டிமிமோன் செங்களிமண்ணால் ஆன நகரமாகும். இந்தச் சிவப்பு வண்ண களிமண் நகரம் உலகில் பலரையும் கவர்ந்திருக்கிறது. டிமிமோன், சஹாரா பாலைவனத்தில் ஒரு பகுதியாகும். அல்ஜிரியாவின் தலைநகரம் அல்கிரிஸ் என அறியப்படுகிறது. அல்கிரிஸில் இருந்து 1200 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது டிமிமோன்.
டிமிமோனுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒட்டகச் சவாரி பிடித்தமான ஒன்றாகும். ஒட்டகம் வளர்ப்போர் மற்றும் இந்நகரவாசிகளுக்கு அது ஒரு பொருளாதார ஈட்டலும் கூட. டிமிமோனை அடையும் முன் சில மலைப் பகுதிகளிலும் தங்கிச் செல்லும் கட்டாயம் ஏற்படும்.
டிமிமோனுக்கான பயணம் தெடுந்தொலைவு கொண்டது மட்டும் அல்ல கொளுத்தும் வெயிலில் வெந்து போகும் நிலையையும் உண்டு பண்ணும். பயணப் பிரியர்களுக்கு அது ஒரு பொருட்டாகாது என்றே சொல்ல வேண்டும்.
இந்நகரம் சுற்றுப் பயணிகளைக் கவர முக்கியக் காரணம் என்ன? நவ நாகரிக வளர்ச்சியில் இருந்து இது அப்பாற்பட்டு இருப்பதே என்பது பலரது கருத்தாக இருக்கிறது. பொதுவாகவே இங்கு வரும் சுற்றும் பயணிகள் குறைந்த அளவில் இருக்கிறார்கள். ஆதலால் டிமிமோனுக்கான பயணம் அமைதியான சூழலை அளிக்கிறது.
அல்ஜீரியா தீவிரவாதத்தோடு தொடர்பிட்டுப் பேசப்படும் ஆப்பிரிக்க நாடு என்பது பலரும் அறிந்ததே. டிமிமோனுக்கான பயணம் பாதிப்பற்றது என்றும் பயணிகள் பாதுகாப்பு காக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது. தீவிரவாதம் அல்ஜிரியாவில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பது சில சுற்றுப்பயணிகளின் தன்னம்பிக்கையான கருத்தாகும்.
டிமிமோன் நகரம் மட்டுமல்லாமல் இங்குள்ள மக்களும் பணிவானவர்களே. சுற்றுப்பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை தயக்கமின்றி செய்து கொடுக்கிறார்கள். பயணத்தின் போது வழிகாட்டிகளாகவும் உதவியாளர்களும் இவர்களே.
உலகின் அழகிய பாலைவனத்தை இங்கு நாம் காண முடியும். இவ்விடத்தை அந்நாட்டு அரசு மேம்படுத்த முயற்சித்து வருகிறது. மேம்பாடுகள் செய்யப்பட்டால் அவ்விடத்திற்கு சுற்றுப்பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியுமென கருதுகிறார்கள். தங்கும் விடுதி, நாகரீக பட்டணம் என இவ்விடம் மேம்பாடடைந்தால் அது இப்போதய நிலையை பாதிக்கும் என்பது சிலர் கருத்தாகவும் அமைகிறது.
டிமிமோன் பகுதியில் மேம்பாடுகளை நடக்குமாயின் வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார முன்னேர்றத்தை உறுவாக்க முடியும் என்பதால் பரிசீலனைகள் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு சுற்றுப்பயணியின் வருகை இங்குள்ள 12 பேருக்கு ஒரு நளைய உணவளிக்க ஒப்பானதாகும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆண்டிற்கு 1.4 கோடி சுற்றுலாப்பயணிகள் டிமிமோனுக்கு வருகை புரிகிறார்கள். அவர்களில் பொரும்பகுதியினர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
துனிசியா, மக்ரிபி போன்ற அல்ஜிரியாவின் அண்டை நாடுகாளுக்கு ஆண்டுக்கு 6 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகிறார்கள். அதனோடு ஒப்பிடுகையில் டிமிமோனுக்கு பயணம் மேற்கொள்வோர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளார்கள்.
இந்தச் செங்களிமண் நகரம் உலகத்தாரின் கவனத்தில் இன்னமும் சரியான முறையில் அறியப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
(பி.கு: களிமண் நகரம் எனும் தலைப்பில் 25.01.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)
18 comments:
நல்லதோர் அறிமுகத்திற்கு நன்றி
polam, eppo ticket vaangi taarenga...
p/s: havent read the post. will comemnt abt it later. LOL
//இந்த ஊருக்கு போகலாமா? //
போக வேணாம்... ஆபத்து அவசரத்துக்கு தான் வசதி செஞ்சி வைக்கலையே!!!
//நவ நாகரீக வளர்ச்சியை இன்னும் எட்டிப் பார்க்காத ஊர் என்றேக் கூற வேண்டும்//
- எட்டிப் பார்க்குறது தப்பில்லையா?
//(பி.கு: களிமண் நகரம் எனும் தலைப்பில் 25.01.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)//
- களிமண் நகரமா? நல்லவேளை இந்தமுறையும் களிமண் மனிதர்கள்ன்னு எங்கள திட்டாம போனீங்களே....
@ தருமி
நன்றி ஐயா,...
@ விஜி
ஹம்ம்ம்ம்....
@ அனந்தன்
ஆபாசமான பின்னூட்டங்கள் போடுவது தப்பு... அடுத்த சந்திப்பின் போது இதைப் பற்றி பேசுவோம்...
//@ அனந்தன்
ஆபாசமான பின்னூட்டங்கள் போடுவது தப்பு... அடுத்த சந்திப்பின் போது இதைப் பற்றி பேசுவோம்...//
இந்த அனியாயத்த கேட்க யாருமே இல்லையே?
அக்கிரமத்த தட்டி கேக்க யாருமே இல்லையா
பாருங்க... ஒன்னும் தெரியாத அனந்தன பாத்து இப்படி அபாண்டமா சொல்றாங்களே....
நல்ல பதிவு சில இடங்களை இது போல் அறிமுக படுத்துவது, அதை நான் படித்து தெரிந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது விக்கி,உலகில் இதுபோல் பல இடங்கள் இருக்கின்றன தேடி கட்டுரையாக எழுதினால் நாம் படித்து தேறிந்துக்கொள்ளலாம் நன்றி
//தீவிரவாதம் அல்ஜிரியாவில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்//
உண்மைதான்.நம்ம நாடும் வெளித்தோற்றத்துக்கு நல்லாதான் தெரியுது.. ஆனால் பதவியில் உள்ள சிலரது போக்கு தீவிரவாதம் நிரைந்ததா இல்லையா..? (நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை..)
//(நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை..)//
ஐயா, நீங்க பெரிய அரசியல்வாதி போல
நல்ல மாதிரி அறிமுகம் செய்து இருக்கீங்க.
ம்...வட ஆபிரிக்க நாடுகள் எல்லாம் அழகானவை...வெப்பம் சார்ந்த அழகு..
படங்கள் இந்தி கஜினியில் வரும் 'Tu meriah ” பாடல் காட்சியை ஞாபகப் படுத்தியது..அது நமீபியாவில் எடுக்கப் பட்டது..
@ அனந்தன்
யெஸ் ஸ்பிகிங்...
@ ஜவஹர்
வருகைக்கு நன்றி... எழுதிடலாம்... நோ பிராப்லம்...
@ குமரன் மாரிமுத்து
ஆஹா... இருக்கு ஆனா இல்லைனு இல்ல பதில் சொல்றிங்க... சூப்பரு...
@ ஜமால்
நன்றி...
@ டொன் லீ
நான் அந்த படத்தை இன்னும் காணலை. உணமையில் இயற்கை அழகுதான். இன்று அதை இரசிக்க மனிதனுக்கு நேரம் இல்லை...
##உலகின் அழகிய பாலைவனத்தை இங்கு நாம் காண முடியும். ##
Mr. vik, shall we go one day? selavugal ungaludaiyathu.. :D
epadi ok wa..?
##@ அனந்தன்
ஆபாசமான பின்னூட்டங்கள் போடுவது தப்பு... அடுத்த சந்திப்பின் போது இதைப் பற்றி பேசுவோம்...//
இந்த அனியாயத்த கேட்க யாருமே இல்லையே?
அக்கிரமத்த தட்டி கேக்க யாருமே இல்லையா
பாருங்க... ஒன்னும் தெரியாத அனந்தன பாத்து இப்படி அபாண்டமா சொல்றாங்களே....
###
Nan irukken ungalukaga ketka.. CHERI YEN ABASAMA PESUNINGA. :D
குடுத்து வச்சவன் விக்கி.. :)
( தமிழோசைல பார்ட்னர் ஆய்ட்டியா ராசா? :)) )
இன்னும் கொஞ்சம் படம் போட்டு இருந்தால் ஆர்வம் கூடி இருக்கும்!
@ விஜி
:)
@ சஞ்சய்
நன்றி அண்ணை. பாட்ணரா... நல்லாதான் இருக்கும்...
@ குசும்பன்
கட்டுரை சின்னதாக இருக்கு இல்லையா அதான் குறைந்த படங்கள்.
ungalin siripin artam yenna raasa??
:D
இந்த ஊருக்கு போகலாமா?
போகனும்னு ஆசையா இருக்கு. . .
Post a Comment