்.

இந்த படத்திற்கு பூஜாவும் ஆரியாவும் தான் வேண்டும் எனும் நிர்ப்பந்தம் ஏதும் இருந்திருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் அவ்விடத்தில் அஜித்தை நிறுத்திப் பார்க்க நெருடலாகவே இருக்கிறது.

அரைகுறை ஆடைகளில் கைகளை நீட்டி நீட்டி இரண்டு வசனங்களை பேசிவிட்டு நானும் நடித்தேன் என பெயர் போட்டு கொண்டிருந்த பூஜாவா இது. ஒரு கண‌ம் சிந்திக்க வேண்டி உள்ளது. இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளையாக ஒப்பித்து திரைப்ட விருதுகளுக்கு விண்ணப்பம் போட்டிருக்கிறார்.

அகோரிகளுக்குக் கருப்பு நிற ஆடை என்ன யூனிஃபார்மா? படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அதே ஆடையில் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அட உள்ளாடை கூடக் கருப்புதாங்க அவருக்கு. என்ன கொடுமை இது?! சாமியார்கள் பிராண்டட் ஜட்டிகளை உபயோகிப்பதில்லை என்பதை இப்படத்தின் வழிதான் அறிந்து கொண்டேன்.

துறவிகள் என்போர் யார் எனும் கேள்வி இன்னமும் எனக்கு விடை கிடைக்காத புதிராகவே இருக்கிறது. அதைப் பற்றிப் பேசினால் எடக்கு மடக்காக சிக்கல்கள் வந்துவிடுவதால் அந்த ஏரியா பக்கம் தலை வைப்பதில்லை. மனதில் கிடக்கும் கேள்விகளில் இரண்டை இப்பதிவில் தூக்கிக் கடாசுகிறேன். தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்.

துறவிகள் என சொல்லிக் கொள்வோர் ஏன் சில குறிப்பிட்ட நிறத்திலான ஆடைகளை அணிகிறார்கள்? ஜோசியனின் சொல் கேட்டு மகனை காசியில் விட்டு வரும் தந்தை பல ஆண்டுகளுக்கு பின் அவனை அழைத்து வருகிறார். வீட்டிற்கு வரும் மகன் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் தன் சிற்றப்பாவின் படத்தை பார்க்கிறான்.

அப்போது "டேய், இங்க வாடா" என தந்தையை அழைக்கிறான் மகன். தாயிடமும் மரியாதை செலுத்த தெரியவில்லையாம். அகோரியாகிவிட்டால் இப்படிபட்ட மானங்கெட்ட செயல்கள் தானாக வந்துவிடுமா? இல்லை மரியாதை தெரியாமல் போய்விடுமா?

முன்பு திருவிழாக் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். சரியாக சிறுநீர் கழிக்கத் தெரியாத சின்ன பசங்களுக்கு கூட சாமி வந்துவிடுகிறது. உறுமிமேளச் சத்தத்துக்கு தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டு அருகில் இருப்பவரை அழைத்து அருள் வாக்கு சொல்லிக் கொண்டும் விபூதி கொடுத்துக்கொண்டும் இருப்பார்கள். அப்போது பெரியவர்கள் எனக் கணக்கில்லாமல் வாடா போடா, வாடி போடி தான் அந்த 'சாமி'களின் வாயில் வரும். மரியாதை தெரியாத சாமி மனிதனுக்கு தேவைதானா? ஏன் என்றால் சில துறவிகளும் இப்படி தான் பெரியோர் சிறியோர் என பாராமல் மரியாதை குறைவாக பேசுகிறார்கள். அவர்களை மட்டும் மரியாதையாக அழைக்க வேண்டுமா என்ன? அவர்களை சுவாமி என்று தான் அவசியம் அழைத்தாக வேண்டுமா? சரி அதை விடுங்கள் பதிவு தடம் புரண்டுவிடும்.

படத்தின் ஆரம்பம் முதலே ஒரு அழுத்தமான சூழலை உலாவ விட்டிருக்கிறார் இயக்குனர். இந்நிலை அவருடைய‌ முதல் படமான சேதுவில் முதற்கொண்டு நாம் காண முடிகிறது. இது மேலும் தொடர்ந்தால் பாலாவா... படம் இப்படி தான் இருக்கும் என இரசிகர்கள் முடிவுகட்டும் ஒரு நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

கட்டில்களுக்கும் முத்தங்களுக்கும் விடுதலை கொடுத்திருக்கும் பாலாவின் முயற்சி பாராட்டத்தக்கது. பிதாமகன் திரைப்பாடல்கள் நெஞ்சில் பதிந்தது போல் இப்படப்பாடல்கள் எடுபடவில்லை. இப்படத்திற்கு பாடல் எழுதிய புண்ணியவான் எனக்கும் சமஸ்கிருதம் தெரியும் என்பதை நன்றாகவே மெய்ப்பித்திருக்கிறார்.

நேற்று ஒரு நண்பரோடு பேசிக் கொடிருக்கையில் சொன்னார். நான் கடவுள் பாடல்கள் அருமையாக இருக்கிறது. என்னிடம் இருக்கும் இரண்டு டுபாகூர் ஸ்பீக்கர்களை தூக்கி வீசிவிட்டு ‘ஹோம் தியேட்டர்’ வாங்கிடலாமா என யோசிப்பதாக சொன்னார். அவர் சொன்னவுடன் எனக்குள் தோன்றியது. என்னிடம் இருப்பது இரண்டும் ‘டுபாகூர்’ காதுகளா? ஏன் என்று தெரியவில்லை. பிதாமகன் படத்தில் இளம் காற்று வீசுதே எனும் பாடல் பச்சென்று நெஞ்சில் ஓட்டிக் கொண்ட தாக்கம் கிடைக்கவில்லை. இப்படத்தில் வரும் பாடல் இரமண மகரிஷிக்கு இளயராஜா இயற்றியது எனவும் இத்திரையில் அதை சேர்த்திருப்பதாகவும் கேள்விபட்டேன்.

எலும்போடு ஒட்டிய தோலாக பார்ப்பதற்கே முகம் சுழிக்க வைக்கும் வில்லன். பாலாவின் அறிமுகத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். பிச்சைக்கார பிசினஸ்மேன். பிச்சை எடுக்கறது உனக்கு அவளோ கேவலமா இருக்கா என சங்கிலியால் ஒரு பிச்சைக்கார பெண் ஊழியரை போடு சாத்தும் போது "தொக்" என இருந்தது.

இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் இல்லை. எல்லாமே ’ஸ்ட்ரேய்ட் பார்வர்’ தான். போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் சில பிச்சைக்காரர்கள். ஆளுக்கு ஒரு ஒரு பிரபலங்களின் வேடங்களில் இருக்கிறார்கள். பிரபலங்கள் எப்படி கேவலப்பட்டு போகிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.

அச்சமயத்தில் பிரபலங்களை போல் போலிஸ் ஸ்டேசனில் நடித்துக் காட்டுகிறார்கள். அச்சமயம் ஒரு போலிஸ்காரர் சொல்கிறார்.

“போன வாரம் ஒரு படம் பார்த்தேன். என்னய்யா படம் எடுக்கிறானுங்க, மவனே அவன் மட்டும் கையில கிடைச்சான்.....” என செந்தமிழ் வார்த்தைகள் தூள் பறக்கிறது. அதே போல இன்னொரு கட்டத்தில்:

“கவலைப்படாதீங்க எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்”

“தேவடியா மகன். புளுத்துவான்” என ஒரு வசனம்.

இனி வருங்காலங்களில் தமிழ் படங்களை முன்னுக்கு நகர்திச் செல்கிறேன் எனும் போக்கில் இப்படியாகவே பேச ஆரம்பித்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

சமுதாயத்தில் மக்கள் விரும்பாத அல்லது இது வரை யாரும் தொட்டிராத விடயத்தை எடுத்து சொல்லி இருக்கிறார் பாலா. இதை அரசு பரிசீலனை செய்து சமுதாய முன்னேற்றத்திற்கு வழி செய்யுமா?

டூயட், கிச்சுகிச்சு காட்சிகள் என எதுவும் இல்லாமல் எதார்த்தமாக நகர்கிறது படம். தமிழ்த் திரையுலக இரசிகர்கள் இப்படிபட்ட படைப்புகளையும் இரசிப்பார்கள், இரசிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் பாலா. இறுதியில் ஏதோ ஒன்று 'மிஸ்' ஆகிறது. அது என்னவென்பது இப்போது வரை தெரியவில்லை. எனது எதிர்பார்ப்புக்கும் இத்திரைப்படத்திற்கும் அத்தகையதான இடைவெளி ஏற்பட்டிருக்குமோ? இம்மாதிரியான எதார்த்த திரைப்படங்களைக் காண இன்னும் எத்தனை ஆண்டுகளாகும் என தெரியவில்லை.

15 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

விக்கி,
நல்ல அலசல்.
தாங்கள் குறிப்பிட்ட சொற்கள் உரையாடலில் பயன்படுத்தப் பட்டதா?
நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

கிஷோர் said...

விக்கி, சூப்பர் பதிவு :)

கிஷோர் said...

அஹம் ப்ளாக்கராஸ்மி :)

Anonymous said...

படத்துக்கேற்ற நல்ல விமர்சனம். இதை ஏன் சொல்றேன்னா... படம் படம் பளிச்சுன்னு இது தான் - ங்கற மாதிரி இருக்கக் கூடாதுங்கறது பாலாவோட அபிப்பிராயம். உன்னோட விமர்சனமும் அப்படி தான் இருக்கு.
:)

Bleachingpowder said...

//
இந்த படத்திற்கு பூஜாவும் ஆரியாவும் தான் வேண்டும் எனும் நிர்ப்பந்தம் ஏதும் இருந்திருப்பதாக தெரியவில்லை.//

எப்படியும் யாராவது ஒருத்தர் நடித்து தானே ஆக வேண்டும். இப்படத்தில் வேறு யாராவது நடித்திருந்தாலும், இதையே தான் சொல்லியிருப்போம்.

//இருப்பினும் அவ்விடத்தில் அஜித்தை நிறுத்திப் பார்க்க நெருடலாகவே இருக்கிறது.//

மனநிலை தவறியவர்களையே நடிக்க வைத்தவர், அஜித்தையும் நிச்சயம் நடிக்க வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

//அகோரிகளுக்குக் கருப்பு நிற ஆடை என்ன யூனிஃபார்மா? படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அதே ஆடையில் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அட உள்ளாடை கூடக் கருப்புதாங்க //

நிஜத்தில் பெரும்பாலானவர்கள், காவி உடையை தான் அணிவார்கள், அதனால் தானோ என்னவோ தன் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக காட்டா கருப்பு நிறத்தில் ஆரியாவை உலாவ விட்டிருப்பார். otherwise, he would have chose black colour to symbolically show his negative shade in this movie.


//அப்போது "டேய், இங்க வாடா" என தந்தையை அழைக்கிறான் மகன். தாயிடமும் மரியாதை செலுத்த தெரியாவில்லையாம். அகோரியாகிவிட்டால் இப்படிபட்ட மானங்கெட்ட செயல்கள் தானாக வந்துவிடுமா?//

குடும்ப உறவுகளை உதறியவனாய் தான் அவனை இந்த படத்தில் பாலாவை காட்டுகிறார்கள். குரு போக சொன்னார் என்பதற்காக தான் அவன் தந்தையுடன் சென்றான். தாய், தந்தை என்பதை நினைத்தால் தானே மரியாதை வரும். எவனோ கிளி ஜோசியகாரன் சொன்னான் என்பதற்காக பெற்ற மகனை காசியில் விட்டு சென்றவனுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கு.

//நேற்று ஒரு நண்பரோடு பேசிக் கொடிருக்கையில் சொன்னார். நான் கடவுள் பாடல்கள் அருமையாக இருக்கிறது. என்னிடம் இருக்கும் இரண்டு டுபாகூர் ஸ்பீக்கர்களை தூக்கி வீசிவிட்டு ‘ஹோம் தியேட்டர்’ வாங்கிடலாமா என யோசிப்பதாக சொன்னார். அவர் சொன்னவுடன் எனக்குள் தோன்றியது. என்னிடம் இருப்பது இரண்டும் ‘டுபாகூர்’ காதுகளா? ஏன் என்று தெரியவில்லை.//

எல்லாருக்கும் பிடித்த பாடலோ படமோ நமக்கும் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மற்றபடி உங்கள் காதுகள் டூபாகூரெல்லாம் இல்லை பயப்பட வேண்டாம் :))


//“போன வாரம் ஒரு படம் பார்த்தேன். என்னய்யா படம் எடுக்கிறானுங்க, மவனே அவன் மட்டும் கையில கிடைச்சான்.....” என செந்தமிழ் வார்த்தைகள் தூள் பறக்கிறது.//

அந்த நேரத்தில் தியேட்டரில் எழும்பிய விசிலையும் கைத்தட்டலையும் கவணித்தீர்களா விக்கி.

//சமுதாயத்தில் மக்கள் விரும்பாத அல்லது இது வரை யாரும் தொட்டிராத விடயத்தை எடுத்து சொல்லி இருக்கிறார் பாலா. இதை அரசு பரிசீலனை செய்து சமுதாய முன்னேற்றத்திற்கு வழி செய்யுமா?//

எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் சரி, யார் ஆண்டாலும் இதையெல்லாம் கண்டுக்க மாட்டார்கள், அவர்களுக்கு என்ன ஓட்டா இருக்கு தேர்தல் நேரத்துல இவங்க அவங்க கால்ல விழுந்து பிச்சை எடுக்க.

எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான்னு சொன்னதுக்கு அந்த பெரியவர் என்ன சொன்னார்னு சொன்னீங்க??

//இம்மாதிரியான எதார்த்த திரைப்படங்களைக் காண இன்னும் எத்தனை ஆண்டுகளாகும் என தெரியவில்லை.//

கவலை வேண்டாம். வேட்டைகாரன்,அசல்,கந்தசாமி எல்லாம் விரைவில் வெளிவரும்.

வினோத் கெளதம் said...

//இருப்பினும் அவ்விடத்தில் அஜித்தை நிறுத்திப் பார்க்க நெருடலாகவே இருக்கிறது.//

மனநிலை தவறியவர்களையே நடிக்க வைத்தவர், அஜித்தையும் நிச்சயம் நடிக்க வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன்.


அஜித்திற்கு நடிக்க தெரியாது என்று தான் நினைகின்றேன் நானும்..
அவரோடைய வாலி மற்றும் முகவரி போன்ற படங்களை பார்க்கும் பொழுது..

Kumky said...

விக்கி எனது பார்வையில்...நான் கடவுள் குறித்த எண்ணம்.
http://kumky.blogspot.com/2009/02/blog-post_17.html

நட்புடன் ஜமால் said...

இன்னும் படம் பார்க்கவில்லை.

பார்த்துட்டு மீண்டும் இதை படிப்போம்.

சி தயாளன் said...

ஜெயமோகனின் வசனங்கள் தான் படத்தின் நாயகன்...

விரைவில் ஹோம் தியேட்டர் வாங்கவும்..:-))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜோதிபாரதி

வருகைக்கு நன்றி அண்ணா. நான் சொல்லிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன... பார்க்க வேண்டிய படம் தான்...

@ கிஷோர்

நன்றிங்க... :))

@ சேவியர்

அண்ணா என்ன சொல்றிங்க புரியலை... விமர்சனம்கிற பேருல நானும் குழப்படி பண்ணி வச்சிருக்கேனு சொல்ல வரிங்களா? :)

@ பிலிச்சிங் பவுடர்

வருகைக்கு நன்றி... எப்படி இருந்தாலும் படத்தை விட்டு கொடுக்க மாட்டேனு சொல்ல வரிங்கனு புரிகிறது.... ம்ம்ம் ஆகட்டும்... :))

@ சர்வேசன்

எதுங்க நல்லது?? :))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வினோத் கௌதம்

ஆமாம் எனக்கும் அதே கருத்து தான். அது என தலையை சொறிந்துவிட்டு சென்றிருப்பார்...

@ கும்க்கி

உங்கள் பதிவை படித்து கருத்து சொல்லிவிட்டேன்... :))

@ ஜமால்

சரிங்க... :)

@ டொன் லீ

எதார்த்தமான வசனங்கள்... கொஞ்சம் மோசமான சொற்கள் சூழ்நிலை காரணமாகவே உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதினை ஏற்று தான் ஆக வேண்டும்...

Anonymous said...

nice comments vickey
keep it up :)

raja said...

"அதாண்ணே ஜாலியா பிச்சை எடுத்து சந்தோசமா இருக்கணும்", என்று சொல்கிறான் அந்தப் பிச்சைக்காரச்சிறுவன். பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை எடுப்பதில் தான் சந்தோஷம் போல என எளிதில் நினைக்கத் தோன்றும் இதைக் கேட்பவர்களுக்கு. உண்மையில் அவர்கள் தாம் நிகழ்காலத்தில் வாழ்கிறார்களோ என்ற எண்ணம் என்னுள் சில வேளைகளில் எழுந்ததுண்டு "

அந்த பிச்சைக்காரன் ! அவனுக்கு கொடுக்கப் பட்ட இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறான் ! இல்லாததைப்பற்றிய ஏக்கம் அவனுக்கு இல்லை இருப்பதில் திருப்திக்கொல்கிறான் , என்பதை உனர்த்த்வே இந்த வசனம் !


"அகோரிகளுக்குக் கருப்பு நிற ஆடை என்ன யூனிஃபார்மா? படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அதே ஆடையில் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அட உள்ளாடை கூடக் கருப்புதாங்க அவருக்கு. என்ன கொடுமை இது?!"

வாழ்க்கை வேரு சினிமா வேரு ! படத்துக்கும் காட்சி அமைப்புக்கும் ஏற்ற உடையை தேர்ந்தெடுத்திருக்கிறார் ! ( ஆர்யாவை காவி உடையில் நினைத்துப்பாருங்கள் ) கண்ராவிய இருக்கும்.


"துறவிகள் என சொல்லிக் கொள்வோர் ஏன் சில குறிப்பிட்ட நிறத்திலான ஆடைகளை அணிகிறார்கள்? "

ஆத்ம லோகத்தின் நிரம் காவி என்று மகான்கள் கூறுகின்றனர். நான் இந்த உடல் அல்ல , நான் ஒரு ஆத்மா என்று உனர்ந்திடவே கவி உடை.

"துறவிகள் என்போர் யார் எனும் கேள்வி இன்னமும் எனக்கு விடை கிடைக்காத புதிராகவே இருக்கிறது. "

நான் கடவுல் ஆர்யாப் போல் எதிழும் பற்று இல்லாமல் இருப்பவன் தான் , துறவி , குடும்பன் இருகலாம் ஆனால் பற்று இருக்க கூடாது .

"அகோரியாகிவிட்டால் இப்படிபட்ட மானங்கெட்ட செயல்கள் தானாக வந்துவிடுமா? இல்லை மரியாதை தெரியாமல் போய்விடுமா? "

சரி தப்பு நல்லது கெட்டது எல்லாம் மனம் செய்யும் ஏமாற்று வேலை . பற்று இல்லாதவனுக்கு , இறைவனன்றி வேரில்லை.

"முன்பு திருவிழாக் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். சரியாக சிறுநீர் கழிக்கத் தெரியாத சின்ன பசங்களுக்கு கூட சாமி வந்துவிடுகிறது. உறுமிமேளச் சத்தத்துக்கு தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டு அருகில் இருப்பவரை அழைத்து அருள் வாக்கு சொல்லிக் கொண்டும் விபூதி கொடுத்துக்கொண்டும் இருப்பார்கள்."

சில வேளை சாமிகள் வருவதுண்டு ( நல்ல ஆந்மா ) , சில வேலை ( பேய்களும் வருவதுண்டு ( கெட்ட ஆத்மா )

“கவலைப்படாதீங்க எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்”“தேவடியா மகன். புளுத்துவான்” என ஒரு வசனம்.இனி வருங்காலங்களில் தமிழ் படங்களை முன்னுக்கு நகர்திச் செல்கிறேன் எனும் போக்கில் இப்படியாகவே பேச ஆரம்பித்தாலும் "

மிருகத்தைவிட கேவலமாக நடத்தப்படும் ஒருவன் வேரு என்ன சொல்வான் ? அவனுடைய நிலையில் நாம் இருந்தாலும் அப்படிதான் சொல்வோம்.



இப்படப்பாடல்கள் எடுபடவில்லை. இப்படத்திற்கு பாடல் எழுதிய புண்ணியவான் எனக்கும் சமஸ்கிருதம் தெரியும் என்பதை நன்றாகவே மெய்ப்பித்திருக்கிறார்.

( வாழ்க சிவ நாமம் , வாழ்க சிவ நாமம் ,ருத்ரனின் நாமம் வெள்க ) இப்படி அந்த பாட்டு இருந்தா எவனாவது கேட்பானா ? அதான் சமஸ்கிருதத்தில் எழுதி இருக்கார்.



- நான் கடவுள் , அனைவரும் கண்டிப்பாக காணவேண்டியப் படம் -

அதில் வரும் பிச்சைகாரர்களின் வாழ்க்கையைப் பார்த்தால்தான் நமக்கு இறைவன் எப்படி பட்ட வாழ்க்கையை கொடுத்திருக்கிரார் என்று புரியும்.

( எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும் , கற்றது கை மன்னலவு )

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மலர்விழி

நன்றி...

@ ராஜா முகமது

//ஆர்யாவை காவி உடையில் நினைத்துப்பாருங்கள் ) கண்ராவிய இருக்கும்.//

அப்படியா... தோன்றவில்லை...

//நான் கடவுல் ஆர்யாப் போல் எதிழும் பற்று இல்லாமல் இருப்பவன் தான் , துறவி , குடும்பன் இருகலாம் ஆனால் பற்று இருக்க கூடாது .//

அடிக்கடி கஞ்சா குடிக்க போயிடுறாரே அது பரவாயில்லையா... போதைக்கு கஞ்சா மேல பற்று வரலாமா?

//சில வேளை சாமிகள் வருவதுண்டு ( நல்ல ஆந்மா ) , சில வேலை ( பேய்களும் வருவதுண்டு ( கெட்ட ஆத்மா ) //

இறையான்மா அடைந்தவனுக்கு தான் நல்லது கெட்டது இல்லை என்றீர்களா ஆன்மாவில் மட்டும் என்ன பேதம்?

உங்கள் கருத்துகளுக்கு நன்றி ராஜா... மிக்க நன்றி...

raja said...

இறையான்மா அடைந்தவனுக்கு தான் நல்லது கெட்டது இல்லை என்றீர்களா ஆன்மாவில் மட்டும் என்ன பேதம்?

( இது தெருவில் நின்று சாமி ஆடுவத்ற்கு சொன்னேன் )

ஆசைகளோடும் , பற்று அருத்து போகாமலும் மரணம் ஏற்பட்டால் , பேயாக அலைவவோ , மருப்பிரப்பு எடுக்கவோ நேரிடும்